|
23/11/17
| |||
சுரேஷ் தேவர் சாேழநாடு Suresh N உடன்.
தமிழரின் வழிபாடுகளை முழுதாய் தரிசிப்போம் வாருங்கள்....
# பாவாணரின் பண்டை தமிழ் நாகரீகமும் பண்பாடும் நூல்,
பக்கம் 74,75,76,77,78...
1.சிறுதெய்வங்கள்
(1) தென்புலத்தார்
(இறந்த முன்னோர்).
(2) நடுகல் தெய்வங்கள்.
(3) பேய்கள் (பேய், பூதம், முனி, சடைமுனி, அணங்கு (மோகினி), சூரரமகளிர் முதலியன).
(4) தீய வுயிரிகள் (பாம்பு, சுறா, முதலை முதலியன).
(5) இடத் தெய்வங்கள் (ஆற்றுத்தெய்வம், மலைத்தெய்வம், காட்டுத்தெய்வம், நகர்த்தெய்வம், நாட்டுத்தெய்வம்).
(6) இயற்கைப் பூதங்கள் (காற்றும் தீயும்).
(7) வானச் சுடர்கள் (கதிரவனும் திங்களும்).
(8) செல்வத் தெய்வம் (திருமகள்).
(9) கல்வித் தெய்வம் (நாமகள் அல்லது சொன்மகள்).
(10) பால்வரை தெய்வம் (ஊழ் வகுப்பது).
++
2.பெருந்தெய்வங்கள்
இவை ஐந்திணைத் தெய்வங்களாகும்.
1.குறிஞ்சி - சேயோன்.
2.முல்லை - மாயோன்.
3.பாலை - காளி.
4.மருதம் - வேந்தன்.
5.நெய்தல் - வாரணன்.
சேயோன் சிவந்தவன். சேந்தன் என்னும் பெயரும் அப் பொருளதே. முருகன், வேலன், குமரன் என்னும் பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் உலக வழக்கு வடிவம்.
இப் பெயர் வடிவு வேறுபாட்டைக் கொண்டு, பிற் காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கித் தந்தையும் மகனுமாகக் கூறி விட்டனர். குமரன் என்பதற்கும் சேய் என்னும் குறுக்கத்திற்கும் மகன் என்று தவறாகப் பொருள் கொண்டதே இதற்கு அடிப்படை.
சிவன் என்று ஆரியத் தெய்வம் ஒன்றுமில்லை. சிவ என்னும் சொல், நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில், உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவான அடைமொழியாகவே ஆரிய வேதத்தில் வழங்கிற்று.
புறக்கண் காண முடியாதவற்றையும் நெடுந்தொலைவிலுள்ள வற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக்கண் போன்ற உறுப்பு, குமரி நாட்டு மக்கள் நெற்றியிலிருந்ததென்றும், அதனாலேயே அவர்தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்) ஒரு நெற்றிக்கண்ணைப் படைத்துக் கூறினரென்றும்,ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வெள்ளிமலை (கைலை)யிருக்கையும் காளையூர்தியும் சிவனைக் குறிஞ்சிநிலத் தெய்வமாகக் காட்டுவது கவனிக்கத்தக்கது.
வரகுண பாண்டியனின் தலைமையமைச்சரும் பிராமணரும் சிறந்த சிவனடியாரும் வடமொழி தென்மொழி வல்லுநருமாகிய மாணிக்கவாசகர்,
குறிஞ்சிநிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப்பின் கூறாகவும், முல்லைநிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும் கொண்டனர். இதனாலேயே, சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும்; திருமாலுக்குக் கார்வண்ணன், மணிவண்ணன் என்னும் பெயர்களும்; தோன்றின.
காளி கருப்பி. கள் - கள்வன் = கரியவன். கள் - காள் - காழ் = கருமை. காள் - காளம் = கருமை. காள் - காளி. காளி கூளிகட்குத் தலைவி. கூளி பேய். பேய் கருப்பென்றும் இருள் என்றும் பெயர் பெறும். கருப்பி, கருப்பாய் என்னும் காளியின் பெயர்களை, இன்றும் பெண்டிர்க்கிடுவது பெருவழக்கு. தாய் என்னும் பொருளில் அம்மை (அம்மன்), ஐயை என்றும், இளைஞை என்னும் பொருளில் கன்னி, குமரி என்றும், வெற்றி தருபவள் என்னும் பொருளில் கொற்றவை (கொற்றவ்வை) என்றும், காளிக்குப் பெயர்கள் வழங்கும். அங்காளம்மை என்பது அழகிய காளியம்மை என்னும் பொருளது.
ஆரியர் வருமுன் வடஇந்தியா முழுதும் திரவிடர் பரவியிருந்ததினால், வங்கநாட்டில் காளிக்கோட்டம் ஏற்பட்டது.
வேந்தன் = அரசன். முதற்காலத்தில் அரசனும் தெய்வமாக வணங்கப்பட்டான். அதனால், இறைவன் என்னும் பெயர் அரசனுக் கும் கடவுட்கும், கோயில் என்னும் பெயர் அரண்மனைக்கும் தெய்வக் கோட்டத்திற்கும் பொதுவாயின. வேந்தன் இறந்தபின் வானவர்க்கும் அரசனாகி வானுலகத்தினின்று மழையைப் பொழி விக்கின்றான் என்று பண்டை மருதநில மக்கள் கருதியதால், மழைத் தெய்வத்தை வேந்தன் என்னும் பெயரால் வணங்கி வந்தனர்.
ஆரியர் வருமுன்பே, மொழி வேறுபாட்டினால் வேந்தனுக்கு வடநாட்டில் வழங்கி வந்த பெயர் இந்திரன் என்பது. இந்திரன் அரசன். ஆகவே இரண்டும் ஒருபொருட் சொற்களே. வேத ஆரியர் இந்திர வணக்கத்தை, வடநாட்டுத் திரவிடரைப் பின்பற்றியே மேற்கொண்டிருத்தல் வேண்டும். மேலையாரிய நாடுகளில் இந்திர வணக்கமே யிருந்ததில்லையெ
ன்று, மாகசு முல்லர் (Max Muller)கூறியிருப்பது, இங்குக் கவனிக்கத்தக்கது.
கடைக்கழகக் காலம் வரை காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திர விழாவும், தமிழர் வேந்தன் விழாவே.
வாரணன் = கடல் தெய்வம். வாரணம் கடல். கடலுக்கு ஒரு தெய்வமிருப்பதாகக் கருதி, அதை நெய்தல்நில மக்கள் வணங்கி வந்தனர்.
"பாண்டி நாடே பழம்பதி யாகவும்"
(திருவாச.2 : 118)
"தென்னா டுடைய சிவனே போற்றி" (திருவாச.4 : 164)
என்று பாண்டிநாட்டையே சிவநெறிப் பிறப்பிடமாகக் குறித்தல் காண்க.
இனி, சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல் களையும் மதுரையில் அருளிச் செய்ததையும், முத்தொழில் அல்லது ஐந்தொழில் திருநடத்தைத் தில்லையில் ஆற்றுவதையும், எண் மறச் செயல்கள் செய்த இடங்கள் (அட்டவீரட்டம்) தமிழ்நாட்டிலிருப்பதையும், ஊன்றி நோக்குக.
மாயோன் கரியவன், மா கருப்பு. மாய கிருஷ்ணன் என்னும் பெயர்க்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. கண்ணபிரான் பிறக்கு முன்பே, கிருஷ்ண என்னும் சொல் கருப்பு என்னும் பொருளின் இருக்கும் வேதத்தில் வழங்கிற்று. கிருஷ்ண பக்ஷ (கரும்பக்கம்) கிருஷ்ண ஸர்ப்ப (கரும்பாம்பு) என்னும் பெயர்களை நோக்குக. கிருஷ்ண என்னும் சொற்கு வேத மொழியில் வேரில்லை; தமிழிலேயே உள்ளது.
கள் - கரு - கருள் = 1. கருமை.
"கருள்தரு கண்டத்து......க
ைலையார்" (தேவா. 337: 4)
2. இருள் (பிங்.).
3. குற்றம்.
"கருள் தீர்வலியால்" (சேதுபு. முத்தீர்த். 5).
கருள் = க்ருஷ். ளகர மெய்யீறு வேதமொழியில் ஷகர மெய்யீறாகத் திரியும்.
எ-டு : சுள் - சுஷ் (to dry) . உள் - உஷ், (to burn) .
மாயோன், மால், விண்டு என்னும் பெயர்கள் ஒரு பொருட் சொற்கள்.
மால் = கருமை, முகில், திருமால்.
விண்டு = முகில், வானம், திருமால்.
விண் = வானம், முகில், மேலுலகம்.
விண் - விண்டு.
ஆரிய வேதத்தில் விஷ்ணு என்னும் பெயர் கதிரவனைக் குறித்தது. காலை எழுச்சியையும் நண்பகற் செலவையும் எற்பாட்டு (சாயுங்கால) வீழ்ச்சியையுமே மூவடியால் (மூன்று எட்டால்) உலக முழுவதையும் விஷ்ணு (கதிரவன்) அளப்பதாக முதலிற் கொண் டனர் வேத ஆரியர்.
முதற்காலத் திரவிடர் வடமேற்காய்ச் சென்று கிரேக்க நாட்டிற் குடியேறியபின், வாரணம் என்னும் சொல்(ouranos) எனத் திரிந்தது. அப் பெயர்த் தெய்வம் முதலிற் கிரேக்கர்க்குக் கடல்தெய்வமாகவே யிருந்து, பின்பு, வானத்தெய்வ மாயிற்று.
கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய மொழியைப் பேசிவந்த கீழையாரியருள் ஒரு பிரிவாரான வேத ஆரியர், கடலையறியாமல் நெடுகவும் நிலவழியாகவே வந்ததினால், மழைத்தெய்வத்தைய
ே வருணா என அழைத்தனர். அவர் இந்தியாவிற்குட் புகுந்து வடநாட்டுத் திரவிடரோடும் தென்னாட்டுத் தமிழரோடும் தொடர்புகொண்ட பின்னரே, வருணனைக் கடல் தெய்வமாகக் கருதத் தொடங்கினர். ஆயினும், இன்னும் மழைக்காக வருணனை வேண்டுவதே பிராமணர் வழக்கமா யிருந்து வருகின்றது.
தொல்காப்பியத்தில் "வருணன் மேய பெருமண லுலகமும்" (அகத். 5) என்று, வாரணன் என்னும் பெயரை வடமொழி வடிவிற் குறித்திருப்பது தவறாகும். அது "வாரணன் மேய ஏர்மண லுலகமும்" என்றிருந்திருத்தல் வேண்டும்.
ஐந்திணைத் தெய்வ வழிபாடுகளுள், சேயோன் வழிபாடும் மாயோன் வழிபாடும் பிற்காலத்தில் இருபெருஞ் சமயங்களாக வளர்ச்சி யடைந்துள்ளன.
ஐந்திணைத் தெய்வங்களும் தமிழ்த் தெய்வங்களே யென்றும், பிற்காலத்தில் ஆரியர் அவற்றைப்பற்றிப் பல்வேறு கதைகள் (புராணங்கள்) கட்டிவிட்டனர் என்றும், என் தமிழர் மதம் என்னும் நூலில் விரிவாய் விளக்கப் பெறும்.
++++++++
சிவமதமும்,திருமால் மதமும் தமிழரின் மதங்களே,,,,,,
50 வருட காலம் தமிழுக்காகவே வாழ்ந்தவர் ஐயன் பாவாணர்,அவர் உழைப்பு, அர்ப்பனிப்பு,அவரின் கருத்துக்களை விட நம்பகமானது இங்கு வேறு எவறுடையதும் அல்ல...
அண்ணன் சீமானோ,அறிவர் குணாவோ அல்லது ஏனையரோ ஐயன் #பாவாணரின் 1.தமிழ் மொழி,2.வேர்சொல்,3.பழந்தமிழர் நாகரீகம்,4.பண்பாடு,5.வழிபாடு பற்றிய கருத்துகளில் முரண்பட்டால் தயக்கமின்றி எவறாயினும் அவர்களை சந்தேகிக்கனும்...
இங்கனம்,
தமிழ்தேசிய_பாலை
_வாணர்_கூட்டமைப்பு..
இவன்,
ந.சுரேசு அகம்படி தேவன்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக