ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வெளியாட்கள் வராத அந்தமான் தீவு பழங்குடி 400 பேர் மரபணு முறைப்பெண் அக்காமகள்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்வியா., 7 ஜூன், 2018, பிற்பகல் 1:25
பெறுநர்: நான்
நன்றி Senthil v
செல்போன், இணையம், சினிமா, தொலைக்காட்சி, வானொலி, நவீன கருவிகள், வாகனங்கள், அரசியல் கட்சிகள் எதுவுமே இல்லாமல் வாழ முடியுமா..? பெட்ரோல், டீசல், மின்சாரம் மட்டுமல்ல வயல்வெளி கூட இல்லாத இடமொன்று, ஆனால் மனிதர்கள் வாழும் இடம் இவ்வுலகில் உள்ளது. உங்கள் மூளை சொல்லும் இடம்தான் அது. "தீவு"
வடக்கு சென்டினல் தீவு.
இது நம்மிடமிருந்து சுமார் 1,350 கிமீ கிழக்கே உள்ளது. இந்திய-அந்தமான் அதிகார வளையத்தில் இருந்தாலும் இது உலகில் தன்னாட்சி பகுதியாகும். இதன் பரப்பளவு சுமார் 56 சதுர கிமீ ஆகும். அதாவது தஞ்சாவூரை விட கொஞ்சம் பெரியது. உட்புறம் அடர்ந்த காடுகளையும், மலையையும், கடற்கரைகளில் சீரற்ற பவளப்பாறைகளையும் கொண்டது. இந்த தீவின் எந்த புறத்திலும் இயற்கையான துறைமுகம் இல்லை. கடற்கரையிலிருந்து வெகுதூரம் வரை தண்ணீரின் சற்று ஆழத்திலேயே பவளப்பாறைகள் தாறுமாறாக நீட்டிக்கொண்டிருப்பதால் பெரிய கப்பல்களால் இத்தீவினை நெருங்க முடியாது. கடல் அலையும் வெகு சீற்றத்துடன் காணப்படும். கடல் நீர் அமைதியாக இருக்கும் வருடத்தின் இரு மாதங்ககளில் மட்டும் பாறைகள் கண்ணில் தென்படும்போது கவனித்து சிறு படகுகளில் இத்தீவிற்கு செல்லலாம். இதனால் வெளிநபர்கள் யாரும் எளிதாக உள்ளே நுழைய முடியாது.
இதனுள் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் எந்த சூழலிலும் வெளிநபர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. தீவின் எந்த பகுதியில் உள் நுழைய முயன்றாலும் மணல் பரப்பை தொடுவதற்குள் எங்கிருந்தாவது வந்து தாக்க தொடங்கிவிடுவார்கள். எந்த சமாதானத்தையும் இவர்கள் ஏற்பதில்லை. மரணம் வரை எதிர்த்துகொண்டேதான் இருக்கிறார்கள். எதிர்ப்படுபவரை உயிருடன் அனுப்புவதுமில்லை. வில் அம்பு, ஈட்டி, கற்கள், கல்லெறிய கயிறாலான (நாறாகவும் இருக்கலாம்) கவண் இவை மட்டுமே இவர்கள் ஆயுதம்.
முதலில் கற்களால் தாக்குகிறார்கள். பின்னர் ஈட்டி. அடுத்ததாக அம்பு. பின்னர் நெருப்புடன் அம்பு. தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டரை கூட விட்டுவைக்கவில்லை. இந்த தாக்குதலுக்கு அஞ்சி பன்னெடுங்காலமாக யாரும் நுழைய முற்படவில்லை. இவர்கள் மொழி, கலாசாரம், வாழ்வியல், உணவு முறைகள், மருத்துவ முறைகள் எதுவும் யாருக்கும் தெரியாது. மரத்தால் ஆன வில் வைத்திருக்கிறார
்கள் என்பது சரி. ஆனால் இரும்பால் ஆன அம்பு, ஈட்டி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களிடம் இரும்பு இருக்கிறது மற்றும் அதனை பயன்படுத்தவும் தெரிந்திருப்பதை காட்டுகிறது.
கடற்கரைகளில் மீன் வேட்டையாடும்போது அவர்கள் வெளிநபர்களுக்கு தென்படுகிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் அம்பின் அளவு வேறு. வெளிநபர்களை தாக்க பயன்படுத்தும் மரத்தால் ஆன வில் அவர்களை விட உயரமாக உள்ளது. அம்பின் நீளம் சுமார் 8 அடி. அவர்களுடைய ஈட்டி இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை. அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
கிபி 1867ல் நினேவே என்கிற இந்திய சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி இந்த தீவில் கரை ஒதுங்கியது. அதிலிருந்த 106 பேர் நீந்தி தீவினில் அடைக்கலம் புகுந்தனர். அவர்களை கடுமையாக தாக்கி பழங்குடியினர் துரத்தினர். இதற்குள் இவர்கள் ஏற்கனவே உதவிக்கு அழைத்த போர்க்கப்பல் வந்து சேர இருவருக்கும் ஏற்பட்ட போரில் ஏராளமான பழங்குடி மக்கள் இறந்துள்ளனர். எனினும் கப்பலை மீட்க முடியாமல் திரும்பியுள்ளனர். பின்னாளில் கப்பலில் உள்ள இரும்பை உடைத்து பழங்குடியினர் எடுத்துச்செல்வதை கடலில் பயணித்தவர்கள் பார்த்துள்ளனர்.
1858ல் அந்தமான் தீவுகளை சூழ்ச்சியால் தம் வசமாக்கியது போல ஆங்கிலேயர்களால் இத்தீவினை தம் வசப்படுத்த முடியவில்லை. எனவே பழங்குடியினரை நட்பாக்கிக்கொள்ள, எப்படியாவது உள்ளே வசிக்கும் சிலரை கடத்தி வருவது.. அவர்களை நல்ல முறையில் நடத்தி பல பரிசுப் பொருட்களை கையில் கொடுத்தனுப்பி நல்ல பெயர் வாங்குவது என திட்டமிட்டனர். இது போல ஐந்தாறு முறை செய்தால் பின்னர் எளிதாக உள்ளே நுழையலாம் என கருதினார்கள். ஆனால் இந்த பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லை. 1880ல் மோரிஸ் விடல் போர்ட்மேன் என்கிற 20 வயது ஆங்கிலேயே அதிகாரி இதற்கு தயாரானார். இவருக்கு ஏற்கனவே பல்வேறு அந்தமான் நிகோபார் தீவின் பழங்குடியினருடன் பழகி அனுபவம் இருந்தது.
பெரிய கப்பல் நிறைய ஆயுதங்களுடன் தீவின் அருகில் சென்று பின் சிறு படகுகள் மூலம் கரை இறங்கினார். 1867ல் ஏற்பட்ட போர் காரணமாக அந்த இடத்தில் பழங்குடியினர் யாரும் இல்லை. எச்சரிக்கை உணர்வாக கரையோரமே சில நாட்கள் காத்திருந்துவிட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்றார். அங்கெ கைவிடப்பட்ட சில கிராமங்களை கண்டார். அதனினும் உள்சென்ற போது தீவுவாசிகள் பயந்து ஓடுவதை கண்டார். அவர்களுள் ஓடமுடியாமல் நின்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தை மட்டும் கடத்திக்கொண்டு போர்ட் பிளேயர் வந்து சேர்ந்தார். அந்த குடும்பத்தில் வயதான கணவன் மனைவியும், நான்கு குழந்தைகளும் இருந்தனர். வந்த உடனேயே தம்பதிக்கு அம்மை தாக்கி இருந்தார்கள். மேற்கொண்டு நிலைமை மோசமாவதால் அந்த பிள்ளைகளுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை கொடுத்து மீண்டும் தீவிலேயே விட்டுவிட்டார்கள். 1887 வரை மோரிஸ் அந்த தீவிற்கு பலமுறை சென்று வந்துள்ளார். எனினும் அவரது நட்பு ஏற்படுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை.
இதன் பின்னர் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை யாரோ சிலர் உள் செல்ல முயற்சித்தும் பலன் ஏதுமில்லை. 1997 ஆம் ஆண்டிற்கு பிறகு எவரும் அங்கெ செல்லவில்லை.
2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது இத்தீவு முற்றிலும் அழிந்திருக்கும் என எல்லோராலும் நம்பப்பட்டது. ஆனால் சுனாமி ஏற்படுவதற்கு முந்திய நாளில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதே இந்த தீவு பூமித்தட்டின் நகர்வால் 2 மீட்டர் நகர்ந்து 20 மீட்டர் உயர்ந்தது. இதனால் தீவை சுற்றியுள்ள பவளப்பாறை நிறைந்த கடற்கரை 800 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை நீண்டது. அதுவரை 56 சதுர கிமீ ஆக இருந்த தீவின் பரப்பளவு சுமார் 72 சதுர கிமீ ஆக விரிந்தது. மேலும் அருகே இருந்த 600 மீட்டர் நீளமுள்ள பவளப்பாறை தீவும் சென்டினெலுடன் இணைந்துவிட்டது. இதனால் இயற்கை அரண் மேலும் பலப்படுத்தப்பட்
டுவிட்டது.
விவரம் தெரியாமல் மூன்று நாட்கள் கழித்து பார்வையிட சென்ற இந்திய ஹெலிகாப்டரை கல்லெறிந்தும் அம்பு மழையால் நனைத்து விரட்டியுள்ளனர். அவர்களது மீன் பிடிக்கும் இடங்கள் மட்டும் சேதமடைந்துள்ளதையும் அவற்றை அவர்கள் சரி செய்வதையும் விமானிகள் பார்த்துள்ளனர்.
சில வியத்தகு செய்திகள்:
யாருமே நட்பு பாராட்டி உள்நுழைய முடியாத இந்த தீவு கிபி 1044 க்கு முன்பு ராஜேந்திர சோழ மன்னனின் கப்பல்கள் இளைப்பாறி செல்லும் தளமாக இருந்திருக்கிறது. இறுதியாக அவரே இந்த தீவுவாசிகளுடன் நட்புடன் இருந்திருக்கிறார்.
அந்நியர்கள் இந்த பழங்குடியினரை நெருங்க, பரிசாக அங்கெ கிடைக்காத பொருட்களாகிய தேங்காய், வாழைப்பழம், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொடுப்பார்கள். பல சமயங்களில் எதையும் ஏற்காத பழங்குடி மக்கள் சில நேரங்களில் தேங்காய் மற்றும் வாழை பழங்களை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். பிளாஸ்டிக்கை தொடுவதே இல்லையாம்.
இவர்கள் கழுத்தில் மனித எலும்பை மாலையாகவும் தலையின் மேல் மண்டை ஓட்டை வைத்திருந்ததையும் பார்த்து இவர்கள் நர மாமிசம் உண்பவர்கள் என ஆங்கிலேயர் கருதினர். ஒரு வகையில் இது அவர்களுக்கு பாதுகாப்பை தந்தாலும் உண்மையில் இவர்கள் நர மாமிசம் உண்பவர்கள் இல்லை. அத்து மீறி நுழைந்த எவரையும் கொன்று கடலில் தான் வீசியுள்ளனர். தாம் மதிக்கும் முன்னோரின் எலும்புகளையே அவர்கள் அவ்வாறு அணிந்துள்ளனர்.
1981 ஆம் ஆண்டு ப்ரிம்ரோஸ் என்பவர் இந்த தீவில் தனியாக இறங்கி மெதுவாக உள்ளே சென்றார். பல நாட்கள் காத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைந்து பழங்குடி மக்கள் இருக்கும் இடத்தை அடைந்தார். அங்கெ வில் அம்புகளை தாங்கியபடி, மண்டை ஓடுகளை சுமந்தபடி, கருப்பான மனிதர்கள் படகு செய்து கொண்டிருப்பதை பார்த்தார். உடனடியாக அதுநாள் வரை கப்பலில் காத்துக்கொண்டிருந்த அவரது குழுவினருக்கு ரேடியோ மூலம் தகவல் அனுப்பி அவர்களை சுட சொன்னார். ஆனால் அப்போது இருந்த பேரலைகள் அவரது ரேடியோ சிக்னல் அவரது கப்பலை அடைவதை தடுத்துவிட்டது. உள்ளே வசமாக சிக்கிக் கொண்ட ப்ரிம்ரோசை இந்தியாவின் ஓஎன்ஜிசி யின் ஹெலிகாப்டர் ஒரு வாரத்திற்கு பிறகு உயிரோடு மீட்டது. தாக்கும் எண்ணத்துடன் சென்று உயிரோடு திரும்பிய முதல் மனிதன் ப்ரிம்ரோஸ்.
2006 ஆம் ஆண்டு மீன் பிடிக்க சென்று பளப்பாறைகளுக்குள் படகு சிக்கி கரை சென்ற இரு மீனவர்கள் அம்புகளால் தாக்கப்படும், கழுத்து அறுக்கப்பட்டும் இறந்த நிலையில் கடற்கரை ஓரம் இறந்து கிடந்து மீட்கப்பட்டனர்.
இந்திய அரசு இந்த தீவினை சுற்றி 5.6 கிமீ (3 நாடிகல் மைல்) தூரத்திற்கு அந்நியர்கள் செல்வதை தடை செய்துள்ளது. அத்தீவு மக்களை அவர்கள் போக்கில் விட இந்திய அரசும், அந்தமானும் முடிவு செய்துள்ளன.
உள்ளே 70 லிருந்து 100 மக்கள் இருக்கலாம் என இந்திய அரசு தெரிவித்தாலும் 400 பேருக்கு மேல் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இவர்கள் எந்த கலப்பும் இன்றி இங்கே 60,000 ஆண்டுகளாக வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்.
மற்றவர்கள் அஞ்சுவது போல இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்றோ, வலிமை குறைவு என்றோ கணிக்கக் கூடாது. இவர்கள் நம்மை விட நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும், நல்ல உடல் வலுவும் கொண்டவர்கள். இவர்களால் தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டரை கூட தடுமாறும் அளவிற்கு கல்லெறிந்து தாக்க முடிகிறது. (நாசா தகவல்)
நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:
நீ இயற்கையை உயிரைக் கொடுத்து காப்பாற்றினால் அது எந்த சூழலிலும் உன்னை கைவிடாது.
தற்சார்பை மிஞ்சி உலகில் வேறு வலிமையான செல்வம் இல்லை. நாம் நலமாக வாழ, உண்ண வயல்வெளிகள் தேவையில்லை. வனமே போதும்.
நாம் சுகமாக வாழ இடைக்கச்சை போதும். சிறு கருவிகளும், கல் ஆயுதங்களும் போதும்.
நாம் நிம்மதியாகவும், வளமாகவும் வாழ அந்நியனை எந்த சூழலிலும் நம்பாதே.. உள்ளே விடாதே..!!
10 மே, 09:38 AM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக