துளு நாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளு நாடு என்னும் நாடு சேரநாட்டின் வடமேற்கில் அமைந்திருந்ததாகவும், கோசர் என்னும் அரசர்கள் இந்நாட்டை ஆண்டதாகவும் மாமூலனார்அகப்பாடல் கூறுகிறது.அகம் 15 இந்த கோசரே குடகக்கொங்கர், கொங்கிளங்கோசர் சிலம்பு 30 : 159 என்றும் அழைக்கப்படுவதால் இந்நாடு குடகுநாட்டையும் கொங்கு நாட்டையும் அண்டியிருந்ததாக தெரிகிறது.
துளுநாட்டில் கோசர் குடிமக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அந்நாட்டு வழியாகச் செல்பவர்களைப் பேணி விருந்தளித்துப் பாதுகாப்பர். துளுநாட்டில் மயில்கள் மிகுதி.[1]
இந்தச் செம்மற் கோசர் அக்காலத்தில் தமிழும் பேசத் தெரிந்த நான்மொழிக் கோசர்.
இது சங்ககால நிலைமை. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலுக்கு 16ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய மயிலைநாதர் தமிழ் பேசப்படாத நிலங்கள் 17 என நன்னூல் நூற்பாவின் வழி சுட்டி அவை இவை எனப் பெயர் சொல்லிக் காட்டும்போது இந்தத் துளு நாட்டையும் குறிப்பிடுகிறார். [2]

அடிக்குறிப்பு[தொகு]
துளு நாடு தமிழர் பொருளீட்டச் சென்ற நாடு பொருளீட்ட இந்தத் துளு நாட்டு வழியாகச் சென்றனர் |
- துளுநாட்டுக் கோசர் அந்நாட்டுக்குச் சொல்லும் புதியவர்களை அறிந்த மக்கள் போலப் பேணுவர்.
- அரசன் நன்னனின் தலைநகரம் பாழி பிறர் உள்ளே நுழையாதபடியும் நுழைந்தவர் தப்பிச் செல்ல முடியாதபடியும் மிகுந்த பாதுகாப்பு உடையது. .
இந்த வரலாற்றுச் செய்திகள் இதில் செருகப்பட்டுள்ளன.
செவிலித்தாய் சொல்கிறாள்.
என் ஆசை நிறைவேறுவதாயின்.
என் மகள் சென்ற ஊர் துளு நாடு போல் வெறுங்கையுடன் சென்ற புதியவர்களை [வம்பலர்]ப் பேணும் அறிந்த மக்களை உடையதாக அமையட்டும்.
சோசர் உடம்பெல்லாம் அணிகலன்கள் பூண்டிருப்பர். செம்மைப் பண்பு கொண்டவர்கள். அவர்களுடைய நாட்டில் மயில்கள் மிகுதி. அவை அங்கு விளையும் பாகற்காயை விரும்பி உண்ணும்.
ஆ
என் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.
நானும் அவளது தோழியும் புலம்புகிறோம்.
என் வீடு நன்னனின் பாழி நகரம் போலக் கட்டுக்காவல் மிக்கது.
அதனை மீறி அவள் அவனுடன் சென்றுவிட்டாள்.
இ
மூங்கில் போல் திரண்ட தோளினை உடைய என் மயில் சென்றுவிட்டாள்.
கரடிகள் பரந்து நடமாடும் குன்றின் வழியே அவள் சென்றுவிட்டாள்.
வழியில் இரும்பை (இலுப்பை)ப் பூக்கள் கொட்டிக் கிடக்கும்.
(இனிப்புச் சுவை கொண்ட) அந்தப் பூவைக் கரடிகள் விரும்பி உண்ணும்.
மற்றும் கொன்றைப் பழங்களையும் உண்ணும்.
அவை வலிமையான கைகளை உடையவை.
மந்தை [நிரை] மந்தையாக மேயும்.
அந்த வழியில் அவள் தன் துணைவனொடு செல்லும் கொள்கை உடையவளாகச் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற புதிய ஊரில் அவளை அறிந்த மக்கள் இருக்கவேண்டும்.
இதுதான் என் ஆசை. – என்கிறாள் செவிலித்தாய்.
பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
பாலை
அ
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மை அம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
ஆ
தோழிமாரும் யானும் புலம்ப,
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் 10
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
இ
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, 15
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
மகட்போக்கிய தாய்சொல்லியது.
மாமூலனார் பாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக