|
4/12/17
| |||
Kumarimainthan
உலகம் அறியாத புதுமை!
குமரி மாவட்டத்தில் சூறாவளி அல்லது புயல் என்பது அந்த மாவட்டத்தை நன்கு அறிந்தவர்களுக்க
ு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும், ஏனென்றால் இதுவரை அங்கு புயல் என்று சொல்லுமளவுக்கு வலுவான சுழல் காற்று வீசியதில்லை. அந் நிலப்பரப்பின் கிடப்பு அத்தகையது. தெற்கிலும் சிறிது தொலைவுக்குக் கிழக்கிலும் மேற்கிலும் கடல் தவிர எஞ்சிய மூன்று திசைகளிலும் மேற்குத்தொடர்ச்சி மலை காவலரணாகக் காத்து நிற்கிறது. குமரி மாவட்டத்தின் நன்செய் நிலப்பரப்புக்கு நாஞ்சில் நாடு என்பது பெயர். இப்பரப்புக்கு மலையிலிருந்து வரும் மழைநீரைப் பிடித்து வைப்பதற்காக அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள்(அவற்றில் ஒரு சென்று பரப்புடன் ஒரு சென்று புரவு – ஆயக்கட்டு உள்ள குளங்களும் அடக்கம்) தவிர பாண்டிய அரசர்களும் பிற்காலத்துத் திருவிதாங்கூர் அரசர்களும் அமைத்த அணைகளும் வாய்க்கால்களும் ஆண்டுக்கு இரண்டு பூ(போகம்) நெல் விளைச்சலைத் தந்துகொண்டிருந்தது, தந்துகொண்டிருக்கிறது. இந்த நிலங்களை அகப்பற்று(பத்து) நிலங்கள் என்பது மரபு. பின்னர் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து வழங்கப்பட்ட நீரைச் சுமந்துவந்த வாய்க்கால்களால் நன்செய் ஆகிய நிலங்களை காட்டுப்பத்து என்பர். குளத்து மதகுகளை அடுத்து மாடு இறங்கினால் புதைந்து போகும் அளவு சதுப்பு நிலம் போல் மாறிவிட்டிருக்கும் நிலங்களைப் படுவப்பத்து(படிகைப் பற்று → படுகைப் பத்து → படுவப்பத்து) என்பர். விதைக்கும் முன் எருமையைக் கட்டி பரம்படிப்பு(பரம்படிப்ப என்பதை மரமடித்தல் என்று கூறுவர்) மட்டும் செய்வர். நாஞ்சில் நாட்டுக்குத் தெற்கில் உள்ள நிலப்பரப்புக்கு புறத்தாய நாடு, யாரும் உரிமை கோராத நாடு, அதாவது வாழத் தகுதியற்ற நாடு என்ற பெயர் இருந்திருக்கிறது.
நாஞ்சில் என்ற சொல்லுக்கு கலப்பை என்பது ஒரு பொருள். அங்குள்ள வேளாண்மையைக் குறித்து இப்பெயர் வந்திருக்கலாம். நாஞ்சில் என்பதற்குக் கோட்டை என்ற பொருளும் உள்ளது. கோட்டை போல் மூன்று திசைகளிலும் மேற்குத்தொடர்ச்சி மலை காத்து நிற்பாலும் இப்பெயர் வந்திருக்கலாம். இவ்விரண்டு பொருட்களையும் தருவதால் அந்நிலத்துக்குப் பெயரிட்டவர்கள் இச்சொல்லைத் தேர்ந்திருக்கலாம். இந்த மலைத்தொடரில் இருக்கும் ஆரல்வாய்மொழித் தொண்டு(திறப்பு – இடைவெளி) எனுமிடத்தில் நாகர்கோயில் – திருநெல்வேலிச் சாலை மலைத்தொடரைக் கடக்கிறது. குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த பின் பல ஆண்டுகளுக்கு இந்தத் தொண்டில் ஒரு புறக்காவல் நிலையம் இருந்தது. இந்தத் தொண்டைத் தாண்டும் ஒவ்வொரு ஊர்தி ஓட்டுநர் அல்லது நட்டத்துனர் இந்தப் புறக்காவல் நிறையத்தில் இறங்கிக் கையெழுத்திட்ட பின்தான் குறுக்கே இருக்கும் கழி உயர்த்தப்படும். இப்போது பழைய புறக்காவல் நிலையம் அகற்றப்பட்டுவிட
்டது. ஒரு சிறு காவல் சாவடியும் கழியும் இருந்தாலும் கையெழுத்துப் போடும் முறை விலக்கப்பட்டுள்ளது. அதே போல் நான்கைந்து கிலோ மீற்றர் கிழக்கே இருக்கும் காவல்கிணறு என்ற இடத்தில் சாலையின் குறுக்கிலிருக்கும் கழியை உயர்த்தி அங்கிருக்கும் காவலர் வழி விடுவார். கிணற்றில் துலாக்கோல் போல் உயர்ந்து இறங்கும் இந்தக் கழியை வைத்துத்தான் காவல்கிணறு என்ற பெயர் இந்த ஊருக்கு வந்திருக்குமோ என்பது என் ஐயம். இந்தப் புள்ளியில் குமரி மாவட்ட எல்லை முடிந்து சாலை நெல்லை மாவட்டத்தினுள் நுழைகிறது.
இந்த மலைமீது தொன்மையான ஒரு கோட்டையின் தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர் ஒரிசா பாலு கூறுகிறார். மன்னன் மார்த்தாண்டவர்மன் அமைத்தது இந்தக் கோட்டை என்ற கூற்றை அவர் மறுக்கிறார். ஆக, மொத்தத்தில் படையெடுப்புகளிலிருந்து இந்த மலையும் கோட்டையும் காக்காவிட்டாலும் புயல்களிலிருந்து இம்மாவட்டத்தைக் காலங்காலமாக உறுதியாகக் காத்து வந்திருக்கிறது என்பது உறுதி. அப்படியானால் இப்போது இந்த மலைக்கும் கோட்டைக்கும் என்ன நேர்ந்தது? எதனால் அது தன் காவல் வலிமையை இழந்தது? இதைப் பற்றி ஆய்வோம்.
தொடரும்……

2 டிசம்பர், 01:48 PM · பொது
Mathi Vanan மற்றும் 42 பேர்
முந்தைய கருத்துகளைப் பார்க்கவும்…
Gabriel Raja
நாயக்கர் காலத்தில் வேணாடு - பாண்டிய நாட்டு எல்லையாக காவல்கிணறு பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இளைப்பாறி தண்ணீர் பருக பெரிய கிணறு மற்றும் கோவில் இன்றும் உள்ளது.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி, 02:08 PM க்கு
Suriya Prakash
இது விந்தையாகத்தான் உள்ளது. காற்று திசைமாறி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 25 வருடங்களில் இதுபோல் நிகழவில்லை என்றும் கூறப்படுகிறது..
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி, 05:36 PM க்கு
Kumarimainthan
என் அகவை 79 நான் என் வாழ்நாளில் இது போல் கண்டதில்லை.
5 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி · சனி, 05:38 PM க்கு
Kumarimainthan பதிலளித்தார் · 2 பதில்கள்
Mahes M
Nanchil - 4 types land get United in one place..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி, 07:14 PM க்கு
Mahes M
Kurinchi, mullai, marutham, neythal.... U can't see these 4 lands in one place.... Thats y it's called as Nanchil
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி, 07:16 PM க்கு
Mahes M
Nanchil given Valluvar and avvaiyar to this world....if u understand the history of nanchil then only you can able to understand tamilans history clearly...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி, 07:18 PM க்கு
Mahes M பதிலளித்தார் · 19 பதில்கள்
Kumarimainthan
குமரி மாவட்டத்தில் குறிஞ்சி, அடுத்து மருதம் அப்புறம் முல்லை அடுத்து நெய்தல் என்ற அமைப்புதான் உள்ளது. பாலை கிடையாது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பாலை கிடையாது. ஆனால் குறிஞ்சியை அடுத்து முல்லை உள்ளது. அடுத்து மருதமும் நெய்தலும். நான்கு என்பதற்கும் நாஞ்சில் என்பதற்கும் இருக்கும் தொடர்பைவிட அந்த நிலத்தின் அமைப்பு பொருந்துகிறது என்பதோடு நாஞ்சில் நாடு குமரி மாவட்டத்தின் ஒரு சிறு பகுதி என்பதையும் மறந்துவிட்டீர்கள் போலும்.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி, 07:21 PM க்கு
Mahes M
Paalai eppadi sir nanchil la varum....Paalai paarkanum na Rajasthan than poganum nu ellorukum theriyum sir....nanchil veru kumari veru illai...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி, 07:24 PM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.co.
பழங்காலத் தமிழகம் - நாடுகள் மற்றும் சிற்றரசுகள்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 27 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில் நாட்டைச் சொல்வார்கள். உத்தேசமாகச் சொன்னாலும் இன்று நாஞ்சில் நாடு என்று வழங்கப்பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும்.
மண்டலம் கன்னியாகுமரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக