|
12/3/15
| |||
http://tamiliyam.blogspot.in/ search/label/தமிழ்%20வேர்?m=0
வேர்ச்சொல் இணையம்
ஆலோசனை என்ற சொல் தமிழ்ச் சொல்லே. ஆல்
+ஓசனை=ஆலோசனை. ஆல்=ஆலமரம். ஓசனை=யோசனை, எண்ணம்,
சிந்தனை. அக்காலத்தில் சித்தர்கள் மலைகள் மேலுள்ள
பாழிகளில் தங்கியிருப்பர், ஆலமரத்திற்கடியில்
அமர்ந்திருப்பர். மக்கள் தங்கள் துன்பங்களுக்குத்
தீர்வு(ஓசனை) வேண்டி அங்கு வந்து தங்களுக்குத்
தேவையான தீர்வைப் பெற்றுக்கொள்வர். அப்படி சித்தர்கள்
வழங்கும் தீர்வுக்கு ஆலோசனை(சித்தர்களின் எண்ணம்/
சிந்தனை/தீர்வு) என்று பெயர். சித்தரான
சிவனுக்கு ஆலமர்செல்வன் எனும் பெயரும்
இதனடியே தோன்றியதேயாகும்.
இதனடியே தோன்றியதே ஆலமரத்திற்கு அடியில்
பஞ்சாயத்து என்ற வழக்கமும் ஆகும். இச்சொல்,
சமஸ்கிருதத்தில்
ஆலோசனை>ஆலோசனா என்று திரிந்தது.
ஆலயம்(ஆல்+அயம்) என்ற சொல் பற்றி பாவேந்தர்
பாரதிதாசன் அவர்களின் விளக்கம்
ஆலோசனை சொல்லிற்கும் பொருந்தும். முன்னாளில்,
ஆலமரத்தடியில் அமைந்த நிழல் மிக்க
பேரிடத்தை வழக்கு தீர்ப்பிடமாகவும்(மக்களின்
துன்பங்களுக்குத் தீர்வு கிடைக்குமிடம், தற்கால
பஞ்சாயத்து ஞாபகம் வருகிறதா?...இப்பண்பாட்டின்
தொடர்ச்சி தான் பஞ்சாயத்து...),
கல்வி பயிலிடமாகவும்(குருகுலக் கல்வி),
விழா நடைபெறுமிடமாகவும்
கொண்டு பெருமைப்படுத்தினார்கள். அதுவே,
பிற்காலத்தில் வணக்கத்திற்குரிய இடமாயிற்று. -
குயில் இதழ்(8-7-1958) - கட்டுரை - "வந்தவர்
மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?" - பாவேந்தர்
பாரதிதாசன்
# தமிழ்ச்_சொல

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக