|
18/12/17
| |||
‘ஈஷா யோகா மையம் சார்பாக ஜக்கிவாசுதேவ் நடத்திய (rally for rivers) நதிகளை மீட்போம் நெடும் பயணம், உண்மையில் நதிகளை மீட்பதற்கான திட்டம் கிடையாது. அது, மக்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்குவதற்கான திட்டம். ஜக்கிவாசுதேவ், சீக்கிரமே சிறைக்குச் செல்வார்' என்று இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்தர்சிங் தெரிவித்துள்ளார்.
நதிகளை மீட்பதற்காக ‘rally for river’ என்கிற பெயரில், கடந்த செப்டம்பர் மாதம் கோவையில் ஆரம்பித்து இந்தியா முழுவதும் நெடும்பயணம் மேற்கொண்டார் ஜக்கிவாசுதேவ். அதற்குப் பல்வேறு மாநிலத்தின் முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இன்னொரு பக்கம், மிஸ்டு கால் கொடுப்பதால் எப்படி நதிகளை மீட்கமுடியும்? என்று ஜக்கிக்கு எதிரான குரலும் வலுத்தன. இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியாவின் தண்ணீர் மனிதர் ராஜேந்தர் சிங், 'ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கிவாசுதேவ் நடத்திய rally for rivers-ல் என்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஈஷா யோகா மையத்தில் ஏழு நாள்கள் நான் தங்கியிருந்ததாக அவர்கள் தயாரித்துள்ள வாட்டர் பாலிசியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆவணத்தின் பல்வேறு இடங்களில் எனது பெயர் வருகிறது. இதுகுறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. ஒரே ஒரு நாள் மட்டும்தான் நான் ஈஷா யோகா மைத்தில் இருந்துள்ளேன். அப்போது, ‘ஓர் அரசாங்கம் நதிகளையும் நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் போதும், சீரழிக்கும்போதும் அதைத் தடுப்பதுதான் சாமியாரின் வேலை என்று ஜக்கிவாசுதேவிடம் கூறினேன். மற்றபடி எனக்கும் அந்த rally for rivers -க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி, வலுக்கட்டாயமாக கேட்டுக்கொண்டதற்காகவே நான் ஈஷாவுக்கு வந்தேன். அப்போது எனக்கு ஜக்கியைப் பற்றி எதுவும் தெரியவில்லை. இப்போதுதான் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிகிறது. நான் இதுவரைக்கும் நாடு முழுவதும் 9 ஆறுகளை மீட்டெடுத்திருக்கிறேன். மிஸ்டு கால் மூலம் நதிகளை மீட்டெடுப்பதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அது எப்படி சாத்தியம் என்பதும் எனக்குத் தெரியவில்லை.
இதுபோன்ற சாமியார்களுடன் அரசியல்வாதிகளும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்ள மனித உறவுகளைச் சிதைக்கின்றனர். 'rally for rivers'' என்பது நதிகளை மீட்பதற்கான திட்டம் கிடையாது. அது மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்குவதற்கான திட்டம். இந்தத் திட்டத்தைக் காட்டி பல மாநிலங்களில் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. அது மிகவும் தவறானது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ராம் ரஹீம் பாபா, அசாரம் பாபா உள்ளிட்ட நான்கு பிரபல சாமியார்கள் சிறைக்குச் சென்றிருக்கின்றனர்.
தங்கள் நிலங்களை ஈஷா அபகரித்திருப்பது தொடர்பாக பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடந்துள்ள வழக்கு வெற்றிபெற்றுவிட்டால், 5-வது சாமியராக ஜக்கி வாசுதேவ் சிறையில் இருப்பார். ஜக்கிவாசுதேவை அம்பலப்படுத்தாவிட்டால் ஆறுகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும். ஜக்கி வாசுதேவின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்துவேன். அதற்காக வரும் 19-ம் தேதி, கோவையில் ’தர்மம் காப்போம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கருத்தரங்கில் எனது பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள், ஈஷா மையத்தில் மர்மமான முறையில் சிலர் இறந்து போயிருப்பது, சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டிருப்பதாகப் பொய்யான தகவலைப் பரப்பியது என ஈஷா மையத்தின் மேல் உள்ள பல குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தப்போகிறோம்' என்றார்.
#சாமியார்ப் பயலுக எத்தனை வேடம் போட்டாலும்
அது கொள்ளை அடிக்கவே !

பொய் போலிச்சாமியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக