வியாழன், 11 மே, 2017

பள்ளு தென்காசி பாண்டியர் கொல்லம் கொண்டவன் பள்ளர் கடைசி பண்டியன்

aathi tamil aathi1956@gmail.com

28/2/15
பெறுநர்: எனக்கு
இராமமூர்த்தி மகாலிங்கம் 4 புதிய புகைப்படங்கள்
படங்களை இணைத்துள்ளார்
பள்ளு இலக்கியம் ஏன்?
தென்தமிழகத்தில் குமரிக்கும் பேரையூர்
அனைக்கரைப்பட்டிக்கும் இடைப்பட்ட தமிழர்கள் வாழும்
வீரமான குடியினர்கள் ஆய், பல்லவ, சேர ,சோழ,
பாண்டிய, பள்ளா/பல்லா மற்றும் இராஷ்டிரகூட
மக்களாக பல்வேறு படையெடுப்புகளை துணிச்சலுடன்
எதிர்த்து நின்று வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு பல படையெடுப்புகள்
தாண்டி மதுரை பாண்டியர் ஆட்சி இழந்தபின்னரும்
தென்காசி பாண்டியராக கி.பி.1345 -கி.பி.1700
வரை வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்களின்
கடைசி தென்காசி பாண்டியர் தான் கொல்லம்
கொண்டான்.இவர் பெயரிலேயே கொல்லம் கொண்டான், அயன்
கொல்லம் கொண்டான் மற்றும் ஜமீன் கொல்லம் கொண்டான்.
இவ்வூர்கள் அனைத்தும் சேத்தூர் -
மேட்டுப்பட்டி யிலிருந்து 7 கி.மீ தொலைவிலும்,
பள்ளர் கோட்டை எனும் இராசபாளையம் என்னும்
ஊரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.
மேற்கூறிய ஊர்களுக்கு அருகில் இடையன் குளம்/
இடையன் குலம், சுந்தரராசன் புரம், கணபதி சுந்தர
நாச்சியார் புரம் ஆகிய ஊர்களில் பள்ளர்
என்று கூறும் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள்.
இவ்வூர் பள்ளர் பெரும் நில உரிமையாளர்கள் மற்றும்
விவசாயம் செய்வதில் வல்லவர்கள்.
கொல்லம் கொண்டான் என்ற பெயர் தாங்கிய ஊர்களில்
பள்ளர் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் ஊரின் மேற்குப் பகுதி மற்றும்
கிழக்குப் பகுதிகளில் வாழ்கிறார்கள். ஆனால்
கொல்லம் கொண்டான் ஊர் பள்ளர்களுடன்
இன்று வரை திருமண உறவு செய்து வரும்
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம்
வடுகபட்டி எனும் ஊரில் உள்ள பள்ளர் மக்கள் ஊரின்
கிழக்கு பகுதியில் வாழ்கிறார்கள். ஆனாலும்
பெரும் நில உடமையாளர்களாக
இருந்து வருகிறார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்
வடுகபட்டி எனும் ஊர் வடுகர் பெயர் தாங்கி உள்ளது.
ஆனால் வடுகமொழி பேசும் மக்கள் இல்லை.
அடுத்து தேவதானம், மேட்டுப்பட்டி, தளவாய் புரம்,
இளந்திரைகொண்டான், வெங்காநல்லூர் மற்றும்
சோலைசேரி போன்ற ஊர்களில் பள்ளர் மக்கள் பெரும்
எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இங்கு புதிய
குடியேற்றம் காரணமாக கிழக்கு பகுதிகளில்
வாழ்கிறார்கள்.
அடுத்து கொல்லம் கொண்டான் அடுத்த ஊர்
முதுகுடி இவ்வூரில் பள்ளர் மக்கள் ஊரின்
மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெரும்
எண்ணிக்கையில் முதுகுடிகளாக விவசாயிகளுகள்.
ஆனாலும் மேற்கண்ட ஊர்களில் வாழும் பள்ளர்கள் ,
தங்களை குடும்பமார் என்று கூறுகிறார்கள். மற்ற
தமிழ் இனக்குழுவுமே இங்கு வாழும்
பள்ளர்களை குடும்பமார் என்று தான் அழைக்கிறார்கள்.
இது இப்படி இருக்க, சோலைசேரி எனும் ஊரில்
வாழும் கணபதி மற்றும் இருளப்பன்
வகையறா தங்களை மன்னர் வம்சம் என்று கூறுகிறார்.
இவர்களின் முன்னோர் கணபதி மற்றும் சுந்தரராசன்
எனவும் கணபதி மிகச்சிறந்த போர்வீரன் என்றும்
சுந்தரராசன் மன்னர் எனவும் பாட்டன்
சொல்லியதாகவும் கூறுகிறார். இதை மெய்ப்பிக்க இவ்
வம்சத்தவர்களுக்கு தேவதானம் சிவன் கோவிலில்
பரிவட்டம்
கட்டி இன்று வரை மரியாதை செய்துவருவதை உதாரணம்
கூறுகிறார்.
தேவதானம் சென்று பார்த்தால் பள்ளர் மக்கள் தான்
சிவன் கோவில் இரண்டு தேர் சக்கர
தடிகளை வைத்துள்ளார்கள்.
இப்பொழுது வாருங்கள் , சுந்தரராசன் என்னும் அரசன்
கொல்லம் வெற்றி கொண்டதால் அவன் பெயரில் கொல்லம்
கொண்டான் என்ற ஊரை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இவன் தான் தென்காசி பாண்டியரில் கடைசி மன்னன்.
சுந்தரராசன் மற்றும் நாச்சியார் ஆகிய இருவரும்
நாயக்கர்கள் உடன் ஏற்பட்ட போரில் வீரமரணம்
அடைந்துள்ளனர். அந்த மன்னர் வம்சத்தவர்கள்
இன்று பள்ளர் என்பதால் பள்ளர்களின் தனி மயானத்தில்
அதாவது மேட்டுப்பட்டி - சோலைசேரி இடைப்பட்ட
இடத்தில் புதைத்து வரலாறு படைத்துள்ளார்கள்.
சரி, பள்ளு இலக்கியம் வருவோம்....
மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ்பகுதிகளில் வாழும்
மக்கள் சிவன், ஐயனார், பெருமாள், சித்தர்,
கிருஷ்ணன், மாடன், மாரியம்மன், காளியம்மன்,வடகா
சியம்மன் மற்றும் புலுகாண்டி போன்ற பல்வேறுபட்ட
கடவுளர்களையும் தூய தமிழ் முதல் தமிழ் கலந்த
மொழிவரை பேசியுள்ளனர்.
மேற்கூறிய பகுதிகளில் குடும்பன், மூப்பன், பள்ளி,
காலாடி, புலையன்,கடையன், பறையன், பிள்ளையான்,
முதலியான், கள்ளன், மறவன், வாதிரியான்,
வண்ணான்,சானான், கோனான், மருத்துவன் என
பல்வேறு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் குடும்பன், பள்ளி மற்றும் புலையன் போன்ற
குடிகளை பள்ளன் என அழைக்க பள்ளு இலக்கியம்
படைத்து உள்ளார்கள்.
மேற்கூறிய மூன்று குடிகளும்
முறையே இராஷ்டிரகூடர், பல்லவ மற்றும்
சேரவழிவந்த அரச பரம்பரையினர் என அறியலாம்.
தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக