ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பீகார் தேர்வு முறைகேடு 100 க்கு 130 நீட் பிளஸ்2 மதிப்பெண் சர்ச்சை

aathi1956 aathi1956@gmail.com

சனி, 9 ஜூன், 2018, பிற்பகல் 10:24
பெறுநர்: நான்
‘100க்கு 120 மதிப்பெண்கள்’ - இன்ப அதிர்ச்சியில் பீகார் மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வில் அடுத்த முறைகேடு அம்பலம்
பாட்னா
Published :  09 Jun 2018  10:43 IST Updated :  09 Jun 2018  18:08 IST
நீட் தேர்வில் நாடுதழுவிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பீகாரில் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வருகைபதிவு இல்லாத அனுமதிக்கப்பட்ட நிலையில், இதே தேர்தவில், மொத்த மதிபெண்களை விடவும் கூடுதலான மதிப்பெண் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
நாடுமுழுவதும் நீட் தேர்வு சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மற்ற பல மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. வெறும் 39.9 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநில மாணவர்கள், தமிழகத்தை விடவும் அதிகஅளவில் வெற்றி பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த ஒரே மாணவி மட்டும் 12வது இடம் பிடித்தார்.
இந்த தேர்தவில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பின்தங்கி இருந்த மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு தேவை என்ற நிலையில், அது இல்லாமலேயே அவருக்கு தேர்வு எழுத அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கல்பனா குமாரி நீட் தேர்வில் மட்டுமின்றி பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
ஆனால் பீகார் கல்வி அமைச்சரோ இதுபோன்ற சர்ச்சையை யாரும் எழுப்ப வேண்டாம், பீகார் மாணவி அதிக மதிப்பெண் பெற்றுள்ளதை மட்டும் கொண்டாடுவோம் எனக் கூறினார்.
இந்நிலையில் பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12-ம் வகுப்பு தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்த மதிப்பெண்களை விடவும் மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ளனர். 100 சதவீதத்திற்கு 130 சதவீத மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்பியலில் 65 மதிப்பெண்கள் தேர்வக்கும், 35 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பீம் குமார் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35க்கும் அதிகமாக 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதுபோலவே வேதியியலில் சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35 விடவும் அதிகமாக 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோலவே எழுத்து தேர்விலும் தனித்தனியாக போடப்பட்ட மதிப்பெண்களை கூட்டி பார்த்தால் வரும் மதிப்பெண்களை விடவும் கூடுதலாக ‘இலவச’ மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளளன.
வேறு சில மாணவர்களுக்கு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத நிலையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கணிதத்தில் மூன்று விடையில் ஒன்றை தேர்வு செய்யும் அப்ஜெக்டிவ் தேர்வு மொத்தம் 35 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் கிழக்கு சாம்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ராஜ் என்ற மாணவர் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதைவிட கொடுமையாக, வைஷாலி என்ற மாணவி உடல் நிலை சரியில்லாததால் உயிரியல் தேர்வை எழுதவில்லை. அந்த தேர்வில் வைஷாலிக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பெற்ற 18 மதிப்பெண்ணையும் சேர்த்து, உயிரியில் தேர்வில் அவர் 38 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோலவே ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களிலும் மதிப்பெண் ‘மழை’ பொழிந்துள்ளது. இதனால் பீகார் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஹிந்தியர் ஹிந்தியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக