புதன், 20 ஜூன், 2018

சாகர்மாலா திட்டம் பற்றி தொடர் 2 3 மண்ணழிப்பு கார்ப்பரேட்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு


வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக்
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-2
இந்தியா இந்த BIMSTEC கூட்டமைப்பின் மீது அதிக அக்கறையாக செயல்பட்டது அது தன் கிழக்காசிய நாடுகளை தன்னோடு இனக்கமாக வைத்து சீனாவின் ஆதிக்கத்தை அடக்க என்பதே விளங்கும்.
கடந்த 2005 (17/1/2005) வட அமெரிக்கா பத்திரிக்கையான "தி வாசிங்டன் டைம்ச்" ஒரு அறிக்கையை மேல்கோள் காட்டி வெளியானது அது தான் சீனாவின் "முத்து மாலை திட்டம்".
தெற்காசியப் பகுதியில் கடல்வழியே நடக்கும் தன் வணிகத்தை கண்காணிக்க சீனா இராணுவ தளவாடங்களை உருவாக்கி வருவதாகவும் அதற்கு "முத்து மாலை" (String of Pearls) என்றும் பெயர் வைத்திள்ளதாக அமெரிக்கா இராணுவம் கூறியது.
அதில் சீனா எகிப்து தொடங்கி பாக்கித்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்டு நாடுகளில் துறைமுகம் அமைக்க கவனம் செலுத்துகிறது.
பாக்கித்தானின் க்வடர் (Gwadar), வங்கதேசத்தின் சிட்டகாங் (Shittagong), மியான்மரின் சிட்வெ (Sittwe), தாய்லாந்தின் கரா கால்வாய் (Kra Canal), வியட்னாம் அருகில் உட்டீ தீவுகள் (woody islands) ஆகிய இடங்களில் சீன கடற்படை தளங்களுக்கான பணிகள் நடந்து வருகிறது.
முத்து மாலை திட்டதிற்கு இலங்கைக்கு பெருமளவில் முக்கியத்துவம் அளிக்கிறது சீனா. 2008-2009 நடந்து தமிழீழ இனபடுகொலைக்கு சீன மற்றும் சீன நட்பு நாடான பாக்கித்தானும் உதவிகளை பெற்று தந்ததை கவனிக்கவும்.
இப்போ இலங்கையின் அம்பாந்தோட்டம் துறைமுகம் சீனாவுக்கு வழங்கியுள்ளது இலங்கை அரசு. அங்கே சீன துறைமுகம் அமைக்க நேரடி முதலீடு செய்து வருகிறது.
இப்படி சீனா பாக்கித்தானை எதிர்க்கும் விதத்தில் உருவாக்கபட்டதே இந்த BIMSTEC என்ற கூட்டமைப்பு.
கடந்த 2016 பாக்கிதானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியாவும் அதற்கு துணையாக சில நாடுகளும் புறக்கணித்தன. அதற்கு பதிலாக 2016 செப்டம்பரில் கோவாவில் BIMSTEC மாநாட்டுக்கு இந்திய அரசு முக்கியம் அளித்தது. அந்த மாநாட்டில் பேசிய இந்திய வெளயுறவுத் துறை அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே பாக்கிதான்-சீனா நாடுகளை தவிர்த்த எதிர்காலம் தான் இனி என்றனர்.
என்னப்பா இது இங்க நடக்குது என்ன சொல்ல வர என்ற மனபான்க்கு சிலர் தள்ளபட்டு இருக்கலாம்
மரபார்ந்த அறிவியலும், தொழில்நுட்பம் சிறந்து விளங்கிய மாயன், இன்கா போன்ற பல்வேறு பூர்வகுடிகளை அழித்து உருவாக்கபட்ட நாடு தான் அமெரிக்கா
அதேபோல இத்திட்டங்கள் மூலம் அழிய போவது தமிழ் நாட்டின் இயற்கை வளங்களும் தமிழர்களின் வாழ்வாதாரமும் தான்
மேலும் அடுத்த பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்........
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savetamilnadu


வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Å Ravin Th மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம்
சாகர்மாலா_திட்டம்-3
அமெரிக்க வல்லரசின் கனவு திட்டங்களுக்கு செவ்விந்திய பழங்குடிகள் பலயாக்கியதுபோல், இன்று இந்தியா தன் வல்லரசு கனவிற்காக தமிழர்களை பலியாக்க புரபட்டுள்ளது.
மேலும்
1966-1970 ஆண்டுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த ஆப்ரிக்கா நாடு சுமார் 1.3 மில்லியன் டன் உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. பின், இதே போன்ற அழிவு திட்டமான மீத்தேனை அங்கே கொண்டு வந்து இன்று உணவுக்கே கையேந்தும் நிலை உருவாகி இருப்பதை அனைவரும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
கடந்த 2004ஆம் ஆண்டு BIMST-EC கூட்டமைப்பில் ஏற்படுத்தபட்ட அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
வணிகம், முதலீடு, தொழில்நுட்பம், சுற்றுலா, மனிதவளம், வேளாண்மை, மீன்வளம், போக்குவரத்து, தொலைதொடர்பு, பாதுகாப்பு ஆகியவற்றை துறை துறையாக பிரித்து அந்த கூட்டமைப்பு நாடுகள் கவனித்து கொள்ளுமாம்.
எந்தந்த துறைக்கு எந்தந்த நாடு பொறுப்பேற்க போகிறது என்பதின் பட்டியல்
இந்தியா-சுற்றுலா, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, சுற்றுசூழல் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை (ஒகி புயலின் போது இவர்கள் செய்த மேலாண்மையை மக்கள் கவனிக்கனும்), பயங்கரவாதம்.
தாய்லாந்து-மனித உறவு மேம்பாடு, மீன்பிடித்துறை, பொது நலம்
வங்கதேசம்-வணகிம் மற்றும் முதலீடு
மியான்மர்-ஆற்றல், வேளாண்மை
இலங்கை-தொழில்நுட்பம்
பூட்டான்-பண்பாடு
நேப்பாளம்-வறுமை ஒழிப்பு
இப்போ, என்னனா பாதுகாப்பு-வணிக
ம்-முதலீடு-தொழில்நுட்பம் போன்ற அறிக்கைகள் பொதுவாகவே கூட்டமைப்பு நாடுகளில் இருப்பது தான். ஆனால், வேளாண்மை, மீன்வளம், மனிதவளம், சுற்றுலா போன்ற மற்றவைகளை இவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்றால் தமிழக மக்கள் (குமரி மக்கள்) அப்போ என்ன தலைல துண்ட போட்டு தூங்கனுமா????
நன்கு சிந்திக்கவும் மக்களே எல்லாத்தையும் அவர்கள் வசம் பிடுங்க போகிறார்கள் அதற்கு அவர்கள் கொடுக்கும் பெயர் வளர்ச்சி, வேலைவாய்ப்பு. ஒரே கேள்வி கேட்கிறேன், என் நிலத்தை புடுங்கி எனக்கே வேலை போட்டு தருவது என்ன வளர்ச்சி இது சர்வாதிகாரம் இல்லயா!!!!
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 2 படிக்க கீழ்பெட்டியில் இணைப்பு உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savetamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக