புதன், 6 ஜனவரி, 2021

குஜராத் வெளிமாநிலத்தார் மீது கலவரம் 2018

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 16 செப்., 2019, பிற்பகல் 3:41
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
குஜராத்தில் சென்ற வருடம் (28-செப்டம்பர்-2018) ஒரு 14 வயது பெண் குழந்தை வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அடுத்த நாள், இந்த வன்புணர்ச்சி கொலையை செய்தவர் என்று # பிஹாரை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் "இந்தி தொழிலாளர்களுக்கு" எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் தகவல்கள் பரப்பப்பட்டன.
கொலை செய்யப்பட்ட குழந்தையின்
# தக்கூர் (Thakor) # சாதியினர் ,
# அக்டோபர்_2ம் தேதி முதல் (காந்தி பிறந்தநாளாம் !!!) குஜராத்தில் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார்கள்....
வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக,
பிஹார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான "இந்தி தொழிலாளர்கள்" குஜராத்தை விட்டு வெளியேறினார்கள்...
அக்டோபர் 8ம் தேதிவரை வன்முறை தொடர்ந்தது. எட்டு மாவட்டங்கள் வன்முறையால் செயலிழந்து முடங்கியது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று மொத்தம் 431 பேர் கைது செய்யப்பட்டனர்...
# இந்தி ????
இதுமாதிரி தமிழ்நாட்டில் நடந்தால் என்ன சொல்வார்கள்?
இங்குள்ள பாஜக & காங்கிரசு தேசிய கட்சியினர் "தமிழர்கள் தேச விரோதிகள்" என்று சொல்வார்கள்....

குஜராத்தி தேசியவாதம் இனப்பற்று இனவெறி தாக்குதல் பீகாரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக