செவ்வாய், 5 ஜூன், 2018

பெருந்தச்சு நாட்காட்டி 53 ஆண்டு கடைசிநாள் விழா முருகன்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 9
பெறுநர்: எனக்கு

   மரபு வழித் தமிழ்த்தேசியத் தக்கார் அவையம்

2-ஆம் பதிவு

தொடர் பதிவு எண் – 53

           நாள்: 08.02.2018

தொடர் நாள்: 49

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் இரண்டாவது முழுநிலவு தோல்வியுற்றது. கடந்த 01.02.2018-ல் முறை முற்றி 42-வது நாளில் முழுமை பெற வேண்டிய நிலவு 31.01.2018-ல் முந்தித் தோன்றியது. அன்றே அதனை அரவு தீண்டியது. 41-வது நாளில் தோல்வியுற்றுக் கடந்தாலும் நள்ளிரவைக் கடந்த நேரம் மற்றும் விடியற் காலையில் தாக்குப் பிடித்து மறைந்த நேரம் இவற்றைக் கருத்தில் கொண்டு அந்த நாளை முழுநிலவுத் தகுதியில் கணக்கிட்டு ஆண்டு நாட்களின் எண்ணிக்கையில் ஒரு நாள் சரிந்தது என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 01.02.2018-ல் மிகவும் பிந்தி விட்டது. அது தோல்வியை நன்றாக உறுதி செய்து விட்டது.

ஆண்டு நாள் சரிவு:-

            இரண்டாவது முழுநிலவு தோல்வியுற்ற படியால் ஆண்டு நாட்களில் ஒரு நாள் குறைவுற்றது. வளர் பிறையின் பாட்டைப் பருவத்தில் இது நிகழ்ந்து உள்ளது. அதனால் இந்தப் பாட்டை வெற்றிபெறவில்லை என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

பாட்டைப் பருவம்:-

            இரண்டாவது முழுநிலவு தோல்வியுற்றபடியால் இரண்டாவது பாட்டை தோற்றது. அதனைக் கணக்கில் கொண்டு, 01.02.2018 முதல் தொடர் நாட்களை எண்ணி 18 நாட்களைக் கூட்டி அடுத்த நாளான 19.02.2018 முதல் 02.03.2018 வரையிலான ஈரறு நாட்களை இவ்வாண்டின் மூன்றாம் பாட்டையாக மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறிவிக்கிறது.

நோன்பு:-

            இரண்டாம் பாட்டையின் தோல்வியைத் தொடர்ந்து மூன்றாம் பாட்டை தொடங்கும் முன்பாக மாசி மாதத்தின் கடையேழு நாள் நோன்பு 12.02.2018 முதல் 18.02.2018 வரையிலான 7 நாட்கள் நோன்புக்காலம். நடுநாள் 15.02.2018 மறைநிலவு. கடைநாள் 18.02.2018 மூன்றாம் பிறை. மாசி மாதம் அன்றுடன் முடியும்.

பங்குனிப் பாட்டை:-

            19.02.2018 முதல் 02.03.2018 வரையிலான 12 நாட்களும் பங்குனி மாதத்தின் பாட்டைப் பருவம் ஆகும். 19.02.2018 என்பது வளர்பிறையின் 4-வது நாள் . 02.03.2018 என்பது எதிர் பார்க்கப்படும் முழுநிலவு நாள். வெற்றி தொல்வியைக் காத்திருந்துதான் கணக்கிட வேண்டும்.

செயிர் நேர்த்திக் கடன்:-

            ‘செயிர்’ என்பது குற்றம். அறத்திற்கு நேர் எதிரானது. அறம் பாடு கிறங்கும் போது செயிரின் இகல் மிகும். அது சுடரின் சினமாகத் தோன்றும். சுடர் சினம் தணிய மாந்த முயற்சி தேவை. அதற்காகப் பழங்காலத்தில் பாட்டைப் பருவத்தில் மக்கள் பெருமளவு இடப் பெயர்வு செய்து முழுநிலவு நாளில் ஒன்று கூடினர். அது பெரும்பாலும் முருகன் கோயில் விழாவாக அமைந்திருந்தமை தெள்ளிதின் விளங்குகிறது.

கீழ் எல்லை, மேல் எல்லை:-

            தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலின் அடிப்படைத் தேவையான சரியான புரிதலைக் கீழ் எல்லையாகவும், அதன் வழியே தமிழ் இனத்தின் வாழ்வியலைத் தகவமைக்கும் ஒரு பண்பாட்டு அசைவை மேல் எல்லையாகவும் கணக்கிட்டு ஒரு தலை முறையை விழிப்படையச் செய்வதில் ‘தமிழ்த் தையியம்’ அரசியல் வலிமை பெற்று ஆள்வினை ஏற்கும் என்று நம்பலாம். அது ‘மரபு வழித் தமிழ்த் தேசியம்’ என்று அறிவுத் தளத்தில் அடித்துப் பேச வல்லுநர்கள் வெளிப்பட வேண்டும்.

நிழல் விலகல்:-

            அடிப்படை நிழல்காண் மண்டிலம், அதன் முளைக்குச்சி, நண்பகல் நிழல் விலகல் ஆகியவற்றை ஒவ்வொரு 10 நாட்கள் இடைவெளியில் கணக்கிடச் சொல்கிறது ‘மானசாரம்’ என்ற கட்டடக் கலை நூல். அதன்படி எல்லையின் 8 புள்ளிகள் 10 ½ ஆகித் தையில் ஊன்றித் திரும்பி இன்றுடன் 49 நாட்கள் ஆகிவிட்டன.

            தை முதல் நாளில் 10 ½ அங்குலம் ஆக இருந்த நண்பகல் நிழல் விலகல் 40-வது நாளில் 8 ¼ அங்குலம் ஆக உள் வாங்கியிருக்கிறது. அது மெள்ளக் குறைந்து நிழல் அற்ற நாட்களைக் கடந்து மறுபுறம் வளரும். அதன் வடஎல்லை 4 அங்குலம். காத்திருந்து பார்க்க வேண்டும்.

மீண்டெழும் தமிழர் மரபறிவு:-

            ‘குச்சி நிழலின் குறுங்குறி’ எனும் அவச்சாயை ஆனது செயிரின் குறை நாட்களை உணர்த்தும் வலிமையுடையது. அதன் மறுதலை என்பது திரும்பும் திரு நினைவு.

வெற்றி வேல் கொற்கை:-

          சுற்றிலும் நீர் சூழ்ந்த திட்டு ஒன்றில் வேல் ஊன்றி நிழல் கண்டு முரசறைந்து தென் பாண்டிய அரச மரபினர் வழிபட்ட இடம் இன்றும் நண்பகல் வழிபாடு நடத்தும் இடமாக இருக்கிறது என்பது வியப்பான உண்மை.

திருச்செந்தூருக்கு அருகில் உள்ள கொற்கை எனும் ஊரில் இந்து சமய அற நிலையத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள ‘வெற்றிவேல் அம்மன்’ கோயில், உச்சி கால பூசையினை வழுவாமல் செய்து வருகிறது. இன்று அங்கு ஒரு காளி கோயில் இருக்கிறது. பழங்காலத்தில் அதே இடத்தில் வேல் கோட்டம் இருந்திருக்கலாம். அவ்வாறான ஒரு நண்பகல் பூசையின் போது தான் ஆண்டு நாட்களின் கடைசி நாளான 360-வது நாள் கண்டு கொள்ளப்பட்டு அன்றே அப்பொழுதே முரசறைந்து அறிவிப்பு செய்யப் பெற்றிருக்க வேண்டும். அன்று மாலை 3-ஆம் பிறை மறுநாள் புத்தாண்டு. அது ‘ஆடு துவன்று விழவு’. காண்க மாநாகன் இனமணி-1.

தமிழ்ப்புத்தாண்டு அரசியலும் தமிழக அரசும்:-

            தமிழக அரசு என்றும் எப்பொழுதும் தமிழ் அறிஞர்களின் வழிகாட்டுதலைப் புறக்கணித்தது கிடையாது. ஆனாலும் தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலில் வெற்றி பெறவில்லை என்றால் அது தமிழ்ப் பகையின் தொடர்வினையின் விளைவு என்று புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 14.01.2018 அன்று தை  முதல் நாள் என்று பஞ்சாங்கம் சொன்னது. அன்று தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக கொண்டாடியது. திராவிடப் புத்தாண்டு என்று திக கொண்டாடியது. தேய்பிறையாயினும் அன்றே மஞ்சு விரட்டு என்று இன்றைய தமிழக அரசு வீம்பாக நின்றது.  இன்றையத் தமிழக அரசு ஏப்ரல் 14-ல் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டப்படி கொண்டாடக் காத்திருக்கிறது. இன்னும் 65 நாட்கள். தமிழறிஞர்கள் மனங்கொண்டால் தீர்வுத் திட்டங்களை முன் வைக்கலாம். இயலாத போது இந்த அரசு என்று மாறும் என்று காத்திருக்க நேரும்.

46 வது பதிவு:-

            மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தனது ‘46’-வது பதிவில் விரிவான செய்தியை வெளியிட்டது. அதன் நோக்கம் தை பிறக்கும் போது வழி பிறக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்புத்தான். இன்று மீண்டும் சித்திரை முதல் நாளை நாளெண்ணிக் கடக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.

சாக்கைக் கூத்து:-

            முளைக் குச்சியின் நிழல் இரு வேறு எல்லைகளைத் தொட்டுச் சுருங்கி உணர்த்தும் உண்மை தமிழ்த் தேசிய அரசு மீட்புக்கு அடிப்படையான கோட்பாடுகளைத் ‘திங்கள் போலத் திசை விளக்கும்’ (திருமுருகு-98) என்று நம்பலாம்.

…………….. ‘நலம் பெறு கொள்கை

வான் ஊர் மதியமும் பாடிய பின்னர்……(சிலம்பு கடலாடு காதை – 36-37, செம்மொழி பக். 1261)

            இவ்வாறாக வான் ஊர் மதியம் பாடும் மரபறிவு இன்று மறைந்து நிற்கிறது. வானில் ஊர்ந்து விண்ணைத் தொட்டு வெண்ணிலவாக வியல் இரு விலோதம் பெறப் பாவை நோன்பு கடைப் பிடித்த ஒப்பற்ற தமிழினம் மயங்காது எழ வேண்டும்.

இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார்அவையத்தின் வெளியீடு

___---ooo000OOO000ooo---___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக