|
25/11/17
| |||
Kumarimainthan
தமிழகத்தின் மழைச்சீர்மையை அழிக்கும் திட்டம் வெள்ளையன் காலத்திலேயே தொடங்கிவிட்டது. மலை உச்சிகளில் குறிப்பாக நீலகிரியில் சில்வர் ஓக் எனப்படும் ஒரே வகை மரங்களை நட்டிருக்கிறான். அங்கிருந்த மரபு மரம் எதுவெனத் தெரியவில்லை. இந்தியாவில் மிக அதிகமான பரப்பளவில் காட்டை அழித்துத் தேயிலைத் தோட்டம் போட்டிருப்பது தமிழகத்தில்தான். ஆனால் இந்தியனுக்குக் கிடைப்பது ஆங்கிலன் காலத்தில் குப்பையாகக் கொட்டிய தூள்தான். உண்மையான தேயிலை எல்லாம் ஏற்றுமதிக்கு. தமிழகத்தின் கடற்கலையில் மிக அதிக அளவில் சவுக்கு மரம் வளர்க்கப்படுகிற
து. இத்தோப்புகளுக்குள் நுழைந்தாலே உடல் எரிவது போன்ற வெப்ப உணர்வு ஏற்படும். கால்நடைத் தீவனம் என்ற பெயரில் வந்திறங்கிய சூபாப் புல் எனும் மரம் வேலிகாத்தானைப் போன்ற ஒரு களை மரம். அத்துடன் நிலத்தடி நீரை உறிஞ்சி எண்ணெய்யாக மாற்றி வளிமண்டலத்தில் விட்டு அதிலுள்ள நீராவி அடர்த்தியை அழிக்கும் நீலகிரி மரம் மட்டும்தான் தமிழகக் காடுகளில் உள்ளன. பிற மரங்களை ஆட்சியாளர்கள் அழித்துவிட்டார்கள். பிற எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள். யானைகள் நிலம் நோக்கி அதிக எண்ணிக்கையில் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். ம.கோ.இரா. பரிந்துரைத்த புறம்போக்குகளில் மரம் வளர்த்தல் என்ற திட்டத்தில் மிகப் பெரும்பாலும் நடப்பட்டது நீலகிரி மரம்தான். அது மட்டுமின்றி தமிழகத்தின் கடற்கரை ஒரங்களில் இருந்த சதுப்பு நிலங்களை நிரப்பி பருத்தி பொன்ற பயிர்களை நட்டு லங்காசயர் நூற்பாலைகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதனால் அங்கிருந்த மலைக்காடுகளை விடப் பன்மை கொண்ட மாவடை - மரவடைகள்(fauna and flora) அழிந்து போயின. இவ்வாறு இருநூறு முன்னூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த சீரழிவுகளின் விளைவு ஒரு பக்கம் என்றால் “நம்மவர்” ஆட்சியில் தமிழகத்தின் நீர் மூலங்களை அண்டை மாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்த பெருந்தன்மை மிக்க பெருந்தலைவர்களாலும் லால்பகதூர் சாத்திரி போன்ற கொடுக்கோலர்களாலும் காவிரியைக் காவுகொடுத்து கன்னட மாநிலத்தில் தன் குடும்பத்தாருக்கு நான்கோ ஐந்தோ தொலைக்காட்சி வாய்க்காலைத் தோண்டிக்கொண்ட கருணாநிதியாலும் கன்னட மாநிலம் நோக்கி அணிதிரண்டு சென்ற காவிரிப் படிகை உழவர்களை இடைநிறுத்தி நடுவர் மன்றம் அமைப்போம் என்று அந்தப் போராட்டத்தை அழித்து ஊழிக்கூத்தாடி கூலி பெற்றுக்கொண்ட ஆட்காட்டி பழ.நெடுமாறனாலும் பெரியாற்று அணை பேச்சு நடத்த பெட்டைப்பொறுக்கி அமைச்சன் கந்தசாமியை விடுத்து நாடகம் நடத்திய மா.கோ.இரா.வாலும் கடைசியாக 5 இலக்கம் பெரியாற்றுப் பாசன உழவர்களுடன் பொதுமக்களையும் திரட்டிக்காட்டி
விட்டுக் காணாமல் போய்விட்டு கேரளத்தானிடம பலன் பெற்றுக்கொண்ட உலகின் மாபெரும் தரகன் வைக்கோவாலும் தரிசாகிப்போன நிலத்தில் திறந்த வெளி மேய்ச்சலால் வேலிகாத்தான் தவிர முளைக்கும் அனைத்து மரம் செடிகளையும் புல் புதர்களையும் ஆடும் மேடும் மேய்ந்து அழித்துவிட வட காற்று அடித்து அடிக்கொரு முறை அடித்துப் பெய்யும் மழையையே பறிகொடுத்து நிற்கிறது தமிழகம். இதனை மீட்க வேண்டுமானால் இளந்தலைமுறையினர் சிலிர்த்தெழுந்து மூத்தோருக்கு எடுத்துரைத்து தங்கள சிற்றுடைமை நிலங்களை கூட்டாண்மை(கூட்டுறவு அல்லவே அல்ல) அமைத்து தவசங்கள், பயிறு வகைகள் தோட்டப்பயிர்கள் மாட்டுப்பண்ணை கொழிப்பண்ணை சிறு குளங்கள், சிறு குன்றுகள் காடு என்று கலப்புப் பண்ணைகளை உருவாக்கி நிலத்தில் பசுமையைப் பரப்ப வேண்டும். விளையும் பொருட்களை முடிந்த, பகுதிமுடிந்த பொருட்களாக்கிச் சந்தைக்கு விடுதல் என்று ஆண்டுமுழுவதும் வேலை கிடைக்க வழிகாண வேண்டும். மழைக்கு எதிரிகளான வேலிகாத்தான், நீலகிரி, சவுக்கு, சூபா புல் போன்ற மரங்களைப் பூண்டோடு அழிக்க வேண்டும். திறந்தவெளி மேய்ச்சலுக்கு முற்றாக முடிவுகட்ட வேண்டும். இதன் மூலம் விழும் மழையின் நீர் நிலத்துக்குள் இறங்கி மேலும் மேலும் திரளும். நில மட்டத்திலிருந்து குறைந்தது 20 அடிகளுக்காவது குளிர்ந்த சூழல் உருவாகி காற்றில் நீராவி சேரச்சேர மழையாக இறங்கும் நிகழ்முறை உருவாகும். இழந்த மழைச்சீர்மை மீளும். 20 ஆண்டுகள் நல்ல மழை, 20 ஆண்டுகள் சராசரி மழை, 20 ஆண்டுகள் குறைந்த மழை என்று நம் அறுபதாண்டு ஐந்திறம்(ஐந்திரமல்ல, இது பஞ்சாங்கம்) கூறும் சுழற்சி மீளும். மழை குறைந்த 20 ஆண்டுகளுக்கும் நிலத்தடி நீர் ஈடுசெய்யும். தம்பிகளே வாருங்கள் களத்தில் இறங்குவோம்! நிலத்தில் இறங்குவோம்! வயலில் இறங்குவோம்!

மழை இயற்கை சீமைக் கருவேல தேயிலை ஆங்கிலேயர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக