திங்கள், 1 மே, 2017

டாஸ்மாக் அரசியல் எம்.ஜி.ஆர் சாராயம் மதுவிலக்கு

aathi tamil aathi1956@gmail.com

19/3/15
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
டாஸ்மாக்...
மது உற்பத்தியில் வரி முறைகேடுகள் செய்ய
முடியாத உற்பத்தியாளர்களும், வருமானத்தை
இழந்த அரசியல்வாதிகளும் அவர்களது
கைத்தடிகளும் மதுவிற்பனை கடைகளுக்கு
உரிமம், கடைகளை ஏலத்தில் எடுத்து விற்பனை
செய்வது என்று தமது வியாபார யுத்தியை
மாற்றி அமைத்து தமது கைவரிசையை காட்ட
ஆரம்பித்தார்கள்...
அதுவரை திமுகவினர் தான் அதிக அளவில்
சாராயம் மற்றும் மதுபான கடைகளை ஏலத்தில்
எடுத்து நடத்திக்கொண்டு இருந்தார்கள்.
எம்ஜியாரும் தன் பங்குக்கு தமது
விசுவாசிகளை இறக்கினார். இன்று
தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப
பல்கலைகழகம் மற்றும் பல தொழில்நுட்ப
கல்லூரிகளை நடத்தும் ஜேப்பியார் மற்றும்
உடையார் இவர்களில் மிக முக்கியமானவர்கள்.
திமுக சார்பில் ஏவிகே என்ற ஏ.வி.
கிருஷ்ணமூர்த்தியும் சென்னையில் மதுபான
வியாபாரத்தில் முக்கியமானவர். (இந்த ஏவிகே
தான் ஐயா வைகோ திமுகவை விட்டு
வெளியேறிய போது, அவரும் வெளியேறி
மதிமுக என்ற கட்சியை தொடங்கியவர்.)
எம்ஜியாரின் மறைவுக்கு பிறகு அதிமுகவில்
பிளவு ஏற்பட்டது. அதிமுக சார்பில் மது
விற்பனை செய்தவர்கள் அதிமுகவுக்கோ,
அன்றைய முதல்வர் செயலலிதாவுக்கோ கப்பம்
கட்டாமல் ஒருபுறம் அவரை டபாய்த்தார்கள்.
மறுபுறம் திமுக, மதிமுக கட்சியினருடன்
ஒரு "புரிந்துணர்வு" ஒப்பந்த அடிப்படையில்
வியாபாரத்தை நடத்தினர். அனைத்து
கடைகளையும் ஒரு குறிப்பிட்ட (குறைந்த)
விலையை நிர்ணயம் செய்து ஏலத்தில் இவர்கள்
எடுப்பார்கள். 50:50 என்ற அடிப்படையில்
கடைகளை பிரித்துக் கொள்வார்கள்...
மீண்டும், அரசுக்கு வருமான இழப்பு...
அன்றைய முதல்வரான செயலலிதாவுக்கு வசூல்
இழப்பு ...
ஆனால், அப்போது முதல் முறையாக
முதல்வரான (1991 -96) அவரால் ஒன்றும் செய்ய
முடியவில்லை.
அடுத்து முதல்வரான கருணாநிதி அரசுக்கு
(1996 - 2001) இந்த மதுவிற்பனை சாதகமாக
இருந்ததாலும், கப்பம் ஒழுங்காக
வசூலானதாலும் மதுவிற்பனை
"புரிந்துணர்வு" ஒப்பந்தம் தொடர்ந்தது ....
2001ல் மீண்டும் செயலலிதா முதல்வரானார்
.......
--- தொடரும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக