|
25/12/17
| |||
அகவை 106 இலும் நேர்கொண்ட பார்வையில் ஒளி வீசும் விழிகளின் பேரழகின் மிடுக்கின் பின்னால் பளிச்சிடும் விண்மீனாய் தமிழினத்தின் உன்னத வழிகாட்டிகளில் ஒருவரான தோழர் தமிழரசனை ஈன்ற பெருமிதம்!
அழகோ பேரழகு! வீர தாய்! இவளையும் வாழ்வில் ஒரு நாளேனும் காணும் ஆசை எனக்குள்ளும்!
இன்றும் தனது மகனின் விடுதலை சிந்தையை மதித்து மிடுக்கோடு போற்றும் அன்னை இவள் போன்ற தமிழக வீர தயவர்களாலும் மற்றும் தமிழுக்காக குரல் கொடுத்து போராடிய ஈழ மண்ணின் மாவீரர்களை ஈன்ற வீர தயவர்களாலும் எங்கள் தமிழினம் "அடிமை இனம்" என்ற முகவரி மாற்றி நிமிர்ந்து நிற்கின்றது அடிமை முகம் கிழித்த வீறு கொண்டு எழும் தமிழினமாய்!
அடிமை சிந்தை கொண்ட தாயவர்களால் அடிமை சமூகத்தை மட்டுமே படைக்க முடியும்.
விடுதலை சிந்தை கொண்ட வீர தாயவர்களாலேயே வீர சமுதாயம் படைக்கப்படுகிறது!
பெண்கள் விடுதலை சிந்தை கொண்டு அடிமை நிலை ஒழித்து நிமிர்வு கொள்வது ஒட்டுமொத்த சமூகத்திற்குமான எழுச்சியே!
பெண்ணடிமை களையாமல் மண்ணடிமை போக்குவோம் என்பது வெறும் கனவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக