|
30/11/17
| |||
அன்பு உலக தமிழர்களே,
இத்துடன் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவைய 15-ஆம் பதிவு (தொடர் பதிவு 49) இணைக்கப்பெற்றுள்ளது.
உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
உங்கள் கருத்துக்கள்தாம் எம்மை வளப்படுத்தும்.
ஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் கடின உழைப்பு, தியாகங்கள் உண்டு.
இவைகள் உண்மையா? இல்லையா என உங்கள் சமீபத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் எவரையேனும் கேட்டுப் பாருங்கள். சரி என்றாலும், சரி இல்லை என்றாலும் அவர்கள் கூறும் பதிலையாவது எங்களுக்குத் தெரியப் படுத்துங்கள்.
ஐயம் நீங்கப் பெறுவது நமது கடமை. அதனை என்றும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
கருத்துக்கள் எதுவும் இல்லையெனில் தமிழரின் மரபு அறிவை இன்றைய தமிழர்கள் முன்னெடுக்க மறுக்கிறார்கள். அல்லது அடிமைகளாகவே வாழ நினைக்கிறார்கள் என நாங்கள் கருதுகிறோம்.
அப்படியானால் விரைவில் இந்த ஆய்வை குழி தோண்டி புதைக்க வேண்டுமா? அல்லது அறிவை வளர்த்தெடுக்க வேண்டுமா? என்பதன் முடிவை இக்கால உலக தமிழர்களின் கையில் விட்டு விடுகிறோம்.
உலகமெங்குமுள்ள தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், பெரும்பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்களுக்கு அடித்தளம் இட்ட மகிழ்வு எங்களுக்கு உண்டு.
வருகிறது தமிழ்ப் புத்தாண்டு. வரவேற்க தமிழர்கள் அணியமா? இல்லையா? முடிவு உலக தமிழர்கள் கையில்.
இயற்கையில் தவறுகள் உள்ளன. இதுவரை கண்ணியமாக சுட்டிக் காட்டியிருக்கிறோம். மாந்த முயற்சியினால் மட்டுமே இவைகள் சரி செய்யப்பட வேண்டிய அபாய கட்டத்தில் இன்றைய மாந்தர்கள் இருக்கிறார்கள்.
தமிழர்களால் மட்டுமே இந்த இயற்கை தவறுகளை சரி செய்ய முடியும். அதற்கு தமிழ் முன்னோர்கள் சரியாக வழி காட்டியுள்ளனர். 1000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் ராசராசன் அப்படியொரு முயற்சி செய்திருக்கிறார். அதற்குப் பின் இன்றுவரை தமிழரின் அறிவு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் மரபு நமக்கு இந்த தலைமுறையில் அறிவைச் சுட்டுகிறது. இந்தத் தலைமுறை இதனை எப்படி கையில் எடுக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் உலகில் அறம் வாழும். செழிக்கும். இல்லையேல் ஆட்டை நிமிர்வு சாத்தியமா?
முடிந்தவர்கள் ஆட்டையை நிமிர்த்துங்கள்.
ஆட்டையின் தவறை தமிழர்களின் முன்னோர் சரி செய்த வரலாறு இருக்கிறது. வழிமுறைகளும் இருக்கிறது. தவறைச் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம். சரி செய்ய வேண்டியது வேந்தனின் கடமை. கடமைச் செய்யும் வேந்தன் இன்று உலகில் யார்?
அன்புடன்
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக