திங்கள், 15 மே, 2017

ஈழத்தமிழருக்காக தீக்குளிப்பு 65 வயது முதியவர்

aathi tamil aathi1956@gmail.com

8/2/15
பெறுநர்: எனக்கு
சென்னை அமரேசன் நினைவு நாள்
8.2. 2009
இலங்கைத் தமிழருக்காக தீயிட்டுக் கொள்கிறேன்!
சென்னை வண்ணாரப் பேட்டை திருவொற்றியூர்
நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி பேருந்து நிலையம்
உள்ளது. அதன் அருகில் ஒரு முதியவர் தன்னுடலில் தீ
வைத்து கொண்டு வலி தாங்காமல் அலறிக்
கொண்டிருந்தார். அருகில் உள்ளவர்கள் கருகிய
உடலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். போகும் வழியிலே அந்த முதியவரின்
உயிர் பிரிந்தது.
அவரின் பெயர் அமரேசன். வயது 65.
இவரது மனைவி பெயர் வசந்தா. இவருக்கு சங்கர்,
வெங்கடேசன் என்ற இருமகன்களும், மீரா,
அருள்ஜோதி என்ற இரு மகள்களும் உண்டு. அமரேசன்
தொழில் செய்வதற்காக
இருபது வருடங்களுக்கு முன்பே தனது சொந்த ஊரான
இராசபாளையம்
ஊரை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவில்
கோழிக்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார்.
ஈழத்தமிழர்கள் படுகொலையை நிறுத்தக்
கோரி உயிர்நீத்த முத்துக்குமாரை நினைத்து மிகவும்
வேதனை அடைந்தார். பள்ளப்பட்டி ரவி,
சீர்காழி இரவிச்சந்திரன் ஆகியோர்களின்
அடுத்தடுத்து மரணங்கள் மனதை மிகவும்
பாதித்திருந்தன. அவர்கள்
வழியிலே தனது உயிரையும் போக்கிக் கொள்ள
முடிவெடுத்து தன்னுடலில் தீயிட்டுக் கொண்டார்.
இறந்து போன அவரிடமிருந்து வாக்கு மூலம் எதுவும்
பெறப்படவில்லை. இதனை சாக்காக வைத்துக்
கொண்டு கருணாநிதி அரசின் காவல்துறை நுரையீரல்
நோய் காரணமாக அமரேசன் தற்கொலை செய்து கொண்டதாக
வதந்திகளை பரப்பியது.
பின்னர் மூத்த மருமகன் முத்து கணேசுக்கு அமரேசன்
எழுதிய ஒரு கடிதம் அவரின்
வீட்டு முகவரிக்கே வந்து சேர்ந்து இருந்ததை குடும்பத்தினர்
கண்டனர். அக்கடிதத்தில் அமரேசன் இருட்டில் வாழும்
ஈழமக்களின் துயரத்தை குறிப்பிட்டு இருந்தார்.
அது பின்வருமாறு :
" எல்லாம் அவன் செயல். உயர் திரு. பெரிய
மாப்பிள்ளை அவர்களுக்கு மாமா எழுதியது.
நல்லதே நினையுங்கள். நல்லதே நடக்கும். இறைவன்
கொடுத்த கெடு முடிந்து விட்டது. இலங்கைத்
தமிழர்களை நினைத்து அவர்கள் படும்
துயரங்களை கற்பனையில் நான் அங்கு வசிப்பதாக
நினைத்துப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை.
நினைப்பதற்கே மிகக் கஷ்டமாக இருக்கிறது.
இப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்தால்...
ஒரு மணிநேரம் கரண்ட் போய் விட்டால் நம்மால் ஒன்றும்
செய்ய முடிய வில்லை. காட்டுக்குள்
குழந்தை குட்டிகளுடன் பயந்து வாழ்கிறார்கள்.
ஆகையால் என் உடம்பை தீயிட்டுக் கொள்கிறேன். எல்லோரும்
நலமுடன் வாழுங்கள்."
இது போன்றதொரு கடிதத்தை அமரேசன் தனது மூத்த மகன்
சங்கருக்கும் எழுதத் தவறவில்லை. அன்னாரது உடல்
மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட
போது வண்ணாரப்பேட்டை பொதுமக்கள்
கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
தனது கணவர் இறந்த துயரத்தோடு வாழ்ந்து வந்த
அமரேசன் மனைவி வசந்தா அவர்களும் 21.5.2012
அன்று மறைந்து போனார். இதன் காரணமாக
மீண்டுமொருமுறை அக்குடும்பம் சோகத்தில் மூழ்கியது.
வீரச்சாவு எய்திட்ட அமரேசனுக்கு இந்நாளில்
வீரவணக்கம் செலுத்திடுவோம்! —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக