ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

சேலம் திருமணிமுத்தாறு அழிந்தது சாயம் கலந்து சிமெண்ட் கரை கட்டியதால்

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 ஜூன், 2018, முற்பகல் 10:05
பெறுநர்: நான்
Basheer Acf
# ஒரு_நதியின்_மரணம் .
புவியியல் அமைப்பின்படி மலைகள் மடியில் வைத்து தாலாட்டும் பள்ளத்தாக்கு... சேலம் மாவட்டம்.
இயற்கையின் செல்லப்பிள்ளை அது. சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி சேலம் மாவட்டத்தில் இருந்த தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி, காவிரியுடன் கலந்தது. தஞ்சாவூர் நெல்லுக்கு வளம் சேர்த்த பெருமை சேலத்தின் தண்ணீருக்கும் இருக்கிறது. திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. ஒரு காலத்தில், வாழ்வாங்கு வாழ்ந்தது திருமணிமுத்தாற்றின் நதிக்கரை நாகரீகம்.
மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த அந்த ஆறு இன்று இல்லை. நிகழ் காலத்தில் கண்முன்னே துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டது அது. இதுவரை வெளியே சொல்லப்படாத சோகக் கதை அது. ஆரம்பத்தில் நதியில் சாக்கடையைக் கலந்தார்கள். வழியின்றி ஏற்றுக்கொண்டது நதி. ஆனால், அதன் பின்பு 2000-களின் தொடக்கத்தில் தீட்டப்பட்டது ஒரு படு கொலைத் திட்டம். அந்தப் படு கொலைக்கு ‘திருமணிமுத்தாற
ு அபிவிருத்தித் திட்டம்’ என்று பெயர் வைத்தார்கள்.
மண்ணுக்கும் நதிக்கும் இருந்த நரம்பு வெட்டி எறியப்பட்டது. மூச்சுவிட வழியில்லாமல் முனகித் துடித்தது நதி. வாயிருந்தால் கதறியிருக்கும் அது. உலகில் எங்கேனும் இதுபோல கொடுமை நடந்தது உண்டா? இது நடந்தபோது மக்கள் மகிழ்ச்சிப் பொங்க கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்ததுதான் வேதனை. சூழலியாளர்கள்கூட குரல் கொடுக்கவில்லை. அரசியல்வாதி கள் ஊர்தோறும் இந்தப் படுகொலை யைப் பற்றிப் பெருமையாக பறைச்சாற் றினார்கள். தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளே தனக்கு உயிரோடு சமாதி கட்டியது கண்டு வேதனை தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்தது நதி. முன்பு சாக்கடை ஓடினாலும் மழைக் காலத்தில் ஆற்றில் பெருகிய நீரால் சேலத்தின் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருந்தது. நதியைப் புதைத்தப் பின்பு சுற்றுவட்டாரங்க
ளின் நிலத்தடி நீரும் வற்றிப்போனது. தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். இப்போது பார்க்க சகிக்கவில்லை அந்த பெரிய சாக்கடையை... (சஞ்சீவிகுமார்)
# மரணித்தது_நதி_மட்டும்தானா ? அது உருவாக்கிய ஏரிகளும்தான்!
Basheer Acf
14 மணி நேரம் · பொது
சேமி

Aathimoola Perumal Prakash
//‘திருமணிமுத்தாறு அபிவிருத்தித் திட்டம்’ என்று பெயர் வைத்தார்கள்.
மண்ணுக்கும் நதிக்கும் இருந்த நரம்பு வெட்டி எறியப்பட்டது.//
புரியவில்லை
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · நேற்று அன்று 09:26 PM மணிக்கு

Basheer Acf
சிமெண்டு பூச்சுக்களால் நதியின் நரம்பு வெட்டி எறியப்பட்டது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 11 மணி நேரம் முன்புு

Zakir Zakir
மண்ணுக்கும்.நதிக்கும்.தொடர்பில
்லாதவாறு.சிமெண்ட்.காங்கீரிட்.ப
ோட்டு.கால்வாய்.ஆக.மாறிவிட்டது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 11 மணி நேரம் முன்புு

Aathimoola Perumal Prakash
ஓ!

ஆறு நதி நீர்மேலாண்மை மணிமுத்தாறு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக