திங்கள், 19 மார்ச், 2018

நாட்காட்டி புத்தாண்டு 22.12.2017 வானியல் தக்கார் அவையம்

aathi1956 aathi1956@gmail.com

8/12/17
பெறுநர்: எனக்கு
  மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்
16-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் - 50           நாள்: 07.12.2017
தொடர் நாள்: 341
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் 12-வது முழுநிலவு 03.12.2017 அன்று தோல்வியுற்றுக் கடந்தது. அதன் தோல்வியை உறுதி செய்ய மேலும் இரண்டு நாட்கள் காத்திருந்து அறிகுறிகள் சரிபார்க்கப்பட்டன. இத்துடன் இவ்வாண்டில் மொத்தம் 5 முழுநிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் முந்தித் தோன்றி தோல்வியைத் தழுவியிருக்கின்றன. 7 முழுநிலவுகள் முறை முற்றி வெற்றி பெற்றுள்ளன.
இன்னும் இவ்வாண்டின் 12-வது மறைநிலவும் 12-வது மூன்றாம் பிறையும் கணக்கிடப்பட வேண்டும். அதற்காக 15+3=18 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஏனெனில் மறைநிலவுகள் தடுமாறுவது இல்லை. முறையான மறைநிலவுகளை முறையாகச் செவ்வாய்க்கிழமைகளில் பொருத்தி விளக்கேற்றும் வாழ்வியல் ஒழுகல் ஆறுகளைத் தனி அறிவுத்துறையாக வளர்த்தெடுக்க மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் வகை செய்திருக்கிறது. அதன் விளைவுகள் உரிய வேளையில் வெளிப்படும்.
12-வது முழுநிலவு 03.12.2017-ல் கடந்து விட்டபடியால் அந்த நாளைத் தவிர்த்து அதனுடன் 18-நாட்களைச் சேர்த்து எண்ணி இவ்வாண்டின் மொத்த நாட்களின் கணக்கை முடித்து விடலாம். அவ்வகையில் இவ்வாண்டு 21.12.2017-அன்று முடிந்து போக இருக்கிறது.

நிழல் எல்லை:-
    இவ்வாண்டின் இறுதி நாளும் மூன்றாம் பிறை நாளும் 21.12.2017 ஆகும். அன்றே தென்செலவின் எல்லை நாளும் ஆகும். அன்று நண்பகலில் நிழல் விலகல் முறையாகக் கணக்கிட்டு ஆவணப்படுத்தப்படும். இறுமுறை, அடி இற்றன்ன அளவு, அவச்சாயை ஆகியவை ஆவணப்படுத்தப்படும்.
    இம்முறை 01.01.2017-ல் சரியாக வளர்பிறை 4-ஆம் நாளில் தோன்றிய ஆங்கில ஆண்டு, தமிழ் நாட்காட்டியில் தற்செயலாகப் பொருந்தி 21.12.2017-ல் விறைப்பாக விலகிச் செல்வதை அறிந்து கொண்டுள்ளோம். ஆனால் மரபு வழிப்பட்ட தமிழ் ஆண்டு மிகச் சரியாக 355 நாட்களில் கணக்கை முடித்துக் கொண்டு திரும்ப இருக்கிறது. இது பழைய மரபின் புதிய புரிதல் ஆகும்.
    01.01.2017-ல் வடக்கு நோக்கித் திரும்பிய கதிரவன் மீண்டும் 22.12.2017-ல் வடக்கு நோக்கித் திரும்ப இருக்கிறான். இது வாய்ப்பாடு. நிழல் திரும்பிய பிறகு வரும் வளர்பிறை 4-ஆம் நாளே ஆண்டின் தொடக்கம். இது கண்டிப்பான வாய்ப்பாடு
    இயற்கையோடு இயைந்த இந்த மரபு வழிப்பட்ட ஆண்டுக் கணக்கு முறையை முழுமையாக மீட்டெடுத்துத் தமது வாழ்வியல் ஒழுங்கமைவுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள உலகத் தமிழர்களுக்கு மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அறைகூவல் விடுக்கிறது.

பதிவுகள் 50:-
    12.12.2014-ல் தனது முதல் பதிவைத் தொடங்கிய மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் தொடர்ந்து கலந்து பேசிக் கருத்துப் பரிமாற்றம் செய்து 07.12.2017 வரை 50 பதிவுகளை அறிவுலகின் கனிவான பார்வைக்கு முன் வைத்திருக்கிறது. இவற்றைத் திருத்திச் செப்பமாக்கிட முன் வருவோரை வணங்கி வரவேற்கிறது.  

இனிய தமிழ்ப் புத்தாண்டு:-
    22.12.2017 அன்று காலைக் கதிரவன் துயில் எழும் வேளையில் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.
    இவ்வாறான ஓர் அறிவிப்பை முரசறைந்து அரசே அறிவிக்க வேண்டுமாயின் அதற்கு முன்பாக நிலவுகளை முறை முற்றச் செய்யும் அறம் பொருந்திய அரசு அமைந்திட வேண்டும்.
    மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் பிழை அறிவிப்பை மட்டுமே வல்லுநர்களின் மதிநுட்பத்தின் அளவுக்கேற்பச் செய்து வருகிறது.
    தமிழ்ப் புத்தாண்டுத் தேடல் பொது வெளியில் பேசப்பட்ட சில ஆண்டுகளில் அது சீராக வளர்ந்து வருவதையும், அரசியல் முகப்பை அது கட்டமைப்பு செய்கிறது என்பதையும், அது மரபு வழிப்பட்ட தமிழ்த் தேசிய அரசியலே என்றும் அறிஞர்களும் பெரும் பேராசிரியர்களும் அமைதியாக வளரவிட்டுத் தள்ளி நின்று தவம் இயற்றுகிறார்கள்.
    சார்பற்ற நிலையில் ஆய்வுகளையும், உயர் ஆய்வுகளையும் எதிர்கொண்டு தமிழர்களின் தனித்தன்மையான தமிழ்ப் புத்தாண்டு அரசத் தகைமையில் கொற்றம் கொள்ள உலகத் தமிழினம் ஓர்மையுற வேண்டும்

ஏறு தொழூஉப் புகுத்தல்:-
    தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளில் ‘ஏறு தொழூஉப் புகுத்தல்’ எனும் மஞ்சு விரட்டு நடத்தப்படுவது தமிழர்களின் அரச மரபு. ஆண்டு நாட்களில் சரிவு ஏற்பட்டுள்ள போதும் வீட்டுப் பொங்கலிட்டு அதே நாளில் மஞ்சு விரட்டு நடத்துவது தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளையும் ஆண்டின் முதல் மஞ்சு விரட்டையும் புத்துயிர் பெறச் செய்யும்.

நாட்காட்டியின் பற்சக்கரம்:-
    மாதச் சுழற்சியில் காலத்தைக் கவ்விப் பற்றும் மாதத்தின் முதல் நாள் என்பது வளர்பிறை நான்காம் நாள். ஒவ்வொரு மாதத்தையும் வளர்பிறை 4-ஆம் நாளில் பொருத்தித் தொடங்கும் போது தமிழ்ப் புத்தாண்டு மிகச் சரியாகப் பொருந்தும்.

22.12.2017 – தமிழ்ப் புத்தாண்டு, வீட்டுப் பொங்கல், ஏறுதொழூஉப்புகுத்தல்.
இது தமிழ்த் தேசியத் தமிழ்ப் புத்தாண்டு.

ஆண்டின் முதல் நாள் 01.01.2017

ஆண்டின் கடைசி நாள் 21.12.2017
மொத்த நாட்கள் - 355

   இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் வெளியீடு
___---ooo000OOO000ooo---___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக