திங்கள், 15 மே, 2017

எருமையூர் மைசூர் 1956 மண்மீட்பு தமிழ் வடுகர்

aathi tamil aathi1956@gmail.com

27/2/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
எருமையூரன் யார்???
===================
பண்டைய தமிழ் இலக்கியங்களில் சுட்டிக்
காட்டப்பட்டுள்ள எருமை என்பான் வேளிர் பிரிவைச்
சேர்ந்த குறுநில மன்னன் ஆவான் மேலும்,
எருமையூரை தலைநகராகக்
கொண்டு எருமை நாட்டை ஆட்சியும் புரிந்தான். இந்த
எருமை, வடுகர்ப் பெருமகன் என்று அழைக்கப்படுவதால்
அவன் எங்கள் குலப் பெருமகன் என்று சில தற்கால
வடுகர்கள் உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
அப்படியெனில் அப்போது குறிப்பிட்டுள்ள வடுகர் யார்
என்ற கேள்வி எழுகிறது....
பண்டைய கால வடுகர் யார் அவர்கள் பேசிய மொழி
==============================
================
என்னவாயிருக்கும்??
==================
வடுகர் என்ற பெயர் வடக்கர் என்பதன் திரிபே ஆகும்.
வட திசையில் வசித்தோர் வடக்கர் ஆவர். இவர்கள் பேசிய
மொழியும் தமிழே. இவர்களது தமிழ் நடை, பண்டைய
தமிழகத் தமிழின் நடையை ஒத்தே இருந்தது. தற்போதைய
தென்கருநாடக மற்றும் தென் ஆந்திரப் பகுதியில்
இவர்கள் வாழ்ந்தனர். தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும்
எருமையூரன் வடுகர்க்கோன் என்று குறிக்கப்
பெறுகிறான். தமிழர்களின் எல்லையோரப் பகுதிகளில்
ஆரியர்கள் ஊடுருவல் தொடர்ந்த போது, வளம் பொருந்திய
தமிழ்நாட்டில் அவர்கள் வாழ முற்படும் போது,
எல்லை இனத்தாரான வடக்கர்களோடு (தமிழர்கள்) அவர்கள்
ஒன்ற வேண்டியிருந்தது. வடக்கரின் வட
எல்லைப்பகுதி ஆரிய தேசத்தின் அண்மையில்
இருந்தமையால் ஆரியர்களோடு வட எல்லையோர வடக்கர்
கலந்தனர். இப்படிக் கலந்தோர் புதிய இனமாக
உருவெடுத்தனர். அவர்களது பாகதமொழியும், வடக்கரின்
தமிழ் மொழியும் கலந்தது. அவ்வாறு உருவான
மொழியே கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிவை ஆகும். ஆக,
இப்போதைய வடுகர் அப்போதைய வடுகர் அல்ல...
பின்குறிப்பு:
==========
எல்லா வடுகர்களும், பாகதம் பேசிய
ஆரியர்களோடு கலக்கவில்லை, தென் பகுதியில் இருந்த
தமிழ் பேசிய வடுகர்கள்
ஆரியர்களோடு கலக்கவில்லை....
எனவே எருமையை உரிமை கொண்டாடுவதற்கு , தற்கால
வடுகர்களுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை
 https://m.facebook.com/photo.php?fbid=500194063446422&id=100003674994124&set=a.192869057512259.46848.100003674994124
மைசூர் பெங்களூர் கோலார் தமிழர் மண்ணே வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக