|
12/12/17
| |||
Last updated : 18:40 (09/12/2017)
இலங்கை மீனவர்கள் கரை ஒதுங்கிய மர்மம் பற்றி அதிர்ச்சித் தகவல்!
கடலில் படகு பழுதானதால், இலங்கை மீனவர்கள் மூவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரம் கடலோர கிராமத்தில் இன்று கரை ஒதுங்கினார்கள். அவர்கள் கரை ஒதுங்கியதில், ஒரு க்ரைம் ஸ்டோரியே அடங்கியிருக்கிறது.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த கடகராஜன், ஸ்ரீமுருகன், விஜயேந்திரன் என்ற மூவர், தாங்கள் வந்த படகு பழுதானதால் கரை ஒதுங்கியதாகக் கூறியபோது, அரை மயக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்த கிராம மக்கள், கீழையூர் கடலோரக் காவல் நிலையத்துக்குத் தகவல் தரவே, அவர்களை அழைத்துச்சென்று விசாரித்துவருகின்றனர்.
Advertisement
இவர்களது வருகையின் நோக்கம் என்ன? நம்மிடம் விவரிக்கிறார் விஷயமறிந்த ஒருவர். ''வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர், பெரிய கஞ்சா வியாபாரி ஆவார். இவருக்கு, இலங்கையைச் சேர்ந்த இந்த மூவரும்தான் கஞ்சா சப்ளை செய்பவர்கள். நெடுங்காலமாக நடந்துவந்த கடத்தல் பரிவர்த்தனையில், வாங்கிய கஞ்சாவுக்குரிய பெரும் தொகை ஒன்றைத் தராமல் முனீஸ்வரன் இழுத்தடித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த இலங்கைக்காரர்கள், சில தினங்களுக்குமுன் புஷ்பவனத்துக்கு வந்து முனீஸ்வரனைச் சந்தித்து கடுமையாக மிரட்டி பணம் கேட்டுள்ளனர். ''ஒருவாரத்தில் பணம் தந்துவிடுகிறேன்'' என்று முனீஸ்வரன் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்கள் முனீஸ்வரனை நம்பாமல், அவர்களுடன் இலங்கையிலிருந்து வந்த சிறீமுருகன் என்பவரை முனீஸ்வரன் வீட்டிலேயே தங்கவைத்துவிட்டு, அடுத்த வாரம் வந்து பணத்துடன் நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்றுக்கூறிச் சென்றுவிட்டனர்.
ஆனால், சிறீமுருகன் பாஸ்போர்ட், விசா இல்லாமல் கள்ளத்தனமாக வந்து தங்கியது வேதாரண்யம் போலீஸாருக்குத் தெரிய வரவே, சிறீமுருகனையும் அவனுக்கு அடைக்கலம் தந்த முனீஸ்வரனையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த இருவரும் இரு தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்தச் செய்தி, இலங்கைக்காரர்களுக்குக் கிடைக்கவே, அவர்கள் பணத்தை முனீஸ்வரனிடமிருந்து வசூலித்துக்கொண்டு, சிறீமுருகனையும் அழைத்துச் செல்ல வந்தபோதுதான் எதிர்பாராதவிதமாக படகு பழுதானதால் போலீஸில் சிக்கியுள்ளனர். இவ்வளவு நடந்துள்ள போதிலும், போலீஸார் கஞ்சா மேட்டரை அமுக்கி, படகு பழுதினால் வருகை என வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகத் தெரிகிறது'' என்று மர்மத்தை உடைத்தார்.
இதுபற்றி நாகை மாவட்ட எஸ்.பி., தேஷ்முக் சஞ்சை சேகரிடம் பேசினோம், ''இலங்கையைச் சேர்ந்த மூவரைப் பிடித்து மரைன் போலீஸார் விசாரணைசெய்துவருகிறார்கள். அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்த பிறகே, அது எங்களுக்கு மாற்றலாகி வரும். அதன்பிறகே நாங்கள் விசாரணைசெய்ய முடியும். இதுதான் தற்போதைய நிலை'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் RAGHAVAN M

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக