புதன், 6 ஜனவரி, 2021

அல்லா பல மதங்கள் படைத்து மதமாற்றம் செய்யத்தூண்டி முஸ்லிம் களை சோதிக்கிறான் குரான் வசனம்

 

aathi tamil aathi1956@gmail.com

புத., 4 செப்., 2019, பிற்பகல் 5:08
பெறுநர்: எனக்கு
5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. 
எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
-----
 விளக்கம்: அதாவது குரான் கூறும் சட்டப்படி நீ (நபி) தீர்ப்பு சொல்லவேண்டும்.
 மதம் மாறாதவர் கூறுவதற்கு செவிசாய்க்க கூடாது.
 பல மதங்களைப் பின்பற்றும் கூட்டங்களை அல்லா உருவாக்கி சோதனை வைக்கிறான்.
 அதில் யார் இஸ்லாத்தின் பக்கம் முந்திக்கொண்டு மதம் மாறுகிறார்களோ அவரே சோதனையில் தேறியவர்
------------------------

5:49 இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
------
இதில் குரான் சட்டம் என்பது இஸ்லாமிய மதம் என்றே பொருள்படும்.
 அல்லா பிடிக்க நினைக்கிறான் என்பது இஸ்லாத்துக்கு ஆள்பிடிப்பது.
 பாவிகள் பெரும்பான்மை என்பது பிற மதத்தினர் பெரும்பான்மையாக இருப்பதை குறிக்கிறது.
 பாவிகள் என்பதற்கான  இன்னொரு வரையறை மேற்கண்ட இரண்டு வசனங்களுக்கு முந்தைய வசனத்தில் உள்ளது.
----------------------
 

5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.

இங்கே தீர்ப்பு என்பது பிறரை மதமாற்றம் செய்வது அல்லது அதற்கு பதிலாக ஜிஸ்யா வரி வாங்குவது அல்லது வரி தாராத தண்டனை வழங்குவது ஆகும்.
பாவிகள் என்போர் இஸ்லாத்தை தழுவாதவர் அல்லது தழுவியபிறகு பிறரை மதம் மாற்ற முயலாதவர்.


மதவெறி மதம் இஸ்லாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக