வியாழன், 29 மார்ச், 2018

பாண்டியர் நாணயம் கிமு 300 தாய்லாந்து மாறன் இந்தோனேசியா ஏறுதழுவுதல் தொடர்பு பிராமி கல்வெட்டு சான்று

aathi tamil aathi1956@gmail.com

13/3/16
பெறுநர்: எனக்கு
Shiva > பாண்டியர்களுடன் ஒரு படையெடுப்பு-PANDIYARKALUDAN ORU PADAIYEDUPPU
‘மாறன்’ என்ற பெயர் பொறித்த சங்ககால
நாணயம் கண்டுபிடிப்பு.
‘மாறன்’ என்ற பெயர் பொறித்த கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது கி.மு.
நான்காம் நூற்றாண்டு கால நாணயத்தை “தினமலர்’ நாளிதழின் ஆசிரியரும்
தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத்தின் தலைவருமான இரா.கிருஷ்ணமூர்
த்தி கண்டறிந்துள்ளார்.
சங்ககால கொற்கைப் பாண்டியர்களால் வெளியிடப்பட்ட இந்த நாணயம் தொடர்பாக
அவர் கூறியதாவது:
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு பழைய பாத்திரக்
கடையில் நான் வாங்கிய நாணயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச்
சுத்தப்படுத்துவேன். கடந்த மாதம் அவ்வாறு நாணயங்களைச் சோதனை செய்தபோது
ஒரு வித்யாசமான சதுர வடிவ நாணயம் இருப்பதைப் பார்த்தேன்.
வெள்ளீயம்: அந்த நாணயத்தை தனியாக எடுத்து பல நாள்கள் சுத்தம் செய்த
பிறகு, அது வெள்ளீயத்தால் செய்யப்பட்டதை உணர்ந்தேன். வெள்ளீயத்தை
ஆங்கிலத்தில் ‘Tin’ என்று கூறுவார்கள். வெள்ளீயம் வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்படுவதாகும்.
தாய்லாந்து, இந்தோனேசியாவில் முற்காலத்தில் வெள்ளீயம் இயற்கையாகக்
கிடைத்தது. மலைகளில் இருந்த வெள்ளீயப் படிமங்கள், பாறைகளில் அதிக அளவில்
ஒட்டிக் கொண்டிருந்தன. வெள்ளீயம் அடங்கிய சிறுபாறைத் துண்டுகளைச்
சேகரித்து, வெளிநாடுகளுக்கு நெடுங்காலமாக அந்த நாட்டு வணிகர்கள் ஏற்றுமதி
செய்திருப்பர்.
சங்க காலத்தில் கொற்கை வணிகர்கள் கடல் வாணிபத்தில் மிகச் சிறப்பாக
இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்கள் தங்களது மரக்கலன்கள் மூலம்
கீழ்த்திசை நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள பொருள்களை வாங்கி வரும்போது
இந்த வெள்ளீயத் தாதுவையும் கொண்டு வந்திருக்கின்றனர். அதில் வெள்ளீயத்தை
மட்டும் பிரித்தெடுத்து உருக்கி நாணயங்கள் செய்யப் பயன்படுத்தியுள்ளனர்.
வெள்ளீயத்தால் செய்யப்பட்ட நாணயத்தின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
நாணயத்தின் முன்புறம்: நாணயத்தின் முன்புறத்தில் எருது ஒன்று இடப்பக்கம்
நோக்கி நின்று கொண்டிருக்கிறது. மாட்டின் கொம்புக்கு அருகில், முழுமையாக
அச்சாகாத “மா’ என்ற எழுத்து தெரிகிறது. இந்த எழுத்தின் இடது பக்கத்தில்
மேல்பகுதி சரியாக அச்சாகவில்லை. இந்த எழுத்து, மெளரிய பிராமி வகையைச்
சேர்ந்தது.
எருதின் மேல்புறம் “ற’ என்ற எழுத்து, இடமிருந்து வலப்பக்கம்,
படுத்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த எழுத்து, நின்ற நிலையில்
இருந்திருக்க வேண்டும். இடப் பற்றாக்குறையால், படுத்த நிலையில்
அச்சிடப்பட்டுள்
ளது. இந்த எழுத்து, தமிழ் பிராமி வகையைச் சேர்ந்தது.
கடைசி எழுத்தான “ன்’, தமிழ் பிராமி எழுத்து முறையில் உள்ளது. இந்த மூன்று
எழுத்துக்களையும் சேர்த்தால், “மாறன்’ என்ற பெயர் வரும். புறநானூற்றுப்
பாடல்களில் மாறன் பெயரைக் காணலாம்.
தொன்மைச் சின்னம்: எருதின் பின்புறம் உள்ள மிகத் தொன்மையான சின்னத்தின்
நடுவில் ஒரு வட்டமும் அதைச் சுற்றி இரண்டு “டவுரின்’ சின்னங்களும் இரண்டு
பெரிய புள்ளிகளும் உள்ளன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகத்
தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களில் இந்தச் சின்னம் காணப்படுகிறது.
எருதின் முன்புறம் தெளிவில்லாமல் இருக்கும் சின்னத்தை நுட்பமாக ஆய்வு
செய்தால், சிறு ஆறுபோல் தெரிகிறது. ஆற்றில் சில “டவுரின்’ சின்னங்கள்
தெளிவில்லாமல் இருப்பதைக் காணலாம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் சில
வடநாட்டுப் பழங்குடியினர் வெளியிட்ட நாணயங்களில் இந்தச் சின்னத்தைக் காண
முடியும்.
ஜல்லிக்கட்டு: நாணயத்தின் பின்புறம் தெளிவில்லாமல் இருந்தாலும், மிக
நுட்பமாக ஆய்வு செய்தால் ஒரு வீரன் எருதை அடக்க முயற்சிப்பதுபோலத்
தெரிகிறது. தொன்மைக் காலத்திலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டு
இருந்திருக்கலாம்.
தமிழரின் தொன்மையான கடல் வாணிபத்தையும் அயல்நாட்டினருடன் உள்ள
தொடர்புகளையும் நாம் சரியாக ஆய்வு செய்யவில்லை. எனவே கடல் வாணிபம்
குறித்து தெளிவு பெற, இதுபோன்ற தொன்மை நாணயங்கள் பெரும் சான்றுகளாக
இருக்கும் என்றார்
https://mobile.facebook.com/photo.php?fbid=563297163846170&id=100004976744326&set=gm.571636333012566&refid=28&_ft_=qid.6261315290873332010%3Amf_story_key.6214300706534234668&__tn__=E

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 3
பெறுநர்: எனக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக