வியாழன், 4 மே, 2017

ஈவேரா தலித் எதிரான பேச்சுகள் சாதிவெறி தாழ்த்தப்பட்டோர் இழிவுபடுத்தினார் ஈ.வே.ரா பறையர்

aathi tamil aathi1956@gmail.com

6/3/15
பெறுநர்: எனக்கு
பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி கூறிய
கருத்துகளை நாம் ஆதாரத்தோடு தான்
வெளியிட்டு வருகிறோம். இதனை நம்ப மறுக்கும்
பெரியார் மீது குருட்டு பக்தி கொண்டவர்களுக்காக
மேலும் சில பதிவுகள்:
"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான்
ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக
ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச்
செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக
மாட்டாது." (குடியரசு 16.6.1926.)
எங்கள் என்றும் உங்கள் என்றும்
தமிழர்களை கூறுபடுத்தி பேசுவதன் மூலம்
தாழ்த்தப்பட்டோர் வேறு, பிராமணரல்லாதோர்
வேறு என்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.
"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும்
பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும்
ஆதி திராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத
எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக
உணருங்கள்" (குடியரசு 11.10.1931)
இதில் இடை நிலைச் சாதிகளின்
நலனுக்காகவே தாழ்த்தப்பட்டோர் நலன் பற்றி பேசியதாக
பெரியார் ஒப்புக் கொள்கிறார்.
பெரியார் பேசிய பிராமணர்/ பிராமணரல்லாதார்
அரசியலில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கம் பெற வில்லை.
பிராமணர், பிராமணரல்லாதார் தீண்டாதார் என்கிற
மூன்று வகைப்பாட்டில் நின்று கொண்டு தான்
தாழ்த்தப்பட்ட மக்களை பெரியார் அணுகுவதை காண
முடிகிறது.
பிடித்திருக்கிறது · 2 · முறையிடு · 3
மணி நேரத்திற்கு முன்பு
Kathir Nilavan
பிராமணரல்லாதோர் அரசியல் அதிகாரம்
பெறுவதற்கு குறுக்கே நிற்கும் நான்கு எதிரிகள்
குறித்து பெரியார் தன்னுடைய 85வது பிறந்த நாள்
விழா மலரில் (17.9.1963) பட்டியலிடுகிறார்.
1.பார்ப்பனர்கள் 2. நம்மில் கீழ்த்தர மக்கள் 3. முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்
ஆக இன்று நமக்குச் சமுதாய எதிரிகளாக இந்த
நான்கு கூட்டங்கள் இருக்கின்றன. நம்மில் கீழ்த்தர மக்கள்
என்பவர்கள் தங்களுடைய
இழிநிலை பற்றி கவலை இல்லாதவர்கள். சோறு, சீலை,
காசு ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக்
கொண்டவர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களை சோறு, சீலை,
காசுக்கு விலை போனவர்களாக பார்ப்பது தான்
பெரியாரின் சமூக(அ) நீதிப் பார்வையாகும்.

ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும் வேட்டொலி ஈ.வே.ரா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக