புதன், 6 ஜனவரி, 2021

பார்ப்பனர் பெண் கம்யூனிஸ்ட் போராளி மணியம்மா சாம்பவனோடை சிவராமன் போல

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்புத., 4 செப்., 2019, பிற்பகல் 5:18
பெறுநர்: எனக்கு
Raja Thamilan
# தமிழ்பார்ப்பன பெண்ணான
மணியம்மாவை மறந்ததே
# தமிழ்சமூகம்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல தோழர் மணியம்மா. பெண்ணியம், சாதி ஒழிப்பு பேசும் அனைவரும் மணியம்மாவை பேச மறக்கக்கூடாது.
கீழத்தஞ்சை சமர்க்கள நாயகர்களின் வேங்கை அவர். சாதி தீண்டாமை, பண்ணையடிமை முறையை ஒழிக்க போராடிய தியாகி, பொதுவுடைமையின் போர்வாளாய் காவிரி வளநாட்டை காத்திட்ட ஒரு மாபெரும் களப் போராளி.
# கணவரை இழந்த
# பிராமண_பெண்ணாக # மொட்டை அடித்து மெல்ல காந்தியின் கொள்கையில் தேசிய விடுதலையில் ஈடுப்பட்டவர்தான் அவர்.
அவரின் தொடக்க காலம் எப்படியோ? அவர் பண்ணையடிமை முறைக்கு எதிராக பண்ணையார்களை எதிர்த்து போராட தொடங்கினார். முழு நேர கம்யூனிஸ்ட் ஆனார்.
செங்கொடியுடன்,
கையில் உள்ள குடைக் கம்பியில் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட குறுவாள்,
கதர் வேட்டி,
தானே தைத்த மேல் பாக்கெட்டோடு ஜிப்பா போன்ற அரைக்கை சட்டை,
தோளில் துண்டு,
கிராப்பு வெட்டிய தலை,
தோல்ப்பை,
ஒற்றை காளை மாடு பூட்டப்பட்ட வண்டியில் தன்னந்தனியாக,
கீழத்தஞ்சை முழுவதும் ஒரு பெண் நிலவுடைமையாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், ஒடுக்கப்பட்ட விவசாயத்தொழிலாளர்களுக்கு தோழமையின் அடையாளமாகவும் இருந்தார்.
தனது சொந்தப் பண்ணையிலேயே சாதி அடிமைத் தனத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தினார். அதன் காரணமாகவே அவர் பண்ணையில் இருந்து சொந்தக் குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்டார்.
ஜஸ்டீஸ் கட்சிக்காரர்களும், காங்கிரஸ்காரர்களும் பண்ணையார்களுக்க
ே சார்புடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொந்த அனுபவத்தை மக்களிடையே பரப்புரை செய்தார்.
அவரின் பண்ணை அடிமைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணிதிரட்டலாலும் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கம் அவரைக் கொல்ல பலமுறை முயன்று தாக்குதல் தொடுத்திருக்கிறது.
சிலம்பம் கற்று கையில் சிலம்பத்தோடு தனி ஒருவராகவே தஞ்சைப் பகுதியெங்கும் சென்று விவசாய இயக்கங்களைக் கட்டி வளர்த்தார். உழைக்கும் மக்கள் தங்கள் தாயாகவே அவர்களை கருதினர். அவர் இயற்பெயர் வாலாம்பால், அவரின் செல்ல பெயர் மணி. அவரை மணி என்றே அனைவரும் அழைத்தனர். பிறகு அவரை உழைக்கும் மக்கள் 'மணி அம்மா' என்று அழைத்ததால் பிறகு தோழர்
# மணியம்மா ஆனார்.
எந்த சேரியில் மணியம்மா செங்கொடி ஏற்றுகிறாரோ அங்கு ஆண்டைகளும் காவல்துறையும் அஞ்சும். சாணிப்பால், சவுக்கடிக்கு எதிராக பல ஊர்களில் விவசாயதொழிலாளர்
களை ஒன்றிணைத்து போராடி ஒழித்தார். பல பண்ணையார்களிடம் கூலி உயர்வு பெறப்பட்டது.
எண்ணிலடங்கா விவசாயப் போராட்டங்களில் பங்கெடுத்த அந்த இரும்புப் பெண்மணி, தொழிலாளர் மத்தியில் வேலை செய்யவும் தயங்கவில்லை. நாகப்பட்டிணம் பகுதியில் மணியம்மையின் தொழிற் சங்கப் போராட்டம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருவது. அவர் கொடும் சிறை வாசத்துக்கும் அஞ்சவில்லை. அடிதடி பஞ்சாயத்துக்கும் அஞ்சுவதில்லை. அதேபோல அணைத்து கட்சிகளின் கபட வேடங்களையும், நிலப்பிரபுத்துவ ஆதரவுப் போக்கையும் தோலுரிக்கவும் தயங்கவில்லை.
தோழர் மணியம்மா தீவிரமாக அமைப்புப்பணி செய்பவர். அவர் ஏற்றி வைத்த செங்கொடிகள் நாகையில் ஏராளம். அதன் காரணமாகவே 40, 50களில் கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியை மணியம்மா கட்சி என்றுதான் பல ஊர்களில் அழைக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது தலைமறைவு வாழ்க்கை பிறகு ஒன்றரை ஆண்டு
# சிறைவாழ்க்கை . விடுதலையாகி வெளியே வந்து அரசால் சின்னாபின்னமாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை அதிகம் உழைத்து ஒன்றிணைத்தார்.
பூந்தாலங்குடி நிலக்கிழாரோடு விவசாய தொழிலார்களுக்காக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்தபோது பண்ணையாரின் ஏவல்கலைமானின் கொம்பால் முட்டி மணியம்மாவின் குடலை சரித்தனர்.கட்சிதலமையில் உள்ள
வடுக திராவிடம் உண்மை போராளிகளை மறைத்துவிட்டது
பதிவு Nathikan mohamed
15 மணி நேரம் · Facebook for Android ·
நிலவுடைமை கம்யூனிசம் செவ்வணக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக