எது கொங்குநாடு?
வீடாள அழகிய மனைவியிருந்தும்,
நாடாள காமிண்ட பட்டமிருந்தும்,
காடாள கழனியும் கிணறும் போதுமெனகருதி,
பாராண்ட பெருங்குடி,
காராளவும் கடவதோ என,
மாரி வஞ்சித்தும், வறட்சி கெஞ்சித்தும் கேளாது,
உயிரைப்போல பயிரைநம்பி மேழிபோற்றி,
வரப்பே தலையணையாய்,
வாய்க்காலே பஞ்சு மெத்தையாய்,
அறியாமையில் உழன்று உறங்கிக்கொண்டிருக்கும்,
பன்னெடுங்காலமாய் தூக்கிச்சுமந்துவந்த
பக்குவமுதிற்சியை இழந்து,
பட்டினம் தொலைத்து இன்று பட்டிக்காட்டானாய்,
கோட்டைகட்டி கோலோச்சிய
கொங்கர் வரலாற்றை மறந்து இன்று காட்டுமிராண்டியாய்,
நாட்டைமீட்டு அரசாண்ட நற்குடியின்
நல்லறிவுகெட்டு இன்று நாதியற்றவனாய்,
காடு கொன்று, நாடாக்கி,
குளம் தொட்டு, வளம் பெருக்கி,
கோயில் எடுத்துக்குடியேறிப் பல்கிப் பரந்து
பெருகி வாழும் பெருங்கதையை மட்டுமே பேசிப்பேசி
மெதுமெதுவாய் மடிந்துகொண்டிருக்கும்,
ஒழுக்கநெறியிற்சிறந்த ஒவ்வொரு கொங்குத்தமிழனுக்கும்,
வறட்சியில் வாடும் வண்டல்மண்போல்
வெடித்துப்பிளந்த புண்ணிய பாதம் தொட்டு
சமர்ப்பிக்கின்றேன்
இந்த பதிப்பில் கொங்குநாட்டின் எல்லைகள் எவை என்பதை மட்டும் ஆதாரங்களோடு தெள்ளத்தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. கங்கர்கள் யார்?, சேரர்கள் யார்?, கிழார்கள் யார்?, என்பதை சங்க இலக்கியங்களே தெளிவுபடுத்தும். அதனை இக்கட்டுரையின் வாசிப்பில் நீர் நுகர்வீர். மேலும் கொங்கர்களைப்பற்றிய, கொங்குநாட்டைப்பற்றிய சங்க இலக்கிய குறிப்புகள், ஆதாரங்கள், வெட்டிய கற்கள்(கல்வெட்டுகள்) என மேலோட்டமாக கொடுத்துள்ளேன். அதனை விரிவாக பிறகொரு நாள் இந்த பத்திப்பைப்போலவே தெளிவாக பதிக்கின்றேன். பற்பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், ஆதாரங்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் இருந்தாலும் நன்கு தெளிந்த உறுதியான விடயங்களை மட்டுமே இங்கு உரைத்துள்ளேன். எனக்கு உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள் சசிக்குமார், பொன்தீபங்கர், ஏனைய நண்பர்கட்கு மனமார்ந்த நன்றி.
வடக்கு நந்திகிரி வராககிரி தெற்கு
குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
களித்தன்டலை மேவு காவிரிசூழ்
நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு.
-கொங்கு மண்டல சதகம்
கொங்கு மண்டல சதகம் என்பது கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடிய சதகம். சதகம் என்பது நூறு செய்யுட்களாற் பாடுவது,
"விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப"
என்பது இலக்கண விளக்கப்பாட்டியல் - 86.
சதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். இது வரலாறு பற்றிப்

பாடப்பெறும் சதகவகையைச் சார்ந்தது. இந்நூலின்கண் வரும் முதல்
மூன்று பாடல்களும் பாயிரமாகவமைந்த ஆசிரிய விருத்தங்கள்,
நூலுக்குரியனவாகப் பாடப்பெற்ற பாடல்கள் நூற்றொன்றும் கட்டளைக்
கலித்துறைகள்.

"வடித்தமிழ் நூலையாசான் வாலசுந்தரம் யான் சொன்னேன்" எனப்
பாயிரம் கூறுவதால் இந்நூலாசிரியரின் பெயர் வாலசுந்தரக்கவிஞர் எனத் தெரிகின்றது.
"இம்முடிவாரணவாசியெங்கள் வடமலை
முன்னவன்" என விசயமங்கலத்தில் வாழ்ந்த வாரணவாசி முதலியோரை
'எங்கள்' என உரிமை பாராட்டிக் கூறுதலின் இந்நூலாசிரியர் குறும்பு
நாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்தவரெனத் தெரிகிறது.
இந்நூன்(கொங்கு மண்டல சதகம்) முகப்பில் விநாயகர் காப்புக் கூறுதலின் ஆசிரியர் சைவ சமயத்தினரென்பது துணிபு. ஆசிரியர் வெண்ணைநல்லூர்ச் சடையன் (சடையப்ப வள்ளல்) வாழ்ந்த காலமாகிய கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனப்புலப்படுகின்றது. கொங்கு மண்டல சதகம் 7ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தது எனவும் கருதப்படுகின்றது
சதகம் வரலாற்றை கூறுவதால் 13, 17ஆம் நூற்றாண்டுகளிலும் கார்மேகக் கவிஞர், கம்பநாதசாமி ஆகியோராலும் கொங்கு மண்டல சதகம் பாடப்பெற்றது. ஆக "கொங்கு மண்டல சதகம்" என்பது கார்மேகக் கவிஞர், வாலசுந்தரக் கவிராயர்,
கம்பநாதசாமி ஆகியோர் இயற்றிய கொங்கு மண்டல சதக நூல்கள்
மூன்றினையும் கொண்டதாகும்.
13ஆம் நூற்றாண்டில் கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது என்றாலும் 13ஆம் நூற்றாண்டினது விரிவாக உள்ளது

இப்பொழுது 12ஆம் நூற்றாண்டின் கொங்கு மண்டல சதகம் கொங்குநாட்டின் எல்லைகள் எவை என்பதை வாலசுந்தரகவிராயர் இப்படி விவரிக்கின்றார்
வடக்கு நந்திகிரி வராககிரி தெற்கு
குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
களித்தன்டலை மேவு காவிரிசூழ்
நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு.
இதன் விவரங்கள் கீழே:
வடக்கு-நந்திகிரி
இன்றைய கர்நாடகத்தில் பெங்களூருக்கு 70 கி.மீ வடக்கிலுள்ள கோலார், தும்கூர் மாவட்டத்திலுள்ள நந்திமலை
Northern: Nandigiri
(Nandi hills in Kolar and Tumkur dists. of Karnataka located seventy kilometeres to the north of today’s Bengaluru).
தெற்கு-வராஹகிரி(பன்றிமலை)
பழனி - கொடைக்கானல் மலைத்தொடரிலுள்ள பன்றிமலை (வராஹிமலை - சமஸ்கிருதம்)
Southern: Varahagiri
(Panrimalai mountain in the Palani-Kodaikkanal ranges, Panrimalai is referred in it’s Sanskrit name.
மேற்கு-குடகு,வெள்ளிங்கிரி
இன்றைய கர்நாடகத்தின் கொடகு(குடகு/கூர்கு), மடிக்கேரி மாவட்டம், மற்றும் தமிழகத்தின் வெள்ளியங்கிரி
Western: Kudagu and Vellikundru
(Kodagu in the Madikeri dist. of Karnataka and Vellingiri hills near Coimbatore which form the border with Kerala).
கிழக்கு-குளித்தலை
இன்றைய குளித்தலை, முசிறி வட்டங்கள்
Eastern: Kulithalai
(Karur and Western Trichy dist. located on the Karur- Tiruchirappalli highway).
Further he adds that the region is like a basin (Kavirisoozh) and surprises us with his geographical knowledge through expressing Kongu as the entire Kaveri catchment basin, the Kaveri valley.
மேலும் அவர் கொங்குச்சீமையின் வளமையை காவிரிசூழ்ந்த நாடு எனவும் குறிப்பிடுகின்றார். காவிரி நதி, முறையே தலைக்காவிரி, ஈரோடு, கரூர், திருச்சி வழியாகத்தான் சோழதேசத்திற்கு போகிறது எம்பது அனைவரும் அறிந்ததே
இப்பொழுது இதில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளின்படி 12ஆம் நூற்றாண்டின் கொங்குநாடு எப்படி இருந்ததென கூகிள் எர்த்தில் எல்லைக்கோடிட்டு பார்த்தால் இப்படி இருக்கும்
This region comprises of the following modern districts of the following states.
Tamilnadu: Coimbatore, Erode, Udagamandalam, Krishnagiri, Dharmapuri, Salem, Namakkal, Karur, Dindigul (excluding the Nattam, Nilakkottai and southward slopes of Kodaikkanal taluk), Vellore (Tiruppattur taluk only), Villuppuram (Kalrayan hills only), Perambalur (Pachamalai hills only) and Tiruchirappalli (Pachamalai hills, Turaiyur taluk's western parts and Musiri panchayat union).
Karnataka: Madikeri, Chickmagalur, Hassan, Tumkur, Kolar, Bangalaore Urban, Bangalore Rural, Mandya, Mysore and Chamrajnagar.
Kerala: Wayanad, Palakkad (villages with a majority Tamil speaking population now only), Malappuram (Bhavani river valley only) and Idukki (Amaravati river valley only) .
Kongu region, from the dawn of history is always connected to the southern part of the Karnataka state which is given, which is also called in Karnataka as Mysore Karnataka or Hoysala Karnataka. The Kongu region has always been along with this region from the dawn of history to the collapse of the Mysore Kingdom and the arrivel of the British. The dominating okkaliga gowda community call themselves as Gangadikars. Those will be revealed in the upcoming posts
Pondheepangar also broadened his postmodernist research and found many revelations. The first was that the original name of Kongunadu as mentioned in the Komaralingam copperplates (2) inscriptions give the name of the region as Kanku (கங்கு). When we go in detailed research, the name of the Gangas appear. These local cheiftains are also mentioned in the Sangam Akananooru (verse 44 ) as Gangan (கங்கன்). This means that the region is on the edge but if you see any map Kongu always has been strategically located.
The importance of Kongu has given Tamilsayings:
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.
கொங்கில் வாழான் எங்கும் வாழான்.
It has always been the centre of wealth because ancient Kongu had the only gold mines of all south asia,Gold fields which in the Kongu Mandala Shatakam which are said to have given all the gold to the roof of the Chidambaram Natarajar temple.Kongu Nadu still contributes 2/3 revenue of the state of Tamilnadu.
In another shatakam of the 17th century, they are said to be,
வடக்கு தலைமலை வைகாவூர் தெற்கு
குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
களித்தன்டலை மேவு காவிரிசூழ்
நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு.
Thus they drastically reduce from their earlier extent of Nandigiri near Bangalore and Kudagu now in Karnataka to Perumpalai(Dharmapuri dist.) and Talaimalai(Erode dist).The other borders of east Kulithalai and west Vellingiri are retained.This is due to the confusions which ensued in the reorganisation of states.The linguistic,rather than cultural and geographical factors was taken into account.The Kongu people always were culturally related with the southern Kannada people(Hoysala Karnataka/ Gangas' Karnataka)
நம் செந்தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போல் தொண்டை நாட்டையும், கொங்கு நாட்டையும் தனிப்பிரிவு நாடுகளாக் கொண்டிருந்தது. ‘வியன் தமிழ்நாடு ஐந்து’ என்று தாண்டியலங்காரமும், ‘தமிழ் மண்டிலம் ஐந்து’ என்று திருமூலரின் திருமந்திரமும் கூறுகிறது.
கொங்குநாடு எப்பொழுதும் தனக்கென்று தனி எல்லைகளையும், வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம் ஆகியவைகளையும் கொண்டிருந்தது. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் கொங்கு நாடு தனி நாடாகவே குறிக்கப்படுகிறது. நூற்றாண்டுகள் தோறும் கொங்குநாட்டுக்கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கொங்கு நாடு தனி நாடெனக் கூறுகின்றன.
கொங்குமண்ணின் மைந்தர்களாம் கொங்கு வெள்ளாளர்கள் நிர்வாக வசதிக்காகத் தாம் வாழும் நாட்டில் 24 நிர்வாகப் பிரிவுகளை ஏற்படுத்தினர். அவ்வாறு ஏற்படுத்திய ஒவ்வொரு நாடுகட்கும் ஒரு அவை இருந்தது. அதில் எல்லா ஊர்களுக்கும் அங்கம் அளிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி நாட்டுக் காரியங்களைச் செய்தனர்.
கோயில்கட்குக் கொடைகள் அளித்தனர். ஆலயத் திருப்பணியை மேற்கொண்டனர். குற்றவாளிகளை விசாரித்துத் தண்டித்தனர். நாட்டுக்கு வேண்டிய எல்லாப் பணிகளையும் செய்தனர். இந்நாடுகள் தல சுய ஆட்சியை மேற்கொண்டது. இது தமிழ்நாட்டின் வேறு எப்பகுதியில் இல்லாத ஒன்றாகும். கீழ்க்கண்டவாறு 24 நாடுகளாகும்.

எண் | கொங்கு நாடு | இன்றைய பகுதிகள் |
---|---|---|
1 | பூந்துறை நாடு | ஈரோடு,திருச்சங்கோடு. |
2 | தென்கரை | தாராபுரம், காங்கேயம் |
3 | காங்கேய நாடு | தாராபுரம்,கரூர். |
4 | பொங்கலூர் நாடு | பல்லடம், தாராபுரம். |
5 | ஆறை நாடு | கோவை,அவினாசி. |
6 | வாரக்க நாடு | பல்லடம் பொள்ளாச்சி |
7 | திருவாவினன் நாடு | பழனி, உடுமலை |
8 | மண நாடு | கரூர் தென்மேற்குபகுதி |
9 | தலையூர் நாடு | கரூர் தெற்கு, மேற்கு |
10 | தட்டயூர் நாடு | குளித்த்லை |
11 | பூவாணிய நாடு | ஓமலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், திருப்பத்தூர் |
12 | அரைய நாடு | ஈரோடு, நாமக்கல், துறையூர் |
13 | ஒடுவங்க நாடு | கோபி |
14 | வடகரை நாடு | பவானி |
15 | கிழங்கு நாடு | கரூர், குளித்தலை, முசிறி |
16 | நல்லுருக்கா நாடு | உடுமலைப்பேட்டை |
17 | வாழவந்தி நாடு | நாமக்கல் வடக்கு, கரூர் |
18 | அண்ட நாடு | பழனி தென்கிழக்கு |
19 | வெங்கால நாடு | கரூர் கிழக்கு |
20 | காவடிக்கா நாடு | பொள்ளாச்சி |
21 | ஆனைமலை நாடு | பொள்ளாசி தென்மேற்கு |
22 | இராசிபுர நாடு | சேலம், ராசிபுரம், கொல்லிமலை, ஆத்தூர், கங்கவல்லி |
23 | காஞ்சிக்கோயில் நாடு | கோபி, பவானி |
24 | குறும்பு நாடு | ஈரோடு |
இவைகளைத் தொகுத்துப் பாடலாகவும் பாடினர்
சொல்ல அரி தானபூந்தது துறைசைதென் கரைநாடு
தோன்றுகாங் கேயநாடு
தோலாத பொன்கலூர் நாடு திகழ் ஆறையளி
தோய்ந்தவர் ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு ஆவிநன் குடிநாடு
மணநாடு தலையநாடு
வரதட்டை பூவாணி அரையநாடு ஒடுவங்கம்
வடகரை கிழங்கு நாடு
நல்லுருக் காநாடு வாழவந் தியும் அண்ட
நாடு வெங் காலநாடு
நாவலர்கள் சொல்கா வடிக்காநாடு ஆனைமலை
இல்லறம் வளர்ந்துதவி மல்குகாஞ் சிக்கோயில்
இயல்செறி குறும்நாடு
இனியபுகழ் சேர்கொங்கு மண்டலந் தனிலான
இருபத்து நான்குநாடே
பிற்காலத்தில் நாடுகள் 24-ஐக் காட்டிலும் அதிகம் ஆயிற்று, வெங்கால நாட்டின் இணை நாடாக இடைப்பிச்ச நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப்பெற்றது.
கொங்கு நாடுகள் என்பது பொதுவான வழக்கு இதனை ‘நாலாறுநாடு’ என்ற இயக்கியத் தொடர் காட்டும். ‘மூவெட்டுநாடு’ எனக் கூறுவதும் உண்டு.
மக்கள் பெருக்கமும், குடியேற்றமும் பிற்காலத்தில் ஏற்பட்டபோது கொங்கு 24 நாடுகள் 42 நாடுகள் எனக் கூறபட்டன அவை:
தாராபுரம் சூழ்ந்தநாடு - 24 கோட்டை சூழ்நாடு - 6 குன்றத்தூர்க் கோட்டம்- 12 நாடுகளாகப் பிரித்து கூறப்படும். கோட்டை என்பது தணாயக்கன்கோட்டை, குன்றத்தூர் என்பது சங்ககிரியாகும். அண்மையில் கிடைத்த ஒரு செப்பேட்டு ஆவணம் கொங்கு 72 நாடுகள் எனக் கூறுகிறது. 24 நாடுகளை 24 கோட்டம் என அழைக்கும் வழக்கமும் உண்டு.
மேற்சொன்ன 12-18ஆம் நூற்றாண்டைய கொங்குநாடு, தீரன் சின்னமலை ஆங்கிலேயரை விரட்டியடித்த பெருமைகொண்ட நாட்டின் வரைபடம் இதுதான்
மேலும் கொங்குநாட்டின் எல்லையை இன்னுமொறு சங்க இலக்கியம் தெளிவாக உரைக்கின்றது
கொங்கு மலைநாடு
"கொங்கு மலை நாடு குளிர்ந்தநதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம்ஏழும்-பங்கயம்சேர்
வஞ்சிநகர் நாலும் வளமையால் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்.
- சேரர் மீது வெண்பா
கொங்கு மலை நாடு / கொங்கு நாடு
கொங்கதேசம் எல்லைகளுடன் |
குளிர்ந்தநதி பன்னிரெண்டு:
1. ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி),
2. காஞ்சி (நொய்யல்),
3. வானி (வவ்வானி, பவானி),
4. பொன்னி (காவேரி),
5. சண்முகநதி,
6. குடவனாறு (கொடவனாறு),
7. நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு),
8. மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு)
9. மீன்கொல்லிநதி
10. சரபங்கநதி
11. உப்பாறு
12. பாலாறு
சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள்
1. கருவூர் [கரூர்],
2. வெஞ்சமாக்கூடல்,
3. திருச்செங்கோடு,
4. திருநணா [வவ்வானி - பவானி],
5. கொடுமுடி,
6. திருமுருகன்பூண்டி,
7. திருப்புக்கொளியூர் [அவினாசி])
வஞ்சிநகர் நாலு:
1. கருவூர்,
2. தாராபுரம்,
3. மூலனூர்,
4. விளங்கில்**
** விளங்கலுக்கு பதிலாக அது காங்கேயம் / கொங்கூர் / முட்டம் எனவும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்
கொங்கு என்பதற்குப் பல பொருள் உண்டு .தேன் பூந்தாது , குரங்கு என்று பொருள் உண்டு. குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மறுத்த நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியும் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. தேன்கூடுகள் நிறைந்த மலைச்சாரல்களைப் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்கப் புலவர்கள் பாடினார். "குன்றும், மலையும் பல பின்னொழிய வந்தனன்" என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்தின் சொத்துகள்.
"கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" (குறுந்தொகை - 1 ) என்ற இறையனார்ப்பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்ற பொருளில் தான் கூறியுள்ளது.
இதே பொருளில் சிறுபாணாற்றுப் படையும்,"கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்" (சிறுபா 184) எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு ௨.வே.ச. உரைகூறினார்.
"கொங்கு முதிர்நறு விழை" - (குறிஞ்சிப்படல் 83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது.
மேலும் பெருவளமிக்க கொங்கர் நாட்டைப்பற்றியும், கொங்கர் வீரம் பற்றியும் சங்ககால இலக்கியத்தில் ஆணித்தரமான குறிப்புகள்:
"ஆகெழு கொங்கர் நாடு" - பதிற்றுப்பத்து - 22
"குடகொங்கர்" - ( நற்.10)
"கொங்கர் படுமணி ஆயம்" – அகநானூறு - 73
"கொங்கரை அட்டகளம்" - களவழி - 14
சோழன் கோச்செங்கணான் சேரமான் கணைக்கால் இரும்பொறையைக் கொங்குநாட்டுக் கழுமத்தில் வென்றது
"வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்" - அகநானூறு - 253
பசும் நண் பாண்டியன் கொங்கு நாட்டின் மீது போர் தொடுத்து கொங்கரை வென்றதையும், பொற்பூவினை அணிந்த கொங்கரை அகற்றியதையும் கொங்கர் தம் நாடு பலவற்றையும் பசும்பூண் பாண்டியன் கைப்பற்றியதையும், அகநானூற்றில் பசுமரத்தாணிபோல் அப்பட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது
"கூகைக்கோழி வாகைப்பறந்தலை பசும்பூட் பாண்டியன் வினைவலதிகன் களிரொடு பட்ட ஞான்றை ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரியதே" - குறுந்தொகை - 393
பாண்டியருக்கும் கொங்கருக்குமிடையே பகைமை இருந்துள்ளதையும் அதன் விளைன போரில் ஒரு முறை கொங்கர் பசும்பூண் பாண்டியனின் படையை தோற்கடித்ததையும், பாண்டியப்படையின் தலைவன் 'அதியன்' வீழ்ந்ததற்கு கொங்கர் ஆர்ப்பரித்ததையும் குறுந்தொகையில் பரணர் குறிப்பிட்டுள்ளது.
"சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்ன செலவின்பல்
யானை காண்பல்அவன் தானை யானே" - பதிற்றுப்பத்து 77
பெருஞ்சேரல் இரும் பொறையை அரிசில் கிழார் பாடினார்.
இது கொங்கர்தம் பசுகூட்டங்களைப் போலவே அவர்களின் யானைப்படைகளும் பரந்திருந்தன என்று பொருள்படும்.

"இமயஞ்சூட்டிய ஏம விற்பொறி மாண்வினை நெடுந்தேர் வான்வன் தொலைய வாடா வஞ்சி வாட்டுநின் பீடுபெழு நோன்தாள்" - புறநானூறு - 39
('கங்கைதாண்டி இமயத்தில் விற்ககொடியைப் பொறித்தவன்' என்று புகழ்பட்ட சேரனை கிள்ளிவளவன் வென்றபோது பாடியது. வஞ்சி/கருவூர்(கரூர்) கோட்டையை எரித்ததாகவும் செய்தி உண்டு)
"மைந்தராடிய மயங்கு பெருந்தானைக்
கொங்குபுரம் பெற்ற கொங்குவேந்தே " - புறநானூறு - 373.
(இது கிள்ளி வளவன் கொங்குநாட்டை வென்றபொழுது கோவூர் கிழார் பாடியது)
"அங்கை யாழி யரங்க னடியிணை
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்
இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே" - (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். பாடல் 676)
கொங்கர் கோன் - சேரதேசத்தவர்களுக்கு (கொங்கர்களுக்கு) தலைவரான

"கொங்குகிற் குறும்பில் குரக்குதளியாய் " - சங்க காலப் பெருமை பெற்ற கொங்கு நாட்டைப் பிற்காலத்துச் சுந்தரரும் பாடினார்.
"கொங்கச் செல்வி குடமலையாட்டி" - சிலப்பதிகாரம் 12-1-47
இளங்கோவடிகளும் கண்ணகியை, கொங்கச் செல்வி குடமலையாட்டி என்று புகழ்ந்தார்.பாலைநிலத்து வேட்டுவர் விழாக் கொண்டாடும்போது சாலினி என்னும் குறிக்காரி தெய்வம் ஏறிக் குறி சொல்லும்போது கண்ணகியை “இவளோ கொங்கச்செல்வி, குடமலையாட்டி” எனக் கூறுகிறாள். ஆக வேட்டுவர்(வேடுவர், வேட்டையாடும் இனத்தோர்) கொங்கர்களல்ல, கொங்கர் என்ற பதம் வேட்டுவருக்கல்ல என்று தெரியவருகின்றது
எது குடமலை, குடநாடு?
சங்க இலக்கியங்களில் வரும் சொல்லாட்சிகள் குடமலை என்பது வடக்கில் காவிரி தோன்றும் பகுதிமுதல் தெற்கில் சந்தனம் மணக்கும் பொதியமலை வரை உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை முழுவதையும் குறிக்கும் கூறு.
கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்,
பசிஎன அறியாப் பணைபயில் இருக்கைத்,
தடமருப்பு எருமை தாமரை முனையின்,
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்,
குடநாடு பெறினும், தவிரலர்-
மடமாண் நோக்கி! நின் மாண்நலம் மறந்தே! - அகநானூறு 91, மாமூலனார்
குடநாடு என்பது சேர நாட்டின் வடபால், தமிழகத்தின் வடமேற்கில் (பழைய கொங்கர் நாட்டிற்க்கு உட்பட்டது) அமைந்திருந்தது. அது சேர நாட்டின் பேராட்சியில் அடங்கியிருந்தது எனவும் மழவரைக்காப்பது குட்டுவன்( சேரர்க்கான பட்டம்) எனவும், மழவர்கள் குடாநாட்டில் இருந்ததையும் மாமூலனார் கூறுகிறார். இந்த மழவரைப்பற்றி கீழே விரிவாக காண்பீர்கள்
கண்ணகி கொங்கு நாட்டின் செல்வியாக, கற்புத் தெய்வமாக உள்ளாள்.கொங்கு நாட்டு வெள்ளாள பெருமக்கள் வழிபடுவதால் கொங்கச் செல்வி என்றார். கண்ணகியை மாரியம்மனாக கொங்கு நாட்டில் வழிபடுகின்றனர். கேரளாவில் உள்ள சேரநாட்டின் எச்சத்திலும், மலையாள தேசத்திலும் பகவதியம்மனாக வழிபடுகின்றனர்
இதற்கு மேலும் சேரர் யார், கிழார் பட்டம் பெற்றார் யார் என்று சொல்லவும் வேண்டுமா??

கடையேழு வள்ளல்களில் பேகன், அதியமான், ஆய் ஆண்டிரன், ஓரி, நள்ளி ஆகியோர் கொங்குநாட்டை சேர்ந்தவர்கள்
குறிப்பாக அதியமான், ஓரி, ஆய்ஆண்டிரன், குமணன், நன்னன், இந்தூர் கிழான், பாட்டங்கொற்றான், கொண்கானங் கிழான், அத்தி, தோயன் மாறன், ஏற்றை, கங்கன், கட்டி, கடிய நெடு வேட்டுவன், கொடுமுடி, தாமான் தோன்றிக்கோன், பழையன், புன்றுறை, விச்சிக்கோ போன்ற கொங்குநாட்டைச்சேர்ந்த மன்னர்களைப்பற்றிய குறிப்புகள் ஏராளம் தாராளம். அவர்களை புலவரால் பாடப்பட்ட புகழ் உடையோராக விளங்கியுள்ளனர்.
"பழந்தூங்கு முதிரத்துக்கிழவன் திருந்துவேல் குமணன்" (புறநானூறு - 159)
"பாண்பசிப்பகைவன்" - (புறநானூறு - 180)
கொங்கு நாட்டின் ஈந்தூரை ஆண்ட மன்னன் ஈந்தூர்க்கிழான் ஆவான். அவன் பாண்பசிப்பகைவன் என்று போற்றப்பட்டுள்ளான்
“பொன்படு கொண்கானம்” - (நற் - 391)
கொண்கான நாடு என்பது பிற்காலத்தே கொங்கண நாடு என
மருவி வழங்குவதாயிற்று. கொங்கு வேளாளார் குடியிற் சிறந்த
வள்ளலாக விளங்கினவன் இக் கொண்கானங் கிழான். இந் நாடு பொன்வளம் சிறந்தது. இதனால் இதனைப் “பொன்படு கொண்கானம் என்று சான்றோர் பாராட்டியுள்ளனர். மேனாட்டு ஆராய்ச்சியாளர் இப்பகுதியைக்கண்ணுற்று, “ஒருகாலத்திற் பொன் வளஞ் சிறந்திருந்து இதுபோது குறைந்து போயிற்’’*றென்று கூறியுள்ளார்.
இக் கொண்கானங்கிழான் பெருஞ் செல்வத் தோன்றல் அல்லனாயினும்தன்பால் நாடிவரும் பரிசிலர்க்கு இயன்றன நல்கி இன்புறுத்தும் ஈகை யியல்பினன். ஈகைக்கேற்ற தாளாண்மையும் அதன்
சிறப்புக் காக்கமாகும் தோளாண்மையும் இவன்பால் மிக்கிருந்தமையின்
புலவர் பலரும் இவனைப் பாடிப் பாராட்டினர்.
"கதிரவனைக் கண்டு நெருஞ்சி பூப்பது போல் மலரும்" என்று புறநானூறு - 155, 156)
கொண்கானக்கிழானை பார்த்ததும் பாணர்தம் மண்டை 'கதிரவனைக் கண்டு நெருஞ்சி பூப்பது போல் மலரும்' என்று மோசிகீரனார் புறநானூற்றில் குறிப்பிட்டுள்ளார்.
"விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு,
இன்முகம் கரவாது, உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே!" - புறநானூறு 130,
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனை பாடியது
கொங்குநாட்டின் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆலந்தூர் என்னும் ஊரினர் ஆலந்துர் கிழார் ஆவார். அவர் புறநானூற்றில் 5 (புறநானூறு -34, 36, 69, 225, 324) என மொத்தம் ஏழு பாடல்களை பாடியுள்ளார்
புறநானூறு, சங்ககாலக் கொங்குநாட்டுப்புலவர் பலரை அறியத் துணைசெய்கிறது. கூடலூர் கிழார் ஐங்குறு நூற்றைத் தொகுத்தவராவார். அவர் கொங்கு நாட்டின் மேற்கெல்லையான நீலமலையின் கூடலூரைச் சேர்ந்தவராவார். அவர் புறநானூற்றில் 229 ஆம் பாடல் உட்பட நான்கு சங்கப்பாடல்களைப் பாடியுள்ளார். நீல மலையில் அமைந்துள்ள குன்னூர் பண்டைக்காலத்தில் 'குன்றூர்' என்று வழங்கப்பட்டது. புறநானூற்றில் 166 ஆம் பாடலைப்பாடிய "குன்றூர் மகனார் கண்ணத்தனார்" அவ்வூரார் ஆவார். இவர் மேலும் 2 சங்ககாலப்பாடல்களை பாடியுள்ளார்.
நீலமலை என்னும் மலை நீலகிரி. இன்னும், தொண்டை நாட்டுக் குன்றத்தூரும், பாண்டி நாட்டுக் குன்றக்குடியும்
இப்போது முறையே குன்னத்தூர் என்றும், குன்னக்குடி என்றும்
குறிக்கப்படுகின்றன.
கோத்தகிரியின் அருகில் கொடநாடு என்பது (கொடார் என்பது அபாயகரமான பள்ளத்தாக்கு என்ற பொருள்) பாறைகள் நிறைந்த பகுதிதான.
சங்ககாலத்தில் வேளிர் குடியினர் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். அவர்கள் உழவர்கள். இந்த உழவர் பெருமக்கள் வயலில் மேயும் ஆமைகளைப் பிடித்துவந்து அதனைச் சுட்டு உண்பர். இவர்கள் தொன்முது வேளிர் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்'' என்றி-தோழி!-புலவேன்-
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
- பரணர், நற்றிணை 280
குடவாயிற் கீரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்க நூல்களில் இவரது பெயரில் 18 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர் குவாயிலில் அல்லாது, பல்லடம் பகுதியைச்சேர்ந்த 'கொடுவாய்'ஊராளியாக இருக்கலாம் என வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள். இவரின் வழிவந்தாரே இன்றைய கொங்கு சமுதாயத்தின் கீரன் குலமென அவர்கள் நம்புகின்றனர்
சேரன் செங்குட்டுவன் தனக்குச் சமமான அரசனாகக் கொங்கு நாட்டு இளங்கோசரை மதித்திருக்கின்றான். சேரர்களில் பெரும்பாலானோர் கொங்கர்கள் என நான் சொல்லவில்லை. சங்ககால இலக்கியங்களும் ஆவணங்களும் முரசுகொட்டுகின்றன. அதனை மேலே நிறைய பார்த்தீர்கள். இருந்தாலும் முற்கால, இடைக்கால சேரர்களைபோல் இல்லாமல் பிற்காலத்தில் சேரர்களில் ஒரு பிரிவினர் கலப்பினமாகி இன்று Royal family of Cochin என்று அழைக்கப்படுகின்றனர்.
நூற்றுவர் கன்னர், இலங்கைக் கயவாகு, மாளுவ வேந்தர், சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் போலக் கொங்குநாட்டு மன்னனையும் நட்பாகக் கொண்டுள்ளான் அச்சேரமன்னன். இதனைச் சிலப்பதிகாரம் மூலம் நாம் அறிகின்றோம்.
பாரதவர்ஷத்தில் ஐம்பத்தியாறு தேசங்கள் உள்ளன. தேசம் என்பது socio-climatic unit ஐக்குறிக்கும். இயற்கை அரண்கள் ஒவ்வொரு தேசத்துக்கும் எல்லைகளாக உள்ளன. சேர அல்லது கொங்க தேசத்துக்கும் மலைசூழ்ந்த எல்லைகள் உள்ளன. இவ்வெல்லைகளுள் micro – socioclimatic unit களும் உள்ளன. இவை நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் நீர்நிலைகள், மலைகள், காடுகள், சமன் நிலங்கள், நகரங்கள், எண்ணிலடங்கா வயல்வெளிகள் என தனி மாநிலம் மட்டுமல்ல, தனி நாடு அடைவதற்கான அனைத்து தகுதிகளும் கொங்குநாட்டிற்கு உண்டு
கொங்கதேச சுதேச ஆட்சியமைப்பு (நிர்வாகம் - நிர்வாகி)
கொங்குநாட்டின் ஆட்சிமுறை கீழே உள்ள படத்தில் உள்ளது. இதேபோன்ற ஆட்சிமுறைதான் மேற்கைய கங்கர்களும் (தெற்கு கர்நாடகத்தின் பெருங்குடி/ Western Gangas), ஒய்சாலர்கலும் (Hoysalas) பின்பற்றியது
கொங்கு மண்டல சதகம், மேற்கு கங்கா அரசாங்கம் முதன் முதலாக கொங்கு மண்டலத்தில் தான் நிறுவப்பட்டது என குறிப்பிடுகிறது

http://en.wikipedia.org/wiki/Hoysala_Empire#Administration
http://en.wikipedia.org/wiki/Origin_of_the_Western_Ganga_Dynasty
http://en.wikipedia.org/wiki/Kongu_Nadu
There is no definite origin for the word Kongu, several scholars have given their views. The name Kongu Nadu is believed to have been gained from 'Kongadesam', "Konga" a derivant of the term "Ganga", meaning 'land of the Gangas' see Western Ganga Dynasty. Western Gangas were Kannada people but the historians suggest their origin is from the Tamil clan at Kangayam, the old capial of Kongu Nadu, (Sanskrit: Ganga+eyam = Gangeyam : seat of the Western Ganga Dynasty. Kongu means in Sangam Tamil 'border'
கொங்கதேசம் என்பது "கங்கதேசம்" என்பதின் மருவல் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது கங்கர்கள் தேசம் என பொருள்படும். மேலும் மேற்கய கங்கர்கள் கன்னடர்கள் . ஆனால் அவர்கள் தோன்றியது தமிழ்க்குடியிலும், தமிழ்மணக்கும் நெடுங்காலம் முன்பு கொங்குநாட்டின் தலைநகராக விளங்கிய காங்கேயம் (கங்கா + இயம் - கங்கர்களின் வழக்கமான பொதுவான இருப்பிடம்/ வீடு என்று சமஸ்கிருதத்தில் பொருள்படும்)

பிற்காலச்சோழ கொங்கு மண்டலம்:
கொங்கு நாடு சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் என வழங்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் ஆண்டான். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலம் என்பர். கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டு பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். 7 ஆம் நூற்றாண்டிலேயே இப்பிரிவு இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. இந்நாட்களில் கொங்கர்நாடு கலையிழந்து கற்பழிக்கப்பட்டதாகக்கொள்ளலாம்.
மலைகளும் கோட்டைகளும் :
1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை
2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி , பாலமலை,
பெருமாள் மலை
3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை
4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை
5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை
6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை
7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை
8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்
9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை
10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை
11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு
12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை
13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி
14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை
15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை
16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.
கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர், விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி, சங்ககிரி - 1500 அடி, சதுரகிரி - 3048 அடி, கனககிரி - 3423 அடி, மகாராசக்கடை - 3383 அடி, தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி. இரத்தினகிரி - 2800 அடி, சூலகிரி - 2981 அடி, ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம். 14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின.
நதிகளும், தலங்களும்:
கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து,சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது. சரவண பவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆனு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு. திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம். அவிநாசி,நாமக்கல், பவானி,வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வேஞ்மாக்கூடல்,திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். `கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்` என்பது பழமொழி. கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும்.
கொங்குநாட்டின் குடிமக்கள் :
சங்க காலத்தில் கொங்கு நாட்டின் குடிகள் கொங்கு வெள்ளாளர்/வேளிர், பூழியர், மழவர், வேடர்ஆகியோர்களாம். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தாம் வெள்ளாளர்/வேளிர் எனப்பட்டனர். கிழார்என்பவர்களும் இவர்களே ,பூழியர்கள் இடைக்குலமக்கள் ,மழவர்கள் வீரமிக்கவர்கள், ஓரியின் இனத்தவர்கள். வேடர்கள் வேட்டை ஆடுவோர் .
கொங்கு வெள்ளாளரைப்பற்றி சொல்லவே வேண்டாம். வேடுவர் (கொங்கு வேட்டுவ கவுண்டர்கள்), பூழியர் இடையற்குடிகள். இப்பொழுது மழவரைப்பற்றி தெளிவாக சங்க இலக்கிய ஆதாரத்தோடு பார்ப்போம்
மழவர்:
கொங்கு நாட்டையாண்ட பழைய அரச மரபினருள் ஒருவராக 'மழவர்' என்று அறியப்படுகின்றனர். சங்ககால மக்கள் இனத்தவருள் ஒரு பிரிவனாகக் கருதப்படும் மழவர் என்பார் தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்தவராவர். இந்த பகுதி பின்னாளில் மழகொங்கம் என்றும் அழைக்கப்பட்டது. இம்மழவர் இனத்துச் சிற்றரசர்களே சங்ககால அதியமான்.
வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி “மழவர் பெருமகன்” எனக் குறிப்பிடப்படுகிறான். ஔவையார் – புறம் 88, 90
வள்ளல் ஓரி மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகிறான். (மழவர் பெருமகன் மாவள் ஓரி). நப்பாலத்தனார் – நற்றிணை 52
ஆனால் இவ்வளவு குறிப்பிகள் கொண்டுள்ள மழவர் இனம் (இன்றைய வன்னியர் மழவர் தாங்கள்தான் என சொந்தம் கொண்டாடுகின்றனர்) கொங்குநாட்டின் வந்தேறிகள்தான். மழவராயர் எனப்படும் ஒரு சிலர் படையாட்சிகளுள் இருக்கின்றனர். மழவராயர் என்பது மழவர் + அரையர் என விளங்கும். அரையன் என்றால் அரசன். மழவர்க்கு அரசன் என்றால் அந்த குடியிலிருந்து வந்தவனாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. மழவரை அடக்கியாண்டவர்க்கும் இப்பட்டம் சாரும்
மழவர் மேற்குக் கடல் பகுதியில் உள்ள தீவுகளிலிருந்து கொங்கு நாட்டிற்கு வந்திருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மழவர்கள் குடாநாட்டில் இருந்ததை மாமூலனார் அகனானூற்றின் 91இல் உறுதிபடுத்தினார் என சற்றுமுன் மேழே பார்த்தோம். அதை மீண்டும் இங்கு கொடுக்கின்றேன்
கடுங்கண் மழவர் களவுஉழவு எழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்,
பசிஎன அறியாப் பணைபயில் இருக்கைத்,
தடமருப்பு எருமை தாமரை முனையின்,
முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்,
குடநாடு பெறினும், தவிரலர்-
மடமாண் நோக்கி! நின் மாண்நலம் மறந்தே! - அகநானூறு 91, மாமூலனார்
குடநாடு என்பது சேர நாட்டின் வடபால், தமிழகத்தின் வடமேற்கில் (பழைய கொங்கர் நாட்டிற்க்கு உட்பட்டது) அமைந்திருந்தது. அது சேர நாட்டின் பேராட்சியில் அடங்கியிருந்தது எனவும் மழவரைக்காப்பது குட்டுவன்( சேரர்க்கான பட்டம்) எனவும், மழவர்கள் குடாநாட்டில் இருந்ததையும் மாமூலனார் கூறுகிறார்.
இத்தீவுகளில் (இன்றைய கேரளத்தின் கண்ணூர், காசர்கோடு, வயநாடு மாவட்டங்கள்) ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்வதால் மக்கள் இதனை 'மழைத்தீவு' என்று குறிப்பிட்டிருக்கலாம். அதுவே பின்னர் 'மழத்தீவு' என்று ஆகியிருக்கலாம். அங்கிருந்து வந்த மழவர்கள் கொங்குநாட்டில் குடியேறிய பகுதி மழகொங்கம் என்றழைக்கப்பட்டது. எனவே அவர்கள் மழவர்கள் என்று கொங்கர்களால் அழைக்கப்பட்டிருக்கலாம். இது வெறும் யூகமில்லை, ஆராய்ந்ததே என்றாலும் நம் தமிழ்த்தாய் சங்க நூல்களில் இந்த உண்மைகளை அழிக்காமல் விட்டுச்சென்றுள்ளாள். அதனை கிழே காண்பீர்கள்
"அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்பிவட் டந்து
நீரக விருக்கை யாழி சூட்டிய
தொன்னிலை மரபினின் முன்னோர் போல
.....................................
வழுவின் றெய்தியும் அமையாய்" - புறநானூறு 99
மழவருள் ஒருவன், இந்திரன் என்னும்பட்டங்கொண்டவன் ஆண்ட நாடாகிய சாலியினின்றுதமிழகத்திற்குக் கரும்பைக் கொண்டுவந்துபயிராக்கினான். அதனால், அவன் மரபில் வந்த அதிகமான் நெடுமான் அஞ்சியை பாடியது.
அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே - புறநானூறு 392 (அவ்வையார்)
ஆக கரும்பை தமிழகத்திற்கு வந்தேரியபோது முதலில் அறிமுகப்படுத்தியது மழவர் என புலப்படுகின்றது.
"ஒளிறிலங்கு நெடுவேல் மழவர்" - புறநானூறு - 88.
மழவர் வீரம் இதில் அடக்கம்.
வந்தேறிகள் என்று வாய் வார்த்தையாக மட்டும் சொல்லிவிட்டேன். ஆதாரம் கொடுக்க இயலுமா என்று என்னை கேட்பீர்கள். இதோ நம் சங்க இலக்கியத்திலிருந்தே தருகிறேன் ஆதாரத்தை. இந்த ஆதாரங்கள் சேரர்கள் வேறு மழவர் வேறு என்பதோடு நில்லாமல், இன்றைக்கு வன்னியர்கள் (பள்ளி, படையாட்சி) கிளப்பிவிடும் கட்டுக்கதைகளை தவிடுபோடியாக்கித் தூக்கியெறியும் என்பதில் ஐயமில்லை.
குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வாரின் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு. - பதிற்றுப்பத்து ஆறாம் பதிகம்
இதன் பொருள் : மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதில் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் சேரன் ஆடுகளைக் கவர்ந்துவரும்போது எதிர்த்த ஏனை மழவரையும் போரில் வென்றான்
மேலும்,
கமழும் தாழைக் கானல்அம் பெருந்துறைத்
தண்கடல் படப்பை நல்நாட்டுப் பொருந
செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வால்ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தேர் அண்ணல் - பதிற்றுப்பத்து 6ஆம் பத்து 5-9
இதன் (6ஆம் பத்தின் முழு) பொருள்:
--> ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காககை பாடினியார் நச்செள்ளையார் பாடியது
--> தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
--> பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
--> வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
--> மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.
முல்லைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பிக்
கல்உயர் கடத்(து)இடைக் கதிர்மணி பெறூஉம்
மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை - பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து 20-25
இதன் பொருள்: பல்யானைச் செல்கெழு குட்டுவன்(சேரன்) மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான். ”மழவர் மெய்ம்மறை” பாலைக்கௌதமனார். . பூழியர் நாட்டுக்கு அரசனாகவும், மழவர்க்குப் பாதுகாவலனாகவும் விளங்கினான். இவன் பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தபோது எதிர்த்த அயிரைமலை மன்னனோடு வென்று அந்த நாட்டைத் தனதாக்கிக் கொண்டான்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை ஓட ஓட விரட்டினான் - மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 687
வண்டுபடத் ததைந்த கண்ணி, ஒண்கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கண்,
சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
பொருள்: மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை ஓட ஓட விரட்டினான் என நக்கீரர் விவரிக்கிறார்.
ஆக ஓடி ஓடி விரட்டப்பட்டால் அவர்கள் தொகையில் மிகச்சொற்பமாகவும், எல்லைகள் சுருங்கியும்தான் கொங்குநாட்டில் வாழ்ந்தனர் என புலப்படுகின்றது. மேலும் சேரன் யூழியர் நாட்டிற்கு அரசன் எனவும், மழவர்க்கு காவலன் என பாடப்பெற்றதன்மூலம் மழவர் மிக மிக சொற்பமான எண்ணிக்கையில் அடங்குவர் என்று உறுதியாகிறது.
இப்பொழுது மழவரின்/முத்தரையரின்/ களப்பிரரின்/ பல்லவர்களின் பெயரை திருட நினைப்பவர்க்கு பதிலளிக்கின்றேன்.
சேரரும் , அதியரும் முறையே “மழவர் மெயம்மறை ” என்று குறிப்பிடப்பட்டதாக படையாட்சிகளில் சிலர் சொல்கிறார்கள். உண்மையில் அந்த குறிப்பு எங்கு பதியப்பட்டது? சுவடியா?? கல்வெட்டா?? பட்டயமா?? சங்க இலக்கியமா?? இதற்கு அவர்கள் ஆதாரம் தருவரா?? அது இயலாத காரியம் ஏனென்றால் அப்படி ஒரு குறிப்பு எங்கும் இல்லவே இல்லை.
உண்மையில் என்ன இருந்தது என்றால் மழவர் மெய்ம்மறை என்பது முதலில் நூலே அல்ல. அது பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தில் 21ஆம் பாடலின் ஏழாம் வரி. இதனை பாடியவர் பாலைக்கௌதமனார். பாடப்பட்டவர் சேரன் பலயானைச் செல்கெழு குட்டுவன்
அந்த பாடலின் பெயர் – அடுநெய் ஆவுதி
செய்திச் சுருக்கம்
பல்யானைச் செல்கெழு குட்டுவன் வானவர்க்கும், மண்ணவர்க்கும் என இரு வேள்விகளையும் செய்தான். யானைப் படையுடன் சென்று வேள்வி செய்வதற்கு வேண்டிய பொருள்களைக் கொண்டுவந்தான். செருப்பாழி நகரை வென்று பூழியர்க்கும், குவியல்பூ மாலை அணிந்த மழவர்களுக்கும் அரசன் ஆனான். அயிரைமலை (ஐயப்பமலை) ஆட்சியைக் கைப்பற்றினான். ‘வேந்தே, நீ நின் மனைவியோடு ஆயிரம் வெள்ளம் ஆண்டு வாழ்வாயாக!’
(வணிகர்களையும் செல்வந்தர்கள் மட்டுமே குவியல்பூவை அணிவார்கள்)
அவர்கள் புழுகியது வெளுத்துவிடம் இந்த பாடலை முழுதாக அர்த்தத்துடன் கேட்டால்
1 பண்புகள்
சொல் எனபது சொன்னசொல் தவறாமை. பெயர் என்பது தனக்கும் தன் முன்னோர்க்கும் உள்ள நற்பெயர். நாட்டம் என்பது தன்னைப்போலவே பிறரையும் பார்த்தல். கேள்வி என்பது பிர் சொல்லும்போது குறுக்கிடாமல் முழுவதையும் கவனமாகக் கேட்டல். நெஞ்சம் என்பது அன்பும் இரக்கமும் உள்ள ஈரநெஞ்சம். பல்யானைச் செல்கெழு குட்டுவன் இந்த 5 பண்புகளையும் போற்றி அவற்றைத் துணையாகக் கொண்டு, பிறருக்குத் துன்பம் செய்ய எண்ணாமல் அரசோச்சி வந்தான். இந்த ஐந்தும் அவனுக்குக் கொள்கை விளக்கு. காலையில் தோன்றும் சூரியன் ஏறிச் செல்லும். அதுபோல இவன் சொன்ன சொல் தவறாமல் கோலோச்சி வந்தான்.
2 பெரும்பெயர் ஆவுதி
கடவுளைப் பேணுவதற்காகச் செய்யப்பட்டது. அச்சம் தரும் மரபு வழியில் செய்யப்பட்டது. தீயில் ஆவுதி செய்யும்போதெல்லாம் சுடர் கொழுந்துவிட்டு எழும். அப்போது விரும்பும் மெய்பொருள் விரிந்து விளங்கும். விரும்பும் கடவுள் (தெய்வம்) பரந்து திரிவதாக எண்ணிக்கொள்வர்.
3 அடுநெய் ஆவுதி
வந்தவர்கள் இன்னார் என்று வரையறுக்காமல் எல்லாரும் வயிறார (மனம் கோணாது) உண்ண வேண்டி விருந்து படைக்க அடுதீ (சகையல் நெருப்பு) வளர்ப்பது அடுநெய் ஆவுதி ஆகும். இது செழுமையான நகரின் நடுவில் செய்யப்படும். ஆட்டு வணிகர் ஆட்டுக் கறியை ஊனம் என்னும் கறிவெட்டும் கத்தியால் அழித்து, அதன் வெண்ணிறக் கொழுப்பை நெய்யாக்கித் தாளிதம் செய்யும் ‘குய்’ ஒலி கேட்கும் போதெல்லாம் மக்கள் கடலொலி போல் ஆர்ப்பரிப்பர். இந்தச் சமையல் அடுநெய் ஆவுதி எனப்படும்.
4 வானத்து நிலைபெறு கடவுள்
‘வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ ஆகலின் இத்தகைய கடவுளும், வானில் உறைவதாகக் கருதப்படும் கடவுளும் விரும்பும்படி இருவகை வேள்விகளையும் செய்தான்.
5 மண்படு மார்பன் (உழைப்பாளி)
நிறைந்த வளமாகக் கருதப்படும் பொருள்கள் மிகுதியாகப் பழுக்கும் வையப்பகுதிகளிலிருந்து நன்கலன்களைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்தான். மதக்கள் ஒழுகும் போர்யானையைக் கொன்று அதன் தோலால் போத்திய முரசு முழங்கவும், மக்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கவும் கொண்டுவந்தான்.
6 பூழியரின் செருப்புமலை வெற்றி (மிதி அல் செருப்பு) (செருப்பாழி)
செருப்பு மலையை மையமாகக் கொண்டது பூழிநாடு. அந்நாட்டுக் கோவலர் முல்லைப் பூவைத் தலையிலே சூடிக்கொண்டு ஆனிரைகளை மேய்ப்பர். புல் இருக்கும் இடங்களைத் தேடிக்கொண்டு செல்வர். செல்லும் வழியில் ஆங்காங்கே கிடக்கும் ஒளிவீசும் மணிக் கற்களைப் பொறுக்கிக்கொண்டு வந்து பணமாக்கிக்கொள்வர். இவர்களது நாட்டுப் போழியர்களுக்கும் இந்தக் குட்டுவன்தான் தலைவன்.
7 மழவர் மெய்ம்மறை
பூழி நாட்டை அடுத்திருந்தது மழவர் நாடு (அதியமான் மழவர் கோ எனப்பட்டான்) இவர்களுக்குப் பாதுகாப்புக் கவசம் போல விளங்கியவன் இந்தக் குட்டுவன்.
8 பரிவேள்வி செய்து அயிரைப் பொருநன் ஆனான் (அயிரை = ஐயப்ப மலை)
அயிரைமலை உயர்ந்த மலைமுகடு கொண்டது. பலவகையான வளங்களும் நிரம்பப் பெற்றது. இது வழிபாட்டுக்கு உரியது. இதன் பகுதியில் பாகுடி என்னும் ஊர் இருந்தது. நீர் அற்றுப் போகாத ஆறு ஒன்றின் கரையில் இது இருந்தது. (இதனை இக்காலத்தில் பம்பையாறு என்கின்றனர். தமிழில் பம்புதல் என்னும் சொல் பரந்து விரிதலைக் குறிக்கும். பரந்து விரிதலைப் ‘பா’ என்பதும் தமிழ் வழக்கு. பாவாற்றங்கரையில் இருந்த ஊர் பாகுடி) இது வழிபடப்படாத ஊர். குட்டுவன் வேள்வி செய்து விட்ட குதிரையைப் பாகுடித் தலைவன் தடுத்து நிறுத்திக்கொண்டான். போர் மூண்டது. போரில் குட்டுவன் வென்று அயிரைமலையைத் தனதாக்கிக்கொண்டான். பல்பயம் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு (25) நீரறல் மருங்கின் வழிப்படாப் பாகுடிப் பார்வல் கொக்கின் பரி வேட்பு அஞ்சாச் சீருடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேருயர் நெடுவரை அயிரைப் பொருந
8 ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே (புலவர் குட்டுவனை வாழ்த்தியது)
ஆண்டுதோறும் பருவமழையானது பயன் தரும் வகையில் தவறாமல் பொழிந்ததால் மக்கள் துன்பம் இல்லாமல் வாழ்ந்தனர். ஊழூழி வாழ்ந்தனர். ‘இப்படி வாழ, அரசே நீ ஆயிரம் வெள்ளம் யாண்டு உன்மனைவி நல்லாளோடு நலமுடன் வாழ வேண்டும்’ என்று புலவர் வாழ்த்துகிறார். அவன் மனைவி ‘மண்ணா’ (இன்சொல் மணக்கும் நாநலம்) கொண்டவள். தாழ்ந்து இருண்டு மணங்கழும் கூந்தல், அதில் கார்காலத்தில் மலர்ந்து மணக்கும் பூ, அந்தப் பூவைப் புறம் தள்ளுவது போன்று அழகு முகத்தில் அலமரும் (சுழலும்) கண், காந்தள் விரிவது போல் ஈரம் விரியும் விரல்கள், மூங்கிலைப் போன்றதும், பொம்மிப் பருத்ததுமான தோள்கள் ஆகியவற்றைக் கொண்டவள். இவளுடன் வாழி என்று வாழ்த்திப் பாடலை முடிக்கிறார் புலவர்.
இவ்வளவு ஏன்? தமிழறிஞரும் வரலாறு ஆய்வாளர், ஆசிரியருமான பள்ளியான(வன்னியரான) சதாசிவ பண்டாரத்தார் கூட அதியர் மரபையும், மழவர் மரபையும் மலையர் (வேடுவர்) வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார். (பிற்காலச் சோழர் வரலாறு - சதாசிவ பண்டாரத்தார் - பக்கம் 292)
ஒவ்வொரு சாதியினரும் தம்மை வலங்கை,இடங்கை எனப் பிரித்துக்கொண்டு,தமது சாதிதான் உயர்ந்தது எனச்சொல்லி கிளர்ச்சி செய்து,தனது சாதிக்கு கொடியும்,சிறப்பும் அரசிடம் வேண்டிப் பெற்று வந்திருக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,மற்ற இலக்கியங்களையும் படைத்தனர்.
பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக 'சிலைஎழுபது' என்ற நூலை தோற்றுவித்தனர்.
ஈழவர் என்றும்,பின்னர் சாணார் என்றும்,தற்போது நாடார் என்றும் அழைக்கப்படும் மக்கள் 'வலங்கைமாலை' 'சாணார் குலமரபு காத்தவர் சாணார் விதர்ப்ப வினாவிடை' 'நாடாரும்,நாயக்கர் மன்னர்களும்' போன்ற நூல்களையும் எழுதினர்.
செங்குந்தர் என்று தம்மை உயர்வாகக் கூறி வரும் கைக்கோள நெசவாளர் 'ஈட்டிஎழுபது' என்ற நூலை எழுதினர்.
மறவர் 'வான் எழுபது' என்ற நூலையும்,சேனைத்தலைவர் சேனைகுலத்தார் பட்டயம்,சேனைத் தலைவர் மரபு காத்தல்' என்ற நூலையும் எழுதினர்.
இவ்வாறே வைசிய புராணம்,கருணீகர் புராணம் என்ற நூல்களும் தோன்றின.
சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அனைவரும் மள்ளர்(பல்லவர்கள்) குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது என்பதை விட நகைச்சுவையாய் இருக்கிறது. இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம்தான். குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.
மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள், சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகவும் மிகையானவை. உழு தொழில் மட்டுமே செய்தவர்தான்(கொங்கு வெள்ளாளர் இதில் அடங்கமாட்டார்) அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது.உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக்கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன. உழு தொழில் செய்த பள்ளர்களே போர்த் தொழிலில் இறங்கியபோது, வில்லேந்தி வேட்டையாடும் இனத்தவரான எயினர்,கள்ளர்,மறவர் போன்றோரும், அரசகுடியைச்சேர்ந்தவர்கலும் போர் செய்வதில் சிறந்தவர்களாக விளங்கினார்கள் எனக் கருத இடமுண்டு.
உழு தொழில் தோன்றுமுன்னரே பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன. பெருங்கற்காலத்தில் அதாவது சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலத்தில் மனிதன் வேட்டையாடுவதற்கு வில் அம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினான். அப்போது
உழவுத் தொழிலே இல்லை. அப்போது அறியப்பட்டவர்கள் வேட்டையாடல் தொழில் செய்தோரே. அவர்களும் மலைப்பகுதிகளை அரசாண்டிருக்க வாய்ப்பு உண்டு. அவரே வேடுவர். புகழ்மணக்கும் கொங்குநாட்டில் அந்நாட்டிற்கே உரிய வேடுவர்கள் (கொங்கு வேட்டுவ கவுண்டர்கள்) உண்டு.
இதனை உறுதிப்படுத்துகிறார் திரு.வி.கனகசபை (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கழக வெளியீடு,மூன்றாம் பதிப்பு, பக்கம் 74). அதில் அவர் தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த குடியினராக "வில்லவர்" அல்லது வில்லாளிகள் என்ற குடியினரைக் குறிப்பிடுகிறார்.அவர்கள் மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வேட்டையாடல் வாழ்க்கை நடத்தினார்கள் எனவும் கூறுகிறார்.
இக் குடியினருக்குத் தலைவராக யார் விளங்கமுடியும்?அவர் குடியில் ஒருவர்தான் தலைவராக இருந்திருப்பார்.இவர்கள் தான் அரச குலத்தின் முன்னோடிகளாக இருக்கமுடியும்.
உழவுத் தொழில் அறிமுகமானபோதுதான் தலைவர்கள் தோன்றினர் என்பது சரியான வாதமன்று. அரசர்க்கும், உழவுத் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் கூறப்போனால் உழவுத் தொழில் தோன்றுமுன்னரே அரசர்கள் தோன்றிவிட்டனர். தனது இனம் பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில் காலம் கடக்க பண்பாட்டுமுதிர்ச்சி தலைத்தோங்குகிறது. அதன்படி வேளாண்மை, கலை, இலக்கியம், மருத்துவம் என செழிக்கிறது. இதில் குறிப்பிடப்படுவது யாதெனின் அரசனும் வேளிரும் ஒரே இனம்தான். மண்டலத்திற்கு மண்டலம் இன்று அது சாதியாக உருப்பெற்று, நடந்த போர்களால் எல்லைகள் மாறுபட்டு இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கின்ரது.
பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாகக் காணப்பெறும் குறியீடுகளில் வில்லின் உருவமும் பொறிக்கப் பெற்றிருக்கிறது. இக்குறியீடுகள் பண்டையத் தமிழ் எழுத்தின் முந்தைய வடிவம் என்று வரலாற்றறிஞர்களால் கூறப்படுகிறது.(B.B.Lal, "From the megalithic to the Harappa, tracing back the graffiti on the pottery" Ancient India, Number 16, (1960), Bulletin of the Archaeological survey of India, Plate 23)
பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் இறந்தோரின் எலும்புக் கூடுகளுக்கு அருகில் எலும்பு மற்றும் இரும்பினால் செய்யப் பெற்ற அம்பு முனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அவற்றோடு ஒரு சில ஈமச் சின்னங்களில் இரும்பினாலான குறுவாள்கள், பெருங்கத்திகள் காணப்படுகின்றன.("கொடுமணல் அகழாய்வு - ஓர் அறிமுகம்" - கா.ராஜன், 1994, பக்கம் 21).
எதற்காக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன?போர் செய்யத்தானே? குறு வாள், கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி போர் செய்யத் தெரியும்போது தமக்கென்று ஒரு தலைவனை அம்மக்கள் தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்களா?
கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில சதுர செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.மன்னர் உருவம் பொறிக்கப்படாத அக்காசுகளில் முன்புறம் யானை உருவமும் பின்புறம் வில் அம்பு உருவமும் காணப்பெறுகிறது.(தமிழர்காசு இயல் - நடன.காசிநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,முதல் பதிப்பு(1995),படம் 1)
முத்திரை குத்தப் பெற்ற காசுகள் ஜனபதக் குழுக்களால் வெளியிடப்பெற்றவை எனக் கொள்ளப்படுகிறது(நாணயங்கள் - டாக்டர் பரமேஸ்வரி லால்குப்தா, நேஷனல் புக் ட்ரஸ்ட்,புது டில்லி, 1975, பக்கம் 13- 14)
அதை போலவே மேற்குறிப்பிட்ட காசுகள் வில்லைக் குலக் குறியீடாகக் கொண்ட குடியினரால் வெளியிடப்பெற்றவை எனக் கூறலாம்.
இத்தகைய உழவர்களைப் படைவீரராகப் பெற்றிருந்ததால்தான் சேரர்,சோழர் போன்றோர் தம்மை மள்ளர் தலைவராகக் கூறிக்கொண்டனர்.
மள்ளன் கோப்பெருனற்கிள்ளி என்பதால் அவ்வரசனும் உழும் தொழில் செய்த மள்ளனா?
தெளிவாக மள்ளன் கோப்பெருநற்கிள்ளி எனக் கூறப்பட்டபோதும் எந்த வரலாற்றாசிரியராவது சோழர் மள்ளர் மரபினர் என்றோ சேரர் மள்ளர் குடியினர் என்றோ கூறினரா?இல்லையே.ஏன்? சோழன் மள்ளன் அல்ல.மள்ளர்களைப் படை வீரர்களாகப் பெற்றிருந்தவன். இதுதான் காரணமாக இருக்க முடியும்.
மழவர்கள் உழவுத் தொழில் செய்தவரல்ல. போர்க் குடியினர். மழவர்களின் போர்த்திறன் கண்டு சோழ மன்னர்களும் மழவர் படையணியைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டனர். அதனால்தான் தகடூர்,கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மழவர்களுள் சில பிரிவினர் சோழ நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று குடியேறினர் என்பது வரலாற்றறிஞர்கள் சிலரது முடிவு.
மழபாடி - மழவர் படைகள் தங்குமிடம்.பிற்காலச் சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கிய பளுவேட்டரையர் என்பார் மழவர் இனத்தவரே. மேலும் சோழர்களோடும், பாண்டியர்களோடும் மண உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம் பெற்றோராய் மழவர்கள் விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி.
சங்க காலத்தில் அறியப்பட்ட மள்ளர்கள் செல்வாக்கு நாளாவட்டத்தில் குறைந்தது எனலாம். இதற்குக் காரணம் அவர்கள் உதவி நாளாவட்டத்தில் தேவைப்படாமல் போயிற்று. அதனால் அவர்கள் உழவுத் தொழிலிலேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று.
ஏன் மள்ளர் உதவி தேவைப்படாமல் போயிற்று? காரணத்தை மிக எளிதாகக் கூறலாம். மருத நிலப் பகுதியில் மள்ளர்கள் அல்லாத குடியினர் குடியேற்றப்பட்டதுதான் காரணம். முக்கியமாக போர்க் குடிகளே குடியேற்றப்பட்டனர்.
இப்போது மருத நிலப் பகுதிகளாக அறியப்படும் பகுதிகளில் கவுண்டர், கள்ளர்,வன்னியர்,உடையார் போன்ற இனத்தோர் மிகுதியாக உள்ளது ஏன்? இவர்கள் அன்னியர்(தெலுங்கர்) படையெடுப்பிற்குப் பின் குடியேறியவர்கள் என்று கருதினால் அது அறியாமையே. ஏனெனில் கல்வெட்டுக்கள் இம் மக்கள் சோழர் காலத்தில் இப்பகுதிகளில் இருந்தமையை தெளிவாக நிருபிக்கின்றன.
தருமபுரி மருத நிலம் எனக் கூறுகிறார்கள் அப்படியானால் மருத நிலமான தருமபுரிப் பகுதியில் மள்ளர்களான பள்ளர் இனத்தவர்தானே மிகுதியாக இருக்க வேண்டும்?அப்படி இல்லையே. எங்கே போனார்கள் மள்ளர்கள்? அங்கு கிடைத்தக் கல்வெட்டுக்களில் சில கல்வெட்டுக்கள் தவிர்த்து ஏனைய கல்வெட்டுக்கள் எல்லாம் கவுண்டர், வன்னியர்(பள்ளி) மக்கள் குறித்ததாகவே உள்ளன. இதை தருமபுரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த ஒருவர் உறுதி செய்துள்ளார்.
பார்க்க :தருமபுரி வரலாறும்,பிரகலாத சரித்திரமும் (ச.கிருஷ்ணமூர்த்தி)
கவுண்டர்கள் கொங்குநாட்டின் குடிகள் என்பதால் அவர்களை நிராகரித்துப்பார்த்தால் தொண்டை மண்டலத்தில் உள்ள வன்னியர்களை பிற்கால சோழர்கள் கொங்குநாட்டில் 12/13 நூற்றாண்டுகளில் குடியேற்றியது விளங்கும்.
உணவுப் பொருட்களுக்காக மருத நில உழவர்களை நாட வேண்டிய அவசியம் போர்க்குடிகளுக்கு இல்லை. விரும்பினால் விளைபொருட்களை பறித்துச் செல்லும் ஆற்றல் இவர்களுக்கிருந்தது. ஆனால் அதை செய்யவில்லை. காரணம் போர்க்குடிகலும், நாட்டுமக்களும் ஒரே இனமாக இருந்துள்ளனர். இது கொங்குநாட்டிற்க்கு மிக அழகாக பொருந்தும்
நாடாளும் வேந்தன் படையெடுப்பது எதற்காக?மற்ற அரசர் நிலத்தைப் பறிப்பதற்குத்தானே?அதனால்தான் போர்க்குடியினர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றனர்.
அரசர்கள் போர்க்குடியினருக்கு விளை நிலங்களை எதற்காக வழங்கினார்கள்? தங்கள் வீரத்திற்குப் பரிசாகப் பெற்ற நிலங்களே அவை. கொங்கு வெள்ளாளர்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே ஒவ்வொரு குலத்திற்கும் காணி பெற அடித்துக்கொண்ட வரலாறு ஆயிரம் ஆயிரம்.
சேரனை(கொங்கரை) இப்பொழுது மறந்துவிட்டு விடயத்திற்க்கு வருவோம், எயினர்,மழவர்,கள்ளர்,மறவர் போன்றோர் சோழர்,பாண்டியர் படைகளில் பிரதான இடம் வகித்ததால்தான் பிற நாட்டரசர்களை வெல்லுமளவிற்கு வலிமை வேந்தர்கள் வலிமையுடன் இருந்தனர்.
கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான் என தமது பெருமைகளை தம்பட்டம் அடித்துகொள்ள முடிந்தது எதனால்? போர்க்குடியினரான, எயினர்,மறவர்,மழவர் வழித்தோன்றல்களான வீரர்களால்தான்.
களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.
தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.
இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.
இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.
இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.
தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.
இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.
பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.
இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.
இவ்வளவு ஏன் சொல்கின்றேன் என்றால் பிச்சாவரம் சோழனார்கள் பள்ளி இனம். இவர்கட்கும் கலப்பிரர்க்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்றுரைக்கத்தான். இனிமேலும் களப்பிரர்கள் வன்னியர்கள் என்று எவரேனும் கூறினால் மறவாமல் நான் கேட்டதை கேளுங்கள்
எல்லாவற்றுக்கும் மேல் படையாட்சி என்பது அரசனல்ல. அரசன் கீழ் பஞ்சகாலத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் என்று சொல்லவும் வேண்டுமா?
பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள்.
இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு.
அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர். போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தை ஆளத் தொடங்கினர்.
இப்பொழுது சோழனார்கள் பள்ளிகள்(வன்னியர்) என்றால் வன்னியர்கள் பல்லவர்களல்ல என்று சிறு குழந்தைக்குக்கூட புரியும்.
உண்மையில் இந்த பல்லவன் யார்?
பல்லவ வம்சத்தை தங்களது என்று வாய் கூசாமல் பொய் சொல்கின்றனர் வன்னியர்கள். இது சுத்தப்பொய்.
பல்லவராயர்/ பல்லவரையர் (பல்லவ + அரையர்) கொங்கு வெள்ளாளரில் உள்ள 142 குலங்களில் செங்கண்ண குலத்தை சார்ந்தவர்கள். இன்றும் அவர்கள் செங்கண்ண குலமாகவே கொங்கு வெள்ளாள இனத்தின் ஒரு அங்கமாகவே அந்த பரம்பரை வாழ்கின்றது.
காங்கயநாட்டுக்குப் பெரிய வீடாக ஆதியில் இருந்தவர்கள் பல்லவராயர்கள். தற்பொழுது பட்டக்காரன் புதூர் என்ற ஊரில் கொங்கு வெள்ளாளர் மரபை சார்ந்த இந்த வம்சத்தார் குடியுள்ளனர். காங்கயம் செங்கண்ண குலத்தார். ஆதாரங்கள் கீழே.
கோலாற் சிறுவர் சிவிகையி லேறநற் குஞ்சரந்தான்
பாலான சோழன்றன் செய்தொடி யேசிங்கைப் பல்லவன்றன்
காலாலே கீறிக் கரிசோழன் றன்னைக் கனிந்தவன்னை
மாலான செங்கண் முடிசூட்டு வார்கொங்கு மண்டலமே.
- கொங்கு மண்டல சதகம் - 62
யானையினால் எடுத்துவரப்பெற்ற கரிகாற் சோழனுடைய முடிசூட்டுக் காலத்தில் காங்கேய நாட்டுப் பல்லவன் தன் காலாலே கோடு கீறச் செங்கண்ணர் குலத்தார் யாவரும் அவ்வெல்லைக்குள் நின்று சோழனுக்கு முடிசூட்டினர் என்பது வரலாறு. சிங்கை காங்கேயம். "மதியூகி சிற்றெழுந்தூர் சிங்கையம் பதியில் மதன செங்கண்ண குலமால்" (சிதம்பரப்பல்லவன் முடி சூட்டுப் பாடல்)
காங்கேயம் பல்லவராயர் மரபில் வந்த சிதம்பரப் பல்லவன்
என்பவன் ஒட்டியரை வென்று வெற்றி கொண்ட கொங்கு நாட்டுத்
தலைவர்களில் ஒருவன்.
"திட்டமிகு மொட்டியனை வெட்டி விருதிட்டுமே
சிம்மா சனத்திருந்து
சிரோரத்ன மகுடமும் ஆறுகாற் பீடமுயர்
தென்கடகு சூடாமணி
திறல்வரிசை பெற்றிடும் விருது மகுடாசலன்
சிதம்பரம் பல்லவனுமே"
- (கம்பர் வாக்கியம்)
செங்கண்ணன் - காங்கேயம் - ஆதாரம்:
கார்கொடுத் தோன்மீன் கொடிகொடுத் தோன்றென் கடப்பமலர்த்
தார்கொடுத் தோன்றோட் டடங்கொடுத் தோன்மிகு தண்டமிழோர்க்
கூர்கொடுத் தோன்ற னுயிர்கொடுத்தோனின் றுதைக்கத்திரு
மார்கொடுத் தோன்செங் கணன்வாழ் திருக்கொங்கு மண்டலமே.
பல்லவர்கள் கொங்கு வெள்ளாளரின் காடை குலத்தவர்கள்:
பிற்காலப்பல்லவர்களை சோழர்கள் வெற்றிகொண்டபின்னர் பல்லவக்குடியினர் (தொண்டை மண்டலத்து மக்கள்) காடவராயர், பல்லவராயர், மற்றும் சேதிராயர் என்ற பெயரில் சோழ அரசின்கீழ் படைத்தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்றினர். பல்லவர் என்றாலே உண்மையில் தொண்டையர் (தொண்டை நாட்டவர்) என்றுதான் அர்த்தம்.
பள்ளி பல்லவன் அல்ல. அந்த உண்மையை
இப்பொழுது நான் உதைத்தெரிகின்றேன்.
இவர்களின் இன்னொரு மாபெரும் பொய்யை அம்பலப்படுத்துகின்றேன்.
இடைக்கால பல்லவர்களின் காலம் வரை பள்ளி என்றோ வன்னியர் என்றோ இம்மக்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடையாது. வன்னியர் பட்டம் பெற்று விளங்கும் போர் மழவரையர்கள் முத்தரையரே என்பது நிரூபணம்.
இவர்கள் தாங்கள் பல்லவர் என்பதற்கான ஆதாரமாக காட்டும் ஒரே ஒரு ஆவணம் Ancient to Medieval: South Indian Society in Transition என்கின்ற புத்தகத்தில் வரும் வாசகம்
"We have three more inscriptions of Kulottungachola Kadavarayan, which are found in Viriddhachalam (SII, vii-150: SA, 1148), Srimushnam (ARE, 1916-232: 1152), and Tirunarunkondai (SITI-74:SA, 1156). In the first two he is described as a Palli” (Vanniyar). Noboru Karashima mentions other names of Kadava chiefs as Kachchiyarayan, Cholakon, Nilagangaraiyan which are still used by Vanniyars in Cuddalore district."
இதனைவைத்துதான் அந்த அறிவுகெட்ட ஜப்பானியன் (Noboru Karashima) பின்வரும் வாசகத்தை சொன்னான்
From the above it is clear that the Kadava chiefs, who were Pallis (Vanniyars) by jati and had estabilished their power in Gadilam River area
ஆனால்,
காடவர் ஆட்சியில் அந்த மூன்று பெயர்களில் (கச்சிராயன், சோழகோன், நிலகங்கரையன்) உள்ள அந்த தளபதிகள் மட்டுமே பள்ளிகள் என தெளிவாக கல்வெட்டு உள்ளது. ஆனாலுமே காடவர்கள் பள்ளி என்று அந்த முட்டாள் சொல்லவே இல்லை.
அந்த காடவர்கள் (கோப்பெரும்சிங்கன் 1&2) இருவரும் பள்ளிகள் என்பது பொய். அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை பள்ளிகளிடமோ, எவரிடத்திலும் பட்டயமோ, கல்வெட்டோ, செப்பேடோ இல்லை.
அந்த காடவராயனின் அப்பன் பெயர் தெரியவில்லை. உண்மையில் பல்லவர்கள் காடவர்கள் எனப்படுவதும், காடுவெட்டி, காடவராயன் என புகழப்படுவதும் உண்மைதான்.
ஆனால் கி.பி 260 இல் இருந்தே (களப்பிரர்கள் பல்லவரை வீழ்த்தியபோது) பல்லவர்களுக்கு மிகநெருக்கமாகவும், சொந்தங்கள், பங்காளிகளாகவும் இருந்த அந்த காடுவெட்டி, காடவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. அதற்கு 900 ஆண்டுகள் கழித்து அப்பன் பெயர் தெரியாத காடன் சோழனுக்கு பல் இளித்தவன். அந்த பரம்பரையைத்தான் இன்றைய பள்ளிகள் தாங்கள் என சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
இரண்டாம் ராஜராஜனை அரியணையில் ஏற்றிய பெருமை பிற்கால காடவர்க்கு (கோப்பெரும்சிங்கன் 1&2) இருந்தது. இவர்களது காலம் 1216 - 1279 ஆகும்
ஆனால், காடவராயன் என்று பின்னாளில் அறியப்பட்டவன் விஜயநகர ஆட்சியின்போது (1400-1600) இருத்த ஒரு கோழை
அவன் பள்ளி என்பதற்கான ஆவணங்களோ, ஆதாரமோ இல்லை. ஒன்றுமட்டும் நிச்சயம், பல்லவனுக்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதுதான்
ஏனெனில் கி.பி 240 முதல் 1260 ஆண்டு கழித்து ஒருவன் பல்லவப்பரம்பரையில் உதித்த அப்பன் பெயர் தெரியாத காடவராயன் சிற்றரசனாக, கோழையாக இருக்க வாய்ப்பே இல்லை.
இந்த அறிவுஜீவிகள் காட்டும் கல்வெட்டுகள் எல்லாம் அந்த பல்லவனுக்கு சம்பந்தமில்லாத காட்டுமிராண்டிகளின் ஆவணங்கள்தான். இந்த போலி காடவராயன் பரம்பரைதான் பின்னாளில் விஜயநகரத்து வந்தேறிகளுக்கு ஜால்ராபோட்டு ஜமீனாக தங்களை தக்கவைத்துக்கொண்ட கோழைகள்.
பிற்கால சோழர்களால் மேன்மை பெற்ற கூட்டத்தார்தான் இந்த பள்ளிகள்
இதுமட்டும் அல்ல. காடுவெட்டி என்று காட்டுமிராண்டிக்கு பட்டப்பெயரிட்டு, தாங்கள் பல்லவர்கள் (காடுவெட்டி) என காட்டத்தான் அதை பிரபலபடுத்தத்தான் தருமபுரியில் குடிசைகள் எரிக்கப்பட்டன.
இதனை எதனை மறைக்க என்பதை நான் பதிவிட விரும்பவில்லை.
வரலாறை தவறாக படித்துவிட்ட பள்ளிகளை நினைத்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக உள்ளது.
எதற்கெடுத்தாலும் நீலகண்ட சாஸ்திரி சொன்னார் நாங்கள் ஆண்டவர்கள் என்று கூச்சல் போடும் வன்னியர்கள், அவர் சொன்னதையும் எழுதிய புத்தகத்தையும் முழுதாக படித்தார்களா என்றால் இல்லை. "காடுவெட்டி" என்று மட்டும் ஒரு தரங்கெட்டவர்க்கு பெயர் மட்டும்தான் சூட்டியுள்ளார்கள். காடுவெட்டி யார் என்றும், பல்லவப்பேரரசர்கள் யாரென்றும் நந்திவர்மன் யாரென்றும் அவரே சொல்கிறார் கேளுங்கள்
"The honorific "Kaduvetti" meaning literally "one who clears forests. The Kadava name with Tondaiyar and Kaduvetti, is found in Tamil literature to refer to the Pallavas. The relationship of the Kadavas to the main Pallava dynasty is documented in an inscription in Kanchipuram. The kings of the collateral line of the Pallavas who were descended from Bhimavarman, the brother of Simhavishnu, are called the Kadavas. The Pallava king Nandivarman (Pallavamalla) is praised as 'one who was born to raise the prestige of the Kadava family'. The title Kaduvetti is also used in some inscriptions to denote the Pallavas. A record from Nagar in the Mysore State employs the term Kaduvetti as a synonym for all the Pallava kings of Kanchi.
The earliest reference to the Kaduvetti is to be found in the Siragunda stone record of about 480 A.D. The Kaduvettis are largely mentioned in the inscriptions of the Telugu and Kanarese districts, but their connection with the Kadavas of the Tamil country is not yet well established. Pallava subordinate kings also seems to have acquired the title "Kaduveeti".The Kadai clan of Kongu Vellala Gounders have been historically mentioned as Kadavarayan,later the title confused with the bird kadai (linguistically undergoing the suffixation process -ai of Tamil).Their clan deity is Keeranur and nearby Kadaveshvaran(the god of Kadavas).Later due to the Kalabhira influx, they moved to Kongu Nadu".
- Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002)
This is also researched, confirmed, mentioned and published in
^ Inscriptions of India, South-Indian Inscriptions @ whatisindia.com
^ South Indian Inscriptions Volume_12 - Pallava Inscriptions Table of Contents @ whatisindia.com
3ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டிற்கு பிராமணர்களையும் வேளாளர்களையும் (இன்றைய வன்னியர்) குடியேற்றியது தொண்டைமான் இளந்திரையன் ஆவான். இவன் ஸ்ரீசைலத்திலிருந்து (வட ஆந்திரா) அவர்களை குடியேற்றினான் என்றும் துளு மண்டலத்து (இன்றைய கண்ணூர், காசர்கோடு, தக்சின கன்னடம்) படாதபாடுபடுத்தினான் என்பதும் வரலாறு. தொண்டை மணடலத்தின் பூர்வகுடிகள் இருளரும் அரவரும் என சொல்லித்தெரியவேண்டியதில்லை.இதனை மறைக்கத்தான் வன்னியர்கள் தாங்கள் தொண்டைமானர் இனம் என்று காட்ட முற்ப்படுகின்றனர்
கொங்கு வெள்ளாள பூசன் குலமும் பல்லவர்களும்:
Poosan Clan(பூசன் கூட்டம்),One of Clan of Kongu Vellala Gounders.CholamahaDevi Stone Inscription this Clan is mentioned as Poosagar (சோழமாதேவி கல்வெட்டில் இது 'பூசகர்' ).The earliest reference(~400A.D-600 A.D or Inscription) to Poosan Clan are found in the North Arcot(Present Day Vellore and Thiruvannamalai District) Gudiyatham Taluk, Uthayendram.This Inscription is known as 'Uthayendram Stone Inscription'.Uthayendram Inscription has Note that had Mentioned 'Uthayendra Simman' belongs to Clan Named 'Poosan(பூசன்)' .Poosan MatruThurai(பூசன் மாற்றுத்துறை) one of type of war strategy
பூசன் தற்பொழுதும் பூசன் கூட்டம் கொங்கு வேளாளர் கூட்டங்களில் ஓன்றாக விளங்கி வருகிறது. சோழமாதேவி கல்வெட்டில் இது 'பூசகர்' என்று குறிக்கப்பட்டுள்ளது. பூசன் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் முதன்மையான சான்று வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கிடைத்த உதயேந்திரம் செப்பேடுகள் ஆகும். உதயேந்திரன் செப்பேடுகளில் குறிக்ப்பெறும் உதயேந்திர சிம்மன் 'பூசன்' என்ற கூட்டத்தைச் சார்ந்தவராக இச் செப்பேடு கூறுகிறது.
Proof:
^ Journal of Tamil Studies
^ "கல்வெட்டுக்களில் கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள்" by கட்டுரையாளர் : சு.இராசவேலு Rajavelu, S கட்டுரையாளர் பணி : Epigraphical Assistant, Archaeological Survey of India, South Zone, Madras கட்டுரைப் பிரிவு : Epigraphy - கல்வெட்டியல் ஆய்விதழ் எண் : 036 - December 1989 பக்கங்கள் : 067 - 074,read page 71 of this PDF
http://www.ulakaththamizh.org/JOTSpdf/036067074.pdf
மேலும் களப்பிரர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பறியபோது தொண்டைமானுக்கு ஆதரவாக போருக்குச்குச்சென்ற மூவேந்தர்களை களப்பிரர்கள் தோற்கடித்து ஆமுர் சிறைக் கூட்டாத்தில் அடைத்து
விட்டனர்.
அப்போது சோழ வள நாட்டில்ச் சீர்காழியில் வாழ்ந்து வந்த பூச குலத்தினர் படை திரட்டிச் சென்று ஆமுர் சிறையைத் தகர்த்து மூவேந்தர்களை விடுதலை செய்தனர்.தொண்டைமானை மீண்டும் தொண்டை மண்டலத்திற்கு அரசனாக்கினர்.இதனால், பூச குலத்தினருக்கு தொண்டைமான் பட்டம் வழங்கப்பட்டது. இச்செய்தி வாலசுந்தரக் கவி பாடிய கொங்கு மண்டல சதகத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
பூச குலத்தானின் வீரத்தை மெச்சி வாதமரு(பகதூர் )என்ற பட்டம் கொடுத்தார்.எனவே, தொண்டைமான் அச்சுதராயர் பெயரால் வழங்கப்பட்ட அச்சுதத் தொண்டைமான் என்ற பெருமைப் பட்டத்தை பூசர்கள் தங்கள் பெயறுடன் இணைத்துக் குறித்துக் கொள்கின்றனர்.இதனை,
‘சொல்லாண்மை திழ் சொற்றிடும் பூசர்’ எனவும்
'சொற்புகழ் மூலனூர்பூச குலன் வாதுரு
தொண்டைமான் கொடுத்தது துணிந்து பார்சிங்கா ‘
என்ற அலகுமலைக் குறவஞ்சி சிறப்பிக்கின்றது.
இந்த தொண்டைமான் யார்???
முதலில் ஒன்றை தெளிவாக புரியவைக்கின்றேன். அவ்வையார் பாடிய சங்ககால இளந்திரையன் தொண்டைமானுக்கும், பிற்கால சோழனான கலப்பின குலோத்துங்கச்சோழனின் தளபதி கருணாகர தொண்டைமானுக்கும்(12th century), அறந்தாங்கி தொண்டைமானுக்கும் (14th century), இன்றைய புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கும் (16th century - present) எந்த ஓட்டும் இல்லை உறவும் இல்லை.
அறந்தாங்கி தொண்டைமான் (14th century):
அறந்தாங்கி தொண்டைமான் மரபு புதுக்கோட்டை மரபுக்கு 300 ஆண்டுகள் முந்தையது. அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கியில் அரசு செலுத்திய தொண்டைமான்களுக்கும், 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த தொண்டைமான்களுக்கும் தொடர்பு இல்லை, இருப்பதாகவும் எந்த ஆவணமும் ஆதாரமும் இல்லை. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. பாளையக்காரர் என்போர் வேறு வேறு தகுதியுடைய படைத்தலைவராவர்.
ஆனால் இவர்களின் முன்னோர்கள் அரசர்களிடமிருந்து, அவர்களது மதிப்பைக் காப்பாற்றியதற்கோ, தாம் புரிந்த நன்றிக்கு மாறாகவோ, பட்டாளத்தை வைத்துக்கொள்ளவோ பெரு நிலங்களை இனாமாகப் பெற்றிருக்கின்றனர் என்று அறிய முடிகின்றது.
இவர்களுக்கும் பல்லவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
புதுக்கோட்டை தொண்டைமான் (17th century):
சொல்லவே வேண்டாம். விஜயநகரத்தின் பிரதிநிதி இவர்கள். முதல் அரசன் ரகுநாத தொண்டைமான் என்பவன். அவனைப்பற்றி
ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் நமன தொண்டைமான்
ஆக இவர்களுக்கும் பல்லவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் விஜயநகரத்தின் பிரதிநிதிகள்
பள்ளிகள் சிலைஎழுபது என்ற சுயபுராண பாடல் வைத்திருப்பார்கள், அதில் ஊரில் உள்ள அரசனை எல்லாம் கவி பரிசிற்காக இவர்களினமாக புகழ்ந்திருப்பார்கள். குலோத்துங்க சோழன் என்ற சாளுக்கிய சோழனால் தளபதியாக வளர்க்கப்பட்ட கருணாகர தொண்டைமான் முன்னிலையில் சுயபுராணம் இயற்றி ஊரில் உள்ள கள்ளர், முத்தரையர், சேரர், பல்லவர், மலையமான் போன்ற எண்ணற்ற வீர மறவர்களின் பட்டங்களையும் புகழையும் தனதாக சூட்டி மகிழ்நதுள்ளனர்.
இவை அனைத்தையும் பொய் என்று நிரூபித்துவிட்டேன் ஒன்றைத்தவிர. அந்த கருணாகர தொண்டைமான் பள்ளி என்பதை தவிர.
ஆனால் இந்த நூலைத்தவிர வேறு எங்கும் எந்த பட்டயம், கல்வெட்டு, பாடலிலும் அவன் பள்ளி என்று இருக்காது. இடைக்கால பல்லவர்களின் காலம் வரை பள்ளி என்றோ வன்னியர் என்றோ இம்மக்கள் இருந்தமைக்கு சான்றுகள் கிடையாது.வன்னியர் பட்டம் பெற்று விளங்கும் போர் மழவரையர்கள் முத்தரையரே என்பது நிரூபணம்.
பள்ளி என்றழைக்கப்படும் மக்கள் பிற்கால சோழர்களால் மேன்மை பெற்ற கூட்டத்தார்.
போலி பல்லவராயர்கள்:
ஏனைய பல்லவராயர்கள் என்போர் முக்குலத்தோரின் ஒரு பிரிவினரான ஈச நாட்டுக் கள்ளர் என்ற பிரிவின் கீழ் வரும் ஒரு இனத்தவர் ஆவர். இவர்கள் பிற்கால சோழ ஆட்சியில், குறு நில மன்னர்களாகவும், படைத்தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். இது பற்றிய பல சரித்திரக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. ஆனால் பல்லவராயன் என்பது வெறும் பட்டமே தவிர பரம்பரைப்பெயறல்ல. இராசாதிராசப் பல்லவராயன், கோனேரிப் பல்லவராயன், மஞ்சோலை பல்லவராயன், அச்சுத்ப்ப பல்லவராயன், இளையபெருமாள் பல்லவராயன், ஆவுடையப்ப பல்லவராயன், கந்தப்பப் பல்லவராயன், மல்லப்பப் பல்லவராயன், சிவந்தெழுந்த பல்லவராயன் என பலபேர் இருந்தாலும் இவர்களுக்கு வழங்கப்பட்டது வெறும் பட்டமே. இவர்களது குடிகள் புதுக்கோட்டை பிலாவிடுதி, மருதன்கோவில்விடுதி, காயம்பட்டி( திருமயம்) தஞ்சாவூர் மாவட்டம் சின்ன பொன்னாப்பூர், கண்ணுகுடி, தென்னமநாடு, மூவாநல்லூர், செயங்கொண்டசோழபுரம்,ரெங்கநாதபுரம் முதலிய ஊர்களில் கள்ளர் இனத்தவராக வாழுகின்றனர். பல்லவாண்டான் என்னும் பட்டமுடைய தலைவர்கள் இடைக்கால சோழர் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். பல்லவர் என்னும் பட்டங்களின் ஒற்றுமை கண்டு இவர்கள் பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என சொல்வது மடத்தனம்.
பல்லவராயர் என்ற வம்சத்தை தங்களது என்று வாய் கூசாமல் பொய் சொல்கின்றனர் வன்னியர்கள். முதலில் அறியட்டும் உண்மையானவர்கள் கொங்கர் என்றும், வெறும் பட்டம் பெற்றோர் கள்ளர் என்றும்.
பல்லவராயர் என்பது அரசு உயர் அலுவலர்கட்குத் தமிழக அரசர்கள் அளித்த பட்டப் பெயர்களில் ஒன்று
செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், திருப்புட்குழி விசயராகவப் பெருமாள் கோயில் முன் மண்டபத்துக் கிழக்குச் சுவரில், ஒரு பாடல் கல்வெட்டு உள்ளது.
குலசேகர தேவரான சுந்தர பாண்டியன் சிதம்பரம் கோயில் பொன்வேய்ந்தான்; பல புலவர்களால் பாடல்
பெற்றான்; எம் மண்டலமும் கொண்டான் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்; தென்னவனான அப்பாண்டிய
மன்னன் வாழ்க
என்று அப்பாடல் கல்வெட்டுக் கூறுகிறது. இந்தப் பாடல் கல்வெட்டை வெட்டி வைத்தவன் சுந்தர பாண்டியனின் உயர் அலுவலனான அழகியான் பல்லவராயன் என்பவன். இச் செய்தியை அப்பாடலின் கீழ் எழுதப்பட்டுள்ள இரண்டு வரி உரைநடைக் கல்வெட்டுக் கூறுகிறது.
மேற்கண்ட செய்தி, கீழ்க்காணும் பாடலில் உள்ளது. அப்பாடல்
வாழ்க கோயில் பொன்மேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன் வாழ்க சுந்தர மன்னவன் தென்னனேய்
என்பதாகும். அதன் கீழ் ‘பெருமாள் குலசேகர தேவர் திருத்தோளுக்கு நன்றாக, எடுத்தகை அழகியான் பல்லவராயர் செய்வித்த தன்மம்’ என்று வெட்டப்பட்டுள்ளது. (திருக்தோளுக்கு நன்றாக என்றால் உடல் நலத்தின் பொருட்டாகக் கொடுத்த கொடை என்பது பொருள்; கோயில் - சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம்; மகிபதி - அரசன்; செந்தமிழ் மாலை - தமிழ் இலக்கியம்)
பல்லவர்கள் தொண்டைமான் மரபில் வந்தவர் என்றும் அவரின் கோத்திரம் வன்னியர்களின் கோத்திரமான சம்பு மகரிஷி கோத்திரம் என்றும் கூறப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது கம்பர் இயற்றிய சிலையெழுபது என்ற நூலில் வருவதால், இது புனையப்பட்ட புழுகாகக்கூட இருக்க வாய்ப்புகள் அதிகம். பள்ளிகளை புகழும் சிலைஎழுபது, செங்குந்தரை புகழும் ஈட்டிஎழுபது, மறவரை புகழும் வான்எழுபது ஆகியவை கட்டுக்கதைகளே
பல்லவர்கள் தொண்டையர் என்பதால், வன்னியரும் பல்லவர் என்று சொல்லிக்கொள்வதாலும், நாம் கேட்க வேண்டியது, தொண்டையர்க்கு கொங்கர்நாட்டில் என்ன வேலை என்பதுதான். இப்பொழுது அவர்கள் தாங்களே மழவர் என்றும், பல்லவர் என்றும் சொல்லிக்கொண்டால், அதை நம்புகின்றவன் மடையன்.
தொண்டைமான் வழிவந்தவரே பிற்காலத்தில் திருச்சியை சுற்றிய பகுதியில் பல்லவராயர்கள் என்ற பெயரில் 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவக்குடிகள். ஆனால் இவர்களுக்கும் 16 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சிசெய்த பல்லவராயர் மற்றும் தொண்டைமான் என்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஏனெனில்,அவர்கள் விசயநகரப் பேரரசின் பிரதிநிதிகள்.
யார் இந்த சம்புவராயன்?
அடுத்த பள்ளிகளின் புளுகு இது. சம்புவராயர் பல்லவர் வம்சம் என்பது
ஓமயிந்தன் முன்னூற்றவன் பள்ளியான காரணமாணிக்கம் என்பவன் சுந்தர சோழன் காலத்தில் வாழ்ந்தவன் என தெரியவருகின்றது. இவனது அப்பன் பெயரும் வரலாற்றிலேயே இல்லை. இவன்தான் சம்புவராயர் என்ற பரம்பரையின் முன்னோடி என்று கல்வெட்டுகள் சொல்கின்றன
(South Indian Inscriptions - Vol.7, no:500)
இவன் பரம்பரையில் வந்தவர்கள் அதிராஜேந்திரன் (கி.பி 1070), மூன்றாம் இராஜராஜன் (கி.பி 1216-1257) காலம் வரையிலும் சோழர்களின் கீழ் அதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும் நாடு காவல் செய்பவர்களாகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய சம்புவராயர்கள் சோழப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் தனியாட்சி நிறுவினர். அவ்விதம் முதல் தனியாட்சியை நிறுவியர் இராசகம்பீர சம்புவராயராவார் (பொ.ஆ. 1216-1268). இவர் வடாற்காடு மாவட்டம் போளூர் வட்டத்திலுள்ள படைவீடு என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சிப் பகுதி இன்றைய கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய படைவீட்டு நாடு என்ற ஒன்றை உருவாக்கி இவர்கள் 1236 - 1375 வரை 139 ஆண்டுகள் மட்டுமே ஆட்சிசெய்தார்கள். இதுதான் ஆண்ட பரம்பரை என பிதற்றிக்கொள்ளும் பள்ளிகளின் யோக்கியதை.
சம்புவராயரின் குலச்சின்னம் காளை மட்டுமே
இந்த பரம்பரையில் நிறைய பேர் மல்லன் என்ற பெயர் கொண்டதால் இவனை பள்ளர் இனம் என்றும் வாலாற்று ஆசிரியர்கள் கணிக்கிறார்கள்.
சம்புவராயர் பாம்பரை எங்களுடையது என பறையர்களும் சில ஆதாரத்தோடு போராடிவருகிராகள் என்பது கவனிக்கப்படவேண்டியது
எது என்னவோ இந்த சாம்புவுக்கும், பல்லவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது உலகறிந்த உண்மை
உண்மையில் இந்த சோழன் யார்?
சங்ககால இலக்கியங்களில் உள்ள சோழர்கள் புகாரை (காவிரிப்பூம்பட்டினம்)தலைநகராகக்கொண்டவர்கள். அதில் ஒரு சோழனான கரிகாற்சோழனின்(முற்கால சோழன் - 8ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவன் ) தாய் கொங்கு வெள்ளாலக்குடியாவாள். அதாவது கரிகாற்சோழனின் தாய்மாமன் இரும்பிடற்தலையர் கொங்கு வெள்ளாளன். இவரின் வழிவந்தாரே சங்கராண்டாம்பாளையம் வேனாவுடர்யார்கள் (வேனாட்டு உடையார்கள்)
இடைக்கால சோழர்கள்தான் ராஜராஜன் என்ற அருண்மொழிவர்மன் எல்லாம். 8ஆம் நூற்றாண்டில் விஜயாலன் என்பவன் தஞ்சையை ஆண்ட இளங்கோ முத்திரையரை வீழ்த்தித்தான், இடைக்கால சோழ பரம்பரையை நிறுவினான். போர் எப்படி இருந்தது , நடைபெற்றதா இல்லையா என்பதற்கு இன்றையவரை சுவடே இல்லை.
ராஜராஜனின் 5 தலைமுறைக்குப்பின் வந்த பிற்கால சோழர்கள் ஒரு கலப்பினம். அதை இப்பொழுது தெரிந்து கொள்வர்கள்.
சாளுக்கியர்களில் வேங்கி சாளுக்கியர் என்ற ஒரு அரச குலமுண்டு. இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் தெலுங்கர்கள். இந்த வேங்கி சாளுக்கியர் மரபின் முதல் அரசன் குப்ஜ விஷ்ணுவர்த்தனன்(கி.பி. 624 - 641).
இந்த வேங்கி சாளுக்கியர் மரபில் 23- ஆவது அரசன் விமலாதித்யன் (கி.பி. 1011 - 1018). இந்த விமலாதித்யன் ராஜ ராஜ சோழனின் மகளும் ராஜேந்திர சோழனின் சகோதரியுமாகிய குந்தவையை மணம் புரிந்தான்.
சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும், குந்தவைக்கும் பிறந்தவன் ராஜ ராஜ நரேந்திரன்.
ராஜ ராஜ நரேந்திரன் பல சிக்கல்களுக்கு இடையே தனது தாய் மாமன்(முதலாம் ராஜேந்திர சோழன்) உதவியுடன் வேங்கி சாளுக்கிய மன்னன் ஆனான்.இவன் வேங்கி சாளுக்கிய மரபின் 24-ஆவது மன்னன்.
இந்த ராஜ ராஜ நரேந்திரன் தனது மாமன் (முதலாம் ராஜேந்திர சோழன்) மகளாகிய அம்மங்கை என்பவரை திருமணம் செய்துகொண்டான்.
ராஜ ராஜ நரேந்திரனுக்கும்,அம்மங்கைக்கும் மகனாகப் பிறந்தவன் ராஜேந்திர சாளுக்கியன்.இந்த ராஜேந்திர சாளுக்கியன்தான் முதலாம் குலோத்துங்க சோழன்.
ராஜேந்திர சாளுக்கியன் தனது நாட்களில் பெரும்பகுதியை கங்கை கொண்ட சோழபுரத்தில் கழித்தான்.
ராஜேந்திர சாளுக்கியன் இரண்டாம் ராஜேந்திர சோழனின்(கி.பி. 1054 - 1063) மகளான மதுராந்தக தேவி என்பவரை மணம் புரிந்தான்.
எவ்வாறு ராஜேந்திர சாளுக்கியன் சோழ மன்னன் ஆனான்?
இரண்டாம் ராஜேந்திர சோழனுக்கு வீர ராஜேந்திர சோழன் என்ற சகோதரனும்,ராஜ மகேந்திரன் என்ற மகனும் இருந்தனர். 2-ஆம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்திலேயே அவன் மகன் ராஜ மகேந்திரன் இறந்துவிட்டான்.
அதனால் 2-ஆம் ராஜேந்திர சோழனின் சகோதரன் வீர ராஜேந்திர சோழன் சோழ மன்னனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூட்டப்பட்டான்.
வீர ராஜேந்திர சோழன் மறைந்த பிறகு அவன் மகனான அதி ராஜேந்திர சோழன் கி.பி. 1070 -இல் கொலை செய்யப்பட்டான்.
அதிராஜேந்திர சோழன் கொலை செய்யப்பட்ட பிறகு சோழ மன்னனாகத் தகுதியான வாரிசு யாரும் இருக்கவில்லை.எனவே ராஜேந்திர சாளுக்கியன் சோழ மன்னனாக முடி சூடப்பெற்று குலோத்துங்க சோழன் என்ற பெயருடன் சோழ அரசன் ஆனான்.
சாளுக்கியர் மரபினனே முதலாம் குலோத்துங்க சோழன். இவன் பள்ளி/படையாட்சி( வன்னியர்) அல்ல. கள்ளர்,மறவர்(தேவர்) இனத்தவனும் அல்ல, தேவேந்திர (பள்ளர்) குலத்தினனும் அல்ல, சான்றோரும் அல்ல.
பிற்கால கலப்பின சோழர்களுக்கு வாரிசே இல்லாமல் அழிந்தே விட்டது, பண்ணையார் ஹிரன்யவர்மன் வாரிசு,சோழன் கிடையாது.
இப்படி ஒரு கலப்பினம் 13ஆம் நூற்றாண்டில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனால் வீழ்த்தப்பட்டது. அதன்பின் சோழதேசத்து சோழ தமிழரின் பண்பாடும் செழிப்பும் பாண்டியரால் கற்பழிக்கப்பட்டது வரலாறு.
ஸ்ரீ ராஜ ராஜ மார்த்தாண்ட வர்மா - இவர் இன்றைய திருவாங்கூர் மன்னர் வாரிசு (கேரளா) Royal family of Cochin என்று அழைக்கப்படுபவர்கள். ஸ்ரீ பத்மனாத சுவாமி திருக்கோவில் இவருடைய குடும்பக்கோவில். பிற்கால சேர வம்சத்தை (இவர்கள் தமிழர்களே அல்ல) சேர்ந்த சேர இளவரசிக்கும் நம்பூதிரி அமைச்சர்க்கும் இடையில் 14ஆம் நூற்றாண்டில் உருவான கலப்பினம் இவர்கள். இவர்களைக்கூட விட்டுவைக்காமல் அவர்களும் வன்னியர் என்று பள்ளிகள் பரப்புரை செய்கின்றனர்
இப்பொழுது பள்ளியோ(வன்னியரோ), பள்ளரோ சொல்லட்டும் நான்தான் சோழனின், பல்லவனின் பரம்பரை என்று. சங்கடப்படாமல் செருப்பில் அடித்தாற்போல் இந்த வரலாறுகளை திரையிட்டு காட்டுங்கள்
இரும்பிடர்த் தலையார் வேணாடர் ஆன வரலாறு:
சேரன் அத்தி உல்லாசப்பிரியன்; ஆதலால் அவன்தனது அரசைக் கவனியாது வாழ்ந்தனன். அவ்வமயம் அச்சேரன், நன்றம்மலையின் அண்மையில் உள்ள இருங்கழார் என்னும் பதியல் வாழ்ந்தனன். இங்குக் குறித்த இருங்கழார் தற்பொழுது ‘பவானி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மேற்குறித்த நன்று என்ற மலை ஊராட்சிக்கோட்டை மலை என்று பேசப் பெறுகின்றது. சேரனது சோர்ந்த நிலையை அறிந்த முத்தூருக்கோட்டத்துத் தொன் முதிர் வேளிர்கள் மிகைத்தெழுந்து அச்சேரன் அத்தியுடன் போரிடுவாராயினர்.
இங்குக் குறித்த முத்தூருக்கோட்டம் என்பது காங்கேயம், வெள்ளகோயில், கொடுமுடி, தாராபுரம் தாலூக்கா, இவை சேர்ந்த பகுதியாகும். இப்பகுதியில் நடந்த போரில் அத்திக்குத் துணையாகச் சோழன் கரிகால் வளவனும் இரும்பிடர்த் தலையாரும் கலந்து போரிட்டனர். வளவனது சேனையின் மிகையாலும் பிடர்த் தலைப் பெரியாரின் படை நடத்துந் திறந்தாலும் அத்திக்கு வெற்றி கிடைத்தது. தோற்ற அவ்வேளிர்களது நாட்டை ஒன்று சேர்த்து வேணாடு என்ற பெயரை அதற்குச் சூட்டிச் சேரமான் அத்தி என்பவன் அந்த வேளிர் நாட்டை ஆளும் உரிமையை இரும்பிடர்த் தலையாருக்கு ஆக்கி வேணாடன் என்ற பட்டப் பெயரையும் அளித்து மேற்கூறிய இரும்பிடர்த் தலையாரைச் சிறப்பித்தான். அந்த நாள் முதல் இரும்பிடர்த் தலையார் என்பவருக்கும் அவர் பரம்பரையில் தோன்றிய யாவருக்கும் வேணாடர் என்ற பட்டப் பெயர் வந்து பொருந்துவதாயிற்று.
வேணாவுடையான் - கொற்றை நகர்
தண்டா மரைதனில் மீனவன் சங்கப் பலகைதனில்
உண்டாம் புலவரை மலையோர மாயெதி ரோடிவந்து
கண்டா தரிக்கும் பெரிய குலேந்த்ரன் கனகமுடி
வண்டாடும் பூங்கொற்றை வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே - சதகம் 63
முன்பு பாண்டிய நாட்டில் பன்னீரியாண்டுப் பஞ்சம்
வந்தது. அப்பொழுது பாண்டியன் சங்கப் புலவர்களை யாதரிக்க முடியாமல் கைவிட்டான். சங்கப் புலவர்கள் பலதிசை நோக்கிச்
சென்றார்கள். பின்பு கொங்கு நாடடைந்தார்கள். சங்கப் புலவர்கள்
வருகையை யறிந்த வேணாவுடையான் ஊதியூர் மலைவழியாக
எதிர்சென்று புலவர்களை யழைத்துவந்து அவர்களுக்கு உண்டியும்
உறைவிடமும் கொடுத்துப் பாதுகாத்தான் என்பது வரலாறு.
பாண்டியன் தன்னாட்டில் வந்த பெரும் பஞ்சத்தால் புலவர்களை
யாதரிக்க முடியாதவனாய் வேற்று நாடுகளுக்குப் போய் வருமாறு கூறினான் என்பது இறையனார் களவியலுரை முதலியவற்றால் தெரிகிறது.
வேணாடர் வம்சம் இன்றும் காங்கயம் அருகே சங்கராண்டாம்பாளையத்தில் கொங்கு வெள்ளாளரில் 142 குலங்களில் ஒன்றான பெரிய குலத்தவராக பல குடும்பங்களாக அரண்மனையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சடையப்ப வள்ளல் என்பவர் யார்?
சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். சடையப்ப வள்ளல் 12ஆம் நூற்றாண்டில் கொங்கு வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பண்ணை குல வேளாளர் இவரின் சமாதி இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு கதிராமங்கலம் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.
வள்ளல் சடையப்பக் கவுண்டர் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்று கம்பர் கூறுவார். கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது.
சடையப்ப வள்ளலை யார் நாடி வந்தாலும் இல்லையென்று சொன்னது கிடையாது, கேட்பர்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் குணம் அவரிடம் இருந்தது.
கொங்கு நாட்டின் 18 குடிகள்:
கொங்கு மண்டல சதகம் 18 வகைக் குடியினரைப் பற்றிக் கூறுகின்றது .

Pallava-Kadava Dynasty-Kadai Kottam of Kongu |

மேலும் ஒரு சிறு குறிப்புக்காக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறியும் எங்கிருந்து வந்தன என்று பாருங்கள்:
சீனத்தினின்று கற்பூரம், கற்கண்டு, சீனக்காரம் முதலியனவும், சாலியினின்று கரும்பு, கராம்பூ திப்பிலி (பண்டகி) முதலியனவும்,மொலுக்காசினின்று அட்டிகமும் (சாதிக்காயும்), இந்தோனேசியா வென்னும் கீழிந்தியத்தீவுக்கணத்தினின்று கொடியீந்து என்னும் சவ்வரிசியும், மலையாவினின்று பாக்கு என்னும் அடைக்காயும், இலங்கையினின்று கருவாப்பட்டையும், ஆபுகானித்தானம் என்னும் காந்தாரத்தினின்றுபெருங்காயமும், அரபியாவினின்று அடப்பம் (வாதுமை),கொடிமுந்திரி, சுராலை (சாம்பிராணி) முதலியனவும், மேலையாசியாவினின்று கசகசா, அத்திரி (கோவேறுகழுதை) முதலியனவும், சின்ன ஆசியாவினின்றுகொத்துமல்லி, சீரகம், பெருஞ் சீரகம்,கொங்காரப்பூ (குங்குமப்பூ) முதலியனவும்,மெகசிக்கோ வினின்று மிளகாயும், தக்காளியும், எலிமிச்சம்பழம் (எலி மிச்சம் வைத்த பழம் - எலி உண்ணாது) அமெரிக்காவினின்று வள்ளி யென்றும், சருககரைவள்ளியென்றும் சொல்லப்படும் சீனிக்கிழங்கும், பிறவிடங்களினின்று பிறவும் வந்துசேர்ந்தன.
கொங்கு மண்டல சதகம் 18 வகைக் குடியினரைப் பற்றிக் கூறுகின்றது .
௧.கொங்க பிராமணர் (ஸ்மார்த்தர், ஆதி சைவர், குருக்கள்)
௨.கொங்க வெள்ளாளர்(தென்திசை/செந்தலை வெள்ளாளர், நாட்டுக்கவுண்டர்களும் இதில் அடக்கம்)
௩.கொங்க செட்டியார் (வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி)
௪.கொங்க பண்டாரம் (கோமானாண்டி/உவச்சாண்டி/பூவாண்டி)
௫.கொங்க புலவர் (புலவன்/பண்பாடி/தக்கைகொட்டி,கூத்தாடி)
௬.கொங்க கம்மாளர் (ஆசாரி) - (கொல்லன்/தச்சன்/தட்டான்/கருமான்/கல்தச்சன்)
௭.கொங்க குசவர் (குலாலர்)- (குயவர்/மண்ணுடையார்)
௮.கொங்க கைக்கோளர் (முதலியார்)
௯.கொங்க சாணார்
௰.கொங்க உப்பிலியர் (கற்பூர செட்டியார்)
௧௧.கொங்க கருணீகர் (கணக்குப்பிள்ளை)
௧௨.கொங்க நாவிதர்
௧௩.கொங்க வண்ணார்
௧௪.கொங்க ஊழியர் (தொண்டன்/குறவன்)
௧௫.கொங்க பள்ளர்
௧௬.கொங்க போயர்
௧௭.கொங்க பறையர்
௧௮.கொங்க மாதாரி
மனிதப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க பண்பாட்டுக் கூறாக 'வழிபாடு' அமைகிறது. வழிபாட்டின் தொன்மையான வடிவமாக 'நடுகல் வழிபாடு' உள்ளது. நடுகல்லைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று புறநானூறு 4 கூறும். கொங்கு நாட்டில் உள்ள நடுகல் வழிபாட்டின் மூலம் அதன் தொன்மை விளங்கும். கொங்கு எனும் சொல் இதிலிருந்துதான் வந்தது என்று ஒன்றைமட்டும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. கொங்கில் மறைந்த மயிலாபுரிப் பட்டணத்தின் அருகில் (அந்தியூருக்குக் கிழக்கில்) உள்ள ஊஞ்சவனத்தில் சங்ககால நடுகல் கோவிலைக்காணலாம். அத்துடன் தாளவாடிக்கு மேற்கில் சிக்கள்ளியில் சங்ககால, இடைக்கால, பிற்கால நடுக்கற்களை ஒரே இடத்தில் காணலாம். பர்கூர் மலையில் நூற்றுக்கணக்கான நடுகற்கள் உள்ளன
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட கால நாகரிகத்தை விளக்கும் தொல்பொருட்கள் கொங்கு நாட்டில் தான் மிகுதியாக உள்ளன. வரலாற்றை விளக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும், சிறப்பான ஓலைப் பட்டயங்களும், சிற்பச் செல்வமும், வாழ்வியல் வளமும் கொண்டு விளங்குவது கொங்குநாடு.
பன்னிரண்டு ஆறுகளில் 90 இடங்களில் அணை தேக்கி காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம்பெருக்கி, கோயிலோடு குடி மக்களுக்காக ஊர்கள் ஏற்படுத்தியவர்கள் கொங்கு மக்கள். தமிழகம் புகுந்த அன்னியர் அனைவரிடமும் முதல் தாக்குதல் பெற்றுத் துன்புற்றாலும் நாணல் போல் வளைந்து கொடுத்து மீண்டும் தலை நிமிர்ந்தது கொங்கு நாடு. இங்கு குளம் குட்டைகளிளெல்லாம் பொன்னெடுத்தனர். ‘ பொன்படு குட்டம்’ என்று கல்வெட்டுக் கூறும்.
தில்லைப் பொன்னம்பலத்திற்கு எத்துணையோ பேர் பொன்வேய்ந்தாலும் முதலில் பொன் வேய்ந்த ஆதித்தன் கொங்கு நாட்டுப் பொன்னைக் கொண்டு பொன் வேய்ந்தான் என்று சைவத் திருமுறை கூறுகிறது. பொன் நாடுதான் கொங்கு நாடாயிற்று. கொங்கு என்ற சொல்லுக்கே பொன் என்ற பொருள் உண்டு.
வீரத்திற்குக் கட்டியும் கூறும் நடுகற்கள் இங்கு மிகுதி. பேரரசுச் சோழர் பெரும்படையில் ‘கொங்க வாளார்’ படை தனிச் சிறப்பு வாய்ந்தது.
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் முதற்குடிமக்கள். இவர்களுக்கு மட்டுமே கொங்கு என்ற மொழி இன்றும் நிலைத்து இருக்கிறது. கொங்குத்தமிழின் பண்பையும், நாகரீக நடையையும் உலகறியும். இது காங்கி/ காங்கேய பாஷை எனவும் தமிழின் ஒரு மாசுபடாத வழக்காக, பண்பும், அறமும், ரௌத்திரமும் நிறைந்து இன்றும் தலைநிமிர்ந்து நிற்கின்றது
அளவு கருவிகட்குக் கூட ‘கொங்கு நாழி’, கொங்கு முறம்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்தவர்கள் கொங்கு மக்கள். கொங்கின் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் ஒரு புலவர்:
‘கொங்கதின் மண்ணே சுகம்தரும் அலால் – வேறு
கோருவோர் அறிவு குறையும்’
என்று பாடினார்.
கொங்குநாட்டைப்பற்றி மேலோட்டமாக பார்த்தாயிற்று. கொங்கர்களின் நெடும் வரலாறும், ஆட்சிகளும், பண்புகளும், சமுதாயமும், இலக்கியங்களும், புகழும், பெருமையும் தமிழைப்போல இந்தப்பக்கத்தில் இனி மணக்கும்.
மேலும் வரலாறே இல்லை என தனிப்பட்ட முறையில் என்னை சாடிய கூட்டம் இனி பொய்யுரைத்து அரசியல் செய்ய இல்லாது என்பதையும் உறுதிபட தெரிவிக்கின்றேன். ஆண்டவரெல்லோரையும் தனது தகப்பன் என்றுரைக்க அவர்கட்கு எப்படித்தான் மனம்வருகின்றதோ.
இறுதியாக, கொங்கன் உயிரை இழந்தாலும், உடமையை இழந்தாலும், உரிமையையும், கொங்கர் என்ற உணர்வையும் இழக்கலாகாது

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்
கொங்கு அழிந்தால் எங்கும் மழியும்
கொங்கு அழிந்தால் எங்கும் மழியும்
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக