வெள்ளி, 16 மார்ச், 2018

மலையாளம் தமிழ்மொழி யிலிருந்து வந்தது கேரளா அறிஞர் ஒத்துக்கொண்டனர் தோற்றம் வளர்ச்சி நம்பூதிரி

aathi tamil aathi1956@gmail.com

30/11/17
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam சீனிவாசன் தமிழ்பாரதி மற்றும் Aathimoola
Perumal Prakash உடன் உள்ளார்.
தமிழ் மொழியிலிருந்துதான் மலையாள மொழி உருவானது என்ற கருத்தைக்
கால்டுவெல், குண்டர்ட் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் வெளியிட்டபோது
கேரளத்து அறிஞர்கள் அதை ஒத்துக் கொண்டனர். பேராசிரியர் இளங்குளம்
குஞ்சம்பிள்ளை என்ற மலையாள மொழி ஆய்வாளர் இந்தக் கருத்தை விரிவாக
ஆராய்ந்திருக்கிறார். சங்க காலத்திலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுவரை
கேரளத்தின் செய்யுள் மொழியும், பேச்சுவழக்கு மொழியும் தமிழாகத்தான்
இருந்தது என்கிறார் இளங்குளம். கேரளத்தின் நவீனப்படைப்பாளிகளும்
சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, சங்கப் பாடல்கள் சில ஆகியவற்றைத் தங்கள்
மண்ணின் கவிதைகளாகவே உரிமை கொண்டாடுகிறார்கள். 

வையாபுரிப்பிள்ளையின் கருத்துப்படி தொல்காப்பியம்கூட தென் கேரளத்தைச் சார்ந்தது. குலசேகர
ஆழ்வார் கேரள அரசர்; சேரமான் பெருமாள் நாயனார்; புறப்பொருள் வெண்பா மாலை
ஆசிரியர் வேணாட்டிகள் என கேரளப் படைப்பாளிகளின் நீண்ட பட்டியலே உள்ளது.
அதோடு தீயாட்டுப் பாட்டுகள், சர்வப்பாட்டுகள், கிருஷிப்பாட்டுகள், வள்ளப்
பாட்டுகள், சாற்றுப் பாட்டுகள் முதலிய நாட்டார் பாடல்களும் தமிழ்
செல்வாக்குடையவை.

கி.பி. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ராமசரித காப்பியம்’, கி.பி.15-ம்
நூற்றாண்டில் எழுந்த ‘கிருஷ்ணகாதை’, ‘பாரதமாலை’ போன்ற காவியங்களும் தமிழ்
மரபுக்கே முதலிடம் கொடுப்பவை. இந்தக் 'காவியக் கர்த்தாக்கள்' தங்கள்
பாடல்களைத் தமிழ்க்கவி என்று கூறிக்கொள்ளுவதில் தயக்கம் காட்டவில்லை. 

ஒரு சான்று:
ஆதி தேவனில் அமிழ்ந்த மனக் காம்புடைய சீராமன்
அன்பினோடே இயம்பின தமிழ்க் கவி வெல்வோர்
போதில் மாதின் இடமாவருடல் வீழ்வதினு பின்
போகி போக சயனன் சரணதார் அயர்வாரே
கி.பி. 9-ம் நூற்றாண்டில் கேரள இலக்கிய மரபில் சமஸ்கிருதக் கலப்பு
வேகமாகப் பாய்ந்ததால் மணிப்பிரவாளத்தில் வைசிக தந்திரம், உண்ணிநீலி
சந்தேசம், உண்ணிச்சிரி தேவி சரிதம், அனந்தபுர வர்ணனம் போன்ற இலக்கியங்கள் தோன்றின.

லீலாதிலகம்
மணிப்பிரவாள இலக்கியம் பரவலான பிறகு கி.பி. 14-ம் நூற்றாண்டில் மலையாள
இலக்கண நூலான லீலாதிலகம் தோன்றியது. லீலாதிலக ஆசிரியர் தமிழ் அறிந்தவர்.
தொல்காப்பியம், நன்னூல் போன்ற பல இலக்கண நூற்களைக் கற்றவர். இவர்
தொல்காப்பியரை மேற்கோள் காட்டுகிறார். தமிழ் இலக்கணங்கள் கூறும்
புணர்ச்சி விதிகளை எடுத்துக்கொண்டவர். வீரசோழியத்தை இவர்
ஏற்றுக்கொள்ளவில்லை. சேந்தன் திவாகரத்தை நாட்டுமொழி நிகண்டு என்கிறார்.
யாப்பருங்கலத்திலிருந்தும் ஒரு எடுத்துக்காட்டு தருகிறார்.

கேரள பாணினீயம்
மலையாள இலக்கண நூல் லீலாதிலகத்தைப் போன்ற இன்னொரு நூல் கேரள பாணினீயம்.
இதன் ஆசிரியர் ஏ.ஆர். ராஜராஜவர்மா (1863 – 1918) கேரள பாணினீயம் 1895-ல்
வந்தது. 7 பகுதிகள் 194 நூற்பாக்கள் என அமைந்தது. இந்நூலை பேராசிரியர்
இளையபெருமாள் தமிழில் பெயர்த்திருக்கிறார். தமிழகத்தில் நன்னூல்போல்
மலையாள மாணவர்களின் இலக்கணப் பாடத்திட்டத்தில் இருப்பது இந்த நூல். இந்த
நூலுக்கு விரிவான முகவுரையையும் உரையையும் நூலாசிரியரே
எழுதியிருக்கிறார்.

ராஜராஜ வர்மா, கேரள பாணினீய முகவுரையில், தமிழிலிருந்துதான் மலையாளம்
உருவானது என்பதைக் காரண காரியங்களுடன் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம்
குறிப்பிடும் பண்டை தமிழ்நாட்டுப் பகுப்பையும் அவர் ஒத்துக்கொள்ளுகி
றார். சேரநாட்டில் அடங்கிய தமிழ்ப் பகுதிகளில் தமிழ் வட்டார மொழியாக
இருந்தது. ஆனால், இது மதுரைத் தமிழிலிருந்து வேறுபட்டது என்கிறார்.
 வர்மா தன் நூலில் நன்னூலிலிருந்து இருபது இடங்களில் மேற்கோள் காட்டுகிறார்.
கபிலர், கம்பர், குலசேகர ஆழ்வார் ஆகியோரின் பாடல்களையும்
எடுத்தாளுகிறார். நம்பூதிரிகள் கேரளத்தில் நிலையாகத் தங்க ஆரம்பித்த
காலகட்டத்தில் (கி.பி. 600 – 774) கேரளத் தமிழில் வடமொழிக் கலப்பு
அதிகரித்தது என்ற லீலாதிலக நூல் கருத்தை இவரும் ஒத்துக்கொள்ளுகிறார்.
“கொடுந்தமிழ் மொழி திராவிடமாகிய இமயமலையிலிருந்து சமஸ்கிருத யமுனையில் கலந்து மலையாளமாயிற்று” என்கிறார் ராஜராஜ வர்மா.
மலையாளம் பிரிந்ததற்குக் காரணம் தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததற்கு
பண்பாடு, இலக்கணம், நம்பூதிரிகளின் செயல்பாடு ஆகியவற்றை ராஜராஜ வர்மா
காரணங்களாக்குகிறார். 
மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட காலத்தில் மலையாள
இலக்கியவாதிகள் பழந்தமிழ்ச் சொற்களைத் தங்கள் படைப்பில் எழுதுவதில்
தயக்கம் காட்டினார்கள். இந்தத் தயக்கம் கூட்டு வெறுப்பாக வளர்ந்தது.
இத்தகைய படைப்பாளிகளில் பெரும்பாலானோர் நம்பூதிரிகள். இதே சமயத்தில்
தமிழ் வேரிலிருந்து வந்த வினையெச்ச, பெயரெச்ச வாய்ப்பாடுகளை
எடுத்துக்கொண்டார்கள்.
பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் கேரளம் தமிழகத்திலிருந்து
அரசியல்ரீதியாகப் பிரிந்தது. இந்த மாநில இயற்கையமைப்பும் இதற்கு ஒரு
காரணம். தமிழ் மண்ணின் தாயாதிகள் என்னும் பண்டைய எண்ணம் மெல்ல மறைந்தது.
தமிழர்களுடனான உறவும் குறைந்தது. பக்தர்களும் வியாபாரிகளும்
தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்வது என்ற சூழ்நிலை உருவானது.
கேரளத்தின் மருமக்கள்வழி தமிழர்களுடனான உறவைத் துண்டித்தது சமூகக்
காரணங்களில் முக்கியமானது என்கிறார் ராஜராஜவர்மா. தமிழிலிருந்து மலையாளம்
பிரிந்து செல்வதற்கு சில இலக்கண விதிமுறைகளும் காரணம் என்கிறார் வர்மா.
இந்த இலக்கண விதிகள் பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் உருவானவை.

29 நவம்பர் 2014, 11:29 AM · பொது
நீங்கள், Gabriel Raja மற்றும் 47 பேர்

பாரதிதாசன் கண்ணன்
Nakkeeran Sir, Thanks for the info, Did Tholkappiyar belong to kappiar
kudi brahmins as some trying to project. The preface of Tholkappiyam
mentions Nan marai, does it mean four vedas or four dharma. I believe
he was a jain.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 29 நவம்பர் 2014

Nakkeeran Balasubramanyam
பொருத்தருள்க. காலம் தாழ்த்தியே இதனைக் காண நேர்ந்தது. முதலில் இந்தப்
'காப்பியக் குடி, டீயக் குடி' என்பதெல்லாம் தொல்காப்பியர் காலத்தில்
இருந்தது என்பதற்குச் சான்று ஏதேனும் காட்டுகிறார்களா இவர்கள்? பார்கவா
இல்லை பார்க்கவாவா? உரையெழுதியோன் காப்பியக் குடிச்சா இவரும் காப்பியக்
குடிதான், கள்ளக் குடிச்சா இவரும் கள்ளக் குடிதான். அவ்வளவே இவர்கள்
கதையும். கடவுளர் கூட்டத்தையே படைத்து, அவர்களுக்குள் அடிதடிச் சண்டையையே
வைத்திருக்கும் இந்தப் புராணப் புரட்டர்களுக்கு இதுமட்டும் கடினமா என்ன?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Gilbert Yonas
கேரளாவிற்கு சிரியா மற்றும் அரபு - தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற
இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்து 1000 ஆண்டுகளுக்கு
முன்பாக வந்துள்ளனர். இதன் காரணமாகவும் மலையாளி  மலையாளம் பிறந்திருக்க வாய்ப்பு
இருப்பதாக நான் கருதுகிறேன்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Mathi Vanan
மருமக்கள் என்றால்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 51 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.co.id/2017/04/17.html?m=1
குருதியில் நனைந்த குமரி -17


Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.co.id/2017/03/blog-post_17.html?m=1
திருவனந்தபுரம் தமிழர் நகரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக