வெள்ளி, 16 மார்ச், 2018

மண்டைக்காடு கலவரம் பின்னணி மீனவர் நாடார் மோதல் மதம் கிறித்துவர்

aathi1956 aathi1956@gmail.com

25/11/17
பெறுநர்: எனக்கு
Kumarimainthan
தமிழகத்தின் முதல் எதிரிகள் நாடான்கள். – 13
குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் நகராட்சியின் தெற்கு எல்லையில் இருக்கும் ஊரான இருளப்பபுரம் என்ற ஊரிலிருந்து சிலர் அரிட்டம் என்ற பெயரிலான சாராய வகை ஒன்றைக் காய்ச்சி விற்றுப் பெரும் பொருள் ஈட்டினர். இதற்குச் சுவர் முட்டி என்பது குடியர்களிடம் வழங்கிய பெயர். இதைக் குடித்தவர்களின் கண்பார்வை மங்கி எதிரில் இருக்கும் பொருட்கள் தெரியாமல் எதன் மீதாவது மோதி விழுந்துகிடப்பர் என்பதால் இந்தப் பெயர். அரிட்டம் என்ற பெயர் தமிழ் மருத்துவத்திலுள்ள ஒரு மருந்துக் குடிநீர். அதைப் பயன்படுத்தி இந்தச் சாராயத்தை விற்றனர். பணம் சேர்ந்ததும் அவர்களிலொருவர் தேவாரம் திருவாசகம் போன்ற பாடல்களைப் படித்து ஊர் மக்களிடம் பாடி இளைஞர்களைச் சேர்த்தார். அம்மன் கோயில் அடிப்படையிலமைந்த அவ்வூர் நாடான் பதவியை மரபு வழி வந்த நாடானிடமிருந்து பறிக்க முயன்றார். அது அடிதடி, கொலை முயற்சிகள் மட்டுமின்றி மக்கள் நெருக்கமாக முண்டியடித்து வில்லுப்பாட்டுக் கேட்டுக்கொண்டிர
ுந்த கோயில் மண்டபத்தில் தீவைத்துப் பல உயிர்கள் பலியாகும் வடிவத்தையும் எடுத்தது. ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்து அரிட்ட வாணிகர் சொந்தமாக ஒரு சிவன் கோயிலைக் கட்டி அதற்கு ஆகம வழியில பார்ப்பனரை வைத்து வழிபாடு, திருவிழாக்கள் என்று வெளுத்துவாங்குகிறார்கள். இந்த நிகழ்முறை ஒவ்வோர் ஊரிலும் செயற்பட்டு புதிய பணக்காரர்கள் ஊர்க்கோயில்களைக் கைப்பற்றவும் கோயிலை எடுத்துக்கட்டி கோபுரம் மேற்கட்டு(விமானம்) என்று ஆகமக் கோயில் வடிவத்துக்கு மாற்றுவதும் வழக்கமான வில்லுப்பாட்டுக் கொண்டாட்டத்துக்கு முன்னோட்டமாக பார்ப்பனரை வைத்து சில நாட்கள் சமற்கிருதத்தில் மந்திரம் ஓதுவதுமாக மாற்றமடைந்துவிட்டது. இது நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் கோயில்களிலும் நிகழ்ந்துவிட்டது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவிவருகிறது. இது அனைத்துக்கும் முன்னோடியாக நடைபெற்றதுதான் 1982இல் நடைபெற்ற குமரி மாவட்டக் கலவரம்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மீனவர்களின் விற்பனைப் பரப்பு தலையில் சுமந்து செல்லும் தொலைவுக்கே இருந்தது. மிதி வண்டி வந்த பின் 20 மைல்கள், அதாவது 32 கி.மீ,க்கள் வரை அது விரிவடைந்தது. சிறு சரக்கிகள் வந்தபின் பனிக்கட்டிப் பாதுகாப்புடன் எங்கும் கொண்டுயசெல்லும் வசதி வந்து மீனவர்களின் பொருளியல் அடித்தளம் விரிவடைந்தது. அதே நேரத்தில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை அடுத்த இராமன்புதூர் என்ற இடத்தில் நாடார்களின் குடியிருப்பிலிர
ுக்கும் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி இயக்கிய பேருந்தில் மீனவர் குடியிருப்பிலிருந்து மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டு செல்லும் வசதியால் பலர் கல்வி வாய்ப்பைப் பெற்றனர். அமைச்சர் லூர்தம்மாள் சைமனும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உதவியுள்ளார். இது போன்ற கல்வி வளர்ச்சிப் பணிகள் பிற மாவட்ட மீனவர்களுக்குத் தமிழகத்தில் கிடைக்கவில்லை.
இந்தக் காலகட்டங்களில் மீனவர்கள், முகாமையாக மீன் கடகங்களை(பனையோலைப் பெட்டிகளை) தலையில் சுமந்து விற்ற பெண்கள் வசதியான நாடான் குடும்பங்களுக்க
ு காசு வாங்காமல் மீன் கொடுத்து அவர்களின் நிலங்களில் விளைந்த நெல், தேங்காய், கருப்புக்கட்டி, பயிறுகள், மாம்பழம், முந்திரிப்பழம், முந்திரிக்கொட்டை, பலாப்பழம் என்று அனைத்தையும் “உயிரம்” எனும் முறைப்படி பெற்றுவந்தனர். அவர்களுக்கு உணவு விடுதிகளில் எதுவும் வழங்கமாட்டார்கள். பேருந்துகளில் கருணாநிதி மீன் பேருந்துகள் அறிமுகம் செய்யும் வரை மீன் கடகத்துடன் ஏற்றமாட்டார்கள். இதிலிருந்து படிப்படியாக அவர்கள் மேல்நோக்கி வந்துகொண்டிருக்க ஆனால் அவர்களை அடுத்து உள்நாட்டில் வாழ்ந்த நாடார்கள் அவர்களை முன் போலவே நடத்தியது இளைய தலைமுறையினருக்க
ு ஆத்திரத்தை மூட்டியது. அதே வேளையில் அயல்நாட்டுப் பணத்துடனும் விடுதலை இறையியல் ஊடுருவலுடனும் இடைவிடாத நற்செய்திக் கூட்டங்கள் நாள்தோறும் குமரி மாவட்டத்தின் மூலை முடுக்குகளில் நடந்துகொண்டிருந
்தன. படித்த இந்து நாடார் இளைஞர்களுக்கு வெளிநாட்டுப் பணத்தில் இயங்கும் கிறித்துவத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் எளிதாக வேலை கிடைத்தது. அங்கு அவர்களைப் பெண்களோடு இணைத்துப் பணி கொடுத்தனர். இதைப் பயன்படுத்தி அவ்விளைஞர்களை மதமாற்றி அப்பெண்களை மணக்க வைப்பது நிகழ்ந்துவந்தது. இது தங்கள் பெண்களைப் படிக்க வைத்து மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்த பணக்கார இந்து நாடார்களுக்கு ஆத்திரமூட்டியது. இந்தக் காலகட்டத்தில் விவேகானந்த கேந்திரத்தின் வழிகாட்டலுடன் இந்து முன்னணி அமைப்பு நாடார் இளைஞர்களிடையில் பரவியதுடன் சாமிதோப்பு பாலபிரசாபதியின் அரசியல் நுழைவுத் திட்டத்தால் பிள்ளையார் சதுர்த்தி அன்றும் வைகுண்டர் பிறந்தநாளன்றும் பெரும் ஊர்வலங்கள் நடத்தி மாவட்டத்தைக் கலக்கினார்கள். அந்தப் பின்னணியில்தான் 1982ஆம் ஆண்டு மண்டைக்காட்டம்மன் திருவிழாவின் போது மீனவர்களுக்கும் காவல்துறையினருக்குமான ஒரு மோதலை விடுதலை இறையியல் சாமியார்களின் ஒருங்கிணைப்பின் பின்னணியில் ஈத்தாமொழி என்ற ஊரில் நாடார்களின் வீடுகளில் தீவைத்தும் தோப்புகளில் தேங்காய்களையும் குரும்பைகளையும் வெட்டி அழித்தும் மீனவர்கள் பெரும் தாக்குதல் நடத்தினார்கள். அதில் அந்த ஊரில் மணமுடிக்கப்பட்டிருந்த தாணுலிங்கம் நாடாரின் மகள் வீட்டிலும் சில இழப்புகள் நேர்ந்தன. இதைக் கண்டித்து முன்னாள் அரசியல்வாணரான அவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். இதைப் பார்த்ததும் அது வரை இந்து முன்னணிக்கு நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஒருவரைத் தலைவராக்க வேண்டும் என்று நினைத்திருந்த விவேகானந்த கேந்திரத்தினர் இவரைப் பிடித்துத் தலைவராக்கினர்.
தொடரும்…..
23 நவம்பர், 01:44 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக