திங்கள், 3 டிசம்பர், 2018

இலங்கை மலையகம் சென்ற தமிழர் எண்ணிக்கை ஆண்டு விபரம்

aathi1956 aathi1956@gmail.com

மே 5, சனி, பிற்பகல் 3:36
பெறுநர்: நான்

பச்சை தங்கம்
1839 முதல் 1846 வரை இலங்கை வந்த மலையக தமிழர் விபரம்!
இலங்கையில் 1820 ஆம் ஆண்டுமுதலே கோப்பியுகம் ஆரம்பமாகியது. எனினும், 1827 ஆம் ஆண்டிலிருந்தே தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். முதலாவது தொழிலாளரின் வருகையும் அந்த ஆண்டிலேயே பதிவாகியது.
1865 ஆம் ஆண்டு கோப்பி பயிர்செய்கை செத்துமடிய தொடங்கியது. அதன்பின்னரே 1867 ஆம் ஆண்டுமுதல் தேயிலை பயிர்செய்கை ஆரம்பமானது.கோப்பியுகம் ஆரம்பமானதிலிருந்தே எம்மவர்கள் இங்குவரத்தொடங்கினர். இதன்படி 1839 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டுவரை இலங்கை வந்த மலையகத் தமிழர்களின் விபரத்தை அறிவோம்.
1. 1839 – 2,719 பேர்.
ஆண்கள் - 2,432
பெண்கள்- 188
குழந்தைகள்- 99
2. 1840 – 3,814 பேர்.
ஆண்கள் - 3,326
பெண்கள்- 307
குழந்தைகள்- 181
3. 1841 – 5,050 பேர்.
ஆண்கள் - 4,523
பெண்கள்- 363
குழந்தைகள்- 164
4. 1842 – 9,470 பேர்.
ஆண்கள் - 9,025
பெண்கள்- 279
குழந்தைகள்-166
5. 1843 – 6,708 பேர்.
ஆண்கள் - 6,298
பெண்கள்- 162
குழந்தைகள்- 248
6. 1844 – 76,745 பேர்.
ஆண்கள் - 74,840
பெண்கள்- 1,181
குழந்தைகள்- 724
7. 1845 – 73,401 பேர்.
ஆண்கள் - 72,256
பெண்கள்- 698
குழந்தைகள்- 177
8. 1846 – 42,318 பேர்.
ஆண்கள் - 41,863
பெண்கள்- 330
குழந்தைகள்- 125
மூலம் - 1847 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 திகதியிலான ஆளுநர் பதிவேடு.
( அன்று ஆளுநர்களே , ஆட்சிக்கு பொறுப்பாக இருந்தனர்.
நன்றி - மலையக தமிழர் வரலாறு.
படங்கள் - இணையம்
( இலக்கிய வித்தகராக கருதப்படும் எமது சாரல் நாடன் மலையகம் தொடர்பில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் இதில் குறிப்பாக ' மலையக தமிழர் வரலாறு' என்ற நூலை நாம் அனைவரும் படித்தாகவேண்டும். 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி சாமிமலையில் பிறந்த நல்லையா, சாரல் நாடன் எனும் பெயரிலேயே இலக்கியங்களைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)
- பச்சை தங்கம்-

ஈழம் ஆங்கிலேயர் தேயிலை புலத்தமிழர் புலம்பெயர் 

செண்டு சொல்லாய்வு ஆயுதம் கரிகாலன் சாத்தன் ஐயனார் இலக்கியம் திருச்செண்டூர் திருச்செந்தூர் வேர்ச்சொல்

athi1956 aathi1956@gmail.com

மே 5, சனி, பிற்பகல் 3:08
பெறுநர்: நான்

செண்டு-செண்டூர் -திருச்செண்டூர் - திருச்செந்தூர் :
செண்டு என்பது சாத்தன் ( வணிகன்) கையில் இருக்கும் ஒருவகை ஆயுதம்.
சாத்தனின் கையிலிருந்து பெற்ற செண்டு என்னும் ஆயுதத்தினால் கரிகாலன் என்னும் சோழ அரசன் மேருமலையை அடித்தான் என்று ஒரு கதையுண்டு.
"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு"
என்னும் பழைய செய்யுள் இதனைக் கூறுகிறது. இச்செய்யுள் அடியார்க்கு நல்லாரால் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டப்பட்டது.
செண்டு என்னும் ஆயுதத்தின் பெயரில் செண்டூர் எனப் பெயர் கொண்ட பல கிராமங்கள் தமிழகத்தில் உள்ளன. வழிப்போக்கர்களான சாத்தன்கள் தங்கி வாழ்ந்த பகுதிகள் இப்பெயரைப் பெற்றிருக்க வேண்டும். சாத்தனூர், சாத்தான்குளம்,ச
ாத்தன்குடி போல.
பாண்டிய நாட்டின் கடற்கரை ஓரம் இருந்த ஒரு துறைமுக நகரம் தான் செண்டூர்.இந்தப் பெயர்தான் செந்தூர் என மருவியது.கந்து வட்டிக்கு விடும் முருகன் என்ற சாத்தன் சைவ சமயத்துக்குள் கொண்டுவரப்பட்டபிறகு திருச்செந்தூர் என மாறியது.
செந்தூரம் என்றால் குங்குமம் , சிவப்பு நிறம் என்றும் பொருள் உண்டு.
செண்டு என்ற ஆயுதம் பெண்களின் செந்நிற பூப்புக்குருதியினால் செய்யப்பட்ட ஆற்றல் மிகு ஆயுதம் என்று நான் கருதுகிறேன். அதனால் தான் நெற்றியில் இடும் குங்குமத்துக்கும் செந்தூரம் எனப் பெயர் வந்து.
செண்டூரில் வாழ்ந்த வட்டிக்குவிடும் செட்டிக்கு செண்டூரான் / செந்தூரான் எனப் பெயர் வந்தது. செட்டி கப்பலுக்கு செந்தூரான் ( செண்டு ஆயுதம் ) துணை என்ற சொல்லாடலும் இதனால் தான் வந்தது.
செட்டிகள் உலகில் எங்கு சென்றாலும் முதலில் முருகன் கோவிலைத்தான் கட்டுவார்கள்.ஏ.கா: இலங்கை,சிங்கப்ப
ூர்,மலேசியா,பர்மா.
திருசெந்தூர் முருகன் கோவிலை காலங்காலமாய் நகரத்து செட்டிகள் தான் நிர்வகித்து வந்தனர்.இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வணிகத்தையும் கோவில் நிர்வாகத்தையும் நாடார்கள் கையில் கொடுத்துவிட்டு திரை மறைவில் இயங்குகின்றனர்.
முதல் படத்தில் இருப்பது திருசெந்தூர் முருகன் கோவில். இரண்டாம் படத்தில் இருப்பது பூரணி பொற்கலை சமேத சாத்தன்.அவன் கையில் இருப்பதே செண்டாயுதம்.
இந்த சிலையை ஒத்த சிலை தான் தெய்வானை வள்ளி சமேத செந்தூரான் ( முருகன்/கந்தன்) சிலை.
முருகன் தான் தமிழ் கடவுள்,சுப்பிரம
ணியன் தான் பார்ப்பனக் கடவுள் என கம்பு சுத்தீட்டு வராதீங்க.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க,கணக்கு சரியா வரும்.
நன்றி: ஆய்வாளர் Sivakumar அவர்கள்.




எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

Aathimoola Perumal Prakash
திருவிளையாடல் புராணத்தில் ஒரு படலம் "உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்"
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
செங்கையினில் பொன் செண்டும் (பெரியபுராணம்)
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி (பெரிய புராணம்)
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
https://groups.google.com/forum/m/#!topic/
mintamil/APJpLXHbTDw
Re: செண்டு கையினில் ஏந்தி போர் செய்ய உதவும் ஆயுதம்
groups.google.com


எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

-------- அசல் தகவல் --------
அனுப்புநர்: aathi1956 <aathi1956@gmail.com>
தேதி: 5/5/18 15:05 (GMT+05:30)
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பொருள்: செண்டு சொல்லாய்வு ஆயுதம் கரிகாலன் சாத்தன் ஐயனார் இலக்கியம்

selvi...@gmail.com
அன்புள்ள மீனவன்
ஆய்வு செண்டு எனும் சொல் பற்றி இருந்தாலும் பொதுவாக ஒரு சொல்லின் பொருள்
பயன்பாட்டில் மற்றவரை சென்றைடையும் பொது என்னென்ன மாறு படுகள் வே றுபாடுகள்
உடன் செல்கின்றன என்பதை உணர வைக் கின்றதையா
இந்த ஆய்வு சொல்லாமல் சொல்வது
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
அதாவது
ஒருவர் முன்பு எழுதியதை வேறு ஒருவர் படிக் குங்கால் அவர்மனதில் உள்ள அறிவின் படி புரிந்து
கொண்டு பின் வெளியேறும்போது அவர் மனத்தின் நிறம் ஏற்றுத்தான் பயணிக்கின்றது
இதனில் எவ்வளவு தூரம் மிகச் சரியாது இருக்கின்றது மாறு படு கின்றது என்பதும்
வேறுபாடு பெறு ம் இடங் களும் உண்டு .
உங்கள் மடல் வரிகளில் உள்ள ஏ ன் இந்த ஆராய்சிகள் ? எனும் வினா எனக்கு உணர்த்துவது
இன்னும் உலகம் அறியா த வராக உள்ளீர் ? உங்கள் வயது என்ன ?? அறியேன் உங்களின் எண்ணம்
நீங்கள் படித்த சாண்டில்யன் எழுதியதுதான் சரியானது மற்ற வை எல்லம் தவறு என்பது போல்
காண்கின்றது ஆனால் அதனில் நீங்களே கப்பணம் எனவும் கூறுவார் எனவும் வைக்கின்றீர் ஆக
முதலில் நீங்கள் பிரச்சனைகளை தீர்ப்பவர் போல் வந்து பிறகு இதனில் எது சரியானது ? என
ஐயம் வேறு  வைத்தும் அய்யப்படுகளுடன் முடிக்கின்ரீர் என்பதை அறியவும்
இரு சொற் கள் இருந்தால் வேறுபாடோ மாறுபாடோ நிச்சயம் இரு க்கும் என்பைதை நன்கே மனதில் கொள்ளவும்
ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன எனபது தோராயமான கருத்தி ன் அடிப்படையில் வைப்பதுதான்
எப்படி இருக்கும் என உங்கள் மனதில் உள்ளது அதுவே எனக்கு  வரும் என சொல்ல முடியாது எனவே கருத்து
ப ரிமாற்றங்கள் எப்போதும் தோ ராயமய்த்தன் நடக்கின்றன
உதாரணத்திற்கு நீங்கள் வைத்த யானை நெருஞ்சி எனும் சொல்லால் ஓர் செடியில் காய்க்கும் காய் அல்லது
பழத்தைதான் குறி த்து ள்ளீர் அல்லா து வேறு பாகத்தை அல்ல அல்லவா? காய்/ பழ வடிவம் வரிகளில்
இல்லாதது ஆனால் கருத்து முடிவடைய நிச்சயம் உணரப்பட வேண்டிய ஒன்று இது ஆகும்/ இவை சேரும்
இடத்தைப பொருத்த து அல்லவா )
இந்த மடல் தமிழில்தான் வைத்துள்ளீர் ஆ னால் இங்கு நா ன் காண்பது என் கணினியில் உள்ள எழுத்துரு தான்
வடிவத்தை முடிவு செய்து காட்டுகின்றது
இங்குள்ள உண்மையை கூறுகிறேன் யானை நெருஞ்சி என்றால் எதனை என எ னக்குபுரியவில்லை  ஆனால் நீங்கள்
ஊமத்தை காய்/பழத்தை (அல்லது பிரமதண்டு) இ வ்வாறு குறிக்கின்றீ ர் என தோராயமாக உணர்ந்து கொள்கிறேன்
ஒரு வேளை வேறு பொருளாய்)இருந்து அதற்கு முட்கள் அமரும் பரப்பு கோள வடிவ ம் இல்லாது உருண்டு  ஆனால்
நீண்ட முனைபெருத்த த்த தடிபோல் (BASE BALL GAME BAT ) (ஐரோப்பியர் காட்டும் கார்டூன்களில் காட்டுவாசி எனக்காட்ட
வரையப்படும் கருத்துப் படத்தில் இருக்குமே அதுபோல் ) இருந்தால் சிறிது வேறுபாடுடன் முடியும் அல்லவா!!! ??
நிற்க
செண்டு என்றால் உருண்டு திரண்ட வடிவத்தைக் குறித்தது எனும் கருத்துடன் அதற்கு முற்றிலும் மாறுபட்ட
வடிவமுடைய சா ட்டை சவுக்கு போல் ஒன்றும் அதே செண்டு எனும் சொல்லா ல் குறி ப்பதால்தான் இந்த
குழப்பமும் நீண்ட மடல்களும் விளைந்தன
மேலும் உயர் திரு உவேசா அவர்களுக்கும் இந்த குழப்பம் நேர்ந்தது அவரும் பலகாலம் கழித்து மேலும்
ஒன்றினை அறிந்து கொண்டார் அவ்வளவே ஆனால் முடிவானதும் அல்ல
இப்போது நீங்கள் வைப்பது ஒன்று இதுவே தான் என் மனதில் சேக்கிழார் பெருந்தகை ஒரே வரியில் குறித்த
இருவேறு வகை செண்டு உண்டு என காட்டியபோது  முடிவினை தேர்ந்தெடுக்க முடிந்தது அதனை நோக்கிய
என்  மடல் பாதியில் நிற்கும் போதுதான் உங்கள் மடல் கண்டேன் இப்போது என் மனதில் தோன்றிய ப குத்தறிவு
நிலை அல்லாமல் புறத்தே உள்ளதே சான்றாக கிடைத்து பற்றி மகிழ்ச்சி
என் கருத்திற்கு சான்றாக சில படங்களையும் முன்பே சேமித்தும் வைத்திருந்தேன் மற்றும் ஊ மத்தன்காய்
மற்றும் (THORNED MACE சா ட்டையுடன் உமத்தங் காய் போன்ற முள்ளுடை உருளை மற்றும் கூறிய முட்களை
உடைய சட்டை போன்றவை
Inline image
சேக்கிழார் சுந்தரர் மலை நா ட்டினுக்கு சென்ற பொது அங்கு அரசராக இருந்த சேரமான் பெருமாள் இவரை விருந்தினராக
ஏற்று இருக்கையில் தோ ழமை யுடன் செயது கா ட்டிய பல  வீர விளையாட்டுகளின் காட்சிகளை விளக்கும் பொது யானைப்
போர் ஆட்டுக்கடா ப் போர் இருவகை செண்டு வீசுதல் பற்றி பேசுகிறார் அப்பாடலில்
நிலைச் செண்டும் பரி ச் செண்டும் எனகுறிப்பார்
என் நினைவினில் விளங்கியது நிலைசெண்டு கதைபோல்
ஆ னால் முட்களுடனோ அல்லது இல்லாமலோ இருக்கும்
மற்றொன்று பரி ச் செண்டு பரி என்றால் சுற்றுவது அல்லது (நீண்டு) சுழலுவது
சா ட்டை சேர்ந்த உருளை தோல் வாரில் / சங்கிலியி ல் தொங்குவது முள்ளுடனோ
இல்லாமலோ எனப்பலவகை யில் இருக்கலாம் படங்கள் காண்க இவை விளக்க
மட்டுமே வைத்தவை
இந்த படங்கள் முன்பு இருவகை வேறான கருத்து களளின் பால்  பட்டதே இரண்டு
கருத்தும்ஒர்வகையில் ஒன்றாகி  சந்திக்கும் நிலையு ம் வருகின்றமை காண்க
ஆனால் அய்யனார் / இராஜ கோபாலன் கையில் உள்ளதில் சவுக்கு வார் மட்டும் உள்ளது
அதன் முனையில் சிறிதோ பெரிதோ கோள வடிவ செண்டு அல்லது  முட்களோ அதன்
நுனியில் காட்டப்படவில்லை
ஒருவேளை  சிற்பிகளின் மனதிற்கு வந்தது சட்டை மட்டுமே எனவாகி முனையில்
காணும் பொருள் விடுபட்டிருக்கலாம் ஏனெனில் செண்டு எனும் சொல் பருத்த
உருண்ட வடிவி னைத்தா ன் ஐயமின்றி குறிக்கின்றது
செண்டு குறிக்கும் வரிகள் பல பழம் நூர்களி லிருந்து
(1)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு வெளியில் ஓராது தறியை மகன் என உணர்தல் 27-070 மணிமேகலை உருண்டு திரண்ட உரு
(2)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு வெளிகண்டசெங்கைமாக்-கண்ட 252 இராசராசசோழனுலா உருண்டு திரண்ட உரு
(3)
செண்டால் கிரிதிரித்தசேவகனைத்-
தண்டாத 155 விக்கிரமசோழனுலா உருண்டு திரண்ட உரு
(4)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
அடிசெண்டு வெளி தாளாதிகவிதையின்பாதமாமே
72 சூடாமணிநிகண்டு
உருண்டு திரண்ட உரு
(5)
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகால் செண்டால்
படைக்கலன்
திரித்தகோ இங்கிருந்த சேய்
133 நளவெண்பா
உருண்டு திரண்ட உரு
(6)
ஆயர்மாதர் கொங்கைபுல்கு செண்டனென் றும்
1320 பெரியதிருமொழி
உருண்டு திரண்ட உரு
(7)
துவராடையுடுத் தொரு செண்டு சிலுப்பி
1923 பெரியதிருமொழி
உருண்டு திரண்ட உரு
(8)
சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும்
256 பெரியாழ்வார் திருமொழி உருண்டு திரண்ட உரு
(9)
மகமேரு செண்டு மோதின அரர் அரசு அருள் அதிபதி 75 திருச்செந்தூர்
உருண்டு திரண்ட உரு
(10)
திருப்புகழ்
குன்று ம் குன்றும் செண்டு ம் கன்றும்
மா ர் தனம்
படிவளர் முலையினில் ம்ருக மதம் மெழுகியர் 148 பழனி
உருண்டு திரண்ட உரு
(11)
திருப்புகழ்
சங்காரசிகாமணி வேற்கொடு செண்டாடி சுழற்றி விளையாடுதல்
மகாமயில்மேற்கொளும் = முருகோனே 548 திருசிராப்பள்ளி
உருண்டு திரண்ட உரு
திருப்புகழ்
(12)
செண்டாடியண்டர்கொண்டாடமன்றில்
567 திருச்செங்கோடு
உருண்டு திரண்ட உரு
நின்றாடிசிந்தை = மகிழ்வாழ்வே
திருப்புகழ்
சுழற்றி விளையாடுதல்
(13)
செண்டாடிஅசுரர்களைஒன்றாகஅடி
தொழு 614 தென்சேரிகிரி உருண்டு திரண்ட உரு
(14)
திருப்புகழ்
சுழற்றி விளையாடுதல்
செண்ட ணியுஞ்சடை பாந்தள் நீர் மதி
என்பு அணியன் கனல்சாம்பல் பூசிய
தலை மயிறால் ஆன கொண்டை
செஞ்சடலன் சுத சேந்த வேலவ - முருகொனே 763 திருமயேந்திரம் உருண்டு திரண்ட உரு
திருப்புகழ்
(15)
சிந்தைதிகைத்தேழுகடற்பொங்கவரி
சூர்மகுடச்
மகுடத்தின் மேல் இருக்கும் உருண்ட வடிவு
செண்டு குலைத்தாடும் மணிக் - கதிர்வேலா 863 கும்பகோணம் உருண்டு திரண்ட உரு
திருப்புகழ்
(16)
செண்டு போல் பாசத் - துடனாடிச்சிந்தைமாய்  931 வெஞ்சமாக்கூடல்
சவுக்கு போன்று பற்றி இழுக்கும் ஓர் பொருள்
திருப்புகழ்
17)
எருதின் திமில்
செண்டு சேர் விடையினான் திருந்தடி பணிமினே 3.31.2 மயேந்திரப்பள்ளி உருண்டு திரண்ட உரு
தேவாரம்
(18)
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை 321 திருமந்திரம் உருண்டு திரண்ட உரு
(19)
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தி
வித்தகக் கரி மேற் கொளும் காரி மேவும்
சுழலப்படும் ஒர் பொ ருளா ல் அடைபடும் வெளி
செண்டு அணை வெளியும் ஒன்று உளதால் 12.1154 திருத்.புராணம் உருண்டு திரண்ட உரு
(20)
செங்கையினில் பொன் செண்டும் திருமுடியில் சுழியம் 12.3859 திருத்/புராணம்
உருண்டு திரண்ட உரு
(21)
நிலைச் செண்டும் பரிச் செண்டும் வீசி மிக மகிழ்வு எய்தி 3873 திருத். புராணம் உருண்டு திரண்ட உரு (இரண்டும் )
சுழற்றி விளையாடுதல் ஒ ரே இடத்தில் நின்றோ அல்லது அங்கும் இங்கும் சுழன்றி ஆடியோ
நூ த லோ சு
மயிலை
வேறு
சில ஆண்டுகள் முன் அகத்தியர் மடல் குழுவில் ஓர் மிக நல்ல அறிவாற்றல் உடைய மலாசிய மருத்துவர் தலைமையில்
நடக்கும் மடலாட ல்  குழுவிலும் இந்த செண்டு என்பது பற்றி ஓர் கருத்து  வந்தது அவரே வைத்த அது மிகவும் வேறானது
இங்கு வைத்தல் பிழையாகாது  என நினைத்து வைக்கின்றேன் மலா சிய மருத்துவர் அய்யா காட்டியது பூச்செண்டு
போன்றதுதான் ஆ னால் கொத்தாக பூ க்களுக்கு பதில் பற்பலவானதும் மிக மிக நீண்ட கூர்மையான தகடுகளால் ஆன
சாட்டைமுட்களு டனோ அல்லது தகடுகளே மிக மிக  மேல்லியதாக வாள் போ கூர்மையுடன் இருப்பது சுழற்றி வீசும்
பொது கலகல எனும் கிலுகிலுப்பை ஓலி க்கு ஈடானதும் வரும் எனலாம் இந்நாளும் மலைநாட்டில் பயன் கொள்கின்றனர்
என நினைக்கின்றேன் சென்னையிலும் திருவிழா ஊர்வலத்தில் கண்டுள்ளேன்
இஃது உருண்டு திரண்ட வடிவம் ஏதும்  இல்லா தும்  மலர்செண்டு
போல்தான் உள்ளது அவ்வழி இதுவும் செண்டு தான்
என்றாலும் சரியானதே அல்லவா??
Inline i





தொல்காப்பியர் பற்றி வைரமுத்து

aathi1956 aathi1956@gmail.com

மே 4, வெள்., முற்பகல் 10:33
பெறுநர்: நான்
தொல்காப்பியன்: ஆதி அறிவன்
வைரமுத்து
Published :  03 May 2018  08:41 IST Updated :  03 May 2018  08:41 IST
ழி ஓர் உயிரி. அது தன்னைப் பேசும் மனிதர்களை இயக்குகிறது; அவர்களால் இயக்கவும் பெறுகிறது; இறந்த காலத்தைச் சுமந்துகொண்டு நிகழ்காலத்தில் இயங்கிக்கொண்டு, எதிர்காலத்தின் பெரு வெளியில் பயணிக்கிறது. ஓர் உயிரி சந்திக்கும் நல்வினைகளையும் அல்வினைகளையும் ஒரு மொழி எல்லாக் காலங்களிலும் எதிர்கொள்கிறது. காலத்திருப்பங்களில் சில மொழிகள் கவிழ்ந்துவிடுகின்றன. சில தடம் புரள்கின்றன. சில விபத்துக்குள்ளாகி விழுகின்றன. சில அந்நியக் கிருமிகள் புகுந்து நோயுற்று அழிகின்றன. வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகாத சில மொழிகள் முதுமையுற்று மாய்கின்றன.
லத்தீன் - சம்ஸ்கிருதம் - ஹீப்ரு போன்ற மூத்த மொழி களெல்லாம் மேற்சொன்ன இவற்றுள் ஏதோ ஒன்றிலோ, கண்டறியப்படாத ஒரு காரணத்தினாலோ உலக வழக்கு ஒழிந்துபோயின. ஆனால், மேற்சொன்ன அத்தனை காரணங் களையும் வெவ்வேறு காலகட்டங்களில் எதிர்கொண்டு இன்னும் உயிரோடு விளங்கும், உயிர்ப்போடு துலங்கும் மிகச் சில பேருயிரிகளில் நமது தமிழ் தலையாயது. வாழ்வோடு படைப்பிலக்கியங்களையும், படைப்பிலக்கியங்களோடு வாழ்வையும் தமிழர்கள் இடையறாது பேணிவந்ததே அது உயிர்த்திருப்பதற்கு முதல் காரணம்; இலக்கணம் என்ற அறிவியல் மீது அது திட்டமிட்டுக் கட்டப்பட்டிருப்பது இரண்டாம் காரணம்.
ஆரிய வரவினால் தமிழுக்கு நேரவிருந்த பெரும் பின்னடைவிலிருந்து தமிழைக் கட்டிக்காத்த காப்பு நூல் என்றே தொல்காப்பியத்தைக் கருத வேண்டும். தொல் + காப்பு + இயம் - தொல்மரபுகளைக் காப்பதற்கே இயம்பப் பெற்ற இலக்கணம் என்று கொள்வது ஒருபோதும் உண்மைக்குப் புறம்பாகாது.
தொல்காப்பியத்தின் தொன்மை
தொல்காப்பியத்தின் தொன்மை குறித்து அறிவுலகத்தில் பல கருத்துகள் உண்டு. தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 5320 என்பார் வெள்ளைவாரணார்; கி.மு. 2000 என்பார் புலவர் குழந்தை; கி.மு. 1200 என்பார் கா.சுப்பிரமணிய பிள்ளை; கி.மு. 1000 என்பார் மு.வ.; கி.மு. 700 என்பார் இலக்குவனார்; கி.மு. 200 என்பர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் - மு.ராகவ அய்யங்கார் இருவரும்; கி.பி. 400 என்பார் வழக்கம்போல் வையாபுரிப் பிள்ளை. தொல்காப்பியத்தின் காலம் குறித்து வேறுபாடுகள் இருப்பினும், அது தமிழுக்கு நல்ல காலம் என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவ வாய்ப்பில்லை.
மூன்று தமிழ்ச் சங்கங்களை மூன்று கடற்கோள்கள் அழித்திருக்கின்றன என்பது ஆய்வுலக நம்பிக்கை. கி.மு. 2387-ல் முதல் கடற்கோள், கி.மு 504-ல் இரண்டாம் கடற்கோள், கி.மு. 306-ல் மூன்றாம் கடற்கோள் நேர்ந்தன என்பது அனுமானத் தால் பெற்ற ஆய்வாகும் அல்லது ஆய்வில் பெற்ற அனுமானமாகும். “இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்று(த்) தொல்காப்பியம்” என்பது இறையனார் களவியல் ஆசிரியர் கூற்றாதலின் முதல் கடற்கோளுக்குப் பிறகு பிறந்தது தொல்காப்பியம் என்று கொள்ளலாம்.
முதற்கடற்கோளில் தமிழரின் பெரிய நிலப்பரப்பும் அரிய நூல்களும் ஆழிவாய்ப்பட்டழிய, தமிழினம் ஊனப்பட்டு நின்ற ஒரு காலவெளியில், ஆரிய மொழியும் பண்பாடும் தமிழர் மீது தாக்குறவு நிகழ்த்தத் தலைப்பட்டதாகக் கருதப்பட்ட பண்பாட்டுச் சூழலில், தமிழின் இலக்கணத்தையும் தமிழரின் வாழ்வியலையும் பெருமிதத்தோடு தூக்கி நிறுத்திய பேரறிவாளன் தொல்காப்பியன்.
வடமொழி வழிநூலா நம் தொல்காப்பியம்?
தொல்காப்பியம் முதனூலா, வடமொழிச் சார்புற்ற வழிநூலா என்பது ஒரு நீண்ட வினா. தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் என்று கருதப்பெறும் பனம்பாரனார் பாடிக்கொடுத்த பாயிரத்தில் காணப்பெறும் ஒரு சொல்லாட்சியே இந்த வினாவை விதைத்திருப்பதாய் ஒரு சாரார் கருதுகிறார்கள். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் / தன்பெயர் தோற்றி” என்ற தொடரில் துலங்கும் ஐந்திரம் என்ற சொல், ஐந்திர வியாகரணமாகிய வடநூலைக் குறிக்கிறதென்றும் தொல்காப்பியம் அதனடியாய் வந்த வழிநூல் என்றும் சிலர் கருதுவர். ஐந்திரம் என்பதை ஐந்திர வியாகரணம் என்று எழுதிச்சென்ற அடியார்க்கு நல்லாரை அவர்கள் சான்று காட்டுவதுமுண்டு.
இங்கிருந்துதான் நம் பொறுப்புமிக்க மறுப்புவாதம் உயிர்ப்புறுகிறது. முதலில் ஐந்திரம் என்பது ஓர் இலக்கண நூல் அன்று. அது ஐந்திரம் - ஆக்கினேயம் - கணாதிபத்தியம் - சைவம் - வைணவம் - சாக்கியம் என்ற அறுவகைச் சமயங்களுள் ஒன்று. ஒரு சமய நூல் எப்படி இலக்கணத்திற்கு முதனூலாகும்? இன்னொன்று: தொல்காப்பியம் நிலவிய காலத்தில் ஐந்திரம் உலவியதாகச் சான்றொன்றும் கிட்டிலது. அதே பனம்பாரனாரின் பாயிரம் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு / முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி” என்று பாடியிருப்பதால் தமிழக எல்லைகளுக்கு உட்பட்ட முந்துநூல்களே தொல்காப்பியத்தின் மூலநூல்கள் என்பது தெளிவாகிறது. ஆகவே, தொல்காப்பியம் முதனூல்தான்; மூத்த தமிழ்க்குடியின் மூளைச்சாறுதான்; தமிழினத் தின் ஐயந்திரிபற்ற ஆதி ஆறிவுதான்.
எழுத்து - சொல் - பொருள் என்ற மூன்று அதிகாரங் களையும் ஓர் அதிகாரத்திற்கு ஒன்பது வீதம் 27 இயல்களை யும் இளம்பூரணர் கணக்குப்படி 1,595 நூற்பாக்களையும், நச்சினார்க்கினியர் பேராசிரியர் கணக்குப்படி 1,611 நூற்பாக் களையும் உறுப்புகளாக உடையது தொல்காப்பியம்.
தமிழை ஆளும் மூன்றதிகாரங்கள்
மூன்றதிகாரங்களுள் எழுத்தையே தொல்காப்பியம் முன்வைக்கிறது. ஒலிப்பதிவு கண்டறியாத காலம் வரைக்கும் பேச்சுமொழி என்பது தன்மை முன்னிலைக்கு மட்டுமே உரியது. ஆனால், எழுத்து என்பதோ தன்மை - முன்னிலை - படர்க்கை என முக்காலத்திற்குமானது. எழுத்து என்பது ஒலியை ஊற்றிவைக்கும் கொள்கலன். அது அறிவின் சேமிப்புக் கிடங்கு. தலைமுறைகளுக்கான ஞானத்தைக் கடத்தி ஏகும் கருவி. மொழியின் எழுத்துகளைப் பகுப்பதென்பதே ஒரு கணிதம் மற்றும் அஃதோர் ஒலி விஞ்ஞானம். தொல்காப்பியர் ஓர் ஒலி விஞ்ஞானி.
தமிழ் எழுத்திலக்கணத்தை “நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல்” என்று 9 இயல்களில் வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். “எழுத்தெனப் படுவ / அகர முதல னகர இறுவாய் / முப்பஃது என்ப / சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே” என்று தமிழ் எழுத்துகள் மொத்தம் 33 என்று வரையறுக்கிறார். அகர முதல் ‘ன’கர ஈறாகவுள்ள முப்பதோடு, குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்றையும் கூட்டித் தமிழ் எழுத்து கள் 33 என்று முடிவுசெய்கிறார்.
தனித்தியங்கவல்ல 12 எழுத்துகளை உயிர் எழுத்துகள் என்றார், தனித்தியங்கவல்லாத 18 எழுத்துகளை மெய் யெழுத்துகள் என்றார். உயிரைச் சார்ந்து இயங்குவதே மெய் என்ற பேரறிவை மொழியின் மீது சாற்றிய முன்னோர்களின் மூதறிவைக் கருதும்போதெல்லாம் உள்ளம் களிகூர்கிறது. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் இம்மூன்றும் ஒரு சொல்லைச் சார்ந்தன்றி தனித்தியங்கும் இயல்பற்றன வாதலின் சார்பெழுத்துகள் எனப்பட்டன.
எழுத்ததிகாரத்தின் பெருமை பேசப் பிறப்பியல் ஒன்றே போதும். எழுத்துகள் பிறப்பதெங்ஙனம், அவற்றின் பிறப்பிடம் யாது என்று சிந்தித்த தொல்காப்பியர் உடல் - உயிர் - காற்று என்ற மூன்று மூலங்களோடு முடிச்சுப் போடுகிறார். “உந்தி வழியா முந்துவளி தோன்றித் / தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப் / பல்லும் இதழும் நாவும் மூக்கும் / அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்… / …பிறப்பின் ஆக்கம் வேறு வேறியல” - என்பது நுட்பமான நூற்பா.
உந்தி வழியே முந்தி எழுகின்ற காற்று தலை - மிடறு - நெஞ்சு ஆகிய மூவிடங்களில் தவழ்ந்து, பல் - உதடு - நாக்கு - மூக்கு - அண்ணம் ஆகிய ஐவகை உறுப்புகளோடு உறழ்ந்து, வெவ்வேறு உருவாய்த் தோற்றுவதே எழுத்துகளின் பிறப்பு முறையாகும் என்று அறிவியல் தளத்தில் நின்று அறுதியிட்டு அறிவிக்கிறார்.
மொழிக்கு முதலெழுத்தாக வரக்கூடியவை எவை? வாராதவை எவை என்று தொல்காப்பியர் இட்டுக்கொடுத்த சட்டம் 3000 ஆண்டுகளாய் நின்று நிலவுகிறது. உயிர் எழுத்து பன்னிரண்டும் மொழி முதலாகும். மெய்யெழுத்துகள் மொழி முதலாகா. வடநாட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தால் கிரந்த எழுத்துகள் தமிழுக்குள் புகத் தலைப்பட்ட காலத்தில், தொலைநோக்குப் பார்வையோடு தொல்காப்பியர் செய்த ஒரு நூற்பாதான் இன்றுவரை தமிழின் தனித்தன்மையைக் காக்கிறது; அதுதான் அந்நிய மொழியை வெளியே நிறுத்தித் தூய்மையுறுத்தித் தமிழுக்குள் அனுப்புகிறது.
காலப்போக்கில் கிரந்த எழுத்துகளின் சொற்களைத் தவிர்க்க முடியாது; ஆனால், அந்த கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கலாம் என்று முடிவெடுத்தான் அந்த மொழியறிஞன். “வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ / எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்றான். அதாவது, வடசொற்களின் வடவெழுத்துகளைத் தமிழ் எழுத்துகளாக்கித் தமிழோடு புழங்கலாம் என்று இலக்கணச் சட்டம் இயற்றினான். லஷ்மன் - இலக்குவன் ஆனதும், ஜானகி - சானகியானதும், மஹாராஷ்டிரம் - மராட்டியம் ஆனதும், ஹைகோர்ட் - ஐகோர்ட் என்று எழுதப்படுவதும் தொல்காப்பியன் வகுத்த மொழிமரபின் தொடர்ச்சியே ஆகும். இன்று வடசொற்களையும், திசைச் சொற்களையும் அந்தந்த ஒலிவடிவில் எழுதுவது ஊடகக் கலாச்சாரமாய் இருப்பினும், தொல்காப்பியரின் செல்வாக்கு தமிழ்ப்பரப்பில் முற்றிலும் அற்றுப்போகவில்லை என்பதே மொழியின் தனித்தன்மையாகும்.
காலப்பெருவெளியில் எத்தனையோ அரசர்களின் எத்துணையோ அதிகாரங்கள் மாண்டழிந்துபோயின. ஆனால், தொல்காப்பியன் இயற்றிய மூன்று அதிகாரங்களும் இன்றுவரை ஒரு மொழியில் ஆட்சி செலுத்துகின்றன.
இரு திணைகளில் அடங்கும் உலகு
வைப்பு முறையில் எழுத்ததிகாரத்தைத் தொடர்கிறது சொல்லதிகாரம். எழுத்துக்கு முன்பே பிறந்தது சொல். சொல்லை முன்னிலைப்படுத்திப் பொருள் உண்டாவதில்லை. பொருளை முன்னிலைப்படுத்தியே சொல் உண்டாகிறது. பின்னர் அந்தப் பொருளைச் சுட்டும் சொல் தானும் ஒரு பொருளாகிறது. பொருளே சொல்லுக்கு மூலம் என்பதனால் “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று அறைந்து சொல்கிறது தொல்காப்பியம். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் எந்த ஒலி எழுத்துக்குள் அடங்குகிறதோ அதுவே சொல்லாகிறது.
கடலோசை - காற்றோசை - இடியோசை - மழையோசை - பறவையோசை - விலங்கோசை - ஆற்றோசை - அருவியோசை - இசைக் கருவிகளின் இன்னோசை - முத்தம் - சிரிப்பு - முனகல் - இருமல் இவையெல்லாம் எழுத்துகளில் அடங்குவதில்லை. அதனால், இவை யாவும் ஒலிக்குறிப்பு களாகுமே அன்றிச் சொற்களாகா. எழுத்துக்குள் அடங்கும் ஒலியே சொல்லாகிறது.
இந்தப் பேரண்டத்தை அளக்கும் அத்தனை சொற்களை யும் இரண்டே இரண்டு செப்புக்குள் அடைக்கிறார் தொல்காப்பியர். ஒன்று உயர்திணை; மற்றொன்று அஃறிணை.
மனிதர் உயர்திணை; மனிதக் கூட்டம் அல்லாதவை எல்லாம் அஃறிணை. அந்த உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றுக்குள் அடக்கிய தொல்காப்பியர், அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என்ற இரண்டுக்குள் அடக்குகிறார். இந்தச் சொற்பகுப்பைத் தமிழ் ஞானத்தின் உச்சம் என்றே கொண்டாடலாம். “இந்தோ ஐரோப்பிய மொழிகள் பல உயிருள்ளன, உயிரல்லன அனைத்தையும் உயர்திணையாகவே கொண்டு ஆண் - பெண் என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன.
சித்திய மொழிக் குழுவினுள் பல எல்லாவற்றையும் அஃறிணை யாகவே கொண்டு ஒன்று - பல என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிட்டன. தமிழ் ஒன்றுதான் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து, அதனையுடைய மக்களை உயர்திணை எனக் கூறியுள்ளது” என்று தமது தொல்காப்பிய ஆராய்ச்சியுள் அறிஞர் சி.இலக்குவனார் சுட்டுவது அறிவுலகத்தின் ஆழ்ந்த பார்வைக்கு உள்ளாகிறது.
அந்தச் சொற்களைப் பெயர் - வினை - இடை - உரி என்று நான்காகப் பகுத்தபோது மொழியின் மொத்தக் கட்டமைப் பும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. “பொருளை உணர்த்துவது பெயர்ச்சொல். அப்பொருளின் தொழிலைச் சொல்வது வினைச்சொல். பெயருக்கும் வினைக்கும் இடையே மையமாய் இயங்குவது இடைச்சொல். பொருளின் பண்பு கூறுவது உரிச்சொல்” என்ற சிவஞான முனிவரின் தெள்ளுரையும் உள்வாங்கி உணரத்தக்கது.
சொல்லதிகாரத்தில் சொல்லப்பட்ட கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்ற ஒன்பது இயல்களிலும் சொல்லும், சொல் இயங்கும் அறிவியலும், மொழியின் இயக்கத்தால் பெறப்படும் விகாரங்களும், விகாரங்களால் பெறப்படும் புதுவடிவங்களும், தமிழ் மொழியின் ஒரு சொல் இப்படித்தான் இயங்கும் அல்லது இயங்க வேண்டும் என்ற ஒலிச் சட்டங்களும் வரையறுத்து வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியரின் சொல்லதிகாரத்தை இற்றைநாள் மொழியில் சொல்லறிவியல் என்றும் சொல்லலாம்.
பொருள் எனும் பேரதிகாரம்
மூன்றாம் அதிகாரத்திற்குப் பொருளதிகாரம் என்று தலைப்பிட்ட தொல்காப்பியரின் சொற்றேர்வு சுட்டுகிறது அவர் பெற்ற பேரறிவை. மனிதன் பொருள்களால் ஆக்கப்பட்டவன் மற்றும் பொருள்களை இயக்குகிறவன்; பொருள்களால் இயக்கப்படுகிறவன். பொருள்களைக் கண்டறிகிறவன்; பொருள்களை உண்டாக்குகிறவன். இறுதியில் தானும் ஒரு பொருளாகி, பின்னர் பொருளற்ற பொருளாகிக் காலப்பொருளுக்குள் மூலப்பொருளாய்க் கலக்கிறவன் அல்லது கரைகிறவன். இந்த உலகப் பொருள்கள் கட்படு பொருளென்றும் கருது பொருளென்றும் இருவகைப்படும். அவற்றை மூவகைப்படுத்தி முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள் என்று பகுத்தறிவால் பகுத்துப் பகுத்து வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.
முதற்பொருள் எதுவென்று முன்மொழிந்தது தொல்காப் பியரின் மூளைப்பழம் பிழிந்த சாறாகும். உயிர்த்தோற்றத் தின் மூலமாகிய இந்த நிலமென்ற உருவமும், இந்த நிலவியல் வாழ்வை இயக்குகின்ற காலம் என்ற அருவமும் முதற்பொருள் என்பது தொல்காப்பியரின் அசைக்க முடியாத அறிவின் ஆணையாகும். “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் / இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே” என்பது எங்கள் முன்னோன் எழுதிய முன்னறிவியல்.
ஐன்ஸ்டைன் முதலாக ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஈறாக விளங்கிய விஞ்ஞானிகளும் ‘காலமும் வெளியும்’ (Time and Space) என்று தேடிக் கண்டறிந்த திரவியத்தை அன்றே சுட்டிய பேரறிவு பெருமைக்குரியது.
முதற்பொருள்களில் கருக்கொள்வனவெல்லாம் கருப்பொருள்கள். அந்தக் கருப்பொருள்களின் ஒழுகலாறுகள் உரிப்பொருள்கள் என்று வகைப்படுத்தியதில் மொத்த உலகத்தையும் இந்த மூன்று பகுப்புக்குள் அடக்கி முடிக்கிறார் அறிஞர் பெருமான்.
அகத்திணையியல் - புறத்திணையியல் - களவியல் - கற்பியல் - பொருளியல் - மெய்ப்பாட்டியல் - உவமவியல் - செய்யுளியல் - மரபியல் என்ற பொருளதிகாரத்தின் 9 இயல் களிலும் தமிழர்களின் காதலும் வீரமும், நிலமும் பொழுதும், வாழ்வும் தொழிலும், உணவும் உணர்வும், கலையும் கல்வியும், வழக்கமும் ஒழுக்கமும், உறவும் பிரிவும், அறமும் மறமும், மரபும் மாற்றமும், யாப்பும் அணியுமென எல்லாப் பொருளையும் இலக்கணப்படுத்தியிருக்கிறார் தொல்காப்பியப் பேராசான்.
விஞ்ஞானத்தோடு முன்னின்றவன்
உலகத் தோற்றம் குறித்து இதுவரை இரண்டு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று மதக் கருத்து; இன்னொன்று அறிவியல் கருத்து. இந்த அண்டமே கடவுளின் கைவினை என்ற கருத்தையே எல்லா மதங்களும் எழுதிப்போகின்றன. ஆனால், கரிமக்கொள்கை என்ற விஞ்ஞானம் இந்த பூமியின் தோற்றம் குறித்து அதுவரையில் இருந்த எல்லா நம்பிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவியல் எல்லைக்குள் அண்டத்தை அளந்தது தொல்காப்பியம்.
“நிலம் தீ நீர் வளி விசும்பொடு / ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (பொருளதிகாரம் மரபியல் 86) என்று வரையறுக்கிறது தொல்காப்பியம். நிலம் - நீர் - தீ - வளி - வெளியென்ற ஐந்தின் கலவைதான் இந்த மண்கோள் என்று முரண்பாடில்லாத கருத்தை முன்மொழிகிறது. இந்த பூமி எப்படிப் படைக்கப்பட்டது என்ற மதம்சார் கருத்தியலில் தோயாமல், எதனால் படைக்கப்பட்டது என்ற மெய்ம்மையோடு மட்டும் நின்றுகொண்டதால் தொல்காப்பியத்தை எந்த நூற்றாண்டு அறிவியலும் இடறித்தள்ளவியலாது.
தொல்காப்பியர் எந்த மதத்துக்குள்ளும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. ஐவகை நிலம் காக்கத் தங்க ளைக் களப்பலியிட்டுக்கொண்ட முன்னோர்களுக்கு நட்ட நடுகல்லையே தமிழர்கள் தெய்வமென்று போற்றி வழி பட்டார்கள் என்பதையே தொல்காப்பிய நூற்பா நுதலிப் போகிறது. “காட்சி, கால்கோள் நீர்ப்படை நடுகல் / சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபில் கல்லொடு புணர” (பொருளதிகாரம் : புறத்திணையியல் 5) என்னும் தொல்காப்பியம் நடுகல் வழிபாடுதான் தமிழர்களின் ஆதிவழிபாடு என்று சான்றளிக்கிறது. அதுவே, குலதெய்வ வழிபாடாகி இன்றுவரை நாட்டார் சமயமாய் விளங்குகிறது.
தொல்காப்பியத்தை எப்படி மதிப்பிடுவது?
மொழி, இலக்கணக் கோட்டுக்குள் இயங்கவும், அதன் ஒலி தடம் புரளாமல் பயணிக்கவும், தமிழன் ஆதிகுடி என்பதற்கு அடையாளம் காட்டவும், மொழிக்கு அறிவியலையும் வாழ்வுக்கு அறவியலையும் அடிப்படையாகக் கொண்டது தமிழ்ப் பழங்குடி என்பதற்குச் சான்று சொல்லவும், தமிழர்க்கு உச்சமாகவும் எச்சமாகவும் உள்ள தொல்லாவணமே தொல்காப்பியம் என்று மதிப்பிடலாம். தொல்காப்பியத்தைக் கட்டிக்காப்பது அரசாங்கத்தின் - அறிவுலகத்தின் கடமை மட்டுமன்று; தமிழ் மொழி பேசும் - எழுதும் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.
- வைரமுத்து, கவிஞர்.
மகத்தான தமிழ் ஆளுமைகளை இளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் மே 2 அன்று அவர் வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.
தொல்காப்பியன்

தமிழ் இலக்கணம் லத்தீன் மொழியில் 1716 லேயே ஜெர்மனி யில்

aathi1956 aathi1956@gmail.com

மே 2, புத., பிற்பகல் 7:20
பெறுநர்: நான்

தமிழ் இலக்கணம் அல்லது
கிறம்மாற்றிக்கா தமுலிகா (இலத்தீன்: Grammatica Damulica) என்பது 1716 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்க் -ஆல் வெளியிடப்பட்ட
இலத்தீன் மொழி நூல் ஆகும். இது
தரங்கம்பாடியில் தொகுக்கப்பட்டு, யேர்மனியில் Halle நகரில் வெளியிடப்பட்டது. ஐரோப்பிய மொழியில் வெளிவந்த முதல் தமிழ் இலக்கண நூல் இதுவாகும். இந்த நூல் இலத்தீன் மொழி அறிந்த கிறித்தவ சமயம் பரப்புவோருக்காக எழுதப்பட்டது. இது ஆங்கில மொழிக்கு அண்மையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.
தகவல் பாதுகாப்பு •
கணினி பதிப்பு தமிழ் இலக்கணம் (இலத்தீன்)
Wikipedia

தமிழ்மொழி ஐரோப்பா ஜெர்மானியர்

25 சென்ட் நிலம் கொஞ்சம் உழைப்பு நால்வர் வாழலாம்

aathi1956 aathi1956@gmail.com

மே 2, புத., முற்பகல் 9:31
பெறுநர்: நான்

உழைப்பாளிகள் தினமல்ல அடிமைகள் தினம்
முதலாளித்துவத்தின் முதன்மை Fake ID பொதுவுடமை மக்களை ஏமாற்ற கண்டுபிடித்த சொல்லே உழைப்பாளி. உழைப்பாளிகள் தினம் எதுக்கு கொண்டாடுறீங்கனு கேட்டுப்பாருங்க. பொதுவுடமை தான் 16 மணிநேர வேலையை 8 மணிநேர வேலையாக மாற்றி பொரச்சி செஞ்சதா
பெருமை பேசுவானுங்க.
வெங்காயம் 16 மணி நேர அடிமையா இருந்த நீ கடுப்பேறிப்போய் தற்சார்பை நோக்கி நகர்ந்து விடக்கூடாது என திட்டமிட்டே தான் முதாலித்துவம் தன் Fake ID பொதுவுடமையை வைத்து உன்னை 8 மணி நேர சமத்துவ உழைப்பாளியாய் சிந்திக்க வைத்தது.
ஆனால் உண்மை என்ன என்றால் 16 மணி நேர அடிமையாய் இருந்த நீ 8 மணி நேர அடிமையாய் மாறியிருக்கிறாய் என்பதே உண்மை. அடிமையில் என்னடா 16 மணி நேர அடிமை 8 மணி நேர சமத்துவ அடிமை.?!?
உலகின் தற்சார்பு முன்னோடிகளான மசனோபு புக்குவோக்கா, நம்மாழ்வார், மராட்டிய வேளாண் அறிஞர்கள் (மார்வாடி பணியா அல்ல) பலர் கால்காணி நிலமும் (25 சென்டு) ஒரு குடும்பத்தில் ஒரு நாளுக்கு ஒருவரின் 4 மணி நேர உழைப்பும் வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத்தந்துவிடும் என்கின்றனர். எனில் தமிழ்நாட்டில் உள்ள ஆறரை கோடி தமிழருக்கு ஏறக்குறைய 41 லட்சம் ஏக்கர் நிலம் வேண்டும். அதாவது ஒருவருக்கு 6.25 சென்டு. நான்கு நபர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு கால்காணி நிலம். (25 சென்டு)
இந்த தற்சார்பு நோக்கிய நகர்வு மட்டுமே உங்களை அடிமை நிலையில் இருந்து மாற்றும். அதை விட்டுட்டு அடிமைகள் தினத்தை உழைப்பாளிகள் தினம் என்று சொல்வதை எல்லாம் நம்பி ஏமாந்து கொண்டிருந்தால் துணை இராணுவம் எல்லாம் தேவையில்லை. சில முதலாளிகள் போதும் உங்களை ஊதித்தள்ள.
அடிமைகள் தினத்தை தற்சார்பு நோக்கி நகரும் வரை துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும். அனைவருக்கும் துக்க தின இரங்கல்களை தெரிவித்துக்கொள
்கிறேன்.
- தென்காசி சுப்பிரமணியன்
Rajasubramanian Sundaram Muthiah

நம்மாழ்வார் புதுமுயற்சி விவசாயம் இயற்கை கம்யூனிசம் கம்யூனிஸ்ட்

புலம்பெயர் ஈழத்தமிழர் போர் அழிவை மீட்டனர்

aathi1956 aathi1956@gmail.com

மே 1, செவ்., பிற்பகல் 1:13
பெறுநர்: நான்
ரகு வசந்தன்
இலங்கையில் இவ்வளவு யுத்தம் நடந்தது
ஆனால் இங்கு யாரவது வெளிநாட்டுக்காரர் வந்து பார்த்தால் உண்மையில் இங்கு 30 வருடம் யுத்தம் நடந்ததா என்று நம்ப மாட்டார்கள் அவ்வளவுக்கு இங்கு ஓரளவுக்கு மீள்நிர்மாணம் அடைந்து விட்டது எமது ஊர்கள்
இதற்கு முக்கிய காரணம் புலம்பெயர் வெளிநாட்டு தமிழர்கள் அனுப்பிய பணமே.....
எப்படி என்றால் நான் இங்கு ஈழத்தில் உற்பத்தி என்று ஒன்றும் கிடையாது வெளிநாட்டு தமிழர்களின் முதலீடுகளினாலேய
ே பெரும்பாலான ஆட்கள் வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்.
உதாரணமாக ஒரு புலம்பெயர் தமிழர் இங்கு ஒரு வீடு கட்டும்போது மேசனில் இருந்து தச்சன் கூலியாட்கள் வரை குறைந்தது மூன்று மாதங்களாவது வேலைக்கு பிரச்சனை இருக்காது
அதே மாதிரி கோவில்கள் இன்னும் பிற வேலைகள் என ஏராளமான ஆட்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கின்றது
உண்மையை சொல்லப்போனால் நாங்கள் இவ்வளவு காசு உழைத்து அக்காகளுக்கு திருமணம் வரை செய்து வைத்ததிற்கு எங்களுக்கு தனிப்பட்ட முறையிலேயே சில வெளிநாட்டுக்காரர் வழங்கிய வேலையே காரணம்
அடுத்தது பொது நிறுவனங்களுக்கு அவர்களால் வழங்கப்படும் உதவிகள் முக்கியமானது நானறிந்து எனது பள்ளிக்கூடத்துக்கு அரசாங்கம் கொடுத்த காசை விட புலம்பெயர் பழைய மாணவர்கள் வழங்கிய உதவிகளே அதிகம்
இப்போது கூட ஒரு தனி ஆள் 300 அடி மதில் சுவர் கட்டி குடுத்திருக்குறார். இப்படி ஏராளமான உதவிகள்
# அடுத்து முக்கியமானது ஈழத்ததமிழர்களின் முப்பது வருட போராட்டம் இவ்வளவு காலமும் தாக்கு பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவர்களே ஒரு நாட்டினை எதிர்த்து 30 வருடம் தாக்கு பிடிப்பதென்பது சுலபமான காரியம் இல்லை இலங்கை அரசாங்கம் கடைசி ஆண்டு யுத்தத்திற்கு 20000 ஆயிரம் கோடி செலவானது என்று கூறினது அப்போ அதனை எதிர் கொள்ள எவ்வளவு செலவாகியிருக்கும்.
அவளவு பணமும் இங்க ஒடியலும் புகையிலையும் விற்று பெறப்பட்டது இல்லை எல்லாம் அவர்களால் வழங்கப்பட்டதே
இது எல்லாவற்றையும் விட முக்கியம் அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக செய்வதே அக்கா கல்யாணம் தங்கச்சிக்கு கல்யாணம் கட்டி வைக்கணும் என்பதற்காகவே எவ்வளவோ பேர் தங்களின் இளமைமக்காலங்களை இழந்து தனது குடும்பத்திற்காக உழைக்கின்றனர்
Maki Siva
குறிப்பாக ஈழத்தமிழர்களின் புலம்பெயருதல் அடைக்கலம் நாடி அல்லது பொருளாதார பின்னணியை கொண்டு ஓடிக்கொண்டிருப்பது ஐரோப்பிய பனியையும் அரேபிய வெயிலையும் ஆஸ்திரேலிய கொடும் குளிரையும் தங்கள் உடலில் தாங்கி தங்கள் குடும்பத்துக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உலகின் இரண்டாவது மிகப்பெரிய அமைப்பாக விளங்கியதற்கு புலம்பெயர் ஈழத்தவர்களின் ஒவ்வொரு துளி வியர்வையும் உண்டு
இன்றும் தெரிந்தும் தெரியாமலும் இடிந்துபோன எமது நகரங்களை இவர்களே கட்டியெழுப்புகிறார்கள்
மீள் நிர்மாணம் துரித கதியில் நிகழ புலம்பெயர் ஈழத்தவர்களின் பங்கு அளப்பரியது
வீடு சொந்தம் சுற்றம் நட்புகள் குடும்பத்தை பிரிந்து தேசத்துக்கு மீளவும் உதவும் எம் மக்கள் போற்றப்படவேண்டியவர்களே.

ஈழம் பொருளாதாரம் புலத்தமிழர் பெருமை இனப்பற்று 

டெல்டா மக்கள் போராட்டம் அடக்க துணைராணுவம் இறங்கியது சாகர்மாலா

aathi1956 aathi1956@gmail.com

ஏப். 30, திங்., முற்பகல் 10:55
பெறுநர்: நான்
டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டம்: கும்பகோணம் வந்த அதிவிரைவுப் படையினர்
By DIN  | Published on : 30th April 2018 07:01 AM  | அ+ அ அ- | 
டெல்டா மாவட்டங்களில் காவிரிக்காக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதன் எதிரொலியாக அதிவிரைவுப் படையினர் கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் சாலை, ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதுதவிர, கதிராமங்கலம், திருவாரூர், நன்னிலம் ஆகிய இடங்களில் ஓஎன்ஜிசி விவகாரம், நெடுவாசலில் ஹைட்டோர கார்பன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அறிவிப்பால் டெல்டா பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி டெல்டா மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெறாத நாள்களே இல்லை நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான அதிவிரைவு படையினர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தனர்.
தஞ்சாவூரில் தங்கியுள்ள இவர்கள் ஞாயிற்றுக்கிழமை திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அந்தந்த உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்களை சந்தித்து, தங்களது பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து விட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு சென்றனர். தஞ்சாவூரில் ஒரு வார காலத்துக்கு தங்கியிருக்கும் இந்த அதிவிரைவு படையினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி கூறியது:
மத்திய பாதுகாப்பு படையின் கோவையில் உள்ள 105வது பிரிவின் அதிவிரைவு படையின் உதவி கமாண்டர் வி.எப்.கிளாரன்ஸ் தலைமையில் வந்துள்ள 40 வீரர்கள், கலவரம் ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தனர் என்றார்.

30 ஏப்ரல் 2018    
தினமணி 
----------------
: 23:00 (29/04/2018)
'போராட்டங்களை ஒடுக்கவா அதிரடிப் படை குவிப்பு?’ - பதற்றத்தில் டெல்டா மாவட்டங்கள்
காவிரி பிரச்னையில் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதன் எதிரொலியாக, மத்திய அதிவிரைவுப் படையினர் தமிழக அரசிற்குத் தகவல் தெரிவிக்காமலேயே அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே அமல்படுத்த கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள், காவிரி உரிமை மீட்பு குழு, விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் காவிரியில் தமிழகத்துக்குரிய உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என பிரசார பயணம், பேரணி போன்றவையும் நாள்தோறும் டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், டெல்டா மாவட்டங்களில் கதிராமங்கலம், திருவாரூர், நன்னிலம்,ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. சார்பில் கச்சா எண்ணெய் எடுப்பதும், நெடுவாசலில் ஹைட்டோரகார்பன் எடுக்கும் முயற்சிக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், கடலூர் தொடங்கி கடற்கரையோர டெல்டா பகுதியில் 110 இடங்களில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்கப்போவதாக மத்திய அரசின் அறிவித்திருப்பதற்கும் டெல்டா பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. கதிராமங்கலத்தில் தொடர்ந்து 346 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி டெல்டா மாவட்ட மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதன் மூலம் நிம்மதியே இல்லாமல் வாழ்ந்து வருவதுடன், உரிமையோடு சேர்த்து நம் வளமும் பறிபோகிறதே என நினைத்து கையறு நிலையில் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவான அதிவிரைவுப் படையினர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சில தினங்களுக்கு முன் வருகை தந்தனர். தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் தங்கியுள்ள இந்த வீரர்கள், நேற்று திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய பகுதிகளுக்கு வந்து, எப்படி இந்த ஊர்களுக்கு வந்து செல்வது, அந்தந்த உட்கோட்ட காவல் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்து வந்து டி.எஸ்.பிக்களை சந்தித்து, தங்களது பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா?, அது எந்த மாதிரியான பிரச்னை?, மதக் கலவரம் உண்டா, ஆண்டுதோறும் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என கேட்டுவிட்டு மீண்டும் தஞ்சாவூர் சென்று தங்கியுள்ளதாகத் தெரிகிறது. தஞ்சாவூரில் ஒரு வாரம் வரை தங்கியிருக்கும் இந்த அதிவிரைவு படையினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், ''மத்திய பாதுகாப்பு படையின் ஒரு பிரிவான கோவையில் உள்ள 105 பிரிவின் அதிவிரைவு படையின் உதவி கமாண்டர் வி.எப். கிளாரன்ஸ் தலைமையில் 40 வீரர்கள் கும்பகோணத்துக்கு வந்தனர். இந்தப் பகுதியில் ஏதேனும் கலவரம் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் உள்ளதா என கேட்டனர். இங்கு அதுபோன்ற பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றதும். சுமார் ஒரு மணி நேரம் இங்கிருந்து விட்டு பின்னர், தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றனர்’’ என்கிறார்கள். போரட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாகவும், இதற்கெல்லாம் யாரும் அஞ்சப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் கே.குணசீலன்

மண்ணழிப்பு காவிரி காவேரி ராணுவமயமாக்கல் ஹைட்ரோகார்பன் திட்டம் ஹிந்தியா