திங்கள், 15 மே, 2017

சிறுபான்மை எதிராக ஈவேரா இசுலாமியர்

aathi tamil aathi1956@gmail.com

24/1/15
பெறுநர்: எனக்கு
நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும்
மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம், மதம்,
கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ,
செல்வாக்கோ இருக்குமானால் அது அந்த நாட்டின்
நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்.
மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம்
ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும்
காட்டி வந்த சலுகைகளாலும், தனி நீதி போன்ற
காரணத்தினாலும், மேலும்
அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,
நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள்
மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்!
...குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய
நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக்
கூறுகிறேன். இதற்கு உதாரணம், இந்த நாட்டில்
இன்று மைனாரிட்டியாக உள்ள
சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும்,
ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.
அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப்
பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி,
ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண்
சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள்
உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல், அவர்கள்
பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக்
கூடாது என்கின்ற நிலையிலும், பிச்சை எடுப்பவன்
வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில்
உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில்
சொகுசாக அனுபவிக்கிறார்கள்!
- ஈவெ ராமசாமி நாயக்கர் (விடுதலை 6.3.1962)
ஈ.வே.ரா 

தமிழக காடுகள் 17%

aathi tamil aathi1956@gmail.com

25/1/15
பெறுநர்: எனக்கு
தமிழகத்தில் 17% காடுகள்(30,000ச.கீ பரப்பளவு)
காடுகள் உள்ளது. பெரும்பாலான காடுகள்
மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.
1.பாதுகாக்கப்பட்ட பகுதியில் கொடைகானல்-
பழனி மலையில் தான் பெரிய அளவில் காடுகள்
காணப்படுகிறது.
2.30,000 ச.கீ பரப்பளவு என்பது கேரள பரப்பளவில்
80% ஆகும்.
காடுகள் வளர்ப்போம் மழை பெறுவோம்.

கழுதைக்கு தெரியும் கற்பூர வாசனை

aathi tamil aathi1956@gmail.com

25/1/15
பெறுநர்: எனக்கு
தமிழன் மதம் ஆசிவகம்
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்??? தவறு
கழுதைக்கும் தெரியும் கற்பூர வாசம்...!!! சரி
/.
பண்டைய காலத்தில் வணிகம் செய்ய செல்லும்
வழியில், இரவு நேரங்களில்
வணிகர்கள் கற்பூர வாசம் கொண்ட கோரை புல்
மீது படுத்து
ஓய்வு எடுத்தணர்,
கொசு,மற்றும் பூச்சிகள்
வராமலிறுக்க.
இதணை தெரிந்தகழுதை அந்த புல்
மீது படுத்து கொண்டதை கண்ட தமிழண்
கூறியதே கழதைக்குமம் தெரியும் கற்பூர வாசம்...பழமொழி 

இந்தி எதிர்ப்பு ராணுவம் வரவழைத்து துப்பாக்கிச்சூடு ஹிந்தியா

aathi tamil aathi1956@gmail.com

26/1/15
பெறுநர்: எனக்கு
சன.26 இந்தியக் குடியரசு நாள்
இந்திக்கு முடி சூட்டும் நாள்!
தமிழர்களுக்கு துக்க நாள்!
-இப்படியொரு முழக்கம் தமிழகத்தில் மாணவர்களாலும்,
தி.மு.க.வினாராலும் இன்றைய நாளில் தான்
முன்னெடுக்கப்பட்டது.
சன.25முதலே இந்தியை வலியுறுத்தும் இந்திய
அரசமைப்பின் 17வது பகுதியை கொளுத்திய மதுரை,
சென்னை, கோவை மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது பல்லாயிரக்கணக்கானோர் நடத்திய ஊர்வலத்தில்
காங்கிரசு குண்டர்கள் கலகம் விளைவித்தனர். காவல்
துறையின் குண்டாந்தடிகள்,
கண்ணீர்புகை வீச்சை போர்க்குணத்தோடு எதிர்கொண்டனர்.
சன.26 விடிவதற்குள்ளாகவே கல்லூரிகளிலும்,
கழகத்தவர் வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டப்பட்டது.
அன்று காலை ஆறு மணியளவில் சென்னை கோடம்பாக்கம்
திடலில் சிவலிங்கம் தி.மு.க. என்ற இளைஞர்
தீக்குளித்து மாண்டார். இச்செய்தி காட்டுத் தீயாய்
பரவியது.
சனவரி 26ஆம் நாள் சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகமே தன்னெழுச்சியாய்
அணி திரண்டது. அப்போது பேரணியாகச் செல்ல முயன்ற
மாணவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது.
இன்று குடியரசு நாள் என்பதால்
நாளைக்கு கண்டனப்பேரணி நடத்திக்கொள்ளுங்கள்,
அனுமதி தருகிறோம்
என்று காவல்துறை உறுதியளித்ததால்
கலைந்து சென்றனர்.
மறுநாள் சன.27ஆம்நாள் மீண்டும் மாணவர்கள்
ஒன்று கூடினர். எழுச்சியோடு புறப்பட்ட
மாணவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி உறுதிமொழியை காற்றில்
பறக்க விட்டது. கோபம் கொண்ட மாணவர் சமூகத்தினர்
காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி ஊர்வலம் நடத்தத்
தொடங்கினர். தடியடிக்கு அஞ்சாத மாணவர் சமூகத்தின்
மீது காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
அதில் 18 வயது நிரம்பிய இராசேந்திரன் என்ற மாணவன்
பலியானான். 1938 முதல் தமிழ் மக்கள் நடத்தி வரும்
நீண்ட நெடிய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப்
பலியான முதல் தமிழன் இராசேந்திரன்
என்பது குறிப்பிடத்தக்கது.
காமராசரின் எடுபிடியான பக்தவத்சல
அரசு கலவரத்தை அடக்கி குடியரசு நாளை கொண்டாட
முயன்றதில் தோல்வி அடைந்தது.
தமிழகமே கறுப்புமயமாகியது. தமிழகம் முழுவதும்
தமிழர்கள் குடியரசு நாளை புறக்கணித்து துக்க
நாளாக கொண்டாடினர். சன.27 இல்
இரவு 1மணிக்கு சென்னை விருகம்பாக்கம் அரங்கநாதன்
தீக்குளித்து மாண்டார்.
அதன் பிறகு ஏற்பட்ட தமிழர் எழுச்சியை அடக்க
இராணுவம் வரவழைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில்
வடவனின் இராணுவம் தமிழர் குருதி குடித்தது.
எத்தனை உயிர் மாண்டாலும் கவலையில்லை. தமிழ்
உள்ளிட்ட ஏனைய தேசிய இனங்களின்
மொழிகளை தில்லியில் அரியணை ஏற்ற மாட்டோம்
என்று இன்று வரை திமிர்
பேசுகிறது தில்லி வல்லாதிக்கம். இந்தி பேசும்
மக்களுக்காக நடத்தப்படும் இந்த குடியரசுநாளில்
தமிழர்கள் பங்கெடுக்கக் கூடாது என்பதையே தமிழர்கள்
நடத்திய 1965 குடியரசு புறக்கணிப்பு நாள்
நமக்கு உணர்த்துகிறது! —

ஹிந்தி இந்தியெதிர்ப்பு 

இந்தி எதிர்ப்பு ஈகியர் 1938 1965

aathi tamil aathi1956@gmail.com

26/1/15
பெறுநர்: எனக்கு
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கம்
ஆங்கிலவழிக் கல்வியை அகற்றுவோம்,
தமிழ்நாட்டிற்கு தமிழ்வழிக் கல்வியே
என்ற நிலையை உருவாக்குவோம்!
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்
தோழா் பா.தமிழரசன், தமிழ்மொழிப் போர்
ஈகியா் வீரவணக்க
நிகழ்வில் உரையாற்றினார்.
இந்திய வல்லாதிக்க அரசின் இந்தி அலுவல் மொழிச்
சட்டத்தை எதிா்த்து, 1965 ஆம் ஆண்டில் தமிழினத்தின்
மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்ட தமிழினத்தவா்களின்
வீரம் செறிந்த போராட்டத்தில், இந்திய அரசின்
துப்பாக்கிச் சூட்டிற்கு
பலியான மற்றும், தீக்குளித்தும் உயிரிழந்த தமிழ்மான
மறவா்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு,
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் சார்பில் கோவையில்
நடைபெற்றது.
25.01.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில்
கோவை, செட்டிவீதி பகுதியில் அசோக்நகா்-ஐயப்பா நகா்
சந்திப்பில், தமிழ்மொழி காத்த மாவீரா் வீரவணக்க
கொடியேற்ற நிகழ்வு மக்கள் திரளின் எழுச்சியோடு
நடைபெற்றது.
நிகழ்விற்கு தமிழ்த் தேச இளைஞா் இயக்கத்தின்
கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்
தோழா் பிறை.சுரேசு
தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின் செய்தித் தொடா்புச்
செயலாளா் தோழா் பா.சங்கரவடிவேல், தமிழ்த் தேசப்
புரட்சி இயக்கத்தின் தோழா் க.கிருட்டிணகுமார்
உள்ளிட்டோா்
வீரவணக்க உரை நிகழ்த்தினா்.
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத்தின்
கொடியை ஏற்றி வைத்து
வீரவணக்க உரையாற்றிய தமிழ்த் தேசப்
புரட்சி இயக்கத்தின்
ஒருங்கிணைப்பாளா் தோழா் பா.தமிழரசன், 1938 ஆம்
ஆண்டில்
பள்ளிக் கல்வியில் இந்திப் பாடம் கட்டாயம் என்ற
இராசாசி
அரசின் ஆணையை எதிா்த்து சோமசுந்தரபாரதியார்,
மறைமலையடிகள் உள்ளிட்ட தலைவா்களின் தலைமையில்
நடந்த போராட்டம் குறித்தும், அதில்
போராடி சிறைப்பட்டு
அரசின் சித்தரவதைகளால் மாண்ட நடராசன்,தாளமுத்து
ஆகிய போராளிகளின் ஈகங்கள் குறித்தும்
உரையாற்றினார்.
1965 ஆம் ஆண்டு முதல் இந்திமொழி மட்டுமே இந்திய
அரசின்
அலுவல் மொழி என்ற கொடுங்கோன்மையை எதிர்த்து
தமிழ்த்தேசம் போர் முரசு கொட்டியது.
இந்திய அரசு, தமிழக
காங்கிரசு அரசு ஆகியவைகளின்
இராணுவம், காவல்துறையின் கொடூர
அடக்குமுறைகளையும்
மீறியும், திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டு துரோகிகளின்
வஞ்சகங்களையும் தகா்த்தெறிந்த,வஞ்சகங்களையும் தகா்த்தெறிந்த,
தமிழ்நாட்டு மாணவா்கள்,
இளைஞா்களின் தலைமையிலான தமிழ்த் தேச போர்ப்படை
இலக்கு நோக்கி நகா்ந்தது.
கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம்,
விருகம்பாக்கம் அரங்கநாதன் உள்ளிட்டோர் தமிழ் வாழ்க,
இந்தி ஒழிக என்ற முழக்கங்களோடு தங்கள் இன்னுயிரை
தீயில் இரையாக்கினா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்கள்,
இந்திய அரசின் கொடும் அடக்குமுறைகளையும் மீறி,
தங்கள் தாய்மொழியாம் தமிழ் காக்க, ஆதிக்க இந்தியை
எதிர்க்க அணிவகுத்து நின்றனா்.இதனால் ஆத்திரமுற்ற
பக்தவத்சலம் தலைமையிலான
காங்கிரசு அரசு மாணவா்களை
சுட்டுத் தள்ள உத்தரவிட்டது. இதில்
மாணவா் சிவகங்கை இராசேந்திரன் இந்திய அரசின்
துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான
முதல் போராளி ஆவார்.
இதனால் போராட்டம் தடைபட்டுப் போகும் என்று நினைத்த
இந்திய அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ்
காக்கும்
போராட்டம் புதிய பாதையில் பயணித்தது. திமுக
உள்ளிட்ட
எந்த துரோக கட்சிகளையும் நம்பாமல்,தமிழின
மாணவா்கள்,இளைஞா்கள் தலைமையில் வீச்சுடன்
போராட்டம் தொடங்கியது.
மக்கள் திரளின் போராட்டமாக வடிவம் பெற்றது. இதனால்
போராடும் அனைவரையும் சுட்டுத் தள்ளியது இந்திய
அரசு.
கோவை,திருச்சிராப்பள்ளி, ஈரோடை,விருதுநகா
்,சிவகங்கை
என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்
போராட்டத்'தீ'
பற்றி எரிந்தது.
போராட்டங்கள் ஒருபக்கம் நடைபெற்ற நிலையில்,
தமிழா்கள்
பலா் தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்ற முழக்கங்களுக்கி
டையே
தீக்குளித்தும் தங்கள் உயிரை மாய்த்து கொண்டனா்.
கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து,
விராலிமலை சண்முகம், ஆசியா் வீரப்பன்,
கோவை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி
என தீக்குளித்தும்,நஞ்சுண்டும் தமிழ் காத்தோர் பட்டியல்
நீள்கிறது.
உலக வரலாறு காணாத, மொழி காக்க நூற்றுக்கணக்கான
மக்களை இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச்
சூட்டிற்கு
பறிகொடுத்த தமிழ்த் தேசத்து மக்களின் போராட்டம் பல
மாதங்கள் தொடா்ந்து நடந்தது.
இதன் பின்னரே இந்திய அரசின் அலுவல் மொழியாக
ஆங்கிலமே, இந்தி பேசாத மாநிலங்களில் நீடிக்கும்
என்று
அறிவித்தது. தமிழினத்தின் போராட்டம் ஒரு நிலையில்
வெற்றி கண்டது.
இதன் பின்னா் தமிழக தேர்தல் களம்,காங்கிரசு என்ற
தமிழினப்
பகைவா்களின் கையில் இருந்து, திமுக துரோகிகளின்
கைக்கு
மாறியது. தமிழினத்தவா்களின் இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தை
துரோக வழியில் பயன்படுத்திக் கொண்ட திமுக
தமிழகத்தில்
ஆட்சியில் அமா்ந்தது.
இந்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி என்ற சட்டத்தை
எதிர்த்து நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
பாதியிலேயே
ஒதுங்கிக் கொண்டு துரோகம் செய்த அண்ணா அவா்கள்,
தமிழக முதல்வரானவுடன், தமிழகத்தில் அலுவல்
மொழியாக ஆங்கிலத்தை கொண்டு வந்து பெரும்
கேட்டை தமிழ்நாட்டில்
ஏற்ப்படுத்தினார்.
இருமொழிக் கொள்கை என்ற பெயரில் ஆங்கில ஆதிக்கத்தை
தமிழ்நாட்டில் நிலைப்படுத்தியுள்ள திராவிட
கட்சிகள், இன்று
கன்னட-பார்ப்பன செயலலிதா ஆட்சியில்,
தமிழ்நாட்டு அரசுப்
பள்ளிகளில், தமிழ்வழிப் பள்ளிகளை அழித்துவிட்டு,
ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழின அழிப்பு
வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
எனவே இந்த மொழிப்போர் நாளில், ஆங்கில,இந்தி
ஆதிக்கத்தை அகற்றிட, தமிழ்நாட்டில் தமிழ்வழிக்
கல்வியை
கட்டாயமாக்கிட, தமிழ்மொழியே தமிழ்நாட்டின்
ஆட்சி மொழி
நிலையை ஏற்ப்படுத்திட உறுதியேற்போம்!
அதுவே 1938,1965 ஆம் ஆண்டுகளில் தமிழ்
மொழி காக்க தங்கள் இன்னுயிரை தந்த தமிழ்மொழிப்
போராளிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான
வீரவணக்கமாக அமையும் என்று
தோழா் பா.தமிழரசன் தமதுவீரவணக்க உரையில்
தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தோழா்கள் க.ராசா, சரவணன், குமார்,
முருகேசன்,
வாசிம் ராசா, பா.கௌதம், பா.அன்புச்செல்வன் உள்ளிட்ட
தமிழ்த் தேசப் புரட்சி இயக்கத் தோழா்களும்,
பகுதி மக்கள் ஏராளமானோரும் பங்கு பெற்று தமிழ்
காத்த தமிழினப்
போராளிகளுக்கு வீரவணக்கம்
செலுத்தினா்.

 ஹிந்தியா ஹிந்தி இந்தியெதிர்ப்பு 

வீணை செய்தல் இன்றும் சிறப்பாக

aathi tamil aathi1956@gmail.com

27/1/15
பெறுநர்: எனக்கு
பலா மரத்தில் உருவாக்கப்படும் தஞ்சாவூர்
வீணை!
விகடன்
 தஞ்சையில் உருவெடுத்து உலக அளவில்
உலா வரும் இந்த கலைப் பொக்கிஷத்திற்கு,
புவிசார் குறியீடு வழங்கி,
பெருமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
பாரம்பரிய புகழ்மிக்க, தஞ்சாவூர் வீணையில்,
நாதம் மீட்டுவதை பெரும் பாக்கியமாகவும்,
கவுரமாகவும் சிலாகிக்கிறார்கள் இசைக்
கலைஞர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்தில்
இருக்கும் பலர், தங்களுக்கு இசைக்க
தெரியாவிட்டாலும் கூட, வீடுகளில்
தஞ்சாவூர்
வீணை வைத்திருப்பதே பெருமை என்று நினைக்
பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, லண்டன்,
சிங்கப்பூர், அமெரிக்கா என பல நாடுகளுக்கும்
பயணம் செய்கிறது, நம் நாட்டின் தஞ்சாவூர்
வீணை.
தற்போது தஞ்சாவூரில் சுமார் 100
கைவினைஞர்கள், இதனை உருவாக்கும்
உன்னத பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான
வீணைகள் தயார்
செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறத
அழகிய மரவேலைப்பாடுகளுக்கு ஏற்ப,
இவை ஒவ்வொன்றும், 12,500 ரூபாய் முதல்
40 ஆயிரம் ரூபாய்
வரை விலை மதிப்பு கொண்டது.
தஞ்சாவூர் வீணை தொழிலாளர்கள் சங்கத்தின்
பொருளாளர்
வீணை சின்னப்பா பெருமையோடு பேசியபோது
‘‘ராஜ ராஜ சோழன் ஆட்சிகாலத்துல
இருந்தே தஞ்சாவூர்ல
வீணை தயாரிப்பு நடந்துக்கிட்டு இருக்கு.
ஆனா இப்பவுள்ள தஞ்சாவூர் வீணை, ரகுநாத
நாயக்க மன்னர் ஆட்சி காலத்துல
உருவாக்கப்பட்டதாக சிலர் சொல்றாங்க.
எது எப்படியோ, நம்ம மண்ல, தஞ்சாவூர்
வீணை, பல
நூறு ஆண்டுகளா உயிர்ப்போடு வாழ்ந்துக்கிட்
இதை உருவாக்குறதே ஒரு தவம் மாதிரிதான்.
எல்லோராலும் இதை நேர்த்தியா,
கலைநயத்தோடு செஞ்சுட முடியாது.
தஞ்சாவூர் வீணையில ஏகாந்த வீணை,
ஒட்டு வீணை என இரண்டு விதமான வகைகள்
உண்டு. ஒரே மரத்துல செய்யப்பட்டது, ஏகாந்த
வீணை. அதில் மரத்துண்டுகளே இருக்காது.
ஒட்டு வீணைங்கறது,
மூன்று மரத்துண்டுகளை கொண்டது.
இதைதவிர, இந்த இரண்டு வீணைக்கும்
வேறு எந்த வேறுபாடும் கிடையாது.
தஞ்சாவூர் வீணைகள் எல்லாமே முழுக்க
முழுக்க பலா மரத்தால் தான்
செய்யப்பட்டிருக்கும். வீணையின் மிக
முக்கியமான பாகமே, பானைதான்.
கம்பிகளை மீட்டும்போது, பானையில் உள்ள
துளைகள் வழியாகத்தான் இசை வெளிப்படுது.
பானை, மரத்துல இருந்தாதான்
இசை நேர்த்தியா வெளிப்படும்.
ஆனா பெங்களூரூ மாதிரியான ஏரியாக்கள்ல
பானைக்கு பைபர் பயன்படுத்துறாங்க.
தஞ்சாவூர் வீணைக்கு இன்னும் பல
தனித்துவமான அடையாளங்கள் இருக்கு.
வீணையின் தலைப்பு பகுதியில் யாழி என்ற
மிருகத்தின் உருவம் தத்ரூபமாக
அமைக்கப்பட்டிருக்கும். இது பல
தலைமுறையா பழக்கப்பட்ட தஞ்சாவூர்
கைவினைகளுக்கும் மட்டுமே கை வந்த கலை.
தஞ்சாவூர் வீணை 8 கிலோ எடை இருக்கும்.
இதோட மொத்த நீளம் 52 இஞ்ச். பானையோட
அகலம் 15 இஞ்ச்... உயரம் 12 இஞ்ச்.
தஞ்சாவூர் வீணையில மட்டும்தான்
இந்தளவுக்கு விதவிதமான சிற்பங்கள்
தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கும். இந்த
சிற்பங்களை எல்லாம் நாங்களே கையால
செதுக்குவோம். எங்களுக்கு வீணை எல்லாம்
வாசிக்க தெரியாது. ஆனா நாங்க அமைக்குற
24 பித்தளை கட்டிகளும் மிக அழகா,
ஸ்வரங்களை துல்லியமா எழுப்பும்.
இது ரொம்ப ஆச்சர்யமான விஷயம்.
கட்டிகளுக்கு இடையே துல்லியமான
நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகள் எதுவும்
கிடையாது.
ஆனா கட்டிகளுக்கு இடையே விதவிதமான
இடைவெளிகள் இருக்கும். இதுல
ஏதாவது ஒரு இடைவெளி, நூல்
அளவுக்கு மாறிப்போனாலும், ஸ்வரங்கள்
மாறிடும். நாங்களா எங்க அனுபவத்துல,
ஒரு நிதானமாதான் இந்த
கட்டிகளை அமைக்குறோம்.
எல்லாமே சரியா இருக்கும். கீபோர்டுல
எல்லா இசையையும் கொண்டு வந்துட்டாங்க.
ஆனா தஞ்சாவூர் வீணையோட
இசையை மட்டும் நேர்த்தியா கொண்டு வர
முடியலை. அதனாலதான் சினிமா பாடல்
பதிவுகளுக்கு நேரடியா தஞ்சாவூர்
வீணையை பயன்படுத்துறாங்க’’ என
பெருமிதப்பட்டார்.

தமிழிசை கருவி 

நாம் பேசுவது தெலுங்கு நடையில் தமிழ்

aathi tamil aathi1956@gmail.com

27/1/15
பெறுநர்: எனக்கு
கபிரியேல் ராஜா வீரத்தமிழன்
தூய தமிழை காண ஒரு தேடல்:
.
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவர்
வெளிவந்த நாட்களில் ஒரு வினா எழுந்தது,
அக்கால தமிழ் அப்படியா பேசப்பட்டிருக்கும்
என. அதை வடிவமைத்தவர் முனைவர்.ராமச்சந
்திரன், பழந்தமிழ், தொல்பொருள் பேரரறிஞர்.
1.அந்த தமிழ் யாழ்ப்பாணத்தமிழ் போல,
மலையாளம் போல ஒலித்தது என்றார்கள். பலர்
அறியாதது, பழங்குடிகளின் தமிழும்
அப்படித்தான் இருக்கும்.
2.ஓரளவு மீனவர்களின் தமிழும் அந்த
ஒலி கொண்டிருக்கும்.
3.தமிழ் இன்றுபேசப்படும் விதம்
தெலுங்கு ஒலிகொண்டது.
அதாவது தமிழை உருக்கி தெலுங்கு அச்சிலிட்டு வார்த்தது போல.
ஏனென்றால் முந்நூறு(நேரடியாக மேலும் 300
ஆண்டுகளாக மறைமுகமாக
தற்போது வரை)ஆண்டு தமிழகம்
தெலுங்கர்களால் ஆளப்பட்டது.
4.அவர்கள் பெருமளவில் தமிழ்நாட்டுக்குள்
குடியேறினார்கள். ஆனால் அன்னியர்களாக
இல்லாமல் இச்சமூகத்துடன் கலந்தார்கள்.
இன்றும் தமிழ்நாட்டின் தமிழ்
பேசும்செலவங்களாக உள்ள ஏரிகளையும்
சந்தைகளையும் ஆலயங்களையும்
உருவாக்கினார்கள். அவர்களுக்கு இசைவாக
தமிழ் மாறியது.
5.ஆனால் மலைகளால் பொத்தப்பட்ட கேரளம்
அந்த பாதிப்பை பெறவில்லை. அதன்
பாதிப்பு சம்ஸ்கிருதம். அது கீழே வராது.
ஆகவே அடித்தளத்தில் பழந்தமிழாகவும்
மேலே சம்ஸ்கிருதமாகவும் அது நீடித்தது.
ஆகவே ‘தூய’ மலையாளம் என்பது அடித்தள
மலையாளம். அது ஒரு வகை பழந்தமிழ்.
6.அதேதான் யாழ்ப்பாணத்தமிழும். அதேதான்
பழங்குடிகள் மற்றும் மீனவர்களின் தமிழும்.
மொழிக்கலப்பற்ற தன்மையால் பல அசல்
சொற்கள் பேணப்பட்டன.
6.குமரிமாவட்டத்தில் பிறந்த ஒருவர்
பழந்தமிழில் நுழைவது எளிது.
எஸ்.வையாபுரிப்பிள்ளை பெரும்பாலான தூய
மலையாள சொற்களை தமிழ் பேரகராதியில்
சேர்த்துக்கொண்டார்.
7.இது சொற்கள் விடயத்தில் மட்டும் அல்ல.
சடங்குகள், ஆசாரங்கள், விழாக்கள் போன்ற
பண்பாட்டுக்கூறுகளிலும்கூட உள்ளது.
பழந்தமிழ் வாழ்க்கை அம்சங்களே அசலான கேரள
பண்பாட்டை உருவாக்கியுள்ளன.
ஆக தற்போது குமரி,கேரள மக்களின்
பேச்சு தான் பழைமையான தூய தமிழ்.
தற்போது யாழ்பாண தமிழ் தான் எம்மொழியும்
கலக்காத தூய தமிழ்.
தமிழ் வாழ்க.

search வெதுப்பகம் வேட்டொலி 

புறநானூற்று இல் தற்கொடை தாக்குதல் நூழிலாட்டு கரும்புலி தற்கொலை

aathi tamil aathi1956@gmail.com

29/1/15
பெறுநர்: எனக்கு
இரா. வேல் முருகன்
# # புறநானுற்று வீரன் முத்துகுமாருக்க
ு வீரவணக்கம்##
முத்துகுமாரின் மரண
வாக்குமூலத்தை வாங்கிய
காவல்துறை அதிகாரி,
இவ்வளவு அறிவுள்ள நீ ஏன்பா இந்த
முடிவை எடுத்தாய் ,தவிர்த்திருக்கலாமே என்க,
முத்துக்குமாரோ இல்லை ஐயா என்னை விட
அறிவாளிகள் எல்லாம்
அங்கே கொல்லப்படுகிறார்கள்,
அதை தடுக்கனும் என்றுதான் தீக்குளித்தேன்
என்று கூறியுள்ளார்,
இதன் மூலம் இவர் உணர்த்தியது என்ன?
தன்னிலிருந்து ஒரு அரசியல்
திருப்புமுனையை ஏற்படுத்துங்கள் என்று,
நான் உயிராயுதம் ஏந்தியுள்ளேன் நீங்க
நகலாயுதத்தை ஏந்துங்கள் என்று,
ஒரு தாளை கையில் கொடுத்துவிட்டுச்
சென்றுள்ளார்,
இது சரியா? மரபா என்று பார்க்கும்
போது மதுரை காஞ்சி இலக்கியங்களில்,
தன்னுயிர் அஞ்சான் ஒருவன் தான் பிற
இன்னுயிர்க்கு அஞ்சுவான் என்று குறிப்பிடப்
பட்டுள்ளது,
தன்னுயிர் போவதைப் பற்றி கவலைப் படாமல்
பிற உயிர்களுக்காக
கவலைப்பட்டு தன்னுயிரை கொடுப்பான்
என்பதே பொருள்,
இப்படிப் பட்டவன் வேறு என்னென்னச்
செய்வான் என்றுப் பார்த்தால் தொல்காப்பியத்தி
லும்,புறநானூற்றுச் செய்திகளிலும்
நூழிலாட்டு என்ற துறை உள்ளது,
அந்த நூழிலாட்டுத்
துறை என்பது ஒரு போர்ப்படையில்
தற்கொலை தாக்குதல் நடத்துவது,
நம்முடைய அரசன் வலிமை இழந்துப்
போகிறான், படை பின்வாங்குது,
எதிரி படையை ஊடுறுவி அடிக்கனும்,
அதற்க்கு ஒரு வழியை உருவாக்கனும், முடிந்த
வரை ஊடுறுவி அவனை கலங்கடிக்கனும் என்ற
முடிவை,
ஒருவன் தனி நிலையில் எடுப்பான், எவ்வித
உதவியும் இல்லாமல் செய்வான்,யாரிடமும்
சொல்ல மாட்டான்,
"நுகம்பட கடந்து நூழிலாட்டு "தன்னுடைய
தேர் நுகம்
எந்தளவுக்கு போகுமோ அந்தளவுக்குதான்
பாதையை உருவாக்குவது,
திரும்பி வர பாதையை உருவாக்க மாட்டான்,
ஒருவேளை வெற்றிப் பெற்று திரும்பி வரலாம்,
அப்படி வரவில்லை என்றாலும்
அவனுக்கு வெற்றி தான்,
இது வேறு எங்கெங்கு உள்ளது என்று பார்க்கையில்
நச்சினிக்கினியில் நூழை, நுழைவாயில்
என்று உள்ளது,
இந்த நூழை, நுழைவாயில் , நுழையாட்டு,
ஆட்டு, போர் ஆட்டு என்ற தமிழ் மரபு வழியை,
முத்துகுமாரும், அப்துல் ரவூப்,பும்
தேர்ந்தெடுத்து,
மிகப்பெரிய போரில் தமிழர்கள் பின்வாங்குகின்ற
னர் ,அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ,
தமிழ் மரபு வழியில் தன்னுயிரைக்
கொடுத்துள்ளனர் இந்த புறநானூற்று வீரர்கள்,
இதை நினைக்கையில் இந்த
புறநானூற்று வீரர்களின் தீரச் செயல்களைக்
கண்டு மெய்சிலிர்க்கிறது.
# # புறநானூற்று வீரன் முத்துகுமாருக்க
ு வீரவணக்கம் ##
இச்சான்றுகளை எடுத்துரைத்த முனைவர்
ஐயா தென்னன் மெய்மன் அவர்களுக்கு நன்றிகள்,
நம்முடைய இலக்கியங்களை குப்பைகள்,
மூடநம்பிக்கை நிறைந்தது,
பகுத்தறிவு இல்லை என்று,
இழித்துரைத்து பண்டைய தமிழ்
மரபுகளை மழுங்கடித்து நம்மை கோழையாக்க ,வரலாற்றை இழக்க,
வடுக ராமசாமியார்
எவ்வளவு முயற்சியெடுத்து
ள்ளார்?

இலக்கியம் வீரம் போர் 

ஈழத்தில் பாலியல் கொடுமை தனிபுத்தகம்

aathi tamil aathi1956@gmail.com

1/2/15
பெறுநர்: எனக்கு
Prapan Chan
தமிழர்கள் மீதான பாலியல்
வன்கொடுமையினை ஆவணப்படுத்திய கலாநிதி பிறையன்
செனிவிரத்தின.
தமிழ் மக்களின் நீதிக்காக 1948ம்
ஆண்டிலிருந்து குரல் கொடுத்து வருபவரும்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
செனற்சபை உறுப்பினருமாகிய கலாநிதி பிறையன்
செனிவிரத்தினவால் எழுதப்பட்ட “Sri Lanka: Rape of
Tamil Civilians in the North and East by the Sri
Lankan Armed Forces” எனும் புத்தகம்
அவுஸ்திரேலியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
177 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் நியூ சவுத்
வேல்ஸ் மாநிலத்திலுள்ள ஸ்ரத்வீல்ட் நகரிலுள்ள கறிங்ரன்
தேவாலய மண்டபத்தில் கடந்த சனவரி மாதம் 17ம்
தேதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செனற்சபை உறுப்பினர்
லீ றியனன் அவர்கள் இந்நிகழ்வில்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததோடு
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின்
மனித உரிமை மீறல்களை ஏன் கண்டனம் செய்யவில்லை என்ற
தலைப்பில் உரையாற்றினார்.
முன்னாள் நீதியரசரும், முன்னாள் நியூ சவுத் வேல்ஸ்
மாநில அமைச்சருமான ஜோன் டவுட் (Chancellor –
Southern Cross University) புத்தகத்திற்கான
ஆய்வுரையை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் (உயர் அதிகரிகள்
உட்பட) ஆண், பெண், சிறுமிகள், சிறுவர்கள் என
பராபட்சமின்றி தமிழர்கள் இலங்கைத்தீவில்
வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என
தனது நிறைவுரையில் கலாநிதி பிறையன்
செனிவிரத்தின அவர்கள் கூறியிருந்தார்.
இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் பல தமிழ்
அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் பங்கெடுத்திருந்
ததோடு புத்தகத்தினால் பெறப்படும் வருமானம்
தமிழீழத் தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தின்
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர
்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட
ுள்ளது. —

நூல் புத்தகம் சிங்களர் கற்பழிப்பு