புதன், 20 ஜூன், 2018

அரையன் அரசன் சொல்லாய்வு வேர்ச்சொல் அரவு உரவு வலிமை முத்தரையர் பட்டம் சாதி பாவாணர்




aathi tamil <aathi1956@gmail.com>

பிப். 19





பெறுநர்: எனக்கு









ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன், தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
23 மணி நேரம் ·



#அரசன்_ராஜன்_அரையன்...

ம. அரசன், க. அரச, து. அரசு.

L. regis, rex, Kelt, rig, OG. rik, Goth, reiks, AS. rice, E. rich.


அரவணைத்தல் என்பது தழுவுதலையன்றிச் தழுவிக்
#காத்தலையே குறித்தலால், அரவணை என்னும் கூட்டுச் சொல்லின்
முதலுறுப்பு, பாம்பைக் குறியாது காக்கும் வலிமையுள்ள உயர்திணையான்
ஒருவனையே குறித்தல் வேண்டும்.

அகரம் பல சொன்முதலில் உகரத்தின்
திரிபாயிருத்தலால், அரவு என்பது உரவு என்பதன் திரிபென்று
கொள்ளுதல் தக்கதாம். உரவு வலிமை.
வலி என்பது பண்பாகுபெயராய்
வலிமையுள்ளவனையுங் குறிக்கும்.

"காய மனவசி வலிகள்"
(மேருமந். 1097)

Authority என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக.

உலகில் வலிமை மிக்கவன் அரசனாதலின், உரவோன் என்னும்
சொல் அரசனையே சிறப்பாகக் குறிக்கும்.

"முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
யொருதா மாகிய வுரவோ ரும்பல்" (புறம். 18)

என்று பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது காண்க.
வுகரவீறு சில சொற்களில் சுகர வீறாகத் திரிகின்றது.

எ-டு: ஏவு - ஏசு, பரவு - பரசு,
விரவு - விரசு, துளவு - துளசு
-துளசி.

இம் முறையில் அரவு என்பது அரசு என்றாயிற்று.

அரசு - அரசன். இச் சொல் குமரிக்கண்டத்தில் தலைக்கழகக்
காலத்திலேயே தோன்றியதாகும். அகப்பொருளிலக்கணத்திற்
குறிக் கப்பெறும் நால்வகை வகுப்பாருள் இரண்டாமவர் #அரசர்_அரசன்
என்பது 1.கிழவன், 2.வேள், 3.மன்னன், 4.கோ, 5.வேந்தன் என்னும் ஐவகைத்
தலைவர்க்கும் #பொதுப்பெயராம்.

"ஐவகை மரபின் அரசர் பக்கமும்"
(தொல்.1021)

என்னுமிடத்து , வேறு பெயர் பொருந்தாமை காண்க.

அரசன் - அரைசன் - அரையன்.
அரசு - அரைசு.

தெ. ராயலு, க.ராயரு, E.roy.

மாவரையன் - மாராயன் - மாராயம்.

"மாராயம் பெற்ற நெடுமொழி யானும்"(தொல். பொருள்.63)

இந்தியர்க்குள் வழங்கிவரும் ராய் என்னும் பட்டப் பெயர் #அரையன் என்பதைத் தழுவியதாகும். ராவ் என்பது அரவன் (அரசன்) என்பதைத் தழுவியது போலும்!

மாராயம் என்பது தொல்காப்பியர் காலத்தில் மாவரையம்
என்றே வழங்கியிருத்தல் வேண்டும். பிற்காலத்தில் எழுதினவன்
பழமொழிப்படி ஏட்டைக் கெடுத்ததாகத் தெரிகின்றது.

#அரையன் - வ. ராய. யகரம் பெற்ற இச் சொல்வடிவிற்குத் தமிழில்
தவிர வேறெம்மொழியிலும் விளக்கமின்மை காண்க.

ராஜ என்னும் சொல்லை ரஜ் என்று குறுக்கி ஆள் (to rule) என்றும்,
ஒளிர் (to shine) என்றும், செயற்கை முறையில் வடவர் பொருள் கற்பிப்பது எள்ளளவும் பொருந்தாது.

இனி, அத்திரு, அத்து(க)மானி, இலணை, கணவம், சுவலை, திருமரம், பணை எனப் பல பெயர்கொண்ட #அரசமரத்திற்கு, அப்பெயர்
தொன்றுதொட்டு உலக வழக்கில் வழங்கி வருவதும், அச்சொல்லின்
#தமிழ்மைக்கு ஒரு சான்றாம்.

ம. அரசு, க. அரசெ, தெ. ராய்.

நாட்டு மரங்களுள் அரசமரம் மிக ஓங்கி வளர்வதால், மரவரசு
என்னும் பொருளில் அது அப் பெயர் பெற்றது.

"அத்திபோல் துளிர்த்து, ஆல்போற் படர்ந்து, அரசுபோ லோங்கி,
அறுகுபோல் வேரூன்றி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்"
என்னும் மரபுத் தொடர்மொழியையும் நோக்குக.

#ஐயன்_பாவாணர்....

இவன்,
#தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை.
தனித்தமிழ் உயர தானுயர்வான் தமிழன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக