வெள்ளி, 23 மார்ச், 2018

கேரளா கும்மி சிலப்பதிகாரம் பாடலுடன் சைவம் திருவாதிரை இலக்கியம் பண்டிகை விழா நாட்காட்டி

aathi1956 aathi1956@gmail.com

26/12/17
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்,
Chembiyan Valavan மற்றும் 48 பேருடன் இருக்கிறார்.
மீண்டும் சங்க காலம் - தமிழரின் பொற்காலம்
================================
மார்கழி-திருவாதிரை என்பது தமிழர்களின் சிவராத்திரி. விடிய விடிய சிவனுக்கு ஆடல் மூலம் வழிபாடு செய்வார்கள்.
சங்க இலக்கியமான பரிபாடலில் மார்கழித் திருவாதிரையில் நடைப்பெற்ற 'அம்பா ஆடல்' பற்றிய குறிப்பு உள்ளது!
கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலமேற்ப
வெம்பாதாக வியனில வரைப்பென
அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப் பருமண் வருவியன்
ஊதையூர் தர வுறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையன் மகளிர் ஈரணி புலர்த் தர
வையை நினக்கு மடைவாய்த்தன்று.”
(பரிபாடல் 11 வரிகள் 74-87)
இன்று, தமிழகத்தில் ஆடவல்லானை வணங்குவதோடு இவ்விழா நின்றுவிட்டது. ஆனால் மலைநாட்டு தமிழர்கள்(கேரளவர்) இன்றும் இந்த அம்பா ஆடலை உயிர்ப்புடன் வைத்துள்ளனர் திருவாதிரை களி என்றப்பெயரில்.
காணொலியில் இருப்பது, சிலப்பதிகாரத்தை 3 நிமிடங்களில் திருவாதிரை களியாட்டம் மூலம் சொல்லியிருப்பர்.
தமிழகத்திலும் செய்யலாமே!!!
2 மணி நேரம் · Facebook for Android ·
பொது


கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
இரா. செந்தில் கரிகாலன் நீங்க கேட்ட மார்கழியைப் பற்றிய பதிவு
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு

Dheepanraj Selvamani
தமிழர்களிடம் கிட்டதட்ட வழக்கொழிந்து கொண்டிருக்கும் கும்மி
மலையாளத்தில் "கைக்கொட்டு களியாக"
ஒரு பாடலில் சிலம்பு முழுதும் பாடி விட்டார்கள் ; இந்த படம் ஒரு பயஙகரமான பேய்படம் தமிழிலேயே பாத்திருக்கேன்..
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு

கத்திவாக்கம் பாசுக... பதிலளித்தார் · 1 பதில்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு உணர்ச்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக