நாய் நடுகல் பற்றி விரிவான பதிவு மெய்யியல் கல்வெட்டு மனிதநேயம் மாந்தநேயம் விலங்குநேயம்
aathi tamil <aathi1956@gmail.com> 8 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 2:43
பெறுநர்: aathi tamil <aathi1956@gmail.com>
seshadri sridharan
5/13/12
Other recipients: ssesh...@gmail.com
Translate message to English
நடுகற்கள் கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு மக்கள் மொழி
எளிய மக்கள் வரலாறு மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை ' தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ' என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.
நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த் தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன் குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை எண்ணுக.
ஒரு வேந்தனுடைய வெற்றியைத் தீர்மானிகக அவன் உடைய நிலைப்படை மட்டும் அல்லாது மன்னர், சிற்றரசர், வேள், கிழார்கள் நல்கும் துணைப்படை உதவியும் இன்றியமையாத இடம் பெற்று இருந்தது. இதனால் வேந்தனுடைய ஆட்சிப் பரப்பில் அடங்கிய நிலம் ஊர், நாடு, கோட்டம், மண்டலம் என பிரிக்கப்பட்டு முறையே கிழார்கள், வேள், சிற்றரசர், மன்னர் அல்லது மாமன்னர் என்போரால் ஆளப்பட்டன. இவர்கள் தத்தம் நிலைக்குத் தக்கவாறு தம் படைக்கு ஆள் சேர்த்து பயிற்சி அளித்தும், படையை ஒழுங்கமைத்தும், பேணியும் வரவேண்டும் என்பது பொறுப்பு. இப்பொறுப்பிற்காக இவர்களுக்கு வேந்தனோ மாமன்னனோ பணம் ஒதுக்குவதில்லை மாறாக இவர்கள் ஆளும் பகுதியில் வரி திரட்டி அதில் ஒரு பங்கைத் தம் படைப் பேணலுக்குச் செலவிட்டு இன்னொரு பங்கைக் கப்பமாகத் தன் மேல்ஆட்சியாளனுக்கு செலுத்த வேண்டும் என்பது ஒரு வழிவழி உடன்பாடு.
எனவே நிலமும் கப்பத் தொகையும் படைப் பேணலுக்கு ஒரு முகாமையான பங்கைப் பெற்றிருந்தன என்பது தெளிவு. இதில் முறண் ஏற்படும் போது மேலாட்சியாளன் தூண்டுதலில் கீழ் உள்ள இரு அதிகார நிலையினர் இடையே போர் மூளுகின்றது. அதே நேரம் வெளியே இருந்தும் பிற வேந்தரால் போர் திணிக்கப்படுவதும் உண்டு. நிலக்கட்டுப்பாடு ஆதிக்கமே பெரும்பால் போருக்கு வழிகோளின எனலாம். ஏனெனில் அதுவே படைக்கு வேண்டிய செல்வத்தை உண்டாக்க வல்லது. இதனால் படைத் தொடர்பான ஆள்திரட்டல், பேணல் ஆகிய தகுதிகளை நோக்கியே சிற்றரசர் (அரைசர்), வேள், கிழார் என்போர் மன்னர்களாலும், வேந்தர்களாலும் அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டனர். பலவேளைகளில் புதிதாக அப்பொறுப்புகளில் அவர்கள் அம்ர்த்தப்பட்டனர் என்றே கொள்ளலாம். இந்த தகுதி கருதியே வேட்டுவர், புலையர், வணிகர் பரவர் என குமுகத்தின் எல்லாத் தரப்பினரில் இருந்தும் தக்கவர் இப்பதவிகளில் இருந்ததை நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. தீண்டாமையும், குமுக ஒடுக்குமுறையும் விசயநகர ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் வரை ஆழமாக வேர் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.
நாடுபிடிச் சண்டைக்கு ஆநிரைப் போர் ஒரு தொடக்கச் சடங்காக வழவழி மரபாக மேற்கொள்ளப்பட்டு வந்து உள்ளது. தொறு கவரும் வெட்சிப் போர் தரப்பினரிலும், தொறு மீட்கும் கரந்தைப் போர் தரப்பினரிலும் பல வீரர்கள் மாண்டனர். இப் போர்களில் வீர சாவடைந்த மறவர்களை சிறப்பித்தும் தெய்வமெனத் தொழவும் அது பொருட்டு மாண்ட வீரரின் உறவினர்களால் அல்லது ஆண்டைகளால் அவர் நினைவில் நிறுத்தப்பட்டவையே நினைவு கற்கள் எனும் நடுகற்கள். மாண்டவர்க்கான இந்த சிறப்புச் செய்கையானது அடுத்து வரும் தலைமுறையினரை படையின் பால், போரின் பால் ஈர்க்க உதவுவதற்கே எனப் புரிந்து கொள்ளலாம். மாண்ட மறவருக்கு நெய்த்தோர் பட்டி எனும் நிலக்கொடையும் வழங்கப்பட்டன. இந்நடுகற்களில் ஒரு நடைமுறைக்காவே (formality) வேந்தனின் பெயரும் அவன் ஆட்சி ஆண்டும் குறிக்கப்பட்டன. பெரும்பாலும் வேந்தனுக்கு இதில் நேரடித் தொடர்பு கிடையாது. நடுகல்லின் ஏனைய செய்திகள் யாவும் எளிய வீரனைப் பற்றியவை. இக் கல்வெட்டுகள் நிகழ்ந்த போரின் காட்சிகளை உள்ளபடியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துபவை. இதில் விவரிக்கப்படும் வரலாற்று நிகழ்வு எளியோருடைது, படிக்கப் படிக்க தீஞ்சுவை ஊட்டுவது.
தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி தொடங்கி அடுத்தடுத்து வந்த அரசர்கள், சமணர், பௌத்தர், பிராமணர், நாடு பெயரும் வணிகர் என 3% அளவேயான மக்கள் தமிழுடன் பிராகிருத சமற்கிருத சொற்களைக் கலந்து செயற்கையான ஒரு மொழியை உண்டாக்கி மற்ற 97% அளவுள்ள மக்களுக்கு விளங்காத அந்த செயற்கை மொழியில்தான் செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓலை ஒப்பந்தங்கள் என எல்லா ஆவணங்களையும் வெளியிட்டனர். அம் மொழியிலேயே மத புராண இலக்கியங்களையும் உண்டாக்கினர். இந்த செயற்கை மொழி இன்னும் கீழ்மட்டத்தில் உள்ளோரின் வழக்கு மொழியாகப் பரவுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆயின. அதுவரை அந்த 97% மக்கள் தம்முன்னோர் பேசிய பேச்சு வழக்கு மொழியையும் அதன் இலக்கிய நடையையுமே கைக்கொண்டனர். ஆயினும் மக்கள் மொழியின் தன்மை, நிலை குறித்து அறிய அம்மக்கள் நிறுத்திய நடுகல் கல்வெட்டுகள் மட்டுமே சான்றாக உள்ளன. இவ்வாறான கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிகச் சிலவே ஆகும் (2%). மாறாக அறிஞர்கள் கருத்தில் கொள்ளும் செயற்கை மொழியில் அமைந்த 98% உள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் 3% அளவே உள்ள மக்களால் ஆக்கப்பட்டவை என்பதை அறிஞர்கள் உணரவில்லை. இதனால் அறிஞர்கள் மக்கள் மொழி குறித்து அறிவிக்கும் முடிவுகள் யாவும் தவறானவையாக உள்ளன. காட்டாக, தொடக்கக் கால மலையாள இலக்கியங்கள் நம்பூதிரி பிராமணர் மற்றும் அரசரால் செயற்கைக் கலவை மொழியில் ஆக்கப்பட்டன. ஆனால் மக்கள் மொழி என்னவோ இதனினும் வேறுபட்ட வட்டார வழக்குத் தமிழாய் இருந்தது என்பதே உண்மை. இப்படித் தான் ஆந்திரத்திலும், கருநாடகத்திலும் மக்கள் மொழி அரைத் தமிழாய் இருந்து உள்ளது. ஆனால் அரசருடைய கல்வெட்டு, செப்பேட்டு மொழி செயற்கைக் கலவை மொழியில் அமைந்திருந்தது என்பதற்கு அங்கத்து நடுகல் கல்வெட்டுகளே சான்று.
தமிழ்நாட்டில் பல்லவர் கால நடுகற்களில் நல்ல தமிழ்ச் சொற்களும், மக்கள் பேச்சு வழக்குச் சொற்களும் உள்ளன. அவற்றில் ஒரு சமற்கிருதச் சொல்லோ, கிரந்த எழுத்தோ தொடக்கக்கால பல்லவர் நடுகல் கல்வெட்டில் இல்லை. மாறாக சமற்கிருத பெயர்களில் உள்ள சமற்கிருத எழுத்துகளை நீக்கி தமிழ் மரபிற்கு தக்கவாறு அவை தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன. நடுகல்லில் உள்ள மொழி வழக்கு சங்ககாலத்தின் இடையறாத தொடர்ச்சியே எனலாம். ஆந்திரம் கருநாடகம் போல தமிழகத்தில் இதுவரை பிராகிருத, சமற்கிருத நடுகல் கல்வெட்டு ஒன்று கூட அறியப்படவில்லை. இதற்கு காரணம் தமிழகத்தில் நடுகல் கல்வெட்டுகளை மக்களே, மாண்ட வீரரின் உறவினரே பொறித்தனர். மன்னர், வேந்தர் எவரும் நடுகல் பொறித்திடவில்லை. அவருக்கும் நடுகல் பொறிக்கப்படவில்லை. அப்படிப் பொறித்திருந்தால் அதை செயற்கைக் கலவை மொழியிலேயே பொறித்திருப்பர் எனலாம். ஒரிரு சமற்கிருத சொல் கொண்ட நடுகல் ஒன்றிரண்டு சிற்றரசர்களுடையன ஆகும். இரண்டாம் நந்தி வர்மப் பல்லவனுக்குப் பிறகு தமிழ் எழுத்திலும் நடுகற்கள் வெட்டப்பட்டு உள்ளன. தந்தி வர்மன் காலம் வரை நடுகல் கல்வெட்டுகள் சுருக்கமாகவே இருந்து உள்ளன. இதன் பின் பல்லவர் கால நடுகற்கள் சற்றே விரிவாக உள்ளன. தந்திவர்மனுக்கு முற்பட்ட நடுகற்களில் ஆண்டு எண்கள் எழுத்துகளிலேயே குறிக்கப்பட்டன. சோழர் கால நடுகல் கல்வெட்டுகளில் மொழி ஆளுமையும் சொல் ஆளுமையும் மாறுபட்டிருப்பதை உணர முடிகின்றது. சமய எழுச்சி காரணமாக தமிழகத்தில் சோழர் ஆட்சியில் நடுகல் வழக்கம் குன்றி விட்டது. ஆனால் அடித்தட்டு மக்களிடம் நடுகல் ஒரு வழிபாடாக இன்றும் நிலவி வருகின்றது. இனி, மக்கள் வரலாற்றை, மக்கள் மொழியை நேரடியாக கல்வெட்டு பொறிப்பில் அதன் விளக்கத்தோடு காணலாம்.
மேற்கோல் நூல் சுருக்கம்
செங். நடு. > செங்கம் நடுகற்கள்
தரும. கல். > தருமபுரி கல்வெட்டுகள்
நடு. > நடுகற்கள்
ஆவ. இதழ் > ஆவணம் இதழ்
தரு. நடு. அகழ் > தருமபுரி நடுகல் அகழ்வைப்பகம்
தொல். வே. அர. > தொல்குடி - வேளிர் - அரசியல்
கிரு. மா. கல். > கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
S. I. I. > South Indian Inscriptions, ASI
E. I. > Epigraphica Indica
E.C. > Epigraphica Carnatica
பொருள் கொள்ள உதவிய அகராதிகள்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (செ. சொ. பி)
Monier - williams, A Sanskrit English dictionary, 1899
பிராமண நடுகல்
பிராமணர் படைத் தலைவர்களாய் இருந்துள்ளனர் என்றாலும் அவருள் எளியோர் எவரும் போரில் பங்கு பெற்று உயிர் துறந்த செய்தி இல்லை. ஒரு கோயில் மேலாளரான தன் ஆசானைப் பூசகன் தாக்கிக் கொல்ல வந்த போது அவருடைய மாணாக்கன் அதை தடுக்க முற்பட்டுள்ளான். அதனால் ஆத்திரமுற்ற கோயில் பூசகன் மாணாக்கனைக் கொன்று உள்ளான். அவனுடைய வீரத்தை மெச்சி அவனது ஆசான் அவனுக்கு நடுகல் நிறுத்தி உள்ளார். இது மிக அரிதான ஒரு நிகழ்ச்சி. கல்வெட்டுச் செய்தி ப்ல்லவனையும் சோழனையும் இணைத்து ஒரு நூற்றாண்டு கால நிகழ்வை ஒருசேர குறிப்பது தான் முரணாக உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்னி வாய்க்கால் எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் கோபுர வாயிலில் ஒரு நடுகல் உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. (S.I.I. Vol. 12 No. 56 (ARN NO 144 of 1928-29)
ஸ்வதிஸ்தி ஸ்ரீ தெள் / ளாற்றெறிந்து / ராஜ்ய(மு)ங் கொ / ண்ட நந்திப் / பொத்தரையர்(க்) / கு யாண்டு இரு / பத்தொன்றாவது / பராந்தக புரத் / து அறிந்தி / கை ஈஸ்வர க்ர / ஹம் ஸரஸ்த / தாலுடையொ / ரும் - - - / - - - தளி / யிலாதாகி நின்ற bhaட்டரென் மாவலியநி / dhaஸ்தாந மாள்வான் செ(வணற்குண்டு) கொ / ண்டு வந்து மடமுஞ் சுட்டுக் காத்த ஷிguர / வரையு மெறிந்து இவர் ஷிஷ்யந் ஒரு ப்ராம் / ஹனன் சத்திமுற்றத் தேவந் றுண்டு ப / ட்டான் வல்லுவ(னாட்)டான்
ராஜ்யம் - அரசு; க்ரஹம் - கோயில், வீடு; ஸரஸ்த(sa-rush) - சினம், கோவம், கடுகடுப்பான [anger, enraged] : Bhaட்டரென் - கோவில் பூசகன்; இdhaஸ்தாநம் - இந்த கோயில் [this domain, region (of gods)] ; ஷிguரவன்(शिग्रु) - அப்படியாகப்பட்ட மனிதர் (of a man) ; ஷிஷ்யன் - மாணாக்கன்; ப்ராம்ஹனன் - வேதவினை மறையவன் (இவை யாவும் சமற்கிருதச் சொற்கள்)
போத்தரையன் - பல்லவன்; தால் - நாவு; தளி - கோயில்; மாவலியன் - வலிமை மிக்கவன்; உண்டு - உணவு, சோறு; மடம் - மடைப்பள்ளி; சுட்டு - விறகுஎரித்து சமை(வடை சுடு என்பதை நோக்குக); காத்த - பேணிய (Maintain); எறிந்து - அழித்து; துண்டு - வெட்டப்பட்டு; பட்டான் - வீரசாவடைந்தான்
மூன்றாம் நந்தி வர்மப் பல்லவனுடைய தெள்ளாற்றுப் போர் வெற்றியையும் அவன் தன் நாட்டாட்சியை மீட்டதையும் சிறப்பித்துக் கூறும் இக்கல்வெட்டு அவனுடைய இருபத்தொன்றாம் ஆட்சி ஆண்டு (868 CE) நிகழ்வு ஒன்றை நடுகல்லில் குறித்து உள்ளது. பராந்தகபுரமான இச்சென்னிவாய்க்கால் அறிஞ்சிகை ஈச்சுவரச் சிவன் கோயிலில் கோபத்துடனும் கடுகடுப்புடனும் பேசும் நாவுடையவரும், கோயிற் பணி இழந்த உடல் வலிமை மிக்க இக் கோயில் பூசகனான பட்டரன் இக்கோயில் நிருவாகம் ஆளும் செவணருக்கு சோறு கொண்டு வந்தும், கோயில் மடைப்பள்ளியில் விறகுஎறித்து திருத்தளிகைக்கான சமையற் பணியைப் பேணியும் வருகின்ற அப்படியாகப்பட்ட மனிதரைத் தாக்கி அழித்ததோடு அல்லாமல் செவணரின் மாணாக்கனான சத்திமுட்டத் தேவன் என்ற பிராமணனைத் துண்டாக வெட்டிக் கொன்றான். இந்த சத்திமுட்டத் தேவன் வள்ளுவ நாட்டினன்.
மேற் கூறிய கருத்திற்கு இணங்க இக்கல்வெட்டில் இடம்பெறும் மாந்தர்களான பட்டரன், செவணர், சமையல்காரன், சத்தி முற்றத் தேவன் ஆகியோர் பிராமணர் என்பதால் இக்கல்வெட்டில் எட்டு சமற்கிருத சொற்கள் திணிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மக்கள் வழக்கு மொழி தமிழை நன்கு அறிந்திருந்தாலும் மதப்பற்று, தம் சமற்கிருத புலமை காட்டல் ஆகியவற்றின் காரணமாக செயற்கைக் கலவையாக ஒரு மொழியை உருவாக்கி உள்ளார்கள். இவ்வாறான மொழிநடை உள்ள மதத்துறை, ஆட்சித்துறைக் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு பெருவாரியான மக்கள் பேச்சு மொழி இது என்று அறிஞர்கள் தீர்மானிப்பது தவறானது எனலாம். இந் நடுகல்லை நட்டு கல்வெட்டு பொறிக்க ஏற்பாடு செய்தவர் செவணர் என்பது புலனாகின்றது. பட்டரன் வேலையில் ஏதோ குற்றம் புரிய அவனைப் பணியில் இருந்து செவணர் நீக்கியதால் கோயில் வேலை இழந்து பிழைப்பிற்கு வழியின்றிப் போகவே அதற்கு பழிதீர்க்கும் எதிர்வினையாகச் செவணரை பட்டரன் கொல்ல் முற்பட்டுள்ளான் என ஊகிக்க முடிகின்றது.
தென்னிந்திய நடுகற்கள் எனும் நூலில் இக்கல்வெட்டிற்கு விளக்கம் கூறியுள்ள வெங்கட சுப்பைய்யர் பெரு வலிமையன் என்ற பொருளுடைய மாவலியன் என்ற சொல்லை மாவலிவாணராயன் என்ற வாண மன்னனாகத் தவறாகப் உணர்ந்து அதனுடன் பொருத்தி, அவன் வடக்கே இருந்து படை எடுத்து வந்து மடைப்பள்ளி என்ற பொருளுடைய மடம் என்ற சொல்லை துறவிகள் மடம் எனத் தவறாகப் பொருள் கொண்டு அவன் மடத்தையும் அழித்து அதைத் தடுக்க வந்த சத்திமுற்றத் தேவனை அம்பால் கொன்றுவிட்டதாகவும் சொல்லி உள்ளது மேற்சொன்ன கல்வெட்டு விளக்கத்துடன் பொருந்தி வராததை உணரமுடிகின்றது.
நாராய் ! நாராய்! செங்கால் நாராய்! என்ற சங்கப் பாடலில் இடம்பெறும் சத்திமுற்றத்தைச் சேர்ந்தவன் என்பது இவன் பெயராலும் அது குமரி மாவட்டத்தில் உள்ள ஊர் என்பது வள்ளுவ நாடன் என்ற கருத்தாலும் வெளிப்படுகின்றது. றகரம் பண்டு டகரமாய் ஒலித்தது. அதன்படி முற்றம் முட்டம் எனப் பலுக்கப்படல் வேண்டும். சத்தன் என்ற ஆள் பெயர் இகர ஈறு பெற்று சத்தி என வழங்கும். தமிழ முன்னோர் அயல் நாகரிகங்களை அமைத்தனர் என்பதற்குச் சான்றாக சில அயல் நாகரிக மன்னர் பெயர்கள் தமிழாக உள்ளன. அதில் துருக்கியின் ஒரு மித்தானி அரசன் பெயர் Suttarna I 1490 - 1470 BC > சத்தரண(ன்). அதே போல் ஒரு Gija வழிவந்த கொரிய மன்னன் பெயர் Sudo 634 - 615 BC > சத்த(ன்)
- - - - - - - -
நவக்கண்ட நடுகல்
பிறர் நலன் கருதி ஆடவர் தம் இன்னுயிரைத் தாமே தற்கொலையாக தெய்வத் திருவுரு முன் தம்மை பலியிட்டு உள்ளனர். தமிழில் இது தலைப்பலி எனப்பட்டது. தெலுங்கில் மிடிதலா அல்லது கண்டதலா என்று அழைக்கப்பட்டது. கன்னடர் இதை சிடிதலா என்றனர். தம் உடலை ஒன்பது துண்டுகளாக, ஒன்பது பாகமாகக் கூர்மையான வாளால் தாமே வெட்டிக் கொள்வது நவக்கண்டம் ஆகும். அவ்வாறான ஒரு நவக்கண்ட செய்தி கூறும் கல்வெட்டு கீழே:
நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் எனும் சிற்றூரில் உள்ள சுப்ரமணியர் திருக்கோயிலின் செவ்வகக்கல்லில் நவக் கண்டம் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டாக பதிவாகி உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. (S.I.I. Vol. 12 No. 106 / A.R.N No.498 of 1908).
ஸ்ரீ கம்ப பருமற்கு யாண்டு இருபதாவது (ப)ட்டை பொ(த்) / த(னு)க்கு ஒக்கொண்ட நாகன் ஒக்கதிந்தன் பட்டை பொத்தன் மே / (தவம்) புரிந்த தென்று bhaடாரிக்கு நவக் கண்டம் குடுத்து / (குன்றகத்) தலை அறுத்துப் பிடலிகை மேல் வைத்தானுக்கு தி / ருவான்முர் ஊரார் வைத்த பரிசாவது எமூர்ப் பறைகொட்டிக் கல்(மெ) / (டு செய்தாராவிக்கு)க் குடு(ப்) பாரானார் பொத்தனங் கிழவர்களும் தொ (று) / (ப்ப)ட்டி நிலம் குடுத்தார்கள் இது அன்றென்றார் கங்கயிடைக் குமரிஇ / (டை) எழுநூற்றுக் காதமும் செய்தான் செய்த பாவத்துப் படுவா /ர் அன்றென்றார் அனறாள் கோவுக்கு காற்ப் பொன் றண்டப் படுவார்.
பட்டை (பட்டம்) - ஒரு பறை வகை; பொத்தன் - அடிப்பவன்; குன்றகம் - சிறுகுவடு போன்ற மேடை; பிடலிகை - தட்டு; கிழவர் - உரியவர், தலைவர்; படுவார் - வீழ்வார்; தண்டம் - தண்டனைத் தொகை, Fine.
பல்லவன் கம்பவர்மனுடைய இருபதாவது ஆட்சி ஆண்டில் (883 CE) பறை அடிப்பவனான பட்டை பொத்தனுக்கு, அவன் தந்தை ஒக்கொண்ட நாகன் ஓக்கதிந்தன் பட்டை பொத்தன் மேன்மையான தவம் செய்யக் கருதியவனாக படாரி எனும் துர்க்கைக்குப் படையலாக தன் உடலின் ஒன்பது பகுதிகளிலிருந்து தசைகளை வெட்டிய பின் சிறு குவடு போன்ற மேடை மேல் தன் கழுத்தை இருத்தித் தன் தலையைக் கத்தியால் தானே அறுத்து கொண்டையைப் பிடித்தபடி அத்தலையைத் தட்டின் மேல் வைத்தான். இச்செயலை மெச்சிய திருவான்மூர் ஊர் மக்கள் அதற்கு பரிசாக அவர் ஊர்ப் பறை கொட்ட நடுகல் மேடு நிறுவச் செய்தார்கள். ஒக்கதிந்தன் ஆவிக்கு பறை அடிப்புக்கு (பொத்தனம்) உரியவர்கள் நிலக் கொடையாக, உயிர் ஈகம் செய்யும் வீரனுக்கு இணையாக அவனைக் கருதி தொறுப்பட்டி நிலத்தைக் கொடுத்தார்கள். இந்த அறத்தை ஏற்காதவர்கள் கங்கைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட எழுநூற்றுக் காதமுள்ள இந்த இந்தியப் பெருநிலத்தில் வாழுநர் செய்யும் பாவத்தை ஏற்பர் அதோடு அவர் வாழுங் காலத்தில் அரசாளும் மன்னவனுக்கு கால் பொன் தண்டம் செலுத்த வேண்டும் எனவும் இவ்வாறு சாவித்தும் தண்டனை வழங்கியும் கல்வெட்டு பொறித்து உள்ளனர்.
கம்ப வர்மனுடைய ஆட்சி வடக்கே நெல்லூர் வரை பரவி இருந்துள்ளது. திருவான்மூர் என்ற ஊரே இன்றைய மல்லாம் அல்லது அதன் அண்டை ஊர் எனலாம். திரு என்ற இதன் தமிழ் வடிவமே வேங்கடத்திற்கு அப்பாலும் தமிழ் வழங்கும் நிலம் 1,000 ஆண்டுகளுக்கு முன்னம் வரை இருந்ததற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று.
- - - - - - - -
விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார் கோட்டை சிவன் கோவிலில் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. (வெ. வேதாசலம், ஆவ. இதழ் 10,1999)
சூரங்குடி / நாட்டு ஆ / தனூராந / கையம் / ஊர்கிழவன் / ஸ்ரீ வேழா / ன் சீலப்பு / கழான் க / லியுகக்கண் / டடி தன் / ம செட்டிக்கு / கோன் நோ / ற்றி தலை / தந்தான்
கிழவன் - ஊர்த்தலைவன்; வேள் > வேழ் - சிற்றரசன்; சீலம் - நல்ஒழுக்கம்; கண்டடி(கண்டு + அடி) - அடிக்கரும்பு; நோற்றி - நோன்பு இருந்து; தலைதந்தான் - தலைப்பலி கொடுத்தான்.
எட்டயபுரப் பகுதியில் இருந்த சூரங்குடி நாட்டின் பகுதியான ஆதனூரின் கையமூர் எனும் ஊருக்கு வேள் ஸ்ரீ வேழான் சீலப்புகழான் கலியுகக் கண்டடி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் தன்ம செட்டிக்கு நலம் வேண்டி கோன் என்பவன் நோன்பு இருந்து தன் தலையை வெட்டிப் பலி தந்து உள்ளான்.
வேழான் என்பது சிற்றரசானவன், சீலப்புகழான் என்பது நன்னடத்தையால் புகழுற்றவன், கலியுகக் கண்டடி என்பது கொடுமையான கலியுகத்தில் இனிக்கின்ற அடிக்கரும்பு போன்றவன் ஆகிய பொருளில் ஏற்றிப் போற்றப்பட்ட தன்ம செட்டி மன்னர்களைப் போல் புகழப்படுகின்றான். இவன் காலத்தில் சோழப் படை எடுப்பால் பாண்டியர் ஆட்சி குலைந்ததால் பாண்டிய வேந்தர் பெயரும், ஆட்சி ஆண்டும் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை போலும். தன்ம செட்டியால் பயனடைந்த குடும்பத்தவன் அல்லது நிலக் கொடையை எதிர்ப்பார்த்து தன்னை பலி கொடுத்த ஏழை தான் கோன் எனபவன் என்று கொள்ளலாம். இதில் நவக் கண்டக் குறிப்பு இல்லாவிடினும் அது போன்ற ஒரு உயிர்ப்பலி தான் இந்த தலைப்பலியும்.
- - - - - - - -
சதிக்கல்
கணவன் இறந்ததும் அவன் மனைவியும் இறந்துவிட இருவருக்கும் எடுக்கப்படும் நினைவுச் சின்னம் தான் சதிக்கல். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வடநாட்டில் எளிய மக்களிடத்தும் நிலவிய குமுக வழக்கமாக இருந்தது. ஆனால் தென்னாட்டில் இந்த வழக்கம் அரசர், அமைச்சர், படைத் தலைவர் குடும்பங்களில் மட்டுமே நிலவியது. வேந்தனிடத்தில் அமைச்சராயும், படைத்தலைவராயும் இருந்தவர் மன்னரும், சிற்றரசருமே எனலாம். இவ்வாறு உடன்கட்டையேறி இறந்த பெண்கள் தெய்வம் என மதிக்கப்பட்டு பூசிக்கப்பட்டனர். அவ்வாறான சதிக்கல் கல்வெட்டு ஒன்று கீழே:
தருமபுரி மாவட்டம் கிருஷணகிரி வட்டம் ஜகதாப் மோட்டூர் எனும் ஊரில் அமைந்த சதிகல் கல்வெட்டு. காலம் 11 ஆம் நூற்றாண்டு. (ஆவ. இதழ். 12, பக். 21)
ஸ்வத்தி ஸ்ரீ இரட்டபாடி ஏழரை இலக்கமுங் கொ / ண்டு கொல்லாபுரத்து ஜயத்தம்ப நாட்டி / ப் பேராற்றங்கரைக் கொப்பத் தாகவ மல் / லனை ஐஞ்சுவித்தருளி அவந் ஆனை கு / திரை பெண்டிர் பண்டாரமகலப் பட்டவித்து / வீராஸிங்காசநத்து வீற்றிருந்தருளிந கோ / ப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜே / ந்தர தேவர்க்கு யாண்டு ஐஞ்சாவது / விஜைராஜேந்திர மண்டலத்துத் தகடூர் / நாட்டுக் கங்க நாட்டுப் புல்ல மங்கலத்து / அவனமச்சி பள்ளியில் இவந் மகந் சாமுண் / டந் பாம்பு கடிச்சு செத்தாந் இவந் மணவா / ட்டி விச்சக்கந் தீபாஞ்சாள் அவள். ம- - -/ ண்ப - - - மாக நட் - -
பண்டாரம் - கருவூலம்; பட்டவித்து - சிறப்பு அழித்து, ஆட்சி ஒழித்து; அமச்சி - அமைச்சர்; பள்ளியில் - சிற்றூர், அரண்மனை, இடம்; மணவாட்டி - மனைவி; தீப்பாஞ்சாள் - உடன்கட்டை ஏறினாள்
சோழப் பெரு வேந்தன் ராஜேந்திரனுடைய ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1017) பொறிக்கப்பட்ட இந்நடுகல் கல்வெட்டு முதலில் அவனுடைய வெற்றிச் சிறப்புகளை கூறித் தொடர்கின்றது. இச்சதிக்கல் கல்வெட்டில் ராஜேந்திரச் சோழன் மேலைச் சாளுக்கியன் ஜெயசிம்மனிடம் இருந்து இரட்டப்பாடி ஏழரை இலக்கத்தையும் கைப்பற்றி கொல்லாபுரம் எனும் இன்றைய கோலாப்பூரில் இதற்காக வெற்றித் தூண் நாட்டியதையும், பேராற்றங்கரைக் கொப்பத்தில் (துங்கபத்திரை) மேலைச் சாளுக்கியன் ஆகவ மல்லன் எனும் சோமேசுவரனை அச்சப்படுத்தி வென்று பரிவு காட்டி அவன் யானைப் படை, குதிரைப் படை, அரண்மனைப் பெண்டிர், கருவூலம் என எல்லாவற்றையும் கைப்பற்றி அவன் எல்லாச் சிறப்புகளையும் அழித்துப் பின் வீரத்திற்கு இலக்கணமான அரியணையில் அமர்ந்து ஆண்டான் எனக் குறிப்பிடுகின்றது. அவன் ஆட்சிக்கு உட்பட்ட விஜயராஜேந்திர மண்டலத்தின் பகுதியான தகடூர் நாட்டின் கங்க நாட்டுப் பிரிவான புல்லமங்கலத்தில் ராஜேந்திரச் சோழனுடைய அமைச்சரின் அரண்மனையில் இவன் மகன் சாமுண்டன் பாம்பு கடித்து நஞ்சேறி இறந்தான். சாமுண்டனின் மனைவியான விச்சக் கந்தி என்பாள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். அதன் நினைவாக இந்நடுகல் நடப்பட்டது. இறுதி இரு வரிகள் ஆங்காங்கே சிதைந்து உள்ளன.
வேந்தனுடைய அமைச்சராக அவனுக்கு கீழ்ப்பட்ட மன்னரே இருந்தனர் என்பதுடன் அரச குடும்பத்தவரே உடன்கட்டைப் வழக்கத்தை கைக்கொண்டனர் என்ற கருத்தை நோக்க அவனமச்சி என்ற சொல் ஆள் பெயரல்ல என்று தெளியலாம். அது இராசேந்திரனுக்கு அமைச்சராக இருந்த பெயர் குறிக்கப்படாத ஓர் அரசனைத் தான் குறிக்கின்றது என்பது விளங்கும். இவன் மகன் சாமுண்டனே இறந்துள்ளான். அவன் மருமகள் விச்ச கந்தி என்பவள் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறினாள்.
- - - - - - - -
நாய்க்கு நடுகல்
மக்கள் மனிதர் தம் சிறப்பு வினைக் கருதி அவர்தம் நினைவில் நடுகல் நிறுத்தியது போலவே தாம் செல்லமாக வளர்த்த கிளி, கோழி, எருது, குதிரை ஆகிய பறவைகள் விலக்குகள் முதலியனவற்றுக்கும் நடுகல் எழுப்பி உள்ளனர். அவ்வாறே ஒரு ஆண்டை தான் செல்லமாக வளர்த்த தன் இரு நாய்களின் நினைவாக நினைவுக் கல் நிறுவி உள்ளான்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் உள்ள அம்பலூரில் உள்ள நடுகல் நாய்களுக்காக நடப்பட்டுள்ளது. இதன் காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு. (ஆவ. இதழ். 12, 2001 பக்.3)
ஸ்வஸ்தி ஸ்ரீ - - - -ந - - - அம்ம - - - / ற் கோவந் நாய் முழகனும் வந்திக்கா / கத்தியும் சேரிடு - - - - த நிப் பன்றி / கொன்று செத் / தந
சேரிடு - பிணைந்து ( to tie or fasten together)
மன்னன் பெயரும் ஆட்சி ஆண்டும் சிதைந்து உள்ளன. அம்மலூர் என்று வழங்கப்பட்ட இன்றைய அம்பலூரில் கோவன் என்பவன் இரு நாய்களை வளர்த்திருந்தான். அவ்வூருள் புகுந்த காட்டுப் பன்றி ஒன்றுடன் அவனுடைய நாய்களான முழகனும், வந்திக் காகத்தியும் பிணைந்து சண்டையிட்டுப் போராடிப் பன்றியைக் கொன்றன தாமும் செத்தன எனக் கல்வெட்டு பொறித்த கோவன் குறித்து உள்ளான்.
செல்ல விலங்குகளுக்கு நடுகல் எடுக்கப்பட்ட செய்தி மிக அரிதாகவே தமிழகத்தில் பதிவாகி உள்ளது.தொல் காப்பியத்தில் கூறப்பட்டு உள்ளது போல செல்ல விலங்குளுக்கு மனிதரைப் போல் இங்கு பெயர் இடப்பட்டு உள்ளது.
- - - - - - - -
பல்லவர் ஆட்சி நடுகல்
பல்லவராட்சி தமிழகத்தில் விஷ்ணு வர்மன் (கி.பி. 477) காலம் முதல் முழுமையாக நிலைகொண்ட செய்தி இருளப்பட்டியில் கிடைத்த அவனது நான்காம் ஆட்சி ஆண்டு (கி.பி. 480) நடுகல் மூலம் நிறுவப்பட்டு உள்ளது. அவன் பின்னே வந்த சிம்ம வர்மன், சிம்ம விஷணு ஆகியோர் கால நடுகற்களும் அறியப்பட்டு உள்ளன. பல்லவ மன்னர் நேரடியாகப் போரில் ஈடுபட்டதோ அவர் நடுகல் ஆனதோ குறித்து செய்தி கொண்ட நடுகல் எதுவும் இதுவரை கிட்ட வில்லை. அவருக்குக் கீழ்ப்படிந்த பாணர்கள் போரில் ஈடுபட்டு அதில் இறந்த மறவர்களுக்கு எழுப்பப்பட்ட நடுகற்களே பெருமளவில் கிட்டி உள்ளன. தமிழ்நாட்டில் கிட்டிய பெரும்பால் நடுகற்கள் பல்லவர் காலத்தவை. இது சங்க கால நடுகல் மரபின் இடையறாத் தொடர்ச்சியின் விளைவே எனலாம்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மேல் சிறுவளூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள 6 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட நடுகல் உள்ளது. (சி. வீரராகவன் மங்கையர்க்கரசி - ஆவ. இதழ். 7,1996, பக். 26)
கோவிசய பருமற்கு இருபத்து நால்காவது / கீழ்க் கோவலூரு குன்றட்டரைசரு மக்கள் சிங்க / மஞிச்சியாரோடு எறி / ந்த ஞான்று / நீலகண்ட / ரைசரு மக்க / ள் பொன்னு / ழதனார் சேவகரு / கரியாரு மக்கள் / - - - நீலகண்ட / ரு பட்ட கல்
மக்கள் - மகன் என குறிக்கப்படும் படைஅதிகாரி; எறிந்த - வென்ற; சேவகன் - படை அதிகாரி; பட்ட - வீரசாவுற்ற; கல் - நடுகல்.
பல்லவன் சிம்ம வர்மனா, சிம்ம விஷ்ணுவா என்று குறிப்பிடாமல் கோவிசைய என்று மட்டும் குறிப்பிட்டு ஆட்சி ஆண்டை இருபத்து நான்கு என்று குறிப்பிடுகின்றது இக் கல்வெட்டு. அப்போது கிழக்கு கோவூரை ஆளும் குன்றட்டு அரைசர்க்கு மகன் எனும் அதிகாரப் பொறுப்பு உள்ள சிங்க மஞ்ஞிச்சி என்பவனை எதிர்த்துப் போரிட்டு வென்ற போது நீலகண்ட அரைசர்க்கு மகன் எனும் பொறுப்பு அதிகாரியான வேள் பொன் உழத்தன் என்பவனுடைய படைஅதிகாரி கரியான் என்பவனுடைய படைஆள் நீலகண்டன் வீரசாவு அடைந்ததன் நினைவில் நிறுத்தப்பட்ட நடுகல்.
கோவலுர் இன்றைய திருக்கோவிலூர் ஆகலாம். ஒருவர் அரசர் நீலகண்டர் மற்றொருவர் எளிய போர் வீரர். போரில் சிங்க மஞ்ஞிச்சி தோற்றுள்ளார்.
- - - - - - - -
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மேல் சிறுவளூர் எனும் ஊரில் உள்ள வட்டெழுத்து பொறிப்பு உள்ள 6 ஆம் நூற்றாண்டு நடுகல் மேல் உள்ள கல்வெட்டு மாந்தர்களுடன் தொடர்பு உடையது. (ஆவ. இதழ். 7, 1996)
கோவிசய பற்மற்கு இருபத்தொன்பதாவது நீலகண்டதிய / ரைசரு மக்கள் பொற் சாத்தன்னாரு தண்சூர திரைச சம்பவி / னாரோடு எறிந்த ஞான்று பொன்னுழ(த்த) / (னாரு) சேவகரு - - - ராண்ட சிற்றரை வீரத்தனாரு க - - - / எறிந்து ப / ட்டான்.
அதிஅரைசர் - வேந்தனுக்கு படை உதவி நல்கும் அதிஅரசனாகவும் தன்னிலையில் மாமன்னனாகவும் இருப்பவர்
பல்லவ வேந்தனுக்கு அதிஅரைசர் நிலையில் உள்ள மாமன்னன் நீலகண்டன் என்பவனுடைய மகன் எனும் பொறுபபு அதிகாரியான பொன் சாத்தன் எனும் சிற்றரசன் தண்சூர் ஆளும் அதிஅரைசர் மாமன்னன் சம்பவின்னான் என்பவனுடன் போரிட்டு வென்ற போது பொன் உழத்தன் என்ற சிற்றரசனுடைய படைத்தலைவனும் (பெயர் சிதைந்த) ஊரை ஆண்ட வேளும் ஆன சிற்றரையைச் சேர்ந்த வீரத்தன் (ககரத்தில் தொடங்கும் பெயர் சிதைந்த) ஊரை அழித்து வீர சாவடைந்தான். இதில் வரும் சிற்றரை எனும் ஊரே இன்றைய சிறுவளூர்.
- - - - - - - -
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (ஆவ. இதழ். 20, 2010, பக். 196)
கோவிசைய சீபரும்மற் கிரு / த்தொன்பதாவது ஆட்டி தி / ங்கள் புணரு பூசது ஞா(ன்)று தகடு / ருப் பிடி மண்ணேரிக் கீழ் உடை / யாரு தண்டத்தோடு இலாட / ரைசரோடும் மழவரைசரோடும் / எறிந்து பட்டாரு கங்கதி அ / ரைசரு சேவகரு மாதப் பெருதிரை / சரு கன்னாடு
ஆட்டி - ஆடி; திங்கள் - மாதம்; கீழ் - கிழக்கு; தண்டம் - படை; சேவகர் - படைத் தலைவர்; கன்னாடு - கல் + நாடு
பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர்
ஒரு தமிழ் நடுகல்லில் மாதமும் நட்சத்திரமும் முதன்முதலாகக் குறிக்கப்படுவது இதுவே எனலாம். இவ்வகை பல்லவ நடுகல் செய்தி மிக அறிதாகவே உள்ளது. கீழ்ப் பிடி மண்ணேரி அரசருடைய பெயர் கல்வெட்டில் குறிக்கப்பட வில்லை.
- - - - - - - -
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கானம்பாடி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது. (தரும. கல். 1973/2 பக்.76)
கோவிசைய சிங்கவிண்ண பரும(ற்)கு / இருப(த்)தேழா(வ)து கொரு நாட் / டு கொண்ட ப _ றி(த்) தொறு (க்கொ)ள உரை எறிந்து இடுவித்து (பட்டான்) வதி / செலாவன் கல்.
கொண்ட - கவர்ந்த; இடுவித்து - விடுவித்து
பல்லவன் சிம்ம விஷ்ணுவின் இருபத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 577) கோவூர் நாட்டைச் சேர்ந்த பகைவர் கவர்ந்து சென்ற நிரைகளை மீட்க உறையிலிருந்து வாளை உருவிப் பகைவரை அழித்து நிரையை மீட்டு விடுவித்து வீர சாவடைந்தான் வதி செலாவன் என்பவன். அவன் நினைவில் நடப்பட்ட நடுகல் இது.
கோவூர் என்பது கொரு எனப் பிழையாகப் பொறிக்கப்பட்டு உள்ளது. சிதைந்த சொல் பன்றி என்பதா எனத் தெரியவில்லை. அப்படியானால் பன்றி மேய்த்தோரும் உளர் எனக் கொள்ளலாம்.
- - - - - - - -
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் எனும் ஊரில் இருந்து கொண்டு வரப்பட்டு தருமபுரி நடுகல் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள வட்டெழுத்து பொறிப்பு பெற்ற நடுகல். (தரு. நடு. அகழ். பக். - 32)
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய மயி / ந்திர பருமற்கு யாண் / டு ஏழாவது பெரும் / பாண விளவரைசர் / சேவகன் நைய வ / டுகன் (சாத்துழான்) தொ / று மீட்டு பட்டான்
மகேந்திர வர்மனின் ஏழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 597) அவனுக்குக் கட்டுப்பட்ட பெரும் பாண இளவரைசனின் படைத் தலைவன் நைய வடுகன் (சாத்துழான்) ஆநிரைகளை மீட்டுப் வீர சாவடைந்தான்.
வடுகர் அசோகன் தந்தை பிந்துசாரன் காலத்தில் மௌரியப் படை தமிழகத்தின் மேல் படை எடுத்து வர உதவினர். அப்படி வந்தவர்கள் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் குடியேறி விட்டனர் போலும்.
நய்யன் ஒரு பழந்தமிழ்ப் பெயர். மேலை நாகரிக வரலாற்றில் இடம் பெரும் ஒரு மன்னன் பெயர் Bel Nirari 1370 BC > வேள் நய்யர்அரி என்பது.
- - - - - - - -
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் போத்தன் கோட்டை எனும் ஊரில் கல்லாற்றுக் கரையில் இருந்து பெறப்பட்ட வட்டெழுத்து பொறிப்பு உள்ள ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 1972/23, பக்.93)
கோவிசைய மயீந்திர பருமற்கு / ப் பதினைந்தாவது கோவூர் நாட்டுக் கீ / ழ் வழிப்ப / ள்ளகூர் இருந்து / வாழுந் நஞ்சுணி / ஆர் மகன் கொற் / றாடை தொறு / மீட்டுப் ப / ட்டான் கல்
கீழ்வழி - கிழக்குத் திசை வழி; இருந்து - தங்கி
மகேந்திர வர்மனின் பதினைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 605) கோவூர் நாட்டின் கிழக்கு வழியில் அமைந்த பள்ளக்கூர் எனும் ஊரில் தங்கி வாழும் நஞ்சுண்ணி என்பவர் மகன் கொற்றாடை என்பவன் பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். அவன் நினைவில் நிறுத்திய நடுகல் இது.
ஆநிரைகளைக் கவர்ந்தவர் குறித்த சேதி கல்வெட்டில் இல்லை. பள்ளக்கன் என்பது ஒரு பழந் தமிழ் ஆள் பெயர். அவ்வூர் அவருக்கு கொடையாக வழங்கப்பட்டதாலோ அல்லது அவரை அடையாளப்படுத்தியோ பள்ளக்கூர் என ஊர் பெயர் வழங்கி இருக்கலாம். கடைசியாக ஆண்ட மேலை நாகரிக Scythia மன்னன் பெயர் Palakus > பள்ளக்கு என்பது. இவனுடைய தந்தை அலெக்சாந்தரின் தந்தை இரண்டாம் பிலிப்பால் கொல்லப்பட்ட Ateas 339 BC > அதிய(ன்) என்பவன். இதனால் சித்தியர் தமிழர் தொடர்பு வலுப்பெறுகின்றது.
- - - - - - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சொரகொளத்தூர் எனும் ஊரில் ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டு. (தொல். வே. அர. பக். 145)
ஸ்வஸ்தி ஸ்ரீ / கோவிசைய நந்தி விக்கிர/ ம பருமற்கி யாண்டு பதினேழாவ / து பல்குன்ற கோட்டத்து மண் / டை குள நாட்டுச் சுரைக் குளத்துத் தொறு கொளில் / பட்டார் நிலம் பேறூர் நாயகர் ஆதட் / டியார் மகனார் செருவலியார்
யாண்டு - ஆண்டு; கோட்டம் - ஆட்சிப் பிரிவைக் குறிக்கும் வட்டம்; தொறு - ஆநிரை; கொளில் - கவர்தலில்; நாயகர் - சிற்றரசர் அல்லது படைத் தலைவர்; மகன் - படைஆள்.
இரண்டாம் நந்தி வர்மப் பல்லவனின் பதினேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 748) பல்குன்றக் கோட்டத்தில் அடங்கிய மண்டைக்குள நாட்டின் பகுதியான சுரைக்குளத்து ஊர் ஆநிரைகளைக் கவரும் போது நிகழ்ந்த பூசலில் நிலம்பேரூர் ஆளும் சிற்றரசர் ஆதட்டி என்பவருடைய படைஆள் செருவலி என்பவன் வீர சாவடைந்தான்.
சுரைக்குளமே இன்று சொரகுளத்தூர் எனப்படுகின்றது.
- - - - - - - -
வேலூர் மாவட்டம் வாலாஜாப் பேட்டை வட்டம் கீழைசாத்து எனும் சிற்றூரில் ஒரு நடுகல் கல்வெட்டு உள்ளது (கி. குமார், ஆவ. இதழ் 7, 1996, பக். 15)
கோவிசைய நந்தீசுர பருமற்க் / கு யாண்டு முப்பத்தேழா / வது வள்ளிப்பேடு நாடுடைய விக் / கிரமாத்திய நாடு மாரிகப்பா / கிழார் மகன் வக்கடி பட்டான்
கிழார் - ஊர்த்தலைவன், உரிமையாளன்
இரண்டாம் நந்தி வர்மனுடைய முப்பத்தேழாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 754) வள்ளிப்பேடு நாட்டின் பகுதியான விக்கிரமாதித்திய நாட்டின் ஊர்த்தலைவர் மாரிகப்பா என்பவருடைய மகன் வக்கடி என்பவன் வீர சாவடைந்தான்.
போர் குறித்த மற்ற எந்த சேதியும் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.
- - - - - - - -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் குழிதிகை எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டுக் கால நடுகல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. (E. I. Vol. 22,No.18, Pg. 113)
ஸ்ரீ கோவிசைய நந்தி / ச்சுர பருமர்கு யாண்டு / அம்பத்திரண்டாவது / பெருமானடிகள் மேல் / வல்லவரையன் படை வந் / து பெண்குழிக் கோட்டை அ / ழிந்த நான்று வாணரை / யர் மாமடி திருக எனத் திரிந்து பட்டார் கற்காட் / டு உடைய கங்கதி அரை / யர் கன்னாடு பெருங் க / ங்கர்
நான்று - ஞான்று, அப்போது ( at the time of); மாமடி - மாமன், மாமனார்; திருக - போருக்கு செல் என ஏவல்; திரிந்து - போர் மேல் சென்று; அதிஅரையர் - சிற்றரசர், படைத் தலைவர்.
பல்லவன் நந்தி வர்மனுடைய ஐம்பத்து இரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 783) பல்லவனான பெருமானடிகள் மேல் இராட்டிரக் கூடனான வல்லவரையன் படை நடத்தி வந்து பெண்குழிக் கோட்டையை அழித்த போது பல்லவனுக்கு அடங்கிய வாண அரையனானத் தன் மாமன் (அ) மாமனார் போருக்கச் செல் என்று ஏவ, உடனே போர் மேல் சென்று போரில் வீர சாவடைந்தார் கற்காட்டை ஆளும் கங்க அதி அரையர். அவர் நினைவில் கல்நாட்டு உடைய பெருங் கங்கர் இந்நடுகல் நிறுத்தினார்.
இக்கல்வெட்டில் குறிக்கப் பெறும் யாவரும் அரசர்களே எளியோர் எவரும் இலர். ஓர் அரசனுக்கு தமிழ்நாட்டில் இது போல் நடுகல் நடப்படுவது அரிதானது. பெருங் கங்கர் தந்தையாக இருக்கலாம். கற்காடு என்பதே களக்காட்டூர் ஆகும். இதில் குறிக்கப்படும் இராட்டிரக்கூடன் துருவன்.
- - - - - - - -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., பக். 147) & (செங். நடு. 71/1978)
ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு / யாண்டு ஒன்பதாவது (அரி) மிறையார் / வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கைமாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்
கோயில் - அரண்மனை; பட்டன்(ர்) - உண்மையாளன்; நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்று; பாரம் - கவசம் (பிங்.) [coat of Mail]; தா - வலிமை, தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்; மகன் - படைஆள், வீரன்; மட்டான் - பட்டான், வீர சாவடைந்தான்.
தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.
பகைவர் எளிதில் அணுகிவிடாதவாறு படைக்குக் கவசமாக ஒரு படைஅணி செயற் பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக உணர்த்துகின்றது. மேற்செங்கை மாப்படை வேணாட்டின் படை ஆகும். கோவூர் அரண்மனைப் படை இறுதியில் தோற்றதாலேயே ஐகன் வீர சாவடைந்த பின்னும் அவனுடன்வந்த பாரமதாயரின் படைஆள்களால் ஆநிரையை மீட்க முடிந்தது. கோயில் என்பது கோஇல் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் கோயில் என்ற சொல் அரசனின் வீடு என்ற பொருளிலேயே வழங்கியது. இக்கல்வெட்டு குறிக்கும் இச் சொல்லின் உட்பொருள் அரசன் அல்லது அரச குடும்பம் என்பதாகும். கோயில் பட்டர் என்றால் அரச குடும்பத்திற்கு விசுவாசமான படைத்தலைவர் (person loyal to palace) என்று பொருள். செங்கையே இன்றைய செங்கம் எனலாம்.
- - - - - - - -
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மடவாளம் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு இது. (தொல். வே. அர., பக்.146)
கோவிசைய ஈச்சுர பருமற்கி / பதிநொன்றாவது மைற்றம்பள் / ளிப் பசுக் கொண்ட ஞான்று / - - - - யார் சேவகர் வெள்ளை ஏறனார் தொறு இடுவித்துப் பட்ட / தொ - - - பா / ழ் ஆள்வார் / மக்கள்
சேவகர் - படைவீரன்; இடுவித்து - விடுவித்து; மக்கள் - மகன் எனும் பொறுப்பு உள்ள படைஅதிகாரி
பரமேச்சுர வர்மனாகலாம் இவர் எனக் கருதப்படும் ஈச்சுர வர்மனின் பதினொன்றாவது ஆட்சி ஆண்டில் மைற்றம்பள்ளி எனும் ஊரின் பசு நிரைகளைக் பகைவர் கவர்ந்த போது (பெயர் சிதைந்த) சிற்றரசரின் படைஆள் வெள்ளை ஏறன் என்பவன் பசுநிரைகளை மீட்டு விடுவித்து வீர சாவடைந்தான். அவனுக்கு தொ(க்கைப்) பாழ் ஆள்வான் என்பவனுடைய மகன் பொறுப்பு அதிகாரி இந்த நடுகல்லை நிறுத்தியவன். வேள் தொக்கை பாழ் ஆளவான் பெயர் சிதைந்த சிற்றரசனின் ஆளுகையை ஏற்றவன் ஆகலாம்.
தமிழின் நான்காம் வேற்றுமை ஆன 'கு' பருமன் என்ற சொல்லில் 'கி ' எனக் குறிக்கப்படுவது பண்டு மக்கள் வழக்கில் அது சில பகுதிகளில் 'கே' என்றும் 'கி' என்றும் சிறு அளவில் வழங்கி இருக்கலாம் என்ற ஊகத்திற்கு இடம் அளிக்கின்றது. மக்களின் இந்த கொச்சை வழக்கே கன்னடத்திலும் தெலுங்கிலும் செம்மை வழக்காக இன்று நான்காம் வேற்றுமைக்கு ஆளப்படுகின்றன என்பது நோக்கத்தக்கது.
- - - - - - - -
தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் அனுமந்தபுரம் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (தொல். வே. அர., பக். 147)
கோவிசைய ஈச்சுரபருமற்கி / யாண்டு பதினேழ்ழாவதன் / கட் காட்டிறைகள் செயிக்க வரசர் / மாற்றுடை சென்று தான் அறுபட்டான் / காட்டிறைகள்
மாற்றுடை - மாறு வேடம்; அறு - வெட்டுப்படு
ஈச்சுர வர்மனுடைய பதினேழாவது ஆட்சி ஆண்டில் பல்வனுக்குக் கீழ்ப்பட்ட அரசன் கள் காட்டிறைகள் போரில் ஈடுபட, தன் அரசனான கள் காட்டிறைகள் போரில் வெற்றி பெறுவதற்காக அவரைப் போல் மாறு வேடம் பூண்டு பகைவரால் போர்க் களத்தில் சூழப்பட்டு அவரால் வெட்டப்பட்டு வீர சாவடைந்தான் காட்டிறைகள் என்பவன்.
காடு + இறை என்பது காட்டை ஆண்ட அரசன் என்று பொருள் தருகின்றது. இந்த காட்டிறைகள் என்பவன் அரசன் கள் காட்டிறைகளின் தம்பியாவோ அல்லது உறவினனாகவோ இருக்கலாம். ஜயம் என்ற சமறகிருதச் சொல்லை மூலமாகக் கொண்டு உருவான ஆன செயிக்க என்ற சொல் வெல்ல என்ற தமிழ்ச் சொல்லுக்கு மாற்றாக இங்கு ஆளப்பட்டுள்ளது. இக்கலப்பு இவர்கள் அரச குடும்பத்தவர் என்பதால் ஆகலாம். ழகரம் இயல்புக்கு மாறாக இங்கு இரட்டித்து உள்ளது.
- - - - - - - -
தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் அனுமந்தபுரம் எனும் சிற்றூரில் மேல் உள்ள கல்வெட்டு நிகழ்வுடன் தொடர்புடையது இந் நடுகல் கல்வெட்டு உள்ளது. (தொல். வே. அர., பக். 147)
கோவிசைய / ஈச்சுர பரும / ற்கி யாண்டு பதினேழ்ழாவத / ன் கட் கணையூர் மாற்றுடைப / டத் தான் அறுபட்டான் காட்டிறைகள் சேவகன் பூதூர் சாத்தன்
படு(பட) - தோன்று; பட்டான் - வீர சாவடைந்தான்
ஈச்சுர வர்மனுடைய பதினேழாவது ஆட்சி ஆண்டில் கள் கணையூர் அரசர் போர்க்களத்தில் மாறுவேடத்தில் தோன்றவே காட்டிறைகளின் படை ஆள் பூதூர் சாத்தன் என்பவன் இதனால் மதிமயக்கமுற்று பகைவரால் சூழப்பட்டு வெட்டுண்டு வீர சாவடைந்தான்.
மேலுள்ள இரு கல்வெட்டுகளையும் ஒப்பு நோக்க கள் காட்டிறைகள் போல மாறுவேடத்தில் காட்டிறைகள் போர்க் களத்தில் போர் புரிந்தது போல் எதிரணியின் அரசன் கள் கணையூரனும் மாறுவேடத்தில் போர்க களத்தில் தோன்றியதால் அவனை எளிதில் அறிய முடியாமல் தேடித் தேடி அவனுடைய படை ஆள்களிடமே சிக்கிப் பூதூர் சாத்தனும் காட்டிறைகளும் வெட்டுப்பட்டு இறந்தனர் என ஒருவாறு ஊகிக்க முடிகின்றது. பண்டு மாறுவேடத்தில் போர்க்களம் செல்வது இயல்பாக நிகழ்ந்துள்ளது என்பதற்கு இக் கல்வெட்டுகள் சான்று ஆகின்றன.
துருக்கியை ஆண்ட மித்தானி அரசர்கள் சாத்த என்ற பெயரைக் கொண்டிருந்தனர் Sattuara I 1320 - 1300 BC > சாத்து அர; அவனுடைய மகன் Vashasatta 1300 - 1280 BC > வச சாத்த(ன்).
- - - - - - - -
வேலூர் மாவட்டம் வாணியம் பாடி வட்டம் ஆலாங்குப்பம் எனும் ஊரில் 9 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று உள்ளது. (ம. காந்தி, ஆவ. இதழ் 11, 2000, பக். 7)
ஸ்ரீ கோவிசைய தந்தி விக்கிரம பரு / மற்க்கு யாண்டு பதின் நா / ல்காவது அடையாறு நாடு ம /லையன்னாராள ஒருகில் மணற் / ச் சுனை மேற் படை வர ஊர் அழியா / மைய் காத்து பட்டான் சத்தி / ம வகிலவன் வீரையர்க் கல் / பென்னை
பல்லவன் தந்திவர்மனுடைய பதினான்காவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 810) அடையாறு நாட்டை மலையன் + ஆர் ஆண்டு கொண்டிருக்க அப்போது அதன் ஒரு பகுதியான ஒருகில் மணற்சுனை மீது பகைப் படை வந்தது. இந்த ஒருகில் மணற்சுனை எனும் ஊர் பகைப்படையால் அழிக்கபபடாமல் காத்துப் போரிட்டு வீர சாவடைந்தான் அவ்வூர் சத்திம வகிலவன் புதல்வன் வீரையன் என்பவன். அவன் நினைவில் பென்னை என்பவர் இந்நடுகல்லை நிறுத்தினார். ஸ்ரீ என்ற கிரந்த எழுத்து மங்கலச் சொல் தந்தி வர்மன் காலத்தில் பல்லவர் கல்வெட்டுகளில் நிரந்தமாக இடம் பிடிக்கத் தொடங்கியது.
- - - - - - - -
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் இந் நடுகல் கல்வெட்டு உள்ளது. (E.I. Vol - IV, Pg 182)
ஸ்ரீ கோ விசைய நிரு / ப தொங்க விக்கிரம பரு / மற்க்கு யாண்டிருபத்தாறாவ / து படுவூர்க் கோட்டத்து மே / ல் அடையறு நாட்டு ஆமையூர் / மேல் நுளம்பன் படை வந்து தொறுக் கொள்ள பிரு / தி கங்கரையர் சேவகர் பெரு / நகர் அகரக் கொண்டக் காவிதி அகலன் கட் / டுவராயர் மகன் சன்னன் தளரா வீழ்ந்து பட்டான்
காவிதி - படைத் தலைவருக்கு அரசன் தரும் ஒரு பட்டம்; தளரா...Show trimmed content
From: seshadri sridharan <ssesh...@gmail.com>
To: seshadri sridharan <ssesh...@gmail.com>
Sent: Sunday, May 13, 2012 4:58 AM
Subject: [MinTamil] நடுகற்கள் கல்வெட்டு காட்டும் வரலாறு மக்கள் மொழி
- show quoted text -...Show trimmed content
N. Ganesan
5/13/12
2300 ஆண்டுகளுக்கு முன் வந்த நடுகல் எழுத்துடையதாக உள்ளது.
தொல்லியல் பேராசிரியர் கா. ராஜன் கண்டுபிடித்தார் [1].
சங்க கால நடுகற்கள் கண்டுபிடிப்பு
- கா. ராஜன்
http://www.keetru.com/puthuezhuthu/jul06/rajan.php
பாராட்டுவோம் - மா. ரா. கலைக்கோவன்:
http://www.varalaaru.com/Default.asp?articleid=339
6 ஆண்டுகளுக்கு முன், என் ஈடு:
http://nganesan.blogspot.com/2006/10/blog-post.html
நா. கணேசன்
[1] இக் கல்வெட்டு பற்றிய விரிவான கட்டுரை Intl. J. of Dravidian
Linguistics, Trivandrum
கா. ராஜன் எழுதியுள்ளார். அதனை அனந்தை தமிழ்ச் சங்கத்தில் வெளியிடும்
பேற்றை
எனக்கு பேரா. வ. ஐ. சுப்பிரமணியம் வழங்கினார்கள்.
seshadri sridharan
5/13/12
Other recipients: swam...@yahoo.com
Translate message to English
2012/5/13 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
//சுவையான கட்டுரைக்கு நன்றி.எழுத்துடை நடுகல் என்ற வரிகள் சங்கப் பாடல்களில் வருவதால் அப்படிப்பட்ட நடுகற்கள் கிடைக்கவில்லை என்றும் அதனால் சங்க காலத்தை பின் தள்ளிப் போட வேண்டும் என்றும் சில தொல்பொருட் துறையினர் வாதாடினர் (25, 30 ஆண்டுகளுக்கு முன்னால்). மிகப் பழைய எழுத்துடை நடுகல் எது? கொஞ்சம் விவரம் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்//
2006 ஆம் ஆண்டு புலிமான்கோம்பு எனும் இடத்தில் மூன்று எழுத்துடை நடுகல்லும். அதே ஆண்டு தாதப்பட்டியில் ஒரு நடுகல் கல்வெட்டும் ஆக பிராமி எழுத்துப் பொறிப்பில் 4 நடுகற்கள் அறியப்பட்டு தொல்லியலாளர் கூற்று அப்போதே தகர்ந்து போனது.
//மேலும் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் எத்தனை நடுகற்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? குத்து மதிப்பாகச் சொன்னாலும் போதும்//.
பேரா. க. ராசனின் South Indian Memorial stones, 2000 எனும் ஆங்கில நூலில் தமிழகத்தில் மொத்தம் 317 நடுகற்கள் அறியப்பட்டதாகவும் அதில்248 கல்வெட்டு கொண்டதாகவும், 69 கல்வெட்டு அற்றதாகவும் சொல்லி உள்ளார். அதன் பின் இந்த 12 அண்டுகளில் சில நடுகற்கள் அறியப்படுட் உள்ளன அவையும் சேர 340 -350 எண்ணிக்கையில் இருக்கும். இதோடு ஆந்திரம் கருநாடகத்திலும் மிகப் பல நடுகற்கள் உள்ளதாக சொல்லுகிறார்கள். அன்பர்கள் எவரேனும் கூட்டாக முயன்றால் அவற்றில் ஆந்திர நடுகற்களை நூலாக பதித்து விடலாம்.. படி ஆந்திரத்தில் உள்ளது.
சேசாத்திரி.
seshadri sridharan
5/13/12
Other recipients: ksuba...@gmail.com, minT...@googlegroups.com
2012/5/13 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அன்புள்ள திரு.சேசாத்ரி,
//. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.
இது சிறிதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு கூற்று. உங்கள் முதல் கட்டுரையிலேயே இது உங்கள் தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்ற வகையில் சொல்லப்படுவது என்ற தோற்றம் வாசிப்போருக்கு தெளிவாகத் தெரிகின்றது. அதோடு இந்தக் கட்டுரையில் அவ்வகை தொடர் விளக்கங்கள் வழங்கப்படவில்லை. ஆக எதனைச் சான்றாகக் கொண்டு மேலை கீழை நாகரிகங்களை தமிழ முன்னோர் ஏற்படுத்தினர் என்று உறுதி செய்கின்ரீர்கள் என்று விளக்கினால் நலம்.//
அம்மணி! நான் ஏற்கெனவே பிற அயல் நாகரிகங்கள் குறித்த கட்டுரைகளில் அரசர் பெயர்களை ஒப்பீடு செய்து அப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களே என்று காட்டினேன் சிலர் ஏற்றார்கள். வினோத்து ராசன் செல்வன், விசயராகவன் போன்றோர் அதை பகடியம் செய்தார்கள்.
கடந்த சனவரி மாதம் நான் செங்கம் நடுகற்கள் எனும் நூலைப் பார்த்த போது அதில் உள்ள நடுகல் பெயர்கள் பிற நாகரிக மன்னர் பெயர்களோடு ஒத்திருக்கக் கண்டேன். எனவே தான் இவ்வளவு உழைப்பெடுத்து கடந்த மூன்றரை மாத காலமாக இந்நடுகல் பெயர்களை பிற நாகரிக மன்னர் களோடு ஒப்பிட்டுக் காட்டுவதற்காகவே இந்த இரு ட்உரகளை வழங்கினேன். இந்த நோக்கம் இல்லாது போயிருந்தால் இவ்வளவு பேரும் படிக்கும் படிக்கும் படியாக நடுகல் கட்டுரைகளை நான் போட்டிருக்க மாட்டேன். இப்போது இக்கட்டுரைகளை படிப்போர் அதை ஏற்கும் மனநிலை பெற்று வருகிறார்கள் என்பதை நான் அறிகின்றேன்.
.
//ஆண்டைகளால் என்பதன் பொருள் என்ன?//
ஆண்டை என்றால் எசமார் என்று பொருள்
//மாண்டவர்க்கான இந்த சிறப்புச் செய்கையானது அடுத்து வரும் தலைமுறையினரை படையின் பால், போரின் பால் ஈர்க்க உதவுவதற்கே எனப் புரிந்து கொள்ளலாம். மாண்ட மறவருக்கு நெய்த்தோர் பட்டி எனும் நிலக்கொடையும் வழங்கப்பட்டன.
இக்கருத்து எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? ஏதேனும் கல்வெட்டுக்களின் சான்றுகளைத்தான் கூரிப்பிடுகின்றீர்கள் எனக் கருதுகிறேன். எந்த குறிப்பிட்ட கல்வெட்டு என்று குறிப்பிட முடியுமா?//
;நெய்த்தோர்பட்டி நிலம் வழங்கப்பட்ட செய்தி பல நடுகற்களில் குறிக்கப்பட்டுள்ளன. பண்டு பண்ட மாற்று இருந்த காலம் என்பதால் கீழ்நிலையில் படை பேணுவோர்(கீராமத் தலைவர், வேள், குறிநிலமன்னர்), தம் இனமக்களைக் கொண்டே படைகளை அமைத்திருந்தனர். அவர்களுக்கு சம்பளம் ஏதம் கிடையாது. எல்லாம் sentimental சேர்க்கை தான். போரில் உயிரிழப்பு உண்டு என்பதால் அவர்களுக்கு நிலக் கொடை இறந்தோருக்கு நினைவுச் சின்னம் போன்றன எழுப்பி தெய்வமாக வழிபடச் செய்து இளையவர்களை உசுப்பு விடுவது ஆகியன் கடைபிடிக்கப்பட்ன.
வேந்தன் என்றால் படைத் தலைவருக்கு ஏனாதி, எட்டி, காவிதி போன்ற பட்டங்கள் சூட்டி அவர்களுக்கு தம் மகள் மகன் வாயிலாக மண உறவு கொள்ளுதல், சிற்றரசர் ஆக்குதல் போன்ற வகையில் இந்த இனப்படைத் தலைவரைக் கவர்நதனர். இதற்கு பல சான்றுகள் உண்டு. இதே நிலை தான் ஆண்டைகள்(படைத் தலைவர்கள்) தம் கீழ் உள்ள எளிய படைவிரனுக்கு செய்தனர். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் யாரும் தம் இன்னுயிரைத் தர முன் வரமாட்டார் என்பதை உணர்ந்தால் இதைப் புரிந்து கொள்லாம். இது மட்டும் அல்ல போரில் தோற்ற நாட்டில் கொள்ளைப் பொருளில் பங்கு, பெண்கள் என பல உண்டு இந்த எளிய படைவீரரைக் கவர.
..//தமிழ்நாட்டில் பல்லவர் கால நடுகற்களில் நல்ல தமிழ்ச் சொற்களும், மக்கள் பேச்சு வழக்குச் சொற்களும் உள்ளன. அவற்றில் ஒரு சமற்கிருதச் சொல்லோ, கிரந்த எழுத்தோ தொடக்கக்கால பல்லவர் நடுகல் கல்வெட்டில் இல்லை.
இது முழுமையான ஆய்வின் அடிப்படையில் கூறப்படும் ஒரு கருத்தா?//
ஆம் திரு. இரா. நாகசாமி, பூங்குன்றன், ச . கிருஷ்ணமூர்த்தி போன்ற தொல்லியலாளர் நூல்களில் பதிவாகி உள்ளது.
//மாறாக சமற்கிருத பெயர்களில் உள்ள சமற்கிருத எழுத்துகளை நீக்கி தமிழ் மரபிற்கு தக்கவாறு அவை தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன.
குறிப்பாக எந்த உதாரணத்தைக் கூறலாம்?//
மஹேந்திர வர்மன் > மஇந்திர பருமர். நரசிம் வர்மன் > நரை சிங்க பருமர். இதற்கு தமிழ்ப் பெயர்க் ஏந்திய நடுகற்கள் என்ற முந்தைய கட்டுரையைப் பார்க்கவும்.
//இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. பிராமண சமூகத்தைச் சார்ந்தோர் பலர் படைத்தலைவர்களாக இருந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அச்சமூகத்தினருள் பலர் படை வீரர்களாக இருந்திருக்கும் சாத்தியம் உள்ளது என்பதே கருதக்கூடியதாக உள்ள கூற்று. படைத்தலைவன் ஆக ஒருவனுக்கு பல ஆண்டு போர் பயிற்சி வேண்டும். வேதம் மட்டும் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு பிராமணரைப் பிடித்து திடீரென்று படைத்தலைவர் ஆக்கும் அளவுக்கு மன்னர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆக என்னுடைய கருத்து பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களும் கூட படைகளில் வீரர்களாக இருந்திருக்கின்றனர் என்பதே//
வேதம் ஓதாமல் போர்த் தொழிலை மேற்கொள்ளும் பிராமணருக்கு பிற பிராமணரிடத்தில் மதிப்பு இல்லை. மகாபாரத் போரைப் படியுங்கள். அதில் எளிய பிராமணர் எவரும் படைஆள்களாய் இருந்ததில்லை. தென்னிந்தியாவில் எளிய பிராமணர் போரில் பங்கு கொண்டதாகப் பதிவுவில்லை. போரில் பங்கு கொள்வதில் இருந்து பிராமணருக்கு விலக்கு அறிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிகின்றது.
.
//கணவன் இறந்ததும் அவன் மனைவியும் இறந்துவிட இருவருக்கும் எடுக்கப்படும் நினைவுச் சின்னம் தான் சதிக்கல். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வடநாட்டில் எளிய மக்களிடத்தும் நிலவிய குமுக வழக்கமாக இருந்தது.
இதற்குச் சான்று தரமுடியுமா? வட நாட்டில் எந்த சமூகத்து மக்களிடையே குமுக வழக்கமாக சதி இருந்தது?//
வடநாட்டில் மேட்டுக்குடி மக்களிடம் இருந்தது. ஆண்டுக்கு பல ஆயிரம் பெண்கள் உடன்கட்டை வழக்கத்தால் மாண்டனர் என்று அயலவர் குறிப்புகள் உண்டு. இராசராம் மோகன் ராய் இதை எதிர்த்து முதன்முதலாக சட்டம் இயற்றப்பாடுபட்டு அதில் வெற்றி பெற்றார்.
சேசாத்திரி
Dev Raj
5/14/12
Translate message to English
நெய்த்தோர்பட்டி -
நெய்த்தோர் என்றால் இரத்தம் சிந்தியவர்கள்
என்று பொருளாகுமா ?
Dr.K.Subashini
5/14/12
Other recipients: minT...@googlegroups.com, ksuba...@gmail.com
Translate message to English
2012/5/13 seshadri sridharan <ssesh...@gmail.com>
,...
இது சிறிதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு கூற்று. உங்கள் முதல் கட்டுரையிலேயே இது உங்கள் தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்ற வகையில் சொல்லப்படுவது என்ற தோற்றம் வாசிப்போருக்கு தெளிவாகத் தெரிகின்றது. அதோடு இந்தக் கட்டுரையில் அவ்வகை தொடர் விளக்கங்கள் வழங்கப்படவில்லை. ஆக எதனைச் சான்றாகக் கொண்டு மேலை கீழை நாகரிகங்களை தமிழ முன்னோர் ஏற்படுத்தினர் என்று உறுதி செய்கின்ரீர்கள் என்று விளக்கினால் நலம்.//
அம்மணி! நான் ஏற்கெனவே பிற அயல் நாகரிகங்கள் குறித்த கட்டுரைகளில் அரசர் பெயர்களை ஒப்பீடு செய்து அப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களே என்று காட்டினேன் சிலர் ஏற்றார்கள். வினோத்து ராசன் செல்வன், விசயராகவன் போன்றோர் அதை பகடியம் செய்தார்கள்.
உண்மைதான். ஆனாலும் அந்த ஒப்பீடுகள் கற்பனை அல்லது அதீத எதிர்பார்ப்பின் அடிப்படையில் நீங்கள் முன் வைக்கும் ஒன்று. உலகின் பல மொழிகளை கேட்கும், வாசிக்கும், பேசும் நிலை வரும் போது பல சொற்கள் தமிழ் மொழியில் உள்ள நாம் அறிந்த சிலசொற்களின் ஒலிகளை ஒத்திருப்பது போல தெரிந்தால் அதனை உடனே நாம் தமிழிலிருந்து தான் அங்கே சென்றது என்று கூறுவது எவ்வகையில் பொருந்தும்? உங்களின் இந்த நிலைப்பாட்டில் எனக்கும் உடன்பாடில்லை.
கடந்த சனவரி மாதம் நான் செங்கம் நடுகற்கள் எனும் நூலைப் பார்த்த போது அதில் உள்ள நடுகல் பெயர்கள் பிற நாகரிக மன்னர் பெயர்களோடு ஒத்திருக்கக் கண்டேன். எனவே தான் இவ்வளவு உழைப்பெடுத்து கடந்த மூன்றரை மாத காலமாக இந்நடுகல் பெயர்களை பிற நாகரிக மன்னர் களோடு ஒப்பிட்டுக் காட்டுவதற்காகவே இந்த இரு ட்உரகளை வழங்கினேன். இந்த நோக்கம் இல்லாது போயிருந்தால் இவ்வளவு பேரும் படிக்கும் படிக்கும் படியாக நடுகல் கட்டுரைகளை நான் போட்டிருக்க மாட்டேன். இப்போது இக்கட்டுரைகளை படிப்போர் அதை ஏற்கும் மனநிலை பெற்று வருகிறார்கள் என்பதை நான் அறிகின்றேன்.
இது உங்களது எதிர்பார்ப்பு. பரவலான பல்வேறு நாகரிக மொழி சமூக அமைப்பில் வாழும் அனுபவம் வாய்ந்தவர்கள் இக்கருத்துக்களுடன் உடன் பட மாட்டார்கள். விருப்பம் என்பது வேறு ஆய்வு என்பது வேறு. மன்னர்களின் பெயர்கள் ஒத்துள்ளது. ஆக தமிழ் மன்னர்கள் அங்கெல்லாம் சென்று ஆட்சி செய்தனர் என்பது கற்பனை வாதமே.
.
//ஆண்டைகளால் என்பதன் பொருள் என்ன?//
ஆண்டை என்றால் எசமார் என்று பொருள்
விளக்கத்திற்கு நன்றி.
//மாண்டவர்க்கான இந்த சிறப்புச் செய்கையானது அடுத்து வரும் தலைமுறையினரை படையின் பால், போரின் பால் ஈர்க்க உதவுவதற்கே எனப் புரிந்து கொள்ளலாம். மாண்ட மறவருக்கு நெய்த்தோர் பட்டி எனும் நிலக்கொடையும் வழங்கப்பட்டன.
இக்கருத்து எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? ஏதேனும் கல்வெட்டுக்களின் சான்றுகளைத்தான் கூரிப்பிடுகின்றீர்கள் எனக் கருதுகிறேன். எந்த குறிப்பிட்ட கல்வெட்டு என்று குறிப்பிட முடியுமா?//
;நெய்த்தோர்பட்டி நிலம் வழங்கப்பட்ட செய்தி பல நடுகற்களில் குறிக்கப்பட்டுள்ளன.
ஒரு உதாரணம் தாருங்கள். எனக்கு இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு நடுகல்லின் பெயரை வழங்க முடியுமா? தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்கிறேன்.
..//தமிழ்நாட்டில் பல்லவர் கால நடுகற்களில் நல்ல தமிழ்ச் சொற்களும், மக்கள் பேச்சு வழக்குச் சொற்களும் உள்ளன. அவற்றில் ஒரு சமற்கிருதச் சொல்லோ, கிரந்த எழுத்தோ தொடக்கக்கால பல்லவர் நடுகல் கல்வெட்டில் இல்லை.
இது முழுமையான ஆய்வின் அடிப்படையில் கூறப்படும் ஒரு கருத்தா?//
ஆம் திரு. இரா. நாகசாமி, பூங்குன்றன், ச . கிருஷ்ணமூர்த்தி போன்ற தொல்லியலாளர் நூல்களில் பதிவாகி உள்ளது.
எந்த குறிப்பிட்ட கட்டுரையில் / நூலின் பக்கத்தில் இந்த தொல்லியல் அறிஞர்கள் இச்செய்தியைக் குறிப்பிடுகின்ரார்கள் என்று கூறுங்கள். இதுவும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்.
//மாறாக சமற்கிருத பெயர்களில் உள்ள சமற்கிருத எழுத்துகளை நீக்கி தமிழ் மரபிற்கு தக்கவாறு அவை தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன.
குறிப்பாக எந்த உதாரணத்தைக் கூறலாம்?//
மஹேந்திர வர்மன் > மஇந்திர பருமர். நரசிம் வர்மன் > நரை சிங்க பருமர். இதற்கு தமிழ்ப் பெயர்க் ஏந்திய நடுகற்கள் என்ற முந்தைய கட்டுரையைப் பார்க்கவும்.
நன்றி
//இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. பிராமண சமூகத்தைச் சார்ந்தோர் பலர் படைத்தலைவர்களாக இருந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அச்சமூகத்தினருள் பலர் படை வீரர்களாக இருந்திருக்கும் சாத்தியம் உள்ளது என்பதே கருதக்கூடியதாக உள்ள கூற்று. படைத்தலைவன் ஆக ஒருவனுக்கு பல ஆண்டு போர் பயிற்சி வேண்டும். வேதம் மட்டும் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு பிராமணரைப் பிடித்து திடீரென்று படைத்தலைவர் ஆக்கும் அளவுக்கு மன்னர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆக என்னுடைய கருத்து பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களும் கூட படைகளில் வீரர்களாக இருந்திருக்கின்றனர் என்பதே//
வேதம் ஓதாமல் போர்த் தொழிலை மேற்கொள்ளும் பிராமணருக்கு பிற பிராமணரிடத்தில் மதிப்பு இல்லை. மகாபாரத் போரைப் படியுங்கள்.
மதிப்பு இருந்ததா இல்லையா என்பது எனது கேல்வியல்ல. பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள் படைகளில் இல்லை என்ற உங்கள் கூற்றை நான் மறுக்கின்றேன். அதற்கு நான் சொல்லும் காரணம் படைத் தலைவராக சேனாதிபதியாக ஒரு பிராமண சமூகத்தைச் சார்ந்தவர் இருந்திருப்பாரேயானால் படை வீரராகவும் இருந்திருப்பர். இது சாதாரண லோஜிக்கல் திங்கிங் என்பதன் அடிப்படையில் வைக்கும் கருத்து.
அதில் எளிய பிராமணர் எவரும் படைஆள்களாய் இருந்ததில்லை. தென்னிந்தியாவில் எளிய பிராமணர் போரில் பங்கு கொண்டதாகப் பதிவுவில்லை.
பங்கு கொண்டதாக பதிவு இல்லை என்பதால் அறவே இல்லை என்று முடிவு செய்வது பொருந்தாது என்பதே என் கூற்று. தமிழகம், ஆந்திரா, கர்னாடகா மானிலங்களில் இன்னமும் படியெடுக்கப்படாத, சிதைந்த பல கல்வெட்டுக்கள் உள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆக புதிய செய்திகள் வரலாறு எனும் போது மென்மேலும் அறியப்படலாம். அதுவரை சந்தேகத்திடமுள்ளதாக மட்டுமே இவ்வகை கருத்துக்கள் கருதப்படலாமே தவிர முடிந்த முடிவாக கொள்ளப்பட முடியாது.
சுபா
போரில் பங்கு கொள்வதில் இருந்து பிராமணருக்கு விலக்கு அறிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிகின்றது.
.
//கணவன் இறந்ததும் அவன் மனைவியும் இறந்துவிட இருவருக்கும் எடுக்கப்படும் நினைவுச் சின்னம் தான் சதிக்கல். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வடநாட்டில் எளிய மக்களிடத்தும் நிலவிய குமுக வழக்கமாக இருந்தது.
இதற்குச் சான்று தரமுடியுமா? வட நாட்டில் எந்த சமூகத்து மக்களிடையே குமுக வழக்கமாக சதி இருந்தது?//
வடநாட்டில் மேட்டுக்குடி மக்களிடம் இருந்தது. ஆண்டுக்கு பல ஆயிரம் பெண்கள் உடன்கட்டை வழக்கத்தால் மாண்டனர் என்று அயலவர் குறிப்புகள் உண்டு. இராசராம் மோகன் ராய் இதை எதிர்த்து முதன்முதலாக சட்டம் இயற்றப்பாடுபட்டு அதில் வெற்றி பெற்றார்.
சேசாத்திரி
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
seshadri sridharan
5/14/12
Re: [MinTamil] Re: நடுகற்கள் கல்வெட்டு காட்டும் வரலாறு மக்கள் மொழி
Translate message to English
ஆம் ஐயா! அதற்காக மன்னன் வழங்கும் நிலக்கொடை தான் நெய்த்தோர்பட்டி. இது நேத்தார்பட்டி என கொச்சையாக கூறப்படுவதுண்டு.
2012/5/14 DEV RAJ <rde...@gmail.com>
நெய்த்தோர்பட்டி - நெய்த்தோர் என்றால் இரத்தம் சிந்தியவர்கள் என்று பொருளாகுமா ?
seshadri sridharan
5/14/12
Re: [MinTamil] Re: நடுகற்கள் கல்வெட்டு காட்டும் வரலாறு மக்கள் மொழி
Other recipients: ksuba...@gmail.com
Translate message to English
2012/5/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
//உண்மைதான். ஆனாலும் அந்த ஒப்பீடுகள் கற்பனை அல்லது அதீத எதிர்பார்ப்பின் அடிப்படையில் நீங்கள் முன் வைக்கும் ஒன்று. உலகின் பல மொழிகளை கேட்கும், வாசிக்கும், பேசும் நிலை வரும் போது பல சொற்கள் தமிழ் மொழியில் உள்ள நாம் அறிந்த சிலசொற்களின் ஒலிகளை ஒத்திருப்பது போல தெரிந்தால் அதனை உடனே நாம் தமிழிலிருந்து தான் அங்கே சென்றது என்று கூறுவது எவ்வகையில் பொருந்தும்? உங்களின் இந்த நிலைப்பாட்டில் எனக்கும் உடன்பாடில்லை//
ஓரிரண்டு பெயர்கள் என்றால் நீங்கள் சொல்வது சரி எனலாம்.ஆனால் எதியோபியா, துருக்கி, கொரியா, சப்பான் என பல நாகரிகங்களில் ன்னர் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக தமிழாக உள்ளன என்பதை நோக்கியும் மதங்கள் தோன்றிய பின் அவை மாறுபட்டிருப்பதும் என் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
. //இது உங்களது எதிர்பார்ப்பு. பரவலான பல்வேறு நாகரிக மொழி சமூக அமைப்பில் வாழும் அனுபவம் வாய்ந்தவர்கள் இக்கருத்துக்களுடன் உடன் பட மாட்டார்கள். விருப்பம் என்பது வேறு ஆய்வு என்பது வேறு. மன்னர்களின் பெயர்கள் ஒத்துள்ளது. ஆக தமிழ் மன்னர்கள் அங்கெல்லாம் சென்று ஆட்சி செய்தனர் என்பது கற்பனை வாதமே.//
ஏற்கெனவே ஒரு கருத்தைக் கொண்டவர்கள் சட்டென்று இக்கருத்தை ஏற்கமாட்டார்கள். காலமாற்றம் கருத்து மாற்றத்திற்கு வழிகோளும்.
//ஒரு உதாரணம் தாருங்கள். எனக்கு இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு நடுகல்லின் பெயரை வழங்க முடியுமா? தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்கிறேன்.//
இதை அரசன் செறு என்றும் சொல்லுவர் . தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் என்ற கட்டுரையில் உள்ளது
//இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. பிராமண சமூகத்தைச் சார்ந்தோர் பலர் படைத் தலைவர்களாக இருந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அச்சமூகத்தினருள் பலர் படை வீரர்களாக இருந்திருக்கும் சாத்தியம் உள்ளது என்பதே கருதக்கூடியதாக உள்ள கூற்று//
இந்தக் கூற்று பிராமணருக்குப் பொருந்தாது. அரச குமாரருடன் போர்ப் பயிற்சி பெற்ற படைத்தலைவர், அமைச்சர் பிள்ளைகள் நேரடியாக அரசரால் தம் நிலைப் படையில் சிறியநிலை படைத்தலைவராய் அமர்த்தப்பட்டு மேன்மேலும் பதவி உயர்த்தப்பட்டiவர்கள் தான் இவர்கள். இன்றும் படை அதிகாரிகள் தனியே தெரிந்து எடுக்கப்படுவதை நோக்குக.
// இது சாதாரண லோஜிக்கல் திங்கிங் என்பதன் அடிப்படையில் வைக்கும் கருத்து//
பொதுவான கருத்திற்கு தான் ஏரணம் (logic). இது சிறப்பு வழி (special category) .
சேசாத்திரி
--
seshadri sridharan
5/15/12
Translate message to English
இந்த இரு காசு படங்களையும் ஒட்டி மின் தமிழ் மரபு சேகரத்தில் இக்கட்டுரையை சேமித்து விடுங்கள் சுபா!
சேசாத்திரி
2012/5/13 seshadri sridharan <ssesh...@gmail.com>
அம்மணி சுபா,
இந்த கட்டுரையில் பிராமண நடுகல், நவக்கண்ட நடுகல், சதிக்கல், நாய்க்கு நடுகல் என 50 நடுகல் கல்வெட்டுகளுக்கு விளக்கம் அளித்து உள்ளேன். என்னுடைய 50 நாள் உழைப்பு இது. இந்த கட்டுரையை தமிழ் மரபு விக்கி சேமிக்க வேண்டுகிறேன்.
சேசாத்திரி
2012/5/13 seshadri sridharan <ssesh...@gmail.com>
நடுகற்கள் கல்வெட்டு காட்டும் மக்கள் வரலாறு மக்கள் மொழி
எளிய மக்கள் வரலாறு மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை ' தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ' என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன.
நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த் தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன் குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை எண்ணுக.
ஒரு வேந்தனுடைய வெற்றியைத் தீர்மானிகக அவன் உடைய நிலைப்படை மட்டும் அல்லாது மன்னர், சிற்றரசர், வேள், கிழார்கள் நல்கும் துணைப்படை உதவியும் இன்றியமையாத இடம் பெற்று இருந்தது. இதனால் வேந்தனுடைய ஆட்சிப் பரப்பில் அடங்கிய நிலம் ஊர், நாடு, கோட்டம், மண்டலம் என பிரிக்கப்பட்டு முறையே கிழார்கள், வேள், சிற்றரசர், மன்னர் அல்லது மாமன்னர் என்போரால் ஆளப்பட்டன. இவர்கள் தத்தம் நிலைக்குத் தக்கவாறு தம் படைக்கு ஆள் சேர்த்து பயிற்சி அளித்தும், படையை ஒழுங்கமைத்தும், பேணியும் வரவேண்டும் என்பது பொறுப்பு. இப்பொறுப்பிற்காக இவர்களுக்கு வேந்தனோ மாமன்னனோ பணம் ஒதுக்குவதில்லை மாறாக இவர்கள் ஆளும் பகுதியில் வரி திரட்டி அதில் ஒரு பங்கைத் தம் படைப் பேணலுக்குச் செலவிட்டு இன்னொரு பங்கைக் கப்பமாகத் தன் மேல்ஆட்சியாளனுக்கு செலுத்த வேண்டும் என்பது ஒரு வழிவழி உடன்பாடு.
எனவே நிலமும் கப்பத் தொகையும் படைப் பேணலுக்கு ஒரு முகாமையான பங்கைப் பெற்றிருந்தன என்பது தெளிவு. இதில் முறண் ஏற்படும் போது மேலாட்சியாளன் தூண்டுதலில் கீழ் உள்ள இரு அதிகார நிலையினர் இடையே போர் மூளுகின்றது. அதே நேரம் வெளியே இருந்தும் பிற வேந்தரால் போர் திணிக்கப்படுவதும் உண்டு. நிலக்கட்டுப்பாடு ஆதிக்கமே பெரும்பால் போருக்கு வழிகோளின எனலாம். ஏனெனில் அதுவே படைக்கு வேண்டிய செல்வத்தை உண்டாக்க வல்லது. இதனால் படைத் தொடர்பான ஆள்திரட்டல், பேணல் ஆகிய தகுதிகளை நோக்கியே சிற்றரசர் (அரைசர்), வேள், கிழார் என்போர் மன்னர்களாலும், வேந்தர்களாலும் அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டனர். பலவேளைகளில் புதிதாக அப்பொறுப்புகளில் அவர்கள் அம்ர்த்தப்பட்டனர் என்றே கொள்ளலாம். இந்த தகுதி கருதியே வேட்டுவர், புலையர், வணிகர் பரவர் என குமுகத்தின் எல்லாத் தரப்பினரில் இருந்தும் தக்கவர் இப்பதவிகளில் இருந்ததை நடுகல் கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. தீண்டாமையும், குமுக ஒடுக்குமுறையும் விசயநகர ஆட்சி தமிழகத்தில் ஏற்படும் வரை ஆழமாக வேர் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.
நாடுபிடிச் சண்டைக்கு ஆநிரைப் போர் ஒரு தொடக்கச் சடங்காக வழவழி மரபாக மேற்கொள்ளப்பட்டு வந்து உள்ளது. தொறு கவரும் வெட்சிப் போர் தரப்பினரிலும், தொறு மீட்கும் கரந்தைப் போர் தரப்பினரிலும் பல வீரர்கள் மாண்டனர். இப் போர்களில் வீர சாவடைந்த மறவர்களை சிறப்பித்தும் தெய்வமெனத் தொழவும் அது பொருட்டு மாண்ட வீரரின் உறவினர்களால் அல்லது ஆண்டைகளால் அவர் நினைவில் நிறுத்தப்பட்டவையே நினைவு கற்கள் எனும் நடுகற்கள். மாண்டவர்க்கான இந்த சிறப்புச் செய்கையானது அடுத்து வரும் தலைமுறையினரை படையின் பால், போரின் பால் ஈர்க்க உதவுவதற்கே எனப் புரிந்து கொள்ளலாம். மாண்ட மறவருக்கு நெய்த்தோர் பட்டி எனும் நிலக்கொடையும் வழங்கப்பட்டன. இந்நடுகற்களில் ஒரு நடைமுறைக்காவே (formality) வேந்தனின் பெயரும் அவன் ஆட்சி ஆண்டும் குறிக்கப்பட்டன. பெரும்பாலும் வேந்தனுக்கு இதில் நேரடித் தொடர்பு கிடையாது. நடுகல்லின் ஏனைய செய்திகள் யாவும் எளிய வீரனைப் பற்றியவை. இக் கல்வெட்டுகள் நிகழ்ந்த போரின் காட்சிகளை உள்ளபடியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துபவை. இதில் விவரிக்கப்படும் வரலாற்று நிகழ்வு எளியோருடைது, படிக்கப் படிக்க தீஞ்சுவை ஊட்டுவது.
தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி தொடங்கி அடுத்தடுத்து வந்த அரசர்கள், சமணர், பௌத்தர், பிராமணர், நாடு பெயரும் வணிகர் என 3% அளவேயான மக்கள் தமிழுடன் பிராகிருத சமற்கிருத சொற்களைக் கலந்து செயற்கையான ஒரு மொழியை உண்டாக்கி மற்ற 97% அளவுள்ள மக்களுக்கு விளங்காத அந்த செயற்கை மொழியில்தான் செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓலை ஒப்பந்தங்கள் என எல்லா ஆவணங்களையும் வெளியிட்டனர். அம் மொழியிலேயே மத புராண இலக்கியங்களையும் உண்டாக்கினர். இந்த செயற்கை மொழி இன்னும் கீழ்மட்டத்தில் உள்ளோரின் வழக்கு மொழியாகப் பரவுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆயின. அதுவரை அந்த 97% மக்கள் தம்முன்னோர் பேசிய பேச்சு வழக்கு மொழியையும் அதன் இலக்கிய நடையையுமே கைக்கொண்டனர். ஆயினும் மக்கள் மொழியின் தன்மை, நிலை குறித்து அறிய அம்மக்கள் நிறுத்திய நடுகல் கல்வெட்டுகள் மட்டுமே சான்றாக உள்ளன. இவ்வாறான கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிகச் சிலவே ஆகும் (2%). மாறாக அறிஞர்கள் கருத்தில் கொள்ளும் செயற்கை மொழியில் அமைந்த 98% உள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் 3% அளவே உள்ள மக்களால் ஆக்கப்பட்டவை என்பதை அறிஞர்கள் உணரவில்லை. இதனால் அறிஞர்கள் மக்கள் மொழி குறித்து அறிவிக்கும் முடிவுகள் யாவும் தவறானவையாக உள்ளன. காட்டாக, தொடக்கக் கால மலையாள இலக்கியங்கள் நம்பூதிரி பிராமணர் மற்றும் அரசரால் செயற்கைக் கலவை மொழியில் ஆக்கப்பட்டன. ஆனால் மக்கள் மொழி என்னவோ இதனினும் வேறுபட்ட வட்டார வழக்குத் தமிழாய் இருந்தது என்பதே உண்மை. இப்படித் தான் ஆந்திரத்திலும், கருநாடகத்திலும் மக்கள் மொழி அரைத் தமிழாய் இருந்து உள்ளது. ஆனால் அரசருடைய கல்வெட்டு, செப்பேட்டு மொழி செயற்கைக் கலவை மொழியில் அமைந்திருந்தது என்பதற்கு அங்கத்து நடுகல் கல்வெட்டுகளே சான்று.
தமிழ்நாட்டில் பல்லவர் கால நடுகற்களில் நல்ல தமிழ்ச் சொற்களும், மக்கள் பேச்சு வழக்குச் சொற்களும் உள்ளன. அவற்றில் ஒரு சமற்கிருதச் சொல்லோ, கிரந்த எழுத்தோ தொடக்கக்கால பல்லவர் நடுகல் கல்வெட்டில் இல்லை. மாறாக சமற்கிருத பெயர்களில் உள்ள சமற்கிருத எழுத்துகளை நீக்கி தமிழ் மரபிற்கு தக்கவாறு அவை தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டு உள்ளன. நடுகல்லில் உள்ள மொழி வழக்கு சங்ககாலத்தின் இடையறாத தொடர்ச்சியே எனலாம். ஆந்திரம் கருநாடகம் போல தமிழகத்தில் இதுவரை பிராகிருத, சமற்கிருத நடுகல் கல்வெட்டு ஒன்று கூட அறியப்படவில்லை. இதற்கு காரணம் தமிழகத்தில் நடுகல் கல்வெட்டுகளை மக்களே, மாண்ட வீரரின் உறவினரே பொறித்தனர். மன்னர், வேந்தர் எவரும் நடுகல் பொறித்திடவில்லை. அவருக்கும் நடுகல் பொறிக்கப்படவில்லை. அப்படிப் பொறித்திருந்தால் அதை செயற்கைக் கலவை மொழியிலேயே பொறித்திருப்பர் எனலாம். ஒரிரு சமற்கிருத சொல் கொண்ட நடுகல் ஒன்றிரண்டு சிற்றரசர்களுடையன ஆகும். இரண்டாம் நந்தி வர்மப் பல்லவனுக்குப் பிறகு தமிழ் எழுத்திலும் நடுகற்கள் வெட்டப்பட்டு உள்ளன. தந்தி வர்மன் காலம் வரை நடுகல் கல்வெட்டுகள் சுருக்கமாகவே இருந்து உள்ளன. இதன் பின் பல்லவர் கால நடுகற்கள் சற்றே விரிவாக உள்ளன. தந்திவர்மனுக்கு முற்பட்ட நடுகற்களில் ஆண்டு எண்கள் எழுத்துகளிலேயே குறிக்கப்பட்டன. சோழர் கால நடுகல் கல்வெட்டுகளில் மொழி ஆளுமையும் சொல் ஆளுமையும் மாறுபட்டிருப்பதை உணர முடிகின்றது. சமய எழுச்சி காரணமாக தமிழகத்தில் சோழர் ஆட்சியில் நடுகல் வழக்கம் குன்றி விட்டது. ஆனால் அடித்தட்டு மக்களிடம் நடுகல் ஒரு வழிபாடாக இன்றும் நிலவி வருகின்றது. இனி, மக்கள் வரலாற்றை, மக்கள் மொழியை நேரடியாக கல்வெட்டு பொறிப்பில் அதன் விளக்கத்தோடு காணலாம்.
மேற்கோல் நூல் சுருக்கம்
செங். நடு. > செங்கம் நடுகற்கள்
தரும. கல். > தருமபுரி கல்வெட்டுகள்
நடு. > நடுகற்கள்
ஆவ. இதழ் > ஆவணம் இதழ்
தரு. நடு. அகழ் > தருமபுரி நடுகல் அகழ்வைப்பகம்
தொல். வே. அர. > தொல்குடி - வேளிர் - அரசியல்
கிரு. மா. கல். > கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
S. I. I. > South Indian Inscriptions, ASI
E. I. > Epigraphica Indica
E.C. > Epigraphica Carnatica
பொருள் கொள்ள உதவிய அகராதிகள்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (செ. சொ. பி)
Monier - williams, A Sanskrit English dictionary, 1899
பிராமண நடுகல்
பிராமணர் படைத் தலைவர்களாய் இருந்துள்ளனர் என்றாலும் அவருள் எளியோர் எவரும் போரில் பங்கு பெற்று உயிர் துறந்த செய்தி இல்லை. ஒரு கோயில் மேலாளரான தன் ஆசானைப் பூசகன் தாக்கிக் கொல்ல வந்த போது அவருடைய மாணாக்கன் அதை தடுக்க முற்பட்டுள்ளான். அதனால் ஆத்திரமுற்ற கோயில் பூசகன் மாணாக்கனைக் கொன்று உள்ளான். அவனுடைய வீரத்தை மெச்சி அவனது ஆசான் அவனுக்கு நடுகல் நிறுத்தி உள்ளார். இது மிக அரிதான ஒரு நிகழ்ச்சி. கல்வெட்டுச் செய்தி ப்ல்லவனையும் சோழனையும் இணைத்து ஒரு நூற்றாண்டு கால நிகழ்வை ஒருசேர குறிப்பது தான் முரணாக உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் சென்னி வாய்க்கால் எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் கோபுர வாயிலில் ஒரு நடுகல் உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. (S.I.I. Vol. 12 No. 56 (ARN NO 144 of 1928-29)
ஸ்வதிஸ்தி ஸ்ரீ தெள் / ளாற்றெறிந்து / ராஜ்ய(மு)ங் கொ / ண்ட நந்திப் / பொத்தரையர்(க்) / கு யாண்டு இரு / பத்தொன்றாவது / பராந்தக புரத் / து அறிந்தி / கை ஈஸ்வர க்ர / ஹம் ஸரஸ்த / தாலுடையொ / ரும் - - - / - - - தளி / யிலாதாகி நின்ற bhaட்டரென் மாவலியநி / dhaஸ்தாந மாள்வான் செ(வணற்குண்டு) கொ / ண்டு வந்து மடமுஞ் சுட்டுக் காத்த ஷிguர / வரையு மெறிந்து இவர் ஷிஷ்யந் ஒரு ப்ராம் / ஹனன் சத்திமுற்றத் தேவந் றுண்டு ப / ட்டான் வல்லுவ(னாட்)டான்
ராஜ்யம் - அரசு; க்ரஹம் - கோயில், வீடு; ஸரஸ்த(sa-rush) - சினம், கோவம், கடுகடுப்பான [anger, enraged] : Bhaட்டரென் - கோவில் பூசகன்; இdhaஸ்தாநம் - இந்த கோயில் [this domain, region (of gods)] ; ஷிguரவன்(शिग्रु) - அப்படியாகப்பட்ட மனிதர் (of a man) ; ஷிஷ்யன் - மாணாக்கன்; ப்ராம்ஹனன் - வேதவினை மறையவன் (இவை யாவும் சமற்கிருதச் சொற்கள்)
போத்தரையன் - பல்லவன்; தால் - நாவு; தளி - கோயில்; மாவலியன் - வலிமை மிக்கவன்; உண்டு - உணவு, சோறு; மடம் - மடைப்பள்ளி; சுட்டு - விறகுஎரித்து சமை(வடை சுடு என்பதை நோக்குக); காத்த - பேணிய (Maintain); எறிந்து - அழித்து; துண்டு - வெட்டப்பட்டு; பட்டான் - வீரசாவடைந்தான்
மூன்றாம் நந்தி வர்மப் பல்லவனுடைய தெள்ளாற்றுப் போர் வெற்றியையும் அவன் தன் நாட்டாட்சியை மீட்டதையும் சிறப்பித்துக் கூறும் இக்கல்வெட்டு அவனுடைய இருபத்தொன்றாம் ஆட்சி ஆண்டு (868 CE) நிகழ்வு ஒன்றை நடுகல்லில் குறித்து உள்ளது. பராந்தகபுரமான இச்சென்னிவாய்க்கால் அறிஞ்சிகை ஈச்சுவரச் சிவன் கோயிலில் கோபத்துடனும் கடுகடுப்புடனும் பேசும் நாவுடையவரும், கோயிற் பணி இழந்த உடல் வலிமை மிக்க இக் கோயில் பூசகனான பட்டரன் இக்கோயில் நிருவாகம் ஆளும் செவணருக்கு சோறு கொண்டு வந்தும், கோயில் மடைப்பள்ளியில் விறகுஎறித்து திருத்தளிகைக்கான சமையற் பணியைப் பேணியும் வருகின்ற அப்படியாகப்பட்ட மனிதரைத் தாக்கி அழித்ததோடு அல்லாமல் செவணரின் மாணாக்கனான சத்திமுட்டத் தேவன் என்ற பிராமணனைத் துண்டாக வெட்டிக் கொன்றான். இந்த சத்திமுட்டத் தேவன் வள்ளுவ நாட்டினன்.
மேற் கூறிய கருத்திற்கு இணங்க இக்கல்வெட்டில் இடம்பெறும் மாந்தர்களான பட்டரன், செவணர், சமையல்காரன், சத்தி முற்றத் தேவன் ஆகியோர் பிராமணர் என்பதால் இக்கல்வெட்டில் எட்டு சமற்கிருத சொற்கள் திணிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மக்கள் வழக்கு மொழி தமிழை நன்கு அறிந்திருந்தாலும் மதப்பற்று, தம் சமற்கிருத புலமை காட்டல் ஆகியவற்றின் காரணமாக செயற்கைக் கலவையாக ஒரு மொழியை உருவாக்கி உள்ளார்கள். இவ்வாறான மொழிநடை உள்ள மதத்துறை, ஆட்சித்துறைக் கல்வெட்டுகளும், செப்பேடுகளுமே அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு பெருவாரியான மக்கள் பேச்சு மொழி இது என்று அறிஞர்கள் தீர்மானிப்பது தவறானது எனலாம். இந் நடுகல்லை நட்டு கல்வெட்டு பொறிக்க ஏற்பாடு செய்தவர் செவணர் என்பது புலனாகின்றது. பட்டரன் வேலையில் ஏதோ குற்றம் புரிய அவனைப் பணியில் இருந்து செவணர் நீக்கியதால் கோயில் வேலை இழந்து பிழைப்பிற்கு வழியின்றிப் போகவே அதற்கு பழிதீர்க்கும் எதிர்வினையாகச் செவணரை பட்டரன் கொல்ல் முற்பட்டுள்ளான் என ஊகிக்க முடிகின்றது.
தென்னிந்திய நடுகற்கள் எனும் நூலில் இக்கல்வெட்டிற்கு விளக்கம் கூறியுள்ள வெங்கட சுப்பைய்யர் பெரு வலிமையன் என்ற பொருளுடைய மாவலியன் என்ற சொல்லை மாவலிவாணராயன் என்ற வாண மன்னனாகத் தவறாகப் உணர்ந்து அதனுடன் பொருத்தி, அவன் வடக்கே இருந்து படை எடுத்து வந்து மடைப்பள்ளி என்ற பொருளுடைய மடம் என்ற சொல்லை துறவிகள் மடம் எனத் தவறாகப் பொருள் கொண்டு அவன் மடத்தையும் அழித்து அதைத் தடுக்க வந்த சத்திமுற்றத் தேவனை அம்பால் கொன்றுவிட்டதாகவும் சொல்லி உள்ளது மேற்சொன்ன கல்வெட்டு விளக்கத்துடன் பொருந்தி வராததை உணரமுடிகின்றது.
நாராய் ! நாராய்! செங்கால் நாராய்! என்ற சங்கப் பாடலில் இடம்பெறும் சத்திமுற்றத்தைச் சேர்ந்தவன் என்பது இவன் பெயராலும் அது குமரி மாவட்டத்தில் உள்ள ஊர் என்பது வள்ளுவ நாடன் என்ற கருத்தாலும் வெளிப்படுகின்றது. றகரம் பண்டு டகரமாய் ஒலித்தது. அதன்படி முற்றம் முட்டம் எனப் பலுக்கப்படல் வேண்டும். சத்தன் என்ற ஆள் பெயர் இகர ஈறு பெற்று சத்தி என வழங்கும். தமிழ முன்னோர் அயல் நாகரிகங்களை அமைத்தனர் என்பதற்குச் சான்றாக சில அயல் நாகரிக மன்னர் பெயர்கள் தமிழாக உள்ளன. அதில் துருக்கியின் ஒரு மித்தானி அரசன் பெயர் Suttarna I 1490 - 1470 BC > சத்தரண(ன்). அதே போல் ஒரு Gija வழிவந்த கொரிய மன்னன் பெயர் Sudo 634 - 615 BC > சத்த(ன்)
- - - - - - - -
நவக்கண்ட நடுகல்
பிறர் நலன் கருதி ஆடவர் தம் இன்னுயிரைத் தாமே தற்கொலையாக தெய்வத் திருவுரு முன் தம்மை பலியிட்டு உள்ளனர். தமிழில் இது தலைப்பலி எனப்பட்டது. தெலுங்கில் மிடிதலா அல்லது கண்டதலா என்று அழைக்கப்பட்டது. கன்னடர் இதை சிடிதலா என்றனர். தம் உடலை ஒன்பது துண்டுகளாக, ஒன்பது பாகமாகக் கூர்மையான வாளால் தாமே வெட்டிக் கொள்வது நவக்கண்டம் ஆகும். அவ்வாறான ஒரு நவக்கண்ட செய்தி கூறும் கல்வெட்டு கீழே:
நெல்லூர் மாவட்டம் கூடூர் வட்டம் மல்லாம் எனும் சிற்றூரில் உள்ள சுப்ரமணியர் திருக்கோயிலின் செவ்வகக்கல்லில் நவக் கண்டம் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டாக பதிவாகி உள்ளது. இதன் காலம் 9 ஆம் நூற்றாண்டு. (S.I.I. Vol. 12 No. 106 / A.R.N No.498 of 1908).
ஸ்ரீ கம்ப பருமற்கு யாண்டு இருபதாவது (ப)ட்டை பொ(த்) / த(னு)க்கு ஒக்கொண்ட நாகன் ஒக்கதிந்தன் பட்டை பொத்தன் மே / (தவம்) புரிந்த தென்று bhaடாரிக்கு நவக் கண்டம் குடுத்து / (குன்றகத்) தலை அறுத்துப் பிடலிகை மேல் வைத்தானுக்கு தி / ருவான்முர் ஊரார் வைத்த பரிசாவது எமூர்ப் பறைகொட்டிக் கல்(மெ) / (டு செய்தாராவிக்கு)க் குடு(ப்) பாரானார் பொத்தனங் கிழவர்களும் தொ (று) / (ப்ப)ட்டி நிலம் குடுத்தார்கள் இது அன்றென்றார் கங்கயிடைக் குமரிஇ / (டை) எழுநூற்றுக் காதமும் செய்தான் செய்த பாவத்துப் படுவா /ர் அன்றென்றார் அனறாள் கோவுக்கு காற்ப் பொன் றண்டப் படுவார்.
பட்டை (பட்டம்) - ஒரு பறை வகை; பொத்தன் - அடிப்பவன்; குன்றகம் - சிறுகுவடு போன்ற மேடை; பிடலிகை - தட்டு; கிழவர் - உரியவர், தலைவர்; படுவார் - வீழ்வார்; தண்டம் - தண்டனைத் தொகை, Fine.
பல்லவன் கம்பவர்மனுடைய இருபதாவது ஆட்சி ஆண்டில் (883 CE) பறை அடிப்பவனான பட்டை பொத்தனுக்கு, அவன் தந்தை ஒக்கொண்ட நாகன் ஓக்கதிந்தன் பட்டை பொத்தன் மேன்மையான தவம் செய்யக் கருதியவனாக படாரி எனும் துர்க்கைக்குப் படையலாக தன் உடலின் ஒன்பது பகுதிகளிலிருந்து தசைகளை வெட்டிய பின் சிறு குவடு போன்ற மேடை மேல் தன் கழுத்தை இருத்தித் தன் தலையைக் கத்தியால் தானே அறுத்து கொண்டையைப் பிடித்தபடி அத்தலையைத் தட்டின் மேல் வைத்தான். இச்செயலை மெச்சிய திருவான்மூர் ஊர் மக்கள் அதற்கு பரிசாக அவர் ஊர்ப் பறை கொட்ட நடுகல் மேடு நிறுவச் செய்தார்கள். ஒக்கதிந்தன் ஆவிக்கு பறை அடிப்புக்கு (பொத்தனம்) உரியவர்கள் நிலக் கொடையாக, உயிர் ஈகம் செய்யும் வீரனுக்கு இணையாக அவனைக் கருதி தொறுப்பட்டி நிலத்தைக் கொடுத்தார்கள். இந்த அறத்தை ஏற்காதவர்கள் கங்கைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட எழுநூற்றுக் காதமுள்ள இந்த இந்தியப் பெருநிலத்தில் வாழுநர் செய்யும் பாவத்தை ஏற்பர் அதோடு அவர் வாழுங் காலத்தில் அரசாளும் மன்னவனுக்கு கால் பொன் தண்டம் செலுத்த வேண்டும் எனவும் இவ்வாறு சாவித்தும் தண்டனை வழங்கியும் கல்வெட்டு பொறித்து உள்ளனர்.
கம்ப வர்மனுடைய ஆட்சி வடக்கே நெல்லூர் வரை பரவி இருந்துள்ளது. திருவான்மூர் என்ற ஊரே இன்றைய மல்லாம் அல்லது அதன் அண்டை ஊர் எனலாம். திரு என்ற இதன் தமிழ் வடிவமே வேங்கடத்திற்கு அப்பாலும் தமிழ் வழங்கும் நிலம் 1,000 ஆண்டுகளுக்கு முன்னம் வரை இருந்ததற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று.
- - - - - - - -
விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டி அருகில் உள்ள மன்னார் கோட்டை சிவன் கோவிலில் உள்ள 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. (வெ. வேதாசலம், ஆவ. இதழ் 10,1999)
சூரங்குடி / நாட்டு ஆ / தனூராந / கையம் / ஊர்கிழவன் / ஸ்ரீ வேழா / ன் சீலப்பு / கழான் க / லியுகக்கண் / டடி தன் / ம செட்டிக்கு / கோன் நோ / ற்றி தலை / தந்தான்
கிழவன் - ஊர்த்தலைவன்; வேள் > வேழ் - சிற்றரசன்; சீலம் - நல்ஒழுக்கம்; கண்டடி(கண்டு + அடி) - அடிக்கரும்பு; நோற்றி - நோன்பு இருந்து; தலைதந்தான் - தலைப்பலி கொடுத்தான்.
எட்டயபுரப் பகுதியில் இருந்த சூரங்குடி நாட்டின் பகுதியான ஆதனூரின் கையமூர் எனும் ஊருக்கு வேள் ஸ்ரீ வேழான் சீலப்புகழான் கலியுகக் கண்டடி என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் தன்ம செட்டிக்கு நலம் வேண்டி கோன் என்பவன் நோன்பு இருந்து தன் தலையை வெட்டிப் பலி தந்து உள்ளான்.
வேழான் என்பது சிற்றரசானவன், சீலப்புகழான் என்பது நன்னடத்தையால் புகழுற்றவன், கலியுகக் கண்டடி என்பது கொடுமையான கலியுகத்தில் இனிக்கின்ற அடிக்கரும்பு போன்றவன் ஆகிய பொருளில் ஏற்றிப் போற்றப்பட்ட தன்ம செட்டி மன்னர்களைப் போல் புகழப்படுகின்றான். இவன் காலத்தில் சோழப் படை எடுப்பால் பாண்டியர் ஆட்சி குலைந்ததால் பாண்டிய வேந்தர் பெயரும், ஆட்சி ஆண்டும் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை போலும். தன்ம செட்டியால் பயனடைந்த குடும்பத்தவன் அல்லது நிலக் கொடையை எதிர்ப்பார்த்து தன்னை பலி கொடுத்த ஏழை தான் கோன் எனபவன் என்று கொள்ளலாம். இதில் நவக் கண்டக் குறிப்பு இல்லாவிடினும் அது போன்ற ஒரு உயிர்ப்பலி தான் இந்த தலைப்பலியும்.
- - - - - - - -
சதிக்கல்
கணவன் இறந்ததும் அவன் மனைவியும் இறந்துவிட இருவருக்கும் எடுக்கப்படும் நினைவுச் சின்னம் தான் சதிக்கல். கணவன் சிதையுடன் மனைவியும் உடன்கட்டை ஏறுவது வடநாட்டில் எளிய மக்களிடத்தும் நிலவிய குமுக வழக்கமாக இருந்தது. ஆனால் தென்னாட்டில் இந்த வழக்கம் அரசர், அமைச்சர், படைத் தலைவர் குடும்பங்களில் மட்டுமே நிலவியது. வேந்தனிடத்தில் அமைச்சராயும், படைத்தலைவராயும் இருந்தவர் மன்னரும், சிற்றரசருமே எனலாம். இவ்வாறு உடன்கட்டையேறி இறந்த பெண்கள் தெய்வம் என மதிக்கப்பட்டு பூசிக்கப்பட்டனர். அவ்வாறான சதிக்கல் கல்வெட்டு ஒன்று கீழே:
- show quoted text -...Show trimmed content
Attachments (2)
அரசனுக்கு கவுதமி பதக்கு -GautamiPutraSatakarni.jpg32 KB View Download
வசிட்டி மகன் திரு சதகணி Vasishtiputra_Sri_Satakarni.jpg26 KB View Download
Dr.K.Subashini
5/16/12
Re: [MinTamil] Re: நடுகற்கள் கல்வெட்டு காட்டும் வரலாறு மக்கள் மொழி
Other recipients: ssesh...@gmail.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
Translate message to English
2012/5/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
2012/5/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>
//உண்மைதான். ஆனாலும் அந்த ஒப்பீடுகள் கற்பனை அல்லது அதீத எதிர்பார்ப்பின் அடிப்படையில் நீங்கள் முன் வைக்கும் ஒன்று. உலகின் பல மொழிகளை கேட்கும், வாசிக்கும், பேசும் நிலை வரும் போது பல சொற்கள் தமிழ் மொழியில் உள்ள நாம் அறிந்த சிலசொற்களின் ஒலிகளை ஒத்திருப்பது போல தெரிந்தால் அதனை உடனே நாம் தமிழிலிருந்து தான் அங்கே சென்றது என்று கூறுவது எவ்வகையில் பொருந்தும்? உங்களின் இந்த நிலைப்பாட்டில் எனக்கும் உடன்பாடில்லை//
ஓரிரண்டு பெயர்கள் என்றால் நீங்கள் சொல்வது சரி எனலாம்.ஆனால் எதியோபியா, துருக்கி, கொரியா, சப்பான் என பல நாகரிகங்களில் ன்னர் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக தமிழாக உள்ளன என்பதை நோக்கியும் மதங்கள் தோன்றிய பின் அவை மாறுபட்டிருப்பதும் என் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
1. எதியோப்பிய, துருக்கி, கொரியா, ஜப்பான் பல நாடுகள் அல்ல சில நாடுகள் .
2.கொரியா ஜப்பான் அதிலும் குறிப்பாக கிழக்காசிய நாடுகளில் தமிழ் பாரம்பரியத்தின் தாக்கம் இருக்கின்றது என்பது பலருக்கும் தெரிந்ததே. நீங்கள் சொல்ல வருவது கிரேக்கத்திலும் துருக்கியிலும் இன்னும் உலகின் மற்ற பிற நாடுகளிலும் என்ற வகையில் போகின்றது. நீங்கள் முன்னர் கொடுத்திருந்த துருக்கி, கிரேக்க பெயர் ஒற்றுமை அது தொடர்பான மன்னர் பெயர்கள் பற்றி ஏற்கனவே கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு இது தான் பதில் என்ற வகையில் உங்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. அதனை தெளிவு படுத்தாமலேயே உங்கள் கருத்தை பலர் ஏற்றுக் கொண்டதாக நினைத்து தொடர்கின்றீர்கள். இது எவ்வகை ஆய்வு?
. //இது உங்களது எதிர்பார்ப்பு. பரவலான பல்வேறு நாகரிக மொழி சமூக அமைப்பில் வாழும் அனுபவம் வாய்ந்தவர்கள் இக்கருத்துக்களுடன் உடன் பட மாட்டார்கள். விருப்பம் என்பது வேறு ஆய்வு என்பது வேறு. மன்னர்களின் பெயர்கள் ஒத்துள்ளது. ஆக தமிழ் மன்னர்கள் அங்கெல்லாம் சென்று ஆட்சி செய்தனர் என்பது கற்பனை வாதமே.//
ஏற்கெனவே ஒரு கருத்தைக் கொண்டவர்கள் சட்டென்று இக்கருத்தை ஏற்கமாட்டார்கள். காலமாற்றம் கருத்து மாற்றத்திற்கு வழிகோளும்.
இது எப்போதும் நிகழ்வதே. ஆனால் உங்களால் இக்கருத்தை நிரூபிக்க முடிந்தால் அதற்கான தக்க சான்றுகளை வழங்க வேண்டும் என்பதே என் அவா. நீங்கள் முன்னர் வேறொரு கட்டுரையில் கொடுத்த உதாரணமே என் போன்றவர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் உதாரணமும் மேம்போக்கான உதாரணமாகவே அமைந்தது. ஆக அதனை வைத்துக் கொண்டு அது தமிழிலிருந்து போனது என்று நிரூபிக்க முயற்சிக்கின்றீர்கள். ஏன் அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கலாமே என்பது ஒரு மிகப்பெரிய குறையாக உங்களுக்கு படுகின்றது என்பதே இவ்வகை வாதங்களினால் நன்கு தெரிகின்றது. ஆக உங்கள் கருத்தில் உங்களுக்கு மாற்றமில்லையென்றால் தொடர்ந்து உங்கள் கருத்தை நிரூபிக்கும் வகையிலான தக்க சான்றுகளை தாருங்கள்.
//ஒரு உதாரணம் தாருங்கள். எனக்கு இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு நடுகல்லின் பெயரை வழங்க முடியுமா? தெரிந்து கொள்ளும் ஆவலில் தான் கேட்கிறேன்.//
இதை அரசன் செறு என்றும் சொல்லுவர் . தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் என்ற கட்டுரையில் உள்ளது
எந்த குறிப்பிட்ட ஒரு நடுகல்? நீங்கள் தானே கட்டுரை ஆசிரியர். அக்குறிப்பிட்ட நடுகல் பற்றிய தகவலை வெட்டி ஒட்டி இங்கே தரலாம் அல்லவா?
//இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. பிராமண சமூகத்தைச் சார்ந்தோர் பலர் படைத் தலைவர்களாக இருந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அச்சமூகத்தினருள் பலர் படை வீரர்களாக இருந்திருக்கும் சாத்தியம் உள்ளது என்பதே கருதக்கூடியதாக உள்ள கூற்று//
இந்தக் கூற்று பிராமணருக்குப் பொருந்தாது. அரச குமாரருடன் போர்ப் பயிற்சி பெற்ற படைத்தலைவர், அமைச்சர் பிள்ளைகள் நேரடியாக அரசரால் தம் நிலைப் படையில் சிறியநிலை படைத்தலைவராய் அமர்த்தப்பட்டு மேன்மேலும் பதவி உயர்த்தப்பட்டiவர்கள் தான் இவர்கள். இன்றும் படை அதிகாரிகள் தனியே தெரிந்து எடுக்கப்படுவதை நோக்குக.
// இது சாதாரண லோஜிக்கல் திங்கிங் என்பதன் அடிப்படையில் வைக்கும் கருத்து//
பொதுவான கருத்திற்கு தான் ஏரணம் (logic). இது சிறப்பு வழி (special category) .
ஏரணத்துக்கே ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விஷயம் எப்படி சிறப்பு வழி ஆய்வாக ஏற்றுக் கொள்ளப்[படுகின்றது என்று விளக்குவீர்களா? வான் பச்சை நிறம் என்று சொல்லி சிறப்பு வழியில் கண்டுபிடித்தேன் என்று சொல்வது போல இருக்கின்றது உங்கள் கூற்று.
மேலும் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன். இதற்கு பதிலைக் காணோமே..!
..//தமிழ்நாட்டில் பல்லவர் கால நடுகற்களில் நல்ல தமிழ்ச் சொற்களும், மக்கள் பேச்சு வழக்குச் சொற்களும் உள்ளன. அவற்றில் ஒரு சமற்கிருதச் சொல்லோ, கிரந்த எழுத்தோ தொடக்கக்கால பல்லவர் நடுகல் கல்வெட்டில் இல்லை.
இது முழுமையான ஆய்வின் அடிப்படையில் கூறப்படும் ஒரு கருத்தா?//
ஆம் திரு. இரா. நாகசாமி, பூங்குன்றன், ச . கிருஷ்ணமூர்த்தி போன்ற தொல்லியலாளர் நூல்களில் பதிவாகி உள்ளது.
எந்த குறிப்பிட்ட கட்டுரையில் / நூலின் பக்கத்தில் இந்தத் தொல்லியல் அறிஞர்கள் இச்செய்தியைக் குறிப்பிடுகின்ரார்கள் என்று கூறுங்கள். இதுவும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்.
நூலின் பெயரையும் பக்கத்தையும் குறிப்பிட முடியுமா. விவாதத்துக்காக கேட்கவில்லை. எனது தேடலுக்ககத்தான்.
பொதுவாகவே ஒருவர் இப்படிச் சொல்லியிருக்கின்றார் என்று ஒரு விஷயத்தைக் குறிப்பிடும் போது அதற்கு அச்சான்றையும் சேர்த்து தாருங்கள். நீங்கள் சொல்வதால் மட்டும் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள் என்று முழுதாக ஏற்றுக் கொள்வது வேண்டுமென்றால் பொது பேச்சுக்கு ஒத்து வரலாம். ஆனால் மின் தமிழ் போன்ற இடங்களில் சொன்னவர்கள் எங்கே எதில் சொல்லியிருக்கின்றார்கள் என்பதையும் குறிப்பிடுவது நாம் அவர்களுக்குத் தரும் மதிப்பும் மரியாதையும் கூட.
அன்புடன்
சுபா
சேசாத்திரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக