வியாழன், 11 மே, 2017

பிறமொழி தமிழ் சாதிகள் 2 1956

aathi tamil aathi1956@gmail.com

27/2/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar

பல்லாரியிலும் இவர்கள் தமிழே பேசி வருகின்றனர்.
மலையாளம் பேசும் தமிழ் இனக்குழுக்கள்:
=================================
ஈழவர்:
======
இவர்களே கேரளத்தின் பெரும்பான்மை சமூகத்தினர்
ஆவர். நூறு விழுக்காடு தமிழ்
இனக்குழுவினை சேர்ந்தோர் இந்த ஈழவர் ஆவர். இவர்கள்
சேர வில்லாளர் மரபை சேர்ந்தோர்
என்று வரலாற்று ஆய்வர்கள் உறுதி செய்துள்ளனர்.
இவர்களது பூர்வீகம் வட ஈழப் பகுதி என்றும்
கூறுவார். இவர்களுக்கு தீயர் என்ற பெயரும் உண்டு.
துவக்க காலத்தில் வடுகர்களான நாயர்கள் மற்றும்
ஆரிய நம்பூதிரி பார்ப்பனர்களால் தீண்டத் தகாதோர்
என்றறிவிக்கப்பட்டு ஐயா வைகுண்டர் மற்றும்
நாராயணகுரு ஆகியோரால்
இனவெழுச்சி கண்டு தற்போது உயர்ந்த நிலையில்
வாழ்பவர் ஈழவர் ஆவர். இவர்களுக்கு சாணார் என்ற
மற்றொரு பெயரும் உண்டு.
தீவறர்:
=====
முக்குவர், வலையர், அரையர் என்ற பெயர்களைக்
கொண்டு விளங்குவோர் இந்த தீவறர் இனத்தார் ஆவர்.
இவர்கள் கேரளத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக
வசிக்கின்றனர். சிலர் கிறித்தவ
மதத்தை தழுவி வாழ்கின்றனர்.
கம்மாளர்:
========
நூறு விழுக்காடு தமிழ் இனக்குழுவினை சேர்ந்தோர்
கேரள கம்மாள இனத்தார் ஆவர். நாஞ்சில்
நாட்டு போராட்டங்களில் மார்ஷல் நேசமணிக்கு இவர்கள்
உறுதுணையாக இருந்துள்ளனர். தற்போது இவர்கள் சிலர்
தமிழை விடுத்து மலையாளத்தை பிழைப்பிற்காக
ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மாப்பிள்ளை முஸ்லிம்கள்:
=====================
சேரநாட்டில் மன்னனாக இருந்துவந்த சேரமான்
பெருமாள் காலத்தில் அரபு மற்றும் பாரசீக வணிகர்கள்
கொடுங்கல்லூர் (முசிறி) பட்டணத்துக்கு வணிகம் செய்ய
வந்த போது அங்கு வசித்து வந்த குறும்பர் மற்றும்
முக்குவர் இனத்தார் சிலர் சைவ மதத்தை விட்டு இஸ்லாம்
மதத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர் சில காலங்களில்
வந்தேறிய நாயர்களின் ஆதிக்கம் அதிகமான போது தீயர்
பலர் இஸ்லாம் மதத்தை தழுவினர். புலையர் பலரும் வர்ண
கோட்பாட்டில் அகப்பட்டுக் கொள்ளாது இஸ்லாம்
மதத்தை ஏற்றுக் கொண்டனர். இப்படியாக பல தமிழ்
இனக்குழுக்கள் ஒன்றிணைந்த ஒரு மதக்குழுவாக
மாப்பிள்ளை முஸ்லிம்கள் உள்ளனர்.
இவர்களை அரபு வழித்தோன்றல் என நிறுவ
முயற்சி செய்து அது பின்னர் தவறாகிப் போனது.
சிரியன் கத்தோலிக்கர்: (மலங்கரா)
==========================
யூதரான தோமையார் சேரநாட்டில் உள்ள
முசிறி துறைமுகத்தை கி.பி. 52 ‘ல் அடைந்தார்.
மலையின் கரை (Malankara) பட்டிணமான
முசிறி அவருக்கு மன மகிழ்ச்சியைக் கொடுத்தது.
வில்லவர் சிலர் அவருடைய
பிரச்சாரத்தை செவிமெடுத்து தாம் சார்ந்த பெளத்த
மதத்தை விட்டு நீங்கி தோமையாரின்
மார்க்கத்தை தேர்ந்தெடுத்தனர். இது இப்படித்தான்
நடந்திருக்க வேண்டும். ஏனெனில், பார்ப்பனர்களின்
பாதம் படாத பூமியாக சேர நாடு இருந்து வந்தது.
பிற்காலத்தில் ஆரிய பார்ப்பனரின் (நம்பூதிரி)
வருகைக்கு பின்னர் சாதிய வெறி சேர மண்ணில்
தலை விரித்து ஆடியது. தமிழர்கள் பல
இனக்குழுக்களாக பிரிக்கப் பட்டனர். அப்படியாக
பிரிக்கப்பட்ட இனக்குழுக்களில் முக்குவர், ஈழவர்,
நாடார், புலையர் ஆகியோர் முக்கியமானவர் ஆவர்.
பதினாறாம் நூற்றாண்டில் இந்த இனத்தார்
கிந்து மதத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் சாதிய
அடக்குமுறைகளைக் கண்டு வெதும்பி மலையின்
கரை மார்க்கமான பல மாற்றங்களைக் கண்டு உரு மாறிய
தோமையாரின் வழியான கத்தோலிக்க வழியினை ஏற்றுக்
கொண்டனர். இருப்பினும் சேரநாட்டில் ஆட்சிப்
பொறுப்பில் இருந்த வந்தேறி நாயர்களுக்கும்
அவர்களின் ஆஸ்தான வழிகாட்டிகளான நம்பூதிரிகளுக்க
ும் அடிமைகளாகவே இருந்து வந்தனர். துவக்க
காலத்தில் பண்டைய தமிழர்களான வில்லவர்கள் சிரிய
மதத்தில் ஏற்றம் பெற்று பின்னர் புதிய மாற்றம் கண்ட
புதிய இனக்குழுவினரை தாழ்ச்சியாக நோக்கினர்.
இதனால் இன்று வரை இம்மதத்தில் ஏற்றத் தாழ்வு உள்ளது.
இதில் நம்பூதிரிகளின் சதித் திட்டமும்
அடங்கியுள்ளது. ஆக, இந்த இனத்தார் தமிழ்
இனக்குழுக்களைக் கொண்ட மற்றொரு மதக்குழுவினர்
ஆவர்.
நாடார்:
=======
மலையாளம் பேசும் மற்றொரு தமிழ் இனக்குழுவினர்
நாடார் ஆவர். திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம்
ஆகிய மாவட்டங்களில் இவர்கள் செறிவாக உள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் இவர்கள்
ஐம்பது விழுக்காடு உள்ளனர். இவர்கள்
எஸ்.ஐ.யூ.ஸி (சவுத் இந்தியன் யுனைட்டட்
கிறிஸ்டியன்), மலங்கரா, இலத்தின் கத்தோலிக் ஆகிய
கிறிஸ்தவப் பிரிவினராகவும்,
ஐயா வைகுண்டசாமி வழியினராகவும்
காணப்படுகின்றனர். துவக்கத்தில் நாயர்களின்
ஆதிக்கத்தை எதிர்த்து பெரும் போராட்டங்கள்
நிகழ்த்தி நாயர்களின் கொட்டத்தை அடக்கியோர் ஆவர்.
ஐயா வழி நாடார்கள் தமிழகத்தில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
அங்கு அவர்களது தாய் மொழி தமிழ் ஆகும்.
இடையர் அல்லது கிருஷ்ணவகை:
===========================
இவர்கள் மிகச்சிறு இடைச் சமூகத்தினர் ஆவர்.
துவக்கத்தில் திருமால் வழிபாட்டு முறைகளைக்
கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் தற்போது தமிழ்க் கடவுள்
முருகனைப் போற்றுகின்றனர். இவர்களை கிந்தி பேசும்
யாதவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு ஏனெனில்
இடையர் என்பார் நூறு விழுக்காடு தமிழர் ஆவர்.
புலையர்:
========
கேரளத்தில் காணப்படும் பழந்தமிழ் இனத்தினர் புலையர்
ஆவர். இவர்கள் புழையர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
நாயர்/நம்பூதிரி சாதி வெறியாட்டத்தில்
சிக்கி அல்லல் பட்ட ஒரு இனக்குழுவினர் இவர்கள் ஆவர்.
போதிய அளவில் இன்னமும் ஏற்றம் பெறாது இருக்கும்
ஒடுக்கப் பட்ட இனத்தினராக புலையர்
இருந்து வருகின்றனர்.
மன்றாடியார் அல்லது மேனன்:
=======================
கேரள மாநிலம் பாலக்காடு, கொச்சி மற்றும்
திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் காணப்
படுகின்றனர். வேளாளர்களின் ஒரு பிரிவினர்களான
மன்றாடியார் நாயர்களின் சாதிய அடக்குமுறைகளில்
இருந்து தப்ப தங்களை மேலோன் (மேனோன்
அல்லது உயர்ந்தவர்) என்று அழைத்துக் கொண்டனர்.
இவ்வாறு மேலோன் அல்லது மேனோன் அல்லது மேனன்
என்றழைத்துக் கொண்டோர் கொங்கு வெள்ளாளரின்
பிரிவு என்ற வரலாற்று நிரூபணங்களும் இருக்கின்றன.
தற்போது வந்தேறிகளான நாயர்கள் பலரும்
எவ்வாறு தமிழர்களின் பட்டமான
பிள்ளை என்பதை பயன்படுத்து கின்றனரோ அதே போன்று தங்களை மேனன்
என்றும் கூறிக் கொள்கின்றனர். எனினும், கொச்சி,
பாலக்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் இந்த
வெள்ளாள மேனன்கள் தமிழர்
இனக்குழு என்பதை அவர்களது உருத்தோற்றமும் நிறமும்
காட்டிக் கொடுத்துவிடும். இரு மேனன்களுக்கும்
மணவிடை என்பது கிடையாது. ஆக, எல்லா மேனன்களும்
“மேனன்” அல்ல.
முடிவுரை:
=========
இவ்வாறு பல இனக்குழுக்கள் தங்களை தமிழர்
என்று அறியாது வாழ்ந்து வருகின்றனர். எனவே தமிழ்
இனக்குழுக்களுக்கு இடையே கருத்தொற்றுமையை
விதைத்து அவர்களது தாய்
மொழி தமிழே என்பதை நிறுவ வேண்டிய
கடமை தமிழை அடிப்படையாகக் கொண்டு இயங்கும்
அமைப்புகளுக்கு உள்ளது. கன்னடம், தெலுங்கு பேசும்
தமிழ் இனக்குழுக்களை தமிழகத்தில் உள்ள
அவர்களது இனக்குழுத்
தலைமை முயற்சி மேற்கொண்டு பிரிந்து போன
இனங்களை ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும்.
இல்லாவிடில் தமிழர் அடுத்து சில ஆண்டுகளில்
மேலும் சிதறுண்டு சிறந்த அடிமையினமாக
மாறி விட வாய்ப்புண்டு.

மண்மீட்பு தமிழ்ச்சாதிகள் மலையாளி கேரளா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக