|
21/2/15
| |||
பர்மாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டத்
தமிழர்கள் ...................!
"நான் அவளைப் படுக்கவைத்தேன் .
அப்போது மயங்கிப்படுதவள்தான் . விடியும் வரை அவள்
எப்போதாவது விழித்துக்
கொள்வாளோ என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம்தான்
மிஞ்சியது. மறுநாள் காலை பத்துமணிவரை எங்கே அவள்
எழுந்துவிட மாட்டாளா என்ற ஏக்கத்தில் அவள்
அருகிலேயே இருந்தேன். படுத்தவள் படுத்தவள்
தான் .அவள் எழுந்திருக்கவே இல்லை .அவளின்
தலை மாட்டில் ஒரு டப்பாவில் தண்ணீரை வைத்தேன் .
ஒருவேளை விழித்துக் கொண்டால்
வழிநடந்து என்னை வந்துச் சேருவாளோ என்ற
நப்பாசையால். நன்றாக ஒரு புடவையால்
போர்த்து விட்டுக் கிளம்பத் துணிந்தேன் .கால்கள்
எழவில்லை . என்னுடைய சரிபாதி சடலமாகக்
கிடக்கும்போது அது எப்படி முடியும்? ஆயினும்
கடமை அழைத்தது . மனதைக்கல்லாக்கிக்
கொண்டு நடந்தாலும் திரும்பித் திரும்பிப் பார்க்கத்
தோன்றியது . மனதிற்க்குள் அழுதவாறே நடந்தேன்.
அங்கிருந்து செங்குத்தான மலை ஏற்றம் அந்தப்
பாதையில் ஒரு மையில் தூரம் போயிருப்பேன். தீனமானக்
குரல் தெளிவாகக் கேட்டது. ஓடினேன் துக்கம்
தாங்கமாட்டாத ஆத்திரம் கலந்த ஆவலுடன் அவளைச்
சென்று பார்த்தேன். நான் எப்படி விட்டுச்
சென்றேனோ அதே நிலையில்தான் படுத்திருந்தாள் .
எனக்குள் எதோ ஒரு ஏக்கம் ஏமாற்றம்
அதற்க்கு அவளா பொறுப்பு ...?"
இடப்பெயர்வுகளின் போது தனது மனைவியைப்
பறிகொடுத்த ஒரு தமிழரின் வாக்குமூலம் இது.
சோழர்களின் ஆட்சிகாலத்தில் சுமார் ஆயிரம்
வருடங்களுக்கு முன்னரே தமிழர்கள் வணிகம்
செய்வதற்க்காக மியன்மார் என்று இன்று அழைக்கப் படும்
அன்றைய பர்மாவுக்கு சென்று பகான் என்னுமிடத்தில்
குடியேறி இருந்தனர்.பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள்
என்பது குறித்து தெளிவான வரலாறுகள்
காணப்படவில்லை .
இன்றைய பர்மியத் தமிழர்கள் சுமார்
இருநூறு வருடங்களுக்கு முன்னதானக்
காலப்பகுதிகளில்தான் வெள்ளை ஏகாதி பத்தியத்தால்
தொழிலுக்காகவும் பின்னர் செட்டியார்களால்
விவசாயத்திடற் காகவும் தமிழ்
நாட்டிலிருந்து கொண்டுவந்து குடியமரத்தப்பட்டனர்.
1836 இல் கட்டப்பட்ட கோயில்கள்
அங்கு காணப்படுகின்றன. விவசாயத்திலும்
வியாபாரத்திலும் போக்குவரத்திலும் கொடிகட்டிப்
பறந்த பர்மாவின் முதுகெலும்பாக விளங்கிய
தமிழர்களின் வாழ்வை இரண்டாம் உலப் போரும், அதன்
பின்னரான இராணுவ ஆட்சியும் தலைகீழாக்கியது.
இராணுவ ஆட்சியின்போது மக்களின் சொத்துக்கள்
அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டது. இதனால்
முதலாளிகளாக விளங்கியத் தமிழர்கள் கூலித்
தொழிலாளிகளாக ஆக்கப்பட்டனர்.
1942 இல் ஜப்பான் இங்கிலார்ந்திடமிருந்து பர்மாவைக்
கைப்பறிக் கொண்டது .
இங்கிலார்ந்து பின்வாங்கியதால் சட்டம்
ஒழுங்கு சீர்குலைந்தது. ஜப்பான் படைகள்
இந்தியர்களைக்
குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதால்
பர்மியர்களுக்கும் வேலை சுலபமாகப் போய்விட்டது.
கூட்டம் கூட்டமாக வந்து தமிழர்களின்
சொத்துக்களையும் பெண்களையும் பறித்துக்கொண்டு
சென்றார்கள் . எதித்தவர்களை எல்லாம் வெட்டிச்
சரித்தார்கள் . சுமார் 55 மயிலியன் மக்கள்தொகையைக்
கொண்ட பர்மாவில் இந்தியர்களின் தொகை வெறும் 2%
மக்கவே இருந்தது. ஆக
ஊரோடு திரண்டு வந்து தமிழர்களின்
சொத்துக்களை சூறையாடினார்கள் . எங்கு பார்த்தாலும்
கொள்ளை .கொலை. தமிழர்கள்
அகதிகளாகிகளா மாறினார்.
பர்மாவின் இரண்டாவது தலைநகரான மான்லி நகரில்
அகதி முகாம்களில் மட்டும் ஒருநாளைக்கு சுமார்
400-500 தமிழர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஸ்
கவர்ணர் மொறிஸ் கோடிஸ் தனது புத்தகத்தில்
எழுதியுள்ளார்.
ஆக பர்மாவை விட்டு வெளியேறும் அனைத்துப்
போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டிருந்த
நிலையில் வேறு வழியின்றி தமிழர்கள் காடுகளின்
ஊடாக ஆயிரக்கணக்கான மைல்களைக்
கடந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல
முற்பட்டனர்.ஆனால் அந்தப் பயணம் இலகுவானதாக
இருக்கவில்லை . அடர்ந்த காடுகளில் பாம்புகளாலும் ,
புலியாலும் , மலேரியாவாலும் ,
மழை வெள்ளத்தினாலும் , உணவின்றியும்
ஆயிரக்கணக்கனவர்கள் மடிந்து போயினர்.
பிரிட்டிஷ் அரச நிர்வாகத்தில் பணியாற்றுவதற்க்காக
பர்மாவுக்குச் சென்று டவுன்ஜி நகரில் வாழ்ந்த
பசுபதி ஐயர் தனது மனைவி மற்றும்
இரண்டு மகள்களுடனும் அகதியாகி காடுகள்
வழியே இந்தியாவுக்குப் புறப்பட்டார். இறுதியாக
மூன்று மாதங்களின் பின்னர் தனி மனிதனாக
இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.
"பர்மாவிலிருந்து நடையாய் நடந்து "என்ற அவரின்
நாவலில் அவரது மனைவியின் இழப்பைக் குறித்து அவர்
எழுதியுள்ளதைத்தான் நாம் மேலே பார்த்தோம்.
"போர் நடந்து கொண்டிருப்பதால் நீங்கள் தனியாக
பர்மாவுக்குப் போகவேண்டாம் .
உங்களை அனுப்பிவிட்டு என்னால் இங்கு நிமதியாக
இருக்க இயலாது "
இவ்வாறு கூறிய
அவரது மனைவி தனது ஒரு மகனை இந்தியாவில்
விட்டுவிட்டு இரண்டு மகள்களையும் அழைத்துக்
கொண்டு அவரோடு பர்மாவில் வந்து தங்கியிருக்கின்
றார்.ஆனால் அவர் நாடு போய்ச் சேரவில்லை .
தமிழர்களுக்கு உலகம் முழுவதும் கொடுமைகள்
காலம்தோறும் நடக்கின்றன . இது தமிழனுக்கே உரிய
சாபக்கேடு போலும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக