புதன், 20 ஜூன், 2018

கள்வர் கள்ளர் வேறுபாடு களவு திருவது ஆகாது வம்பலர் எயினர் மறவர் பொருள் வழிப்பறி செய்ததில்லை

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு

Muniraj Vanathirayar
ஆண்டை-அடிமை என நான் கூறமுற்படவில்லை. களவு என்பதன் அக்கால வரையறை என்னவென்பதை அறிவீரா?
•சங்க இலக்கியங்களில் ஆறலை கள்வர் என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளதா?
•சங்க இலக்கியங்களில் எயினர்கள் வழிப்பறி பற்றிய பதிவுகள் உண்டா?
•ஆறலை கள்வர்களால் கொல்லப்பட்ட வழிப்போக்கருக்கு நினைவுக்கற்கள் நடப்பட்டனவா?
•வழிப்போவோர் வணிக சாத்துகளை கொள்ளையடித்தனரா?
•பிழைப்பதற்கு வழியின்றி வழிப்பறி செய்தனரா?
இந்த வினாக்களுக்கு சங்க இலக்கியத்தில் விடை தேடுவோம்.
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சி எட்டுத்தொகை பாடல்களில் எங்குமே கையாளப்படவில்லை. அப்பாடல்களை விளக்குமிடத்தில் உரையாசிரியர்கள்
தான் கையாண்டுள்ளனர் என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். பத்துப்பாட்டில்தான் முதன்முதலாக ஆறலைகள்வர் சொல்லாட்சி ஒரே ஒரு இடத்திலும், அதற்கான வரையறை போன்று மற்றொரு இடத்திலும் இடம்பெறுகிறது.
பொருநராற்றுப்படையில் பாலையாழின் சிறப்பைக் கூறுமிடத்தில் ஆறலைகள்வர் கூட தமது கைகளில் உள்ள கொடிய படைக்கலங்களைப் போட்டுவிட்டு அடங்கி நிற்கும்படியான பாலையாழின் என்ற பொருளில்,
"ஆறு அலை கள்வர் படை விட. அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை" (பொருநர்-21,22)
என்று கூறப்படுகிறது.
பெரும்பாணாற்றுப்படையில் திரையனது சிறப்பை அறிவிக்கும் விதமாக அவனது நாட்டின் பெருமையை சொல்லுமிடத்தில். ...
"அத்தம் செல்வார் அலறித் தாக்கி
கைப்பொருள் வௌவும் களவுஏர் வாழ்க்கை கொடியோர் இன்று ,அவன் கடியுடை வியன்புலம் "(பெரும்பாண்.39,40,41)
என்று வழிப்பறியோ களவோ செய்யாதவர்கள் இல்லாத நாடு என்று வருகிறது.

எயினர்கள் வழிப்பறியினரா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எயினர்கள் பாலைத்திணை மாந்தர்களாக அகநானூற்றில் (79,319)இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் (12)ஒரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன.
"கொடுவில் எயினர் கோட்சுரம் படர
நெடுவிளி பயிற்றும் நிரம்பா நீள் இடை" (அகம்.79)
கொடுவில் எயினர்கள் சுரவழியில் செல்வதை அறிந்த பருந்தின் பேடை தன் துணையினை நோக்கி நெடுங்குரல் எழுப்பி அழைத்துக்கொண்டே இருக்கும்.
"கொடுவில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடுவினை மறவர்......... (அகம்.319 )
என்ற பாடல் செய்தியை எயினர், மறவர் என்னும் இனக்குழுவிற்கு இடையில் நடந்த போராக இது தெரிகிறது. என்கிறார் ராஜ்கௌதமன்.
சிலைவிற் பகழிச் செந்துவர் ஆடை
கொலைவில் எயினர் தங்கை.... (ஐங்குறுநூறு.363)
முளவுமா வல்சி எயினர் தங்கை... (ஐங்குறுநூறு. 364 )
என்ற இரண்டு ஐங்குறுநூறு பாடல்களிலும் வேட்டை குழுவினராகத்தான் பதிவு உள்ளது.
உலைக்கல் அன்ன பாறை ஏறி
கொடுவில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப. ..... (குறுந். 12)
என்ற குறுந்தொகை பாடலில் பாறையின் மேல் ஏறி அம்பினைத் தேய்த்து கூர்மையாக்கும் எயினர் தலைவனைப் பற்றி பேசுகிறது. ஆறலைக்களவு பற்றி அல்ல. அதேபோல பெரும்பாணாற்றுப்படை (91-94, 129-133)யில் வரும் எயினர் வேட்டை குடியினராகத்தான் சித்தரிக்கப்பட்
டுள்ளனர். புறநானூற்றிலும் (351:6,7) அகநானூற்றிலும் (181:5-10) வருகிற இரண்டு பாடல்களும் ஆஅய் எயினன் என்ற குறுநில மன்னரையே குறிக்கிறது.
பத்துப்பாட்டு, பட்டினப்பாலையில்,
"கொடுவில் எயினர் கொள்ளை உண்ட உணவு இல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து" (ப.பாலை.266,267)
என்ற பாடல் கூகைகளின் (பறவையின்) நெற்கூட்டிலிருந்து நெற்கதிர்களை கொள்ளையிட்டு செல்லும் வேட்டைக்குடி எயினர் பற்றி சொல்கிறது.
எனவே சங்க இலக்கியத்தில் வருகின்ற எயினர் எந்த இடத்திலும் வழிப்பறி செய்ததாக குறிப்பு இல்லை.
அதேபோல சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் வருகின்ற வில்லேர் உழவர் (210) வேட்டுவ வரியில் வருகிற வல்வில் எயினர் (13), இட்டுத்தலையென்னும் எயினர் (20) ஆகியோரும் நிரலை கவர்வது தொடர்பாகவே பேசப்பட்டுள்ளனர். சங்க இலக்கியங்களில் பாலைத்திணையில் வசிப்பவர்களாக வேட்டை குடியினராகத்தான் எயினரைப்பற்றி பதிவுகள் உள்ளன. ஆனால் வழிப்பறி கொள்ளையராக இல்லை.


Parakrama Paandian
அரசிற்கான தேவையே வெட்சி போரில் தான் தொடங்குகிறது, கொள்ளையடிப்பதும் அதை தடுப்பதும் தான் அரசிற்கான தேவையை ஏற்படுத்துகிறது, மறவர் கொள்ளையடிப்போராக இருந்தால் எந்த கல்வெட்டிலும் மூவேந்தரும் மறவரோடு போரிட்டு அவர்களை ஒடுக்கியதாக குறிப்பிடவில்லையே ஏன், அரசின் கடமையே மக்களை காப்பது தான், மறவரின் தொழில் நீங்கள் சொல்வதாக இருந்தால் மூவேந்தரும் மறவரும் சதா போரிட்டு கொண்டல்லவா இருந்திருக்க வேண்டும், ஆனால் சங்க இலக்கியம் வெட்சி போரை போரின் வகையாக அல்லவா சொல்கிறது, பாலை மறவரின் வீரத்தை கண்டு படையே நடுங்கும் என சேர மன்னனே பாடிய பாலை திணை பாடல் ஒன்றிருக்கிறது எந்த மன்னனாவது தன்னை அசிங்கபடுத்தி திருடனை புகழ்வானா அக்கால அரசியலை அகத்திணையில் தேடுவதே தவறு புறத்திணையில் தேடுங்கள் உண்மை வரலாறு தெரியும்
5 · விரும்பு · பதிலளி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
நினைவு கற்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°
வம்பலர்களுக்காகப் பெருங்கற்படை சின்னங்கள் எழுப்பப்பட்டதாக அகநானூறு (289) குறுந்தொகை(77,2
77)ஆகியவற்றில் மொத்தம் மூன்று பாடல்கள் உள்ளன.
வில்லில் கோர்த்து எய்த அம்பால் வழிப்போக்கர்கள் இறந்து விட்டனர். அவர்தம் உயர்ந்த பதுக்கில் படர்ந்த காட்டு மல்லிகையைப் பறித்து நடுகல்லிற்கு நாட்பலி கொடுத்து வழிபாடு செய்யப்பட்டதாக,
"சிலைஏ றட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த தகர்க்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும் (அகம்.289)
என்ற இப்பாடலில் கூறப்படுகிறது.
வெஞ்சுரத்து வழியில் இறந்த வம்பலரின் உவல் இடு பதுக்கை உயரமாக வளர்ந்த யானைக்கு நிழலாகப் பயன்படும் என்பதை
.......... வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடுநெல் யானைக்கு இடுநிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு. ...... (குறு.77)
என்ற பாடல் மூலம் யானைக்கு நிழலாக பிரம்மாண்டமாகப் பதுக்கை காணப்பட்டதைக் கூறுகிறது.
வளைந்த வில்லை உடைய மறவரின் நீண்ட அம்பினது வலிய ஆற்றலாகிய பகையை மதியாதவர்களாய் மாறுபட்டு நின்று உயிர் நீத்த வம்பலர்களின் மீது எழுப்பப்பட்ட உவல் இடு பதுக்கை ஊரில் தோன்றும் குன்றுகளை உடைய அகன்ற இடம் என்று காவிரிப்பூம்பட்டினத்து காரி கண்ணனார் 'ஆறுசெல் வம்பலர்' போரிட்டு மாண்டதை,
"அவ்விளிம்பு உரிஇய கொடுஞ்சிலை மறவர்
வை வார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந்தலை. ......(குறு.297)
என விளக்கியுள்ளார்.
இந்த மூன்று பாடல்களிலும் அயலவர்களிடம் பொருளுக்காக கொன்றதாக எந்த நேரடியான குறிப்பும் இல்லை. கொடுஞ்சிலை மறவருடன் எதிர்த்து நின்று போரில் வீழ்ந்தவர்க்கும், வில்லில் கோர்த்த அம்பால் இறந்து பட்டவர்க்கும் பதுக்கை எழுப்பப்பட்டது என்பதாகத்தான் பாடல் கூறுகிறது.
பெருங்கற்படை பற்றி ஆய்வு செய்த எஸ்.பி.குப்தா அவர்கள் இப்பெருங்கல்லறைகளில் மட்பாண்டங்களோடு இரும்புக் கருவிகள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். இரும்பு கருவிகளில் வாள், ஈட்டி, வேல்,அம்பு, முதலான போர்க்கருவிகளும். அரிவாள், மண்வெட்டி, கொடுக்கி,கொழு, முதலான விவசாய கருவிகளும் காணப்பட்டதாக குறிப்பிடுகிறார். இதனுள்ளே வைக்கப்பட்ட பொருட்களின் தன்மையினையும், அளவினையும் பார்க்கும் பொழுது. ...
பெருங்கற்படை சின்னங்கள் குறிப்பிடுகின்ற பாடல்கள் பெரும்பாலும் தொறுபூசலில் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கும், பிற உயர் குடிமக்களுக்கும் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன என்கிறார் தொல்லியல் அறிஞர் க.ராஜன்.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
வம்பலர் கொன்ற தெவ்வர் (அகம்.113),வம்ப
லர் செகுத்த அஞ்சுவரு கவலை (அகம்.161),ஆறுசெல் வம்பலர் உயிர்செலப்பெயர்ப்பின் (அகம்.175),சிலைஏ றட்ட கணைவீழ் வெம்பலர் உயர்பதுக்கு(அகம்.289),நீங்கா வம்பலர் கணை இடத்தொலைந்தோர் (அகம்.313),ஆறுசெல் மாக்கள் அருநிறத்து எறிந்த (அகம்.363), வம்பமாக்கள் உயிர்த்திறம் பறித்தன (நற்.164), கொன்று ஆற்றுத் துறந்த மாக்கள் (நற். 329),வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை (நற். 352),ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த (குறு.297) போன்ற எல்லாப்பாடல்களி
லும் வம்பலர்களைப் பொருளுக்கும் கொலை செய்ததாக எங்கும் குறிப்புகள் இல்லை. கொள்ளை பற்றியே இல்லாமல் கொலைகளைப்பற்றியே பாடல்கள் பேசுகின்றன.
அத்தம் நண்ணி அதர்பார்த்திருந்த பாலை நில மாந்தர்கள் பற்றியும் வழிப்போவோர்களிடம் பறிப்பதற்காக எதிர்பார்த்திருந்து காத்திருந்ததாக உரையாசிரியர்களால் விளக்கப்பட்ட மற்ற எல்லா பாடல்களிலும் பொருளைப் பறிப்பதற்காக எதிர்பார்த்திருந்து காத்திருந்ததாக வெளிப்படையான குறிப்புகள் இல்லை.
பாலைத்திணை பாடல்கள் பற்றி கருத்து கூறும் குணா அவர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படும் பாலைத்திணை பாடல்களின் தலைவன் தன் தலைவியை விட்டு பிரிந்து சுட்டெரிக்கிற கொடிய பாலை நிலத்தினூடே சென்றதைப்பற்றிய
தாகும். பாலைத்திணை பற்றிய எல்லா பாடல்களும் தலைவன் பொருள் வேண்டிச்சென்றதைப் பற்றியன அல்ல. ! இவற்றில் பல வேங்கட மலைக்கு அப்பால் இருந்த கடும் சுரங்களில் வாழ்ந்து வந்த வடுகர் முதலானோரை அடக்கி ஒடுக்குவதற்காக நடந்த படைச்செலவுகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். என்கிறார்.
இக்கருத்துக்களை அரண் செய்கின்ற வேறு சிலப் பாடல்களும் பாலைத்திணையில் உள்ளன.
"ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார்
வல்வில் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடுநிலை யா அத்துக் கோடு கோள் அருஞ்சுரம் "(அகம்.263)
என்ற பாடலில் கருவூர் கண்ணம்பாளனார் யா மரத்தின் கிளைகளில் ஏறி வல்வில் ஆடவர்களைக்கொண்டு அங்கே வரும் அயலவர்களின் நடமாட்டத்தை ஒற்றறிந்து கண்காணித்ததாகக் கூறுகிறார்.
இதேபாடலில்
'ஒளிறுவேல் கோதை ஓம்பி காக்கும்
வஞ்சி அன்ன என் வளநகர் விளங்க'
என்று சேரநாட்டு மன்னனும் தலைநகரும் பேசப்படுகிறது. சேரர்கள் வலிமை வாய்ந்த ஒற்றர் படை வைத்திருந்தனர் என்ற பரவலாக அறியப்பட்ட செய்தியோடு இதனைப் பொருத்தினால் கூடுதல் விளக்கம் தெரியும்.
மற்றொரு பாடலில் இறந்து பட்ட வம்பலரின் குருதியைக்குடித்த காகம் ஒற்றுத்தொழிலை மேற்கொண்டவர் போல அடங்கிய குரலை உடையனவாய் மனையிடத்தே தங்கும் என்பதை, ..
"நீங்கா வம்பலர் கணைஇடத் தொலைந்தோர்
வசிபடு புண்ணின் குருதி மாந்தி
ஒற்றுச்சொல் மாக்களின் ஒடுங்கிய குரல
இல்வழிப் படூஉம் காக்கை .... (அகம்.313) என்ற பாடல் வழியாக கூறப்படுகிறது.
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எடுக்க முடிவு செய்து இமயமலையிலிருந்து கல் எடுத்து வரத் தீர்மானிக்கிறான். அப்போது செங்குட்டுவன் அமைச்சர் வில்லவன் கோதை இதுகுறித்து வடதிசை மன்னர்களுக்கு ஓலை அனுப்ப வேண்டுமெனக் கூறுகிறான்.அச்ச
மயத்தில் செங்குட்டுவனது மற்றொரு அமைச்சனான அழும்பில் வேள், "அவ்வாறு ஓலையனுப்பத்தேவை
யில்லை இந்த நாவலந்தீவின் பல இடங்களையும் சேர்ந்த ஒற்றர்கள் வஞ்சி மாநகர் வாயிலிலேயே நீங்காது இருந்து வருகிறார்கள்
எனவே வஞ்சிமாநகர் வாயிலிலேயே வடதிசை பயணம் குறித்து பறையறிவித்தால் போதுமானது. அவ்வாறு பறையறிவித்த செய்தி பிற நாட்டு ஒற்றர்களின் செவிக்கு எட்டிவிடும். அவர்களே தத்தம் மன்னர்களுக்கு அச்செய்தியை அனுப்பிவிடுவர் " என்று சொல்கிறான். (காட்சிக்காதை வரிகள் 173, 177)இதன்மூலம் சேரன் செங்குட்டுவன் ஆட்சியில் உள்நாட்டிலுள்ள பிற நாட்டு ஒற்றர்களையும் உளவுபார்க்கும் ஒற்றர்களும் இருந்தனர் என்பது தெரியவருகிறது. எனத் தொ.மு.சி.ரகுநாதன் தமது "இளங்கோவடிகள் யார்? " எனும் நூலில் விளக்குகிறார். எனவே இங்கு வம்பலர் என்பது ஒற்றர் என்பதும் அவர்களே வில்லம்பு உடையோர் என்பதை பொருள் கொள்ள சாத்தியம் உள்ளது. மேலே கண்ட குணா அவர்களின் கருத்தை ஒற்றுச்சொல் மாந்தர்களோடு ஒப்பீடு செய்தால் வம்பலர், ஆறுசெல் மாக்கள், வம்பமாக்கள் போன்றோரை மரபாக வணிகர்கள் எனப் பொருள் கொள்வதைத்தவிர்த்து போர் தொடர்பானவர்கள், அயலவர்கள் என பொருள் கொண்டால் பாலைத்திணை பாடல்களின் பொருள் வேறொன்றாக இருக்கும். ஏனெனில் பொருள் கவர்வதற்காக எதிர்பார்த்து காத்திருந்ததாகவோ, கொன்றதாகவோ நேரடியான குறிப்புகள் பாலைத்திணை பாடல்களில் இல்லை.
பதுக்கைகள் அமைப்பு பற்றிக் கூறும் க.ராஜன் "சுமார் 10 முதல் 15டன் எடைகொண்ட கற்களைக்கொண்டு இப் பெருங்கற்படை சின்னங்கள் உருவாக்கப்பட்டதைப் பார்க்கும் பொழுது இவை ஒரு தனி மனிதனால் உருவாக்கப்படவில்லை என்பதும், ஒரு சமுதாயமே முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது. நீத்தோர் நினைவாக அனைவரும் வியக்கும் வண்ணம் தமது திறனை முழுமையாகப் பயன்படுத்தி இம்மாபெரும் சின்னங்களை உருவாக்கி இருக்கிறார்கள். என்கிறார்.
அம்பால் எய்து வீழ்த்தப்பட்ட வம்பலரின் பதுக்கை யானை தங்கிச் செல்வதற்கு ஏற்ற பிரம்மாண்டமானது என்று பாடல் கூறுகிறது. (குறு.77). க.ராஜன் அவர்களும் உவல் இடு பதுக்கை எனப்பட்டதானது பதுக்கையுடன் கூடிய கல்வட்டம் (கி.மு.3-1) என்றே வகைப்படுத்தியுள்ளார். எனவே பொருள் தேட வெகுதொலைவிலிருந்து வேற்று நாட்டுக்கு வந்த ஒருவருக்கு அவருக்கு தொடர்பே இல்லாத ஒரு பகுதியில் அவர் இறந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து உடலைக்கைப்பற்றி வில்லும், வேலும்,வாளும், ஈட்டியும் வைத்து பதுக்கைகள் அமைத்திருப்பார்கள் என்பது பொருந்துமாறு இல்லை.
எனவே வம்பலர் பதுக்கைகள் தொறுபூசலில் ஈடுபட்ட அல்லது போர்களில் ஈடுபட்டு மாண்ட குழுத்தலைவனுக்கு எடுக்கப்பட்டதாக
வே இருக்கவேண்டும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
பாலைக்குடிகள் ஒரு பார்வை. 2.
<•><•><•><•><•><•><•><•><•><•><•>
அன்பு உறவுகளே! சென்ற பதிவில் பாலைக்குடிகள் எப்படி உரையாசிரியர்களால் தவறாக சித்தரிக்கப்பட்டனர் என பார்த்தோம். இந்த பதிவில் ஆறலைகள்வர் தோற்றம் பற்றிய கட்டுமானங்களைக் காண்போம்.
உண்மையில் அக இலக்கிய காலத்தில் வழிப்பறி நடந்திருந்தால் அது ஆறலைக்களவாக இருந்திருந்தால் கூட புலவர்கள் அவற்றை வெளிப்படையாகப் பேசுவதில் தடை இல்லை. 'கடுங்கண் மழவர், கொலைவில் எயினர், கல்லா இளையர், கொடுவில் ஆடவர், கொடுந்தொழில் மறவர்,' எனப்பூடகமாகச் சொல்லாமல், ... வழிப்பறிக்கள்வரைக்குறிக்கும் ஆறலைகள்வர் என்ற சொல்லாட்சியைப் புலவர்மரபு வெளிப்படையாக கையாளத்தடை இல்லை. ஏனெனில் ஆறு,அலைத்தல், கள்வர், என்ற சொல்லாட்சிகள் தனித்தனியாக பாலைத்திணை முழுவதும் இடம்பெற்றுள்ளன.
இங்கு ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி குறிப்பாக கள்வர், களவு, கொள்ளை என்ற சொற்கள் நிரை கவர்பவர்களைக் குறிக்கவும், களவு, கற்பு, தொடர்பான குறிஞ்சி, மருத நில தலைமகனைக்குறிக்கவுமே வருகின்றன. ஆறலைக்கள்வர்கள் என்று விளக்கப்பட்டவர்களைக் குறிக்க எந்த இடத்திலும் வரவில்லை.
"அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென்ன. .... (அகம்.7)
"வேட்டக்கள்வர் விசியுறு கடுங்கண். ... (அகம்.63)
"கடுங்கண் மழவர் களவு உழவு. ... (அகம்.91)
"கன்றுடைக் கொள்ளையர்.....(அகம்.101)
"ஆகொள் மூதூர் கள்வர் பெருமகன்...... (அகம்.342)
இவை எல்லாமே ஆகொள் பூசல் தொடர்பானவையே. இந்த பாடல்களில் எல்லாம் கள்வர்களை வெட்சி, கரந்தை வீரர்களாகவே உரை ஆசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர்.
"கடி இலம் புகூ உம் கொள்வேன் போல (அக. மருதம் 276)
"யாரும் இல்லை தானே கள்வன் (அக.குறிஞ்சி 25)
"கள்வர் போல்வர், நீ அகன்றி சினோர்க்கே (அக.மருதம் 127)
"களவனும் கடவனும் புணைவனும் தானே (அகம்.நெய்தல்318)
"கள்வர் போலக் கொடியோன் மாதோ (நற்.பாலை28)
"நள்ளென் கங்குல் கள்வன் போல (நற். மருதம் 40)
என்ற பாடல்களில் வருகிற கள்வர்கள் அனைவரும் குறிஞ்சி உரிப்பொருளான இருளில் மறைந்து வந்து தலைவியைக் கூடுகிற களவுகாலகள்வனையும், களவு முடிந்து கற்பு எனும் திருமண உறவிற்குள் வந்த பிறகு பரத்தையுடன் கூடிவிட்டு குற்ற உணர்வுடன் இல்லத்திற்கு திரும்பி வருகிற மருத நிலத்தலைவனையும்தான் நினைவு படுத்துகின்றன. எங்குமே வழிப்பறியையோ, இருட்டிற்குள் வீடு புகுந்து திருடுகிற களவையோ குறிக்கவில்லை. ஆக மருதநிலத்தின் தலைவனும் கள்ளன்தான்.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
நிரைகளை கவர்ந்து செல்வது களவு
கவர்ந்து செல்பவன் கள்வன்
தலைவியை கவர்ந்து செல்வது களவு (உடன்போக்கு)
தலைவியைக்கவர்ந்து செல்பவன் கள்வன், என்று நாம் புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென
பிற்படு பூசலின் வழிவழி ஓடி (அகம். 7)
என்ற பாடலில் பசுக்கூட்டங்களை கவர்ந்து செல்பவர்களை வெட்சி வீரர்கள் விரட்டிச்சென்று செய்யும் போரைப்போல மகளை உடன்போக்கில் கவர்ந்து சென்ற தலைவனைத் தேடிச்சென்று காண முடியாத தலைவியின் மனநிலையை 'கயமனார்' இப்படி பதிவு செய்துள்ளார்.
இதன்மூலம் நிரை கவர்தல், களவு, உடன்போக்கு தொடர்பான சண்டைகள் இனக்குழு மக்களுக்கான புராதன பூசல்கள் என்பதோடு கள்வர் என்ற சொல் 'திருட்டு' என்ற சொல்லைக்குறிக்கவில்லை என்பதும் நன்றாக விளங்குகிறது. எனவே கள்வர் என்பது திருடர் எனப்பொருள் கொண்டது பிற்காலத்தில்தான் என்பது வெள்ளிடைமலை.
ஒருவேளை ஆறலைக்கள்வரை விளக்க குறுந்தொகை,நற்றிணை இவற்றில் குறுகிய பாடல்களின் அடிகள் இடம் தராவிட்டாலும் அகநானூறு பாடலின் நீண்ட அடி எல்லை அதற்கு இடம் தருகிறது. அந்த நெடுந்தொகையிலும் பொருளுக்காக வழிப்பறி செய்ததாக இல்லை. எனவே எட்டுத்தொகை அகப்பாடல்களில் பேசப்படுவது வழிப்பறி அல்ல! . அது புவி அரசியல், வணிகப்பொருளியல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முரண்பாடு, போர் என்றுதான் கருதமுடியும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Sivam Chozhangaraayar பதிலளித்தார் · 1 பதில்

Muniraj Vanathirayar
நன்றி! நண்பர்களே! இதுகாரும் புரிந்து இனி கள்வர் கள்ளர் என்பதை எவ்விதப்பார்வையில் அணுகவேண்டுமென அறிந்து தெளிக!

அழகன் பத்தர்
Muniraj Vanathirayar பாலை கருப்பொருள் பகற் சூறையாடல்..இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஊரை ஏமாத்த போறீங்களோ...பாலை மறவரை படைஞராக வேலைக்குச் சேர்த்தது யாருனு யோசிங்க...வரலாற்றைத் திரிப்பதை விட்டுட்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக