செவ்வாய், 5 ஜனவரி, 2021

தனிநாடு கோரிக்கை வரதராஜுலு நாயுடு சங்கரன் நாயர் முன்பே அயோத்தி தாசர்



From: aathi tamil <aathi1956@gmail.com>
Date: புத, 14 ஆக., 2019, 10:02
Subject: தனிநாடு கோரிக்கை வரதராஜுலு நாயுடு சங்கரன் நாயர் முன்பே அயோத்தி தாசர்
To: aathi tamil <aathi1956@gmail.com>



கந்தசாமி அதியமான்
தமிழருக்குத் தனிநாடு வேண்டும் என்று குரல் எழுப்பிய சங்கரன் நாயரும், வரதராசுலு நாயுடுவும்!
தமிழர்கள் ஒரு நாடாக உருப்பெற வேண்டுமென்னும் குரல் முதன்முதலில் எழுந்ததே தமிழரல்லாத சிலரிடம்தான் என்பதும் ஒரு புதிர்தான்! தமிழர் எதிர்ப்பையும் தெலுங்குதேசிய இனச் சார்பையும் மூடிமறைத்துக்கொண்டு பிராமணர் அல்லாதோர் ஒற்றுமை என்று புறத்தே பேசிவந்த நயன்மைக்கட்சியோ, சென்னை மாகாணத்திற்கு இந்திய அரசுக்குள்ளேயே மாநிலத் தன்னாட்சி மட்டுமே தந்தால் போதுமென்று கூறத் தொடங்கியது.
ஆனால், இப்பிராமனர் அல்லாதோர் இயக்கத்துடன் அவ்வளவு தொடர்பில்லாத பிராமணரல்லாத மலையாளியான சி.சங்கரன் நாயர் என்பவர்தான் தமிழர் யாவரும் ஒரு "தனிநாடாக" ( Separate Nation) இருப்பதை முதன்முதலில் வெளிப்படுத்தினார் என்பதும் இன்னொரு வரலாற்றுப் புதிராகும்! தில்லியில் கொழுவிருந்த மாநிலங்களின் மன்றத்தில்( Council of States) 1926 மார்ச் 15 அன்று பேசிய சி.சங்கரன் நாயர்:
" தமிழ்ப்பேசும் மரபினத்தவர் வாழும் பத்து மாவட்டங்களை முழுமையான தன்னாட்சியைக்கொண்ட ஒரு மாநிலமாகக் கட்டமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய அரசு மாட்சிமை தங்கிய ( ஆங்கிலேயப்) பேரரசரின் அரசுக்கு அறிவுரைக்கவேண்டும்" என்று சொன்னார். அத்துடன்,
" இந்தியாவில் அடங்கிய வேறொரு தேசத்திலுள்ள அளவுக்குத் ' தமிழ்த் தேசம் ' அறிவாண்மையுடையது" என்றும் அடித்துக் கூறினார்.
சங்கரன் நாயருக்கு அடுத்து, டாக்டர்.பி.வரதராசுலு நாயுடு, 1926 அக்டோபர் 09 அன்று ' ஒன்றியத் தமிழ் இந்திய நாட்டைத் தோற்றுவிக்கவும் வளர்க்கவும் ' ஓர் அமைப்பைத் தொடங்கினார். ஆயினும், சங்கரன் நாயரும் வரதராசுலு நாயுடுவும் "தமிழருக்குத் தனிநாடு" வேண்டும் என்று எழுப்பிய குரலை யாரும் பொருட்படுத்தவில்லை.
இந்தியத்தேசியத்தில் வீழ்ந்துகிடந்த திரு.வி.கலியாணசுந்தரனார், 1920 சூலையில் தேசபக்தன் ஏட்டை விட்டு, நவசக்தி ஏட்டைத் தொடங்கினார். அப்போது அவர் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றெல்லாம் கூடுதலாக எழுதத் தொடங்கினார். இந்தப்போக்கு அவருடைய ' இந்தியத்தேசியத்தையே கருவறுக்கவல்ல எதிர்நீச்சலாக இருந்தது அவருக்கே புலப்படாதது ஒரு புதிர்தான். அந்தத் தமிழ்த்தேசிய உணர்ச்சியை ஆற்றுப்படுத்தித் தமிழருக்குத் தனி நாட்டுரிமை வேண்டுமென்றோ, தமிழர் ஒரு நாடாக வேண்டுமென்றோ, இயக்கவழியில் நெறிப்படுத்திய போங்கு திரு.வி.க. விடம் இருக்கவில்லை.
தென்னிந்தியச் சிவனியக் கொள்கையின் வழியாக வந்த கருத்துக்களே இவருடைய தமிழ் உணர்வுக்கு ஆற்றுக்கால் அமைத்துக் கொடுத்தன. அச் சிவனியக் கொள்கையின் வழியில் வந்த மறைமலையடிகள், தனித்தமிழை ஓர் இயக்கமாக்கினார். இந்தி எதிர்ப்புக்கு ஊக்கம் தந்தார். இராசாசி கொணர்ந்த இந்தித் திணிப்பை 1948 ஆம் ஆண்டில் சோமசுந்தரப் பாரதியாரும்கூட எதிர்த்தார். இவையாவும், தெளிவான தமிழரின விடுதலைக்குக் கருத்தியலாக மலரவில்லை.
மு.பெ.பாஸ்கரத்தேவர்,
மாநில அமைப்புச் செயலாளர்,
தமிழர் முன்னேற்றக் கழகம்.
( அறிஞர்.குணா எழுதிய தமிழின மீட்சி)
16 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
Kannan Mahalingam மற்றும் 18 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்


Aathimoola Perumal Prakash
1912 லேயே இவர்களின் முன்னோடி அயோத்தி தாசர் தனிநாடு கேட்டுள்ளார் http://vaettoli.blogspo
t.com/2014/07/blog-post_18.html?m=0
அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்


Aathimoola Perumal Prakash
இவர்கள் ஆங்கிலேய அடிமைகள்!
சுதந்திரம் வேண்டாம் என்பதே இவர்களது பிரதான கொள்கை.

அப்போது சுதந்திரம் கொடுப்பதை தள்ளிப்போட வெள்ளைக்காரன் எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்துள்ளனர்.

பறையர் தெலுங்கர் மலையாளி தனித்தமிழ்நாடு ஜஸ்டிஸ் திராவிடம் வந்தேறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக