வியாழன், 11 மே, 2017

சென்னினல்லூர் சென்னை சென்னிநல்லூர் திருவொற்றியூர் கல்வெட்டு தெலுங்கு கிடையாது

aathi tamil aathi1956@gmail.com

5/3/15
பெறுநர்: எனக்கு
"சென்னப்ப நாய்க்கன் பட்டினம்"
என்பது "சென்னை பட்டினம்" என்று ஆகவில்லை.
சென்னினல்லூர்
என்பதே சென்னை>சென்னை பட்டினம்
என்று ஆகியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள
ஒரு கோவிலில் உள்ள கல்வெட்டின் படி கி.பி.
12ஆம் நூற்றாண்டிலேயே அவ்விடம் பெரிய
துறைமுகமாக இருந்து சென்னினல்லூர்
என்று அழைக்கப்பட்டிருக்கிறது(கல்வெட்
டு விவரம் கீழே). சென்னை, சென்னைப்பட்டினம்
ஆகிய பெயர்களும் மெட்ராஸ்(முத்து
ராசாபட்டினம்>மத்துராசபட்டினம்>
மதராசபட்டினம்>மெட்ராஸ்) என்ற பெயருடன்
ஒரே காலத்தில் வழங்கிவந்துள்ளதாக
தெரிகிறது.
ஊர்ப் பெயர்களை சுருக்கி அழைப்பது நம்
தமிழர்களின் மரபாக இருந்து வந்துள்ளது.
உதாரணமாக,
நெல்வேலி(திருநெல்வேலி)>நெல்லை
அம்பாசமுத்திரம்>அம்பை
கோவன்புதூர்(கோயம்புத்தூர்)>கோவை
மயிலாடுதுறை>மயிலை
நாகப்பட்டினம்>நாகை
காறைக்குடி>காறை
முதலியவற்றைப் பார்க்கலாம். இப்பண்பாட்டின்
தொடர்ச்சியாக திரிந்த ஊர்ப்பெயர்களையும்
சுருக்கி அழைக்கும் வழக்கம் வந்தது.
உதாரணமாக,
ஒற்றை கால் மண்டபம்>உதகமண்டலம்>உதகை
சிரவணம்பட்டி>சிரவை
ஆகியவற்றைக் கூறலாம். இதைப்போல,
அக்காலத்தில் சென்னினல்லூர் எனும்
ஊர்ப்பெயரின் சுருக்கமே சென்னை ஆகும்.
இந்த சென்னை எனும் ஊர்ப்பெயர், கடவுட்
பெயருக்குப் பின்னால் சேர்க்கப்படும்
சொற்களான ஐயன்(>ஐயா(விளி)), அப்பன்,
முத்து, அண்ணன், ஆண்டி, ஈசன், அம்மை,
அம்மாள், ஆத்தாள், அம்பாள், ஆண்டாள், அம்பிகை,
ஆயி, ஈசுவரி, முதலிய(etc) சொற்களுடனும்
வரும்.
நெல்லை+அப்பன்=நெல்லையப்பன்
என்பதைப் போல,
சென்னை+அப்பன்=சென்னையப்பன்>சென்னப்பன்
(திரிபு) என்று வரும். சென்னியப்பன் என்ற
பெயரையும் காணலாம்.
கடவுட்பெயர்களை மக்களுக்குப் பெயராக
வைப்பது அக்காலத்தில் வழக்கமாக இருந்தது.
அப்படித் தான், சென்னப்பன் என்ற
பெயரை சென்னப்ப நாய்க்கர் கொண்டிருந்தார்.
உடனே, நம் திராவிட சிகாமணிகள் என்ன
செய்தார்கள் சென்னப்ப நாய்க்கர்
என்பவரிடமிருந்து ஆங்கிலேயர் நிலம்
வாங்கியதால்
அவ்வூருக்கு சென்னை என்று பெயர்
வந்தது என்று அடித்துவிட்டனர் பார்க்கலாம்.
கீழுள்ள பதிவில் கல்வெட்டு குறித்த
ஆதாரங்கள் உள்ளன.
==============================
==============================
சென்னை என்பதற்கு பெயர் காரணம் பலவிதமாக
இருப்பினும், சென்னப்பர்(Damarla Chennappa
Nayakudu) என்பவரிடமிருந்து நிலம்
ஆங்கிலேயர் வாங்கியதால் தான் இப்பெயர்
வந்தது என நம்ப வைத்துள்ளனர். ஆனால்
சென்னினல்லூர்
என்றபெயரே உள்ளது என்பதை கல்வெட்டு ஒன்று சென்னை நகரின்
முக்கிய கோவிலாக திகழும்,
திருவொற்றியூரில் காண கிடைக்கிறது.
திருவொற்றியூர் கோவில் மிக பழமையான
கோவில் மட்டுமல்ல, இந்த இடம் பூர்வீகமாக
துறைமுக பட்டினமாக
இருந்துள்ளது என்பதை யாரும் மறுக்க
முடியாது. இந்த கல்வெட்டை அரசாங்கம்
படி எடுத்து ரெகார்ட் ஆக வைத்துள்ளதை அதன்
பதிப்பு A R E எனப்படும் ரெகார்ட் என். 1892:
110 ம் S .1.1. VOL .558 லும் இருப்பதாக
தெரிவிக்கிறது. அதன் பதிப்பு வருமாறு:
"" ஸ்வதிஸ்ரீ திருவைகேழ்வி முன்
(ப)ஆகா திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ
தேவர்க்கு யாண்டு 19வது சிம்ஹதயாட்ட்று பூர்வ
பக்ஷத்து திருதியையும் உத்திரட்டாதியும்
பெற்ற ஞாயிற்று கிழமை நாள் ஜெயம் கொண்ட
சோழமண்டலத்து புலியூர் கோட்டமான
குலோத்துங்க சோழ நாட்டுப் போறூர்
நாடு விருகன் பாக்கமாக சென்னினல்லூர்
வயலூர் கிழவன் திருவேகம்பமுடையான்
செந்தாமரைக் கண்ணனான வயிராதரயனேன் "
எனவே 12 நூற்றண்டிலயே சென்னினல்லூர் என்ற
இடம் தான் இன்று சென்னை யாக
உள்ளது என்பதற்கு வேறு என்ன
சாட்சி வேண்டும். இந்த கல்வெட்டில் ஜெயம்
கொண்ட சோழமண்டலம்
என்பது தொண்டைமண்டலத்தின்
இன்னொரு பெயர். புலியூர் கோட்டம்
என்பது இன்றும் சென்னையில் உள்ளது.
கோடம்பாக்கத்தில் புலியூர் தெரு என்றும்
உள்ளது இதற்க்கு ஆதாரம் ஆகும். போறூர்
நாடு இன்று போரூர் என்று வழங்கப்
படுகிறது. விருகன் பாக்கம்
இன்று விருகம்பாக்கம் ஆக உள்ளது. பழைய
பெயர்கள் முக்கியதுவம் மாறி உள்ளது.
அவ்வளவே.
இதை விக்கிபீடியா விற்கு தெரிவித்து எடிட்
செய்துள்ளேன்.
Thiruvotriyur is historically important port city,
now forms part of north chennai. This place was
exempted from tax and hence derived the name
votriyur with a sanctified pretext thiru. In this
locality there still exists an ancient temple
dedicated to Lord Adhipuriswara built or last
renovated during King Rajaja III of 13th century
AD. The temple could have been in existence
long before. There is a stone inscription which
informs that dedication of 5 ladies in hereditary
to the Lord to do the work of husking of paddy
by Tiruvekambamudaiyan Senthamaraikannan
alaias vayiratharayan of Virukanbakkam alias
Chenninallur. This shows evidence that the name
chenninallur was in existence even during 12th
century as there still is a popular place/area in
chennai called Virukanbakkam. (Proof: Govt
Inscriptions Serial No.V:6 ARE Record 1892
No.110 and s.1.1.Vol. IV no.558)
நன்றி : Ram Chandra Sekaran Tkcr

1 கருத்து:

  1. விருகம்பாக்கமாந சென்னினல்லூர் இது சென்னையோட பெயர் அல்ல. விருகம்பாக்கத்திற்கு தான் சென்னிநல்லூர் என்று வழங்கப்பட்டது.

    பதிலளிநீக்கு