செவ்வாய், 5 ஜனவரி, 2021

தொல்லியல்துறை வேலைவாய்ப்பு வடயிந்தியர் ஆக்கிரமிப்பு பட்டியல் அகழ்வாராய்ச்சி அகழ்வாய்வு குளறுபடி

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 12 ஆக., 2019, பிற்பகல் 5:42
பெறுநர்: எனக்கு
Paari Saalan
கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் தமிழையும், தமிழர் வரலாற்றையும் அழிக்கும் இந்துத்வம் தமிழக வேலைவாய்ப்புகளில் வடவர்களைப் புகுத்தி நம் வேலைகளைப் பறிப்பது பொருளாதார இழப்பாக மட்டுமே இருக்கும். ( நீண்ட நோக்கில் அதுவும் ஒரு இன அழிப்பே).
ஆனால் தமிழக தொல்லியல் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய இடத்திலும் வடவர்களைப் புகுத்துவது தமிழர் வரலாற்றையே அழிப்பதாகும். ஏற்கெனவே அழித்தும், திரித்தும் எழுதப்பட்ட தமிழர் வரலாற்றை பல்வேறு சிரமங்களுக்கிடையில், நெடும் போராட்டங்களுக்கிடையில் மீட்டெடுத்து தமிழே தொன்மையான மொழி, தமிழரே மாந்த இனத்தில் முதல்குடி என நிரூபித்து வரும் நேரத்தில் அனைத்தையும் ஒழித்துக் கட்டவே தொல்லியியல் துறையில் வடவர் திணிப்பு.
ஒன்றுபட்டு எதிர்ப்போம்.
(படம்: நன்றி Ancient Tamil Civilisation)

செய்தி: தினகரன்

மத்திய அரசின் பிற துறைகளை போல் தொல்லியல்துறையில் ஊடுருவும் வடமாநிலத்தவர்கள்: விரட்டியடிக்கப்படும் தமிழக பணியாளர்கள்
வேலூர்: மத்திய தொல்லியல்துறையில் பல்நோக்கு பணியாளர்கள் என்ற பெயரில் வடமாநில இளைஞர்களை பணியமர்த்தும் போக்கு தொடரும் நிலையில், 20 ஆண்டுகளாக பணியாற்றும் தொழிலாளர்களை ஒப்பந்த பணியாளர் என்று கூறி விரட்டியடிக்கும் போக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1861ம் ஆண்டு இந்தியாவில் நிறைந்துள்ள தொன்மை சின்னங்களை பாதுகாக்கும் வகையில் ஆங்கிலேயரால் தொல்லியல்துறை ஏற்படுத்தப்பட்டது. இத்துறையால் வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. டெல்லியை தலைமையிடமாக கொண்டு தொல்லியல்துறை நாடு முழுவதும் 29 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை வட்டத்தில் சென்னை, செஞ்சி, காஞ்சிபுரம், மாமல்லபுரம், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருமயம், வேலூர் ஆகிய துணை வட்டங்கள் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு துணை வட்டத்திலும் 10க்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொல்லியல்துறையின் கிளாஸ்4 என்ற பணியாளர்களால் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு சென்னை வட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் வரை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அந்தந்த நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதுடன், அதன் தூய்மை, சுற்றுலா பயணிகளுக்கு தொன்மை சின்னங்கள் தொடர்பான வரலாற்று தகவல்களை தெரிவித்தல் என பல பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் 32 தினப்படியாக வழங்கப்பட்டது. இது படிப்படியாக ₹500 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசின் இதர துறைகளை போன்றே தொல்லியல்துறையிலும் வடமாநிலத்தவர்களை நிரப்பும் வேலையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக முதலில் தொல்லியல் துறையில் அவுட்சோர்சிங் நடைமுறையை கொண்டு வந்தது.
அதன்படி அவர்களுக்கு ₹250 வரை தினசரி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தங்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும். முறையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் தொல்லியல்துறையின் இந்த நடவடிக்கை பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து வேலூர் உட்பட சில வட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நடந்து வருகிறது. வழக்கு தொடர்ந்தவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கிளாஸ்4 பணியாளர் என்ற நிலையில் எம்டிஎஸ் என்ற ‘மல்டி பர்பஸ் டாஸ்கிங் ஸ்டாப்’ என்ற பல்நோக்கு பணியாளர் என்ற போர்வையில் தொல்லியல்துறையின் டெல்லி தலைமையகத்தில் பணியாணை வழங்கி அவர்கள் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது தொல்லியல்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளை மிரட்டும் புதிய பணியாளர்கள்
டெல்லியில் இருந்து பணியாணை பெற்று வந்தவர்கள் இங்குள்ள நினைவுச்சின்னங்கள் குறித்து ஏதும் அறியாதது மட்டுமின்றி, தாங்கள் பணியாற்ற வேண்டிய இடத்துக்கும் செல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவர்களை இங்குள்ள அதிகாரிகளும் கேள்வி கேட்க முடியாத சூழல் உள்ளதாகவும், அப்படியே கேட்டாலும், அவர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் என்றால் சென்னை சர்க்கிளில் இவ்வாறு நியமனம் பெற்று வந்த ஒரு சிலர் வேலையை விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.
More தமிழகம்
Copyright © Dinakaran.
All rights reserved. Created by
Readwhere CMS முக்கிய செய்தி அரசியல்
03:42 am Aug 07, 2019 | dotcom@dinakaran.com

பழமை கல்வெட்டு சாந்தினி ஹிந்தியா ஹிந்தியர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக