திங்கள், 1 மே, 2017

தமிழகம் 40% விவசாயம் குறைந்தது காவிரி தடுப்பால் கன்னடர் வேளாண்மை நதிநீர் காவேரி

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
தொல்காப்பியன் பொற்கோ
காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை!
----------------------------------------------------
கர்நாடகம் குடிநீர்த் தேவை என்று கூறி கட்டிக்
கொண்ட தடுப்பணைகளால் கடந்த 25
ஆண்டுகளாக தமிழகத்தில் விவசாயம் 40
விழுக்காடு குறைந்து விட்டது. மழைக்
காலங்களில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர்
அணைகள் நிரம்பியதும் உபரி நீர் இந்த
தடுப்பணைகளைத் தாண்டி தமிழகத்திற்கு
வந்து சேர்ந்த பிறகு மேட்டூர் அணை
நிரம்புகிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை
பெய்யாத போது நீர்வரத்து குறைகிறது.
கர்நாடகம் குடிநீர்த் தேவைக்காக திறந்து
விடும் நீர் இந்தத் தடுப்பணைகளால் தடுத்து
நிறுத்தப்பட்டு விடுகிறது.
இந்த நிலையில், மேலும் இரண்டு
தடுப்பணைகள் 48 டி.எம்.சி. நீரைத் தேக்கும்
வகையில் எல்லை மாவட்டமான
மாண்டியாவில் மேகதாது எனும் இடத்தில்
கட்டும் முடிவு, மழைக் காலங்களில்
தமிழகத்திற்குள் வரும் காவிரி நீரையும்
தடுத்துவிடும். இவ்வளவுக்கும் காவிரி
நீர்ப்பாசனம் தமிழ்நாட்டில் 34 சதவீதம்;
கர்நாடகத்திலோ வெறும் 18 சதவீதம்தான்
என்றாலும் அடாவடித்தனமாக கர்நாடகம்
தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
கர்நாடகாவில் காவிரியின் ஓட்டம் 320 கி.மீ.
இதற்குள் இரு பெரிய அணைகள் (கிருஷ்ணராஜ
சாகர், கபினி) 20க்கும் மேற்பட்ட
தடுப்பணைகள் உள்ளன. தமிழ்நாட்டிலோ
காவிரியின் நீரோட்டம் 416 கி.மீட்டர்;
கணக்குப்படி பார்த்தாலும் அதிக உரிமை
தமிழ்நாட்டுக்குத்தான் என்பது வெளிப்படை.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக