aathi tamil <aathi1956@gmail.com>
ஜன. 8
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
17 மணி நேரம் ·
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அப்போதைய துணை தலைவர் #மாத்தையா வுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பல குழப்பங்கள், பல தவறான தகவல்கள் நிலவுகிறது...
தமிழீழத்தின் 1991 - 92 காலக்கட்டம் குறித்து நன்றாக தெரிந்தவர்கள், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள், இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில்களை (தகவல்களை) சொல்லுங்கள்....
#கேள்வி_1
சமாதான ஒப்பந்தம் டெல்லியில் கையொப்பமான பிறகு,
இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணம் (காங்கேசன் துறை வழியாக) வந்த பிறகு,
இந்திய அமைதி காக்கும் படையின் தளபதி, விடுதலை புலிகளின் துணை தலைவர் மாத்தையாவை சந்திக்க வந்த போது,
"இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று
நீங்கள் அழைத்துச் சென்ற எங்கள் தலைவர் பிரபாகரனை முதலில் இங்கே கொண்டுவந்து எங்களிடம் ஒப்படையுங்கள். அதை செய்யாதவரை உங்களுடன் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை" என்று சொல்லி மாத்தையா இந்திய இராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்பினாரா இல்லையா?
#கேள்வி_2 ...
1987 - 1991 காலக்கட்டத்தில், இந்திய அமைதி காக்கும் படை#வடக்கு_கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருந்த போது,
"விடுதலைப் புலிகளின் துணை தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொன்று விட்டார்... தலைமை குறித்த மோதல்களே இதற்குக் காரணம். புலிகள் அனைவரும் மாத்தையாவின் பின்னால் ஒற்றுமையாக நிற்கிறார்கள்" என்ற தகவல்களை ஊடகங்களில் "இந்திய வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான" #ரோ (ரா - RAW, Research & Analysis Wing) பலமுறை பரப்பியதா இல்லையா?
#கேள்வி_3
1991 - 92 காலகட்டத்தில்,
"இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான" #ரோ (ரா) வுடன் மாத்தையா தொடர்பு வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், விடுதலைப் புலி அமைப்பினரால் #மாத்தையா கைது செய்யப்பட்டு, விடுதலைப் புலிகளின் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டாரா இல்லையா?
#கேள்வி_4
விடுதலைப் புலிகள் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையின் போது "இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான #ரோ (ரா) வுடன் நான் தொடர்பு வைத்திருந்தது உண்மை" என்று #மாத்தையா வாக்குமூலம் கொடுத்தது உண்மையா இல்லையா?
#கேள்வி_5
விடுதலைப் புலிகள் இராணுவ நீதிமன்றம், மாத்தையா குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு மரணதண்டனை விதித்தது உண்மையா இல்லையா?
#கேள்வி_6
மாத்தையா-விற்கு விடுதலைப் புலிகள் இராணுவ நீதிமன்றம் ஏன் மரணதண்டனை வழங்கியது என்பதை இயக்க உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தவும், அவர்களது கருத்துகளை கேட்கவும்,
மாத்தையாவின் ஒப்புதல் வாக்குமூல காணொளி, இயக்கத்தினர் அனைவருக்கும் போட்டுக் காண்பிக்கப்பட்டதா இல்லையா?
#கேள்வி_7
விடுதலைப் புலிகள் இராணுவ நீதிமன்றம் மாத்தையாவுக்கு வழங்கிய மரணதண்டனை தீர்ப்பு, தலைவர் பிரபாகரனின் ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்பட்ட போது,
"மாத்தையாவின் நீண்டகால போராட்ட வரலாற்றை கணக்கில் கொண்டு, அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை நீக்குகிறேன். அவர் முற்றிலுமாக பதவி நீக்கம் செய்யப் படுகிறார். அவரது வாழ்நாள் காலத்தில் இயக்கத்தின் பெயரையும், சீருடையையும் பயன்படுத்தக் கூடாது. எந்தவொரு ஆயுதக் குழு, அரசியலிலும் பங்கேற்கச் கூடாது" என்று தலைவர் பிரபாகரன் பொதுமன்னிப்பு வழங்கினாரா இல்லையா?
#கேள்வி_8
பொது மன்னிப்பு வழங்கப்பட்டு (ஆனால், பதவி பறிக்கப்பட்டு) கட்டாய பதவி நீக்கம் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட #மாத்தையா, அதற்குப் பிறகான காலத்தில்,
அவரது மனைவி பணிபுரிந்த (அல்லது, அவர் படித்த) அதே பள்ளிக்கூடத்தில் (பாடசாலையில்) மாணவர்களுக்கு விளையாட்டு (குறிப்பாக, அவருக்குப் பிடித்த கிரிக்கெட்) பயிற்சி கொடுத்து தனது ஓய்வுக் காலத்தை கழித்தாரா இல்லையா?
விரும்புகருத்துபகிர்
சிறந்த கருத்துகள்
64வபிமுமு சக்திவேல்ராசா, மாரியப்பன் முருகம் மதம் மற்றும் 62 பேர்
3 பகிர்வுகள்
23 கருத்துகள்
கருத்துகள்
கருத்தை எழுதுக...
தவ பிரதீபன் மாத்தையா தலைவர் பிரபாகரனின் மச்சான் முறை என்கிற மேலதிக தகவலும் கூட..
விரும்பு · பதிலளி · 1 · 17 மணி நேரம்நிர்வகி
பதில் எழுதவும்...
தவ பிரதீபன் சீனி மாணிக்கவாசகம் அண்ணா நீங்கள் எவளவு தேடினாலும் கிடைக்காது அந்த Front line bcs it's not there..
விரும்பு · பதிலளி · 1 · 16 மணி நேரம்நிர்வகி
சீனி. மாணிக்கவாசகம் அப்படியா?
விரும்பு · பதிலளி · 12 மணி நேரம்நிர்வகி
தவ பிரதீபன் விடுதலைப்புலிகள் எப்போதும் பொய்யான தகவல்களை பரப்புவதில்லை ,தலைமை சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் கூட.. நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் சரியே ஒன்றை தவிர.. மாத்தையா நீண்ட கால காவலில் வைக்கப்பட்டு நாள் குறிப்பிட படாத ஒரு நாளில் மரணதண்டனை வளங்கப்பட்டார்.
விரும்பு · பதிலளி · 1 · 17 மணி நேரம்நிர்வகி
சுந்தர்
விரும்பு · பதிலளி · 1 · 17 மணி நேரம்நிர்வகி
ஆறு.சரத் விழுப்பாதரையன் தகவலுக்காக காத்திருக்கிறேன்
விரும்பு · பதிலளி · 1 · 16 மணி நேரம்நிர்வகி
Rajmohan Thangaraj .
விரும்பு · பதிலளி · 1 · 17 மணி நேரம்நிர்வகி
தவ பிரதீபன் குற்றங்களில் ஈடுபட்ட எந்த உறுப்பினரும் பாரபட்சம் இன்றி தண்டனை வளங்கப்பட்டனர் .. மாத்தையா போன்ற ஒரு துரோகி கடும் சித்திரவதைக்கு பின் பல வருடங்கள் களித்து தான் தண்டனை வளங்கப்பட்டார்..
விரும்பு · பதிலளி · 17 மணி நேரம்நிர்வகி
Muchanthi Murali மறு படியுமா? உந்தக் கேள்விகளுக்கு தான் முன்னைய பதிவில் பதில் போட்டிருக்கிரனே ? :)
விரும்பு · பதிலளி · 2 · 17 மணி நேரம்நிர்வகி
சீனி. மாணிக்கவாசகம் மற்றவர்களின் தகவல்களையும் பார்ப்போம்.....
மாத்தையா சுட்டுக் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட பிறகு,
மாத்தையா வின் interview ஒன்று, பிரபலமான இந்திய சஞ்சிகை ஒன்றில் வெளிவந்தது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு அதைப் படித்தது ஞாபகம் இருக்கிறது.... நானும் அந்தப் பத்திரிக்கையை தேடிப் பார்க்கிறேன்
விரும்பு · பதிலளி · 17 மணி நேரம்நிர்வகி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக