புதன், 20 ஜூன், 2018

திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு 580 காளை 500 மாடுபிடிவீரர் லட்சக்கணக்கான பார்வையாளர் ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு


திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியால் அதிர்ந்த அலகுமலை: லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பு
Published : 19 Feb 2018 08:33 IST
Updated : 19 Feb 2018 08:33 IST

இரா.கார்த்திகேயன்


திமிறி ஓடும் காளையை அடக்க எத்தணித்த மாடு பிடி வீரர்.


காளையை அடக்கப் பாய்ந்த மாடு பிடி வீரர்கள். (அடுத்த படம்) காலரிகளில் நிறைந்திருந்த பார்வையாளர்கள். - படங்கள்: ஜெ.மனோகரன்


Coimbatore Tamil Nadu 18/02/2018:Azhagu malai Jallikattu vizha in Tirupur on sunday photo.J_Manoharan


காளையை அடக்க முயற்சிக்கும் போது காளையுடன் சரிந்த காளை.


‘நீ என்னை பிடிக்கப் போறியா’ வா வா என சீறும் காளை.


அடங்கிடு... அடங்கிடு... என அடக்கும் காளைகள்.


காளையை அடக்க பாய்ந்த இளைஞர்.



திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் அடக்க வந்தவர்களை கண்களில் அனல் பறக்க முட்டும் அடங்காத காளை.


திமிறி ஓடும் காளையை அடக்க எத்தணித்த மாடு பிடி வீரர்.


காளையை அடக்கப் பாய்ந்த மாடு பிடி வீரர்கள். (அடுத்த படம்) காலரிகளில் நிறைந்திருந்த பார்வையாளர்கள். - படங்கள்: ஜெ.மனோகரன்


திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை லட்சக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.

பொங்கல் திருவிழாவையொட்டி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கம் சார்பில், அலகுமலை அடிவாரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், வி.சத்தியபாமா, சி.மகேந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் நடராஜன், சு.குணசேகரன், உ.தனியரசு, கே.என்.விஜயகுமார் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை, மத்திய பார்வையாளர் மிட்டல் கண்காணித்தார்.

ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிப்பை வீரர்கள் வாசிக்க போட்டி தொடங்கியது.


பரிசுப் பொருட்கள்

காங்கயம், உம்பளச்சேரி உட்பட பிரசித்தி பெற்ற காளைகள் பங்கேற்றன. மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 700-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன. பீரோ, கட்டில், அண்டா, எலெக்ட்ரிக் அடுப்பு, வெள்ளிக் காசு, ஏர்கூலர், மின் மோட்டார், குடம், ஹாட்பாக்ஸ் உட்பட ஆயிரக்கணக்கான மதிப்பிலான பரிசுப்பொருட்கள், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க இயலாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.


எல்.இ.டி. திரைகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 6 எல்.இ.டி. அகண்ட திரைகளில் பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். விடுமுறை நாள் என்பதால், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டியை கண்டு ரசித்ததாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவசம்! 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு

Keywords
ஜல்லிக்கட்டுப் போட்டி திருப்பூர் மாவட்டம் பொங்கல் திருவிழா அலகுமலை ஜல்லிக்கட்டு
சிறப்பு பேருந்து



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக