வெள்ளி, 16 மார்ச், 2018

ஆசீவகம் ஏழுநிலை கோட்பாடு மெய்யியல் மதம் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு

...ஒப்புதல் கொடுத்தவர்.
‘மெய்ம்மை’ எனும் இந் நூலில் அவர் திரும்பத் திரும்ப கூறும் கருத்து ‘எழுமை’யைப் பற்றிய கருத்து.
கரும்பிறப்பு, கருநீலப்பிறப்பு, பசும்பிறப்பு, செம்பிறப்பு, பொன் பிறப்பு, வெண்பிறப்பு ஆகிய அறுவகை பிறப்புகளையும் கடந்து கழிவெண்பிறப்பு என்னும் ‘நீர்வண்ணத்தை’ அடைவதென்பதே பிறப்புகளுக்கு வண்ணங்களை ஊட்டிய ஆசீவகரின் நிலைப்பாடு. அதுவே ‘எழுபிறப்பு’ எனப்பட்டது.
எழுமையைப்பற்றி அகன் ஐயா காட்டும் விளக்கங்கள், அந்த எழுபிறப்புக் கோட்பாடு ஆசீவக மெய்யியல் தோன்றுவதற்கு முன்பே இருந்திருக்க வேண்டுமெனக் கருதத் தூண்டுகிறது.
உயிர்களை ஆறு வகையாக உருவகப்படுத்தும் தொல்காப்பியம் (நூற்பா 1526) ஊறு, நா, மூக்கு, கண், செவி, மனம் எனும் புலனுணர்வுகளை அவ்வவ் உயிர்களுடன் உறவுப்படுத்துகிறது. மனத்திலிருந்து பிறக்கும் அறிவை அகத்தியத் தருக்க நூற்பா என்னும் நூல் ‘உள்ளம்’ எனச் சொல்லி ஏழாவதாக வைக்கிறது (“அறிவுப் பண்பிற் றான்மா வென்க” 19:1). அதை ‘உயிர்’ என்றும் அது குறிப்பிடுகிறது (“உயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்” 19:3). அதுவே ‘ஆன்மா’ என்றும் கூறப்படுகிறது. ‘மனம்’ என்பது ஐம்புலன்களின் வழியாகக் கிடைக்கின்ற காட்சியளவை (Perceptual Knowledge); ‘உள்ளம்’ என்பது மனத்தின் வழியாகப் பிறக்கின்ற கருத்தளவை (Conceptual Knowledge). ‘மனம்’ வேறு, ‘உள்ளம்’ வேறென மீமிக நுட்பமாக வேறுபடுத்திக் காட்டுகிறது, தமிழரின் மெய்யியல்.
ஆகவே, ஐம்புலன்கள்+மனம்+உள்ளம் என்பதில் எழுமையைக் காணலாம்.
முளை, துளிர், தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு என நிலத்திணை(செடி)யின் திரிவாக்கத்தில் காணப்படும் எழுமை;
கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இனுக்கு என மரத்தில் எழுமை;
புல், தாள், மடல், தோகை, ஓலை, தழை, இலை என இலையில் எழுமை;
நாற்று, கணு, குருந்து, மடலி, பிள்ளை, குட்டி, பைங்கூழ் எனப் பயிரில் எழுமை;
செய், தோப்பு, தோட்டம், காடு, சோலை, கானல், அடவி என மர அடர்த்தியில் எழுமை;
புனம், புலவு, கொல்லை, வானவாரி, புன்செய், நன்செய், மிசை என உழுவுநிலத்தில் எழுமை;
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் எனப் பூவில் எழுமை;
பூப்பிஞ்சு, பிஞ்சு, கருங்காய், பழக்காய், காய்ப்பழம், பழம், கனி எனக் காயில் எழுமை;
தவசம், பயறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்று எனப் உணவுக்கூலத்தில் எழுமை;
பொட்டு, உமி, தொலி, தோல், கோது, தோடு, ஓடு என உணவுக்கூலத்தின் மேல்தோல்களில் எழுமை;
சாறு, சோறு, சுளை, சதை, முத்து, அரிசி, பருப்பு என விளைப்பொருள்களில் எழுமை;
வளி, சூறாவளி, புயல், கொண்டல், கோடை, தென்றல், வாடை எனக் காற்றில் எழுமை;
குட்டை, குளம், பொய்கை, ஊருண்ணி, ஏரி, கண்வாய், தடாகம் என நீர்நிலைகளில் எழுமை;
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் உயிர்நெடில்களை வைத்துக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என முறையே அமைந்த இசையின் (சுரங்களின்) எழுமை;
வில்யாழ், பேரியாழ், சுறவியாழ், சகோடயாழ், முண்டகயாழ், செங்கோட்டியாழ், சீறியாழ் என யாழில் எழுமை;
பாலன், மீளி, மறவோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என ஆடவரின் பருவங்களில் எழுமை;
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனப் பெண்ணின் பருவங்களில் எழுமை
என்றெல்லாம் எழுமை என்னும் கோட்பாடு தமிழரின் வாழ்வியலில் பற்றிப் பரவிக் கிடப்பதை இந் நூலில் நீக்கமறக் காண முடிகிறது.
‘எழுபிறப்பு’ எனும் கருத்து திருக்குறளில் (62, 107, 398, 538, 835) வருவதை அகன் ஐயா சுட்டிக்காட்டுக
ிறார். திருக்குறள் சொல்லும் எழுமையும் எழுபிறப்பும் ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாட்டை நினைவுறுத்துவதாக எண்ணத் தூண்டுகிற நிலையில், அத் திருக்குறளின் காலத்தைப்பற்றி ஆசிரியர் ஆராய்கிறார்.
ஐம்பூதக் கோட்பாடான பூதவியம், நாள்மீன் கோள்மீன் ஆகியவற்றின் இயங்குமுறையைப்பற்றி விளக்கும் உலகாய்தம், காரண-காரியவியம், ஓகம், எண்ணியம் (சாங்கியம்) என்னும் ஐந்து உறுப்புகளைக் கொண்ட ‘ஐந்திரக் கோட்பாடு’ கோலோச்சிய கி. மு. 10,000 ஆண்டுகளுக்குமுன் பஃறுளி மதுரைத் தமிழ்ச் சங்கம் விளங்கிய காலத்தில் திருக்குறள் இயற்றப்பட்டதாக நூலாசிரியர் கூறுகிறார். சிந்துவெளி

அறிஞர் குணா 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக