திங்கள், 10 பிப்ரவரி, 2020

ஆறு கடல் கலப்பது முக்கியம் திருக்குறள் அறிவியல் உப்புத்தன்மை ph குறையும் திருவள்ளுவர் மழை

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:26
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் ." - (குறள்)
"காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறதே, என்ன செய்வது ஐயா" கேட்டால் சிரிக்கிறான் வள்ளுவன். "போ.. போய் வேறு வேலை இருந்தால் பார்" என்கிறான் சிறு சினத்தோடு.
விரிவாகப் படிக்க
நெடுங்கடல் நீர்மை:--
வானமலையில் பெருமழை. குடகிலிருந்து குணக்கடல் நோக்கி ஆர்ப்பரித்து நடக்கிறாள் காவிரி. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ள அரசு அறிவுறுத்துகிறது. பல்லுயிர் செழிக்க நடக்கும் அவளைப் பார்த்து உள்ளம் மகிழ்கிறது. அவள் போகும் பாதையெங்கும் வாழும் மக்கள் கூட்டம். ஆனால், மற்றொரு கூட்டம் "ஐயோ கடலில் வீணாகக் கலக்கிறதே காவிரி நீர்" என்று கத்துகிறது.
"ஐயனே, எல்லாவற்றையும் நீர் சொல்லி வைத்திருப்பதாய் நினைக்கிறோம். இதற்கென்னதான் தீர்வு? ஏதேனும் சொல்வீரோ?" என்று பேராசானைக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்ட
ே "இயற்கை நிகழ்வுக்குத் தீர்வா? இயலைச் சொல்லியிருக்கிறேன், போய்ப் பாருங்கள்" என்றார். பார்த்தேன். அடடா!!
"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் ."
என்று ஒரு குறளை எழுதி வைத்திருக்கிறார். அதற்கு உரைகளும் கண்டிருக்கிறார்கள்.
மணக்குடவர் உரை : நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின்.
தடிந்து என்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.
பரிமேலழகர் உரை : நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.
தொல்லுரையாசிரியர்கள் பலரும் மழை பெய்யாவிடில் கடல் தன் தன்மையில் குறையும் என்று சொல்லியிருக்கிறார்கள். மணக்குடவர் "நிலம் மட்டுமல்ல, கடலும்" என்று மிக அழுத்தமாகச் சொல்கிறார்.
மணக்குடவர் உரையில் இன்னொரு வியப்பும் காத்திருந்தது எனக்கு. அவர் உரைதான் குறளுக்கு முதல் உரை என்றுதான் படித்திருந்தேன். ஆனா, அவரோ " தடிந்து என்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர் ." என்று கூறுவதன் மூலம் அவருக்கு முன்பே குறளுக்கு உரை இருந்தச் செய்தியைச் சொல்கிறார்.
சரி. தண்ணென்றக் காவிரியோடு விண்தொடும் இந்தக் குறள் சுமந்து நாமும் அவள் போக்கில் நடந்து போவோமா?
"நெடுங்கடலும்" என்று மிகப்பெரும் சொல்லாட்சியோடு தொடங்குகிறது குறள். கடல் என்றாலே பெரிது தான். ஆனால் இயல்பின் பேருண்மை ஒன்றைச் சொல்ல நினைத்த ஆசான் "நெடுங்கடல்" என்கிறார். அதோடு நிற்காமல் "உம்" விகுதியை வேறு சேர்த்துவிடுகிறார். பெரிய கடல்தானே அதிலே கொஞ்சம் குப்பை போட்டா என்ன ஆகப்போகிறது? என்பன போன்றக் கேள்விகளுக்கு அன்றே விடையிறுத்திருக்கிறார். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் தன்மை வேறுபடும் வாய்ப்புகள் உண்டென்பது தமிழர்தம் பல்லாயிரமாண்டுகால மரபறிவு.
"தன்னீர்மை" அடுத்த சொல் இன்னும் வியப்பளிக்கும். இன்றைய அறிவியல் செய்தியென நாம் நினைக்கும் ஒன்று பற்றிய அன்றைய அறிவின் வெளிப்பாடு இந்தச் சொல். பொதுவாக நீர்மங்களின் அமில, காரத் தன்மையை இன்று PH என்று அளவிடுகிறோம். நல்ல நீரின் PH 7 என எடுத்துக்கொள்ளப்பட்டு மற்றைய நீர்மங்களின் PH அளவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அதன்படி கடல் நீரின் PH மதிப்பு 7.4 முதல் 8.3 வரை இருக்கும். இது அதிகமானால் கடலுக்கு ஆபத்து. அதாவது கடல்வாழ் உயிர்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகி அழிந்து மடியும். இந்த மாறுபாடுகள் நிகழ்வது கடலில் ஆறுகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும் உப்பு மற்றும் தனிமங்களால் தான். அதுமட்டுமா இவ்வளவு உப்புச் சுவைக்குக் காரணம்? இல்லை.
வேறு இரண்டு காரணங்கள் கடலில் நிகழ்கின்றன. கடலுக்கு அடியில் உள்ள புவி மேலோட்டிலிருக்கும் வெடிப்புகள் வழியாக உள்ளே செல்லும் கடல் நீர் அங்கே சூடாகி அங்குள்ள தனிமகளைச் சேர்த்துக் கொண்டு மறுபடியும் வெந்நீர் ஊற்றுகள் வழியாக மீண்டும் கடலில் சேருகிறது. இது மட்டுமல்ல கடலுக்குள் இருக்கும் எரிமலைகள் வெளியிடும் சூடான பாறைகளின் வேதிப்பொருட்களும் கடலில் கலக்கின்றன. மேலும் காற்றின் வழியாகவும் நிலத்திலிருந்து துகழ்கள் கடலில் சேருகின்றன. இப்படிச் சேரும் உப்புகள் எங்கே செல்கின்றன? கடல் எப்படி சீராக இருக்கிறது?
பல வகை உப்புகள் கடல்வாழ் உயிரிகளால் உறிஞ்சப்படுகின்றன. காட்டாக, பவழ பாலிப்புகள், மெல்லுடலிகள், ஓட்டுடலிகள் ஆகியவை உப்பிலுள்ள கால்சியத்தை உட்கொள்கின்றன; இதை உபயோகித்து தங்கள் ஓடுகளையும் எலும்புக்கூடுகளையும் அவை உருவாக்குகின்றனகைதுபோலவே மற்றைய உயிர்களும் உப்புகளை எடுத்துக் கொள்கின்றன. இப்படியே ஒரு சுழற்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆறுகள் நன்னீரைக் கொண்டு கடலில் சேர்க்காவிட்டால் உப்புத்தன்மை அதிகமாகிவிடும். இதுபோலவே அமிலத்தன்மையும். நாம் வளர்ச்சி என்ற பெயரில் வெளியிடும் கரியமிலவளி கடலில் அமிலத்தன்மையை அதிகரித்துகொண்டே போகிறது. இது புவிமேலோட்டு நகர்வுகளை வேகப்படுத்தக் கூடும் என்று இன்றைய அறிவியலாளர்கள் எண்ணுகிறார்கள்.
இந்நிலையில் வள்ளுவர் காலத்தைவிட இப்பொழுது ஆறுகள் கடலில் கலக்கவேண்டியது இருமடங்கு கட்டாயமாகிறது.
அமிலமா, காரமா என்ற ஐயப்பாடு இல்லை ஆசானுக்கு. அவர் "தன்னீர்மை" என்றே குறிக்கிறார். நீர்மைதன்மை
"குன்றும்" என்கிறார். எப்பொழுது"
"தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் ."
எழிலி என்றால் மேகம். தடித்து என்பதற்கு திரளுதல், மின்னல் என இரு பொருட்களையும் சொல்கிறது செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி. எனில் திரண்டெழுந்த மின்னலடிக்கிற மேகம் என்று பொருளாகிறது. "நல்குதல்" எனில் பெருங்கொடை. "தடிந்தெழிலி" யால் தான் கடலில் நீர்கொண்டு சேர்க்கும் பெருங்கொடையாகியப் பெருமழையைத் தரமுடியும். சிறுமேகங்கள் பொழிந்தால் நிலதோடு மழை நின்றுவிடும். நிலத்தின் உப்புகளை கடலில் சேர்க்க இயலாது போகும். "தடிந்தெழிலி தான் நல்குவது" வள்ளுவர் சொல்லாளுமைக்கு இன்னொரு சான்று.
பெருமழை பெய்து ஆறுகள் வழியாக உப்பும் நீரும் கடலில் கலக்காவிடின் கடலில் நீர்மை குன்றிவிடும்.
அடர்த்தியல்ல நீர்மை குறையும் என்கிறார். நீர்மை குறைந்தால் அடர்வு அதிகமாகும். உயிர்கள் வாழ்வு சிக்கலாகும். இது நீரியல் சுழற்சி பற்றி அறிந்திருந்த அறிவு மரபின் தொடர் வெளிப்பாடே. உலகின் உயிர் சுழற்சிக்கு கடல் முக்கிய பங்காற்றுகிறது. கடலுக்கு மழை நீரையும் உப்பையும் கொண்டு சேர்க்கிற பொறுப்பு ஆறுகளுக்கு இருக்கிறது.
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செங்கடல் * வணிகத்தில் சிறந்திருந்த ஒரு மரபின் தொடர்ச்சியில், பல்லுயிர் ஓம்புதல் அறிந்திருந்த அறிவு மரபில் தோன்றிய வள்ளுவர் இதைச் சொல்லியதில் வியப்பொன்றுமில்
லையே.
போய்வா மகளே. கடலில் கலந்து , மழையென குடகில் பிறந்து மறுபடி வா. நிலத்திலும்,கடலிலும் அடுத்த தலைமுறை காத்திருக்கிறது உனக்காக.
---------------------------------------------------------------------------
--------
*செங்கடல் - உப்புத் தன்மை அதிகமான ஒரு கடல். இங்கே தமிழர்கள் கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டதை பெரிபுளூசு தன் பயணக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். வேறுபட்ட கடல் நீர்மைத் தன்மைகளைத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
***மாதேவன் பத்மநாபன்***
ஆறுகள் ஏன் கடலில் கலக்க வேண்டும்..?
=========================================
ஆற்றில் நீர் மட்டும் செல்வதில்லை நீருடன் மணல் மற்றும் வண்டலை (sediments) யும் எடுத்து செல்கிறது. இந்த வண்டல் கழிமுகம் (delta) மற்றும் கடலை அடைய வேண்டும். இலையெனில் உயந்துவரும் கடல் மட்டத்தால் கடலோரப்பகுதிகள், கிராமங்கள், அலையாத்தி காடுகள், கடற்கரைகள் கடலில் முழ்கிவிடும்.
ஆறுகள், வண்டல் & மணல் (sediments)யை கழிமுகத்திற்கு கொண்டு வராவிட்டால் புதிய நிலப்பரப்பு உருவாகாது. அணையில் தடுக்கப்படும் 100 கன கிலோ மீட்டர் வண்டல்/ மணல் ஆறுகள் டெல்டா பகுதியில் உருவாக்கும் 1000 சதுர கிலோ மீட்டர் நிலத்திற்கு சமம் (thickness 10m).
ஆறுகள் உருவாக்கும் நிலப்பகுதி உயர்ந்து வரும் கடல் மட்டத்தை சமன் செய்து கடலோரப்பகுதிகளை காப்பாற்றும். மேலும் கடல் நீர் நிலத்தடி நீருடன் கலப்பதை தடுக்கும். ஆறுகளால் கழிமுகப் பகுதியில் உருவாகும் வண்டல் நிலப்பகுதி (flood plain) மிகவும் வளமானது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் திருச்சி அருகே இருந்தது. எந்த தடையும்அணையும் இல்லாத போது பிரம்மபுத்திராவை விட வலிமையான காவிரியின் வண்டல் மண் மூலம் உருவாக்கிய நிலப்பகுதி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்.
காவிரி கடலோர கழிமுகப் பகுதிக்கு நீரை கொண்டு வருவது அவசியம். இல்லையெனில் கடல் நீர், நிலத்தடி நீருடன் கலந்து நிலத்தடி நீரை உப்பாகிவிடும். கடலோரப்பகுதியில் முக்கியமாக நாகை, திருவாருரில் நீர் உப்பானதற்கு காரணம் குறைவான ஆற்று நீர் வரத்து & கடல் நீர் உட்புகுதல். ஆற்றின் கழிமுகப் பகுதிகளில், கடல் & ஆறுகள் கலக்கும் இடத்தில் வாழும் மீன்கள், நண்டுகள் போன்ற உயிரினங்களுக்கு, அலையாத்தி காடுகளில் உள்ள சில தாவர வகைகளுக்கு ஆறுகள் மூலம் கிடைக்கும் நன்னீர் மிகவும் அவசியம்.
கடல்வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியின் அடிப்படை பைட்டோபிளாங்டான் (பாசி)க்கு ஊட்டச்சத்து ஆற்று நீர் கொண்டுவரும் வண்டலில் இருந்து கிடைக்கிறது. பைட்டோபிளாங்டான் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கடல் நீரில் உயிர்வளியை நிலைப்படுத்தும். பைட்டோபிளாங்டான் இல்லை எனில் மற்ற கடல்வாழ் உயிரினங்கள், மீன்கள் இல்லை.
கடைசியாக நாம் உற்பத்தி செய்துள்ள சாயக்கழிவு, சாக்கடை, கழிவுநீரால் அசுத்தமான ஆறுகள், நீர் நிலைகள் சுத்தமாக ஆற்று நீர் கடலில் கலக்க வேண்டும். மாட்டுமூளை சங்கிகளே கடலுக்கே ஆறு செல்லாமல் இருந்தால் ஆறு இறந்துவிடும்..கொஞ்சமாவது சூழலியல் பற்றி அறிவோடு பேசுங்கள்.
பாசன வாய்க்கால்களை தூர்வாராமல் பணம் அடிப்பதில் குறியாக இருக்கிறது அரசு. இந்த நிலையில் அணைகளில் இருந்து நீரை வாய்க்கால்களுக்கு திறந்தால் வயல்கள் மூழ்கிவிடும் என ஆறுகளிலே நீரை ஓடவிட்டு வீணாக்குவதும் அயோக்கியத்தனம். நீர்வழிகளை நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி, அவை நிரம்பியது போக மீதமுள்ள நீர் கடலில் சென்று கலப்பதே பழந்தமிழர் செய்திருந்த நீர் மேலாண்மை ஏற்பாடு அதனை நாம் இழந்தோம்..இன்று நீர் போதாமையால் தவிக்கிறோம்.
# சுந்தர்_வாசுதேவன்
29 ஜூலை, PM 9:04 · F

நாவிதர் மருத்துவர் இசைக்கலைஞர் கொங்கு பார்ப்பனர்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:25
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# பண்டிதர்-மருத்துவர்-நாவிதர்-மங்கலர்....
# தமிழ் மன்னர் ஆட்சிகளில் உயர்நிலையில் வாழ்ந்த மருத்துவர்கள் (நாவிதர்)...
# சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் இவ்வூர்ச் சல்லியக் கிரியை' என்று கி.பி.1016-ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவிசலூர்க் கல்வெட்டு (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 23 ஏ.ஆர்.350 ப.241) வைத்திய குலத்தாருக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுகிறது.
# பிரயோகத்தரையன் என்றால்
# அறுவைச் சிகிச்சை நிபுணன் என்று பொருள். # மங்கலம் என்ற பெயரில் வைத்திய குலத்தாரும் நிலம் பெற்றிருப்பதை இது காட்டுகிறது. மேலும் #மங்கலியன் (பிங்கலநிகண்டு-804), # மங்கலி (அபிதான மணிமாலை-336) என்ற பெயர்கள் இவர்களுக்குரியன என நிகண்டுகள் குறிக்கின்றன. # மங்கலச் சமூகம் என்ற பெயர் இன்றும் இவர்களைக் குறித்து நிற்கிறது.
இவற்றைக் காண, பல்லவர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் வரை ஆயுர்வேதக் கலையும், வடநூற் கலையும், இசைக் கலையும் கற்றுப் படைக்கலத் தொழிலும், அமைச்சர் பணியும் புரிந்தவர்களாக வைத்திய குலத்தார் இருந்தது தெரிகிறது.
# இன்றும் இக் குலத்தார் ( பண்டிதர், மருத்துவர், நாவிதர், மங்கலர் ) இசையிலும் மருத்துவத்திலும் திறன் மிக்கவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. (சுதந்திரத்திற்
காக மேடை நாடகங்கள் மூலம் எழுச்சியூட்டிய தியாகி.விசுவநாத தாஸ் ஒரு மருத்துவ சமுகத்தவர்)
# கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசுக்குப் பின் # விஜயநகரப் பேரரசே தமிழகத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் நிலைபெற்றது என்பது கருதத்தக்கது.
# அதன் பின்னர் இச்சமூகம் குறித்து உயர்வான பதிவுகள் இல்லை. கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு சமூகம் அடுத்த ஆட்சிக்காலத்தே தாழ்ந்ததென வீழ்த்தப்பட்டதற்கான சமூக / அரசியல் காரணங்கள் தனியே ஆராயத் தக்கது.
# நன்றி ... # யுகபாரதி

பேராசிரியர்.தா.மணி
என் நினைவு தெரிந்து
எங்களூரில்,அம்பட்டர் எனப்படும் நாவிதர் குலத்தவரே மருத்துவர்களாகத் திகழ்ந்தனர்.
சிகைதிருத்த வரும்பொழுது,மரு
ந்துப்பெட்டியுடனே வருவர்.
தேவையான சூரணங்களைக்கொடு
த்துச்செல்வர்.
நாடி பிடித்து
மருத்துவம் பார்ப்பதில்
வல்லவர்.இவர் சமூகப்
பெண்களே மகப்பேற்று
நிபுணர்களாவர்.வேலை
நேரம் போக மற்ற நேரங்களில் மூலிகைகளைத்தேடிப்
பக்குவம் செய்வர்.
வீட்டு நிகழ்வுகள் அனைத்திலும் இவர்களுக்கு முக்கிய
இடமுண்டு.
நல்ல பதிவு
பாராட்டுக்கள்!
பிரயோகத்தரையன்-புதிய
தகவல்.

பாண்டிய ராசன் சட்டத்தரணி
ஒரு மிகச் சிறந்த மருத்துவச் சமுதாயத்தின் வரலாற்றைப் படிக்கையில் கண் கலங்குகிறது...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:01 மணிக்கு

பேராசிரியர்.தா.மணி
பழந் தமிழர் கலை,அறிவியல் தொடர்பான எழுத்துக்கள்(நூ
ல்கள்,ஒலைச்சுவடிகள்)இருந்திருக
்கவேண்டும்.
கட்டுமானம்,சிற்பம் மற்றும்
பிற நுண்கலைகள் பற்றிய
நூல்கள் எதுவுமே இல்லையே!எப்படி?
(வடமொழியில் பெயர்த்துவிட்டு மூலங்களை அழித்துவிட்டதாக
,பரிதிமாற்கலைஞர
ே எழுதியுள்ளாரே.)
இலக்கிய,இலக்கண
தொன்னூல்கள் தவிர
எதுவுமே இல்லாதது
நமது இனத்திற்கு நேர்ந்த
பேரவலந்தானே?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:15 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
சென்னை திருவான்மியூரில் உள்ள "தி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஏஷியன் ஸ்டடீஸ்" என்ற ஆய்வு நிறுவனம் ஒன்று தமிழகத்தில் இலட்சக்கணக்கான தமிழ் ஓலைச் சுவடிகள் இன்னமும் படியெடுக்காமல் இருப்பதாகவும், அவற்றில் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள்,நடன நாட்டிய இலக்கண நூல்கள், கட்டிடக் கலை நூற்கள் இருக்கின்றனவாம்...உ.வே.சாமிநாத
ய்யருக்குப் பிறகு இந்த திராவிட ஆட்சிகள் எவையும் இந்த ஓலைச் சுவடிகளை படியெடுக்க முயற்சிக்கவேயில்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:24 மணிக்கு

பேராசிரியர்.தா.மணி
தமிழில் சுவடிகள்
உள்ளனவா?
வடமொழியிலா?
தஞ்சை சரசுவதி மகாலில்
நிறைய வடமொழிச் சுவடிகள் இருக்கிற்தாம்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:34 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழும்... சரஸ்வதி மகாலில் மட்டுமல்ல...பல இடங்களில் என்கிறது அந்நிறுவனம்... ஒரு நாள் நேரில் சென்று பார்க்க வேண்டும்
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · செவ்வாய் அன்று PM 10:36 மணிக்கு

பேராசிரியர்.தா.மணி
புதுகை மாவட்டம் முழுதும்
ஓலைச்சுவடிகளைச் சேகரிதேன்.எல்லாம் நிலக்கணக்கு,சொத
்துரிமை.புராணங்க்களாகவே
இருந்தன.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:39 மணிக்குு

பாரத் இரமேஷ்
பிரிவுகளை ஆராய்ந்தாலே பல உண்மைகள் வெளிப்படும் .1 கொங்குநாவிநதர் (கொங்கு மண்டலம் ,சென்னிமலையில் கொடியேற்றுதல் ,சக்கரக்கட்டி இல்லாத திருமணம் இல்லை ,மங்கல வாழ்த்து பாடமல் எந்த திருமணமும் நடப்பது இல்லை)
1 · பிடித்திருக்கிறது ·

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/02/blog-post_10.html?m=0
பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2018/02/blog-post_544.html?m=0
ஓலைச்சுவடி திருடிய பிரெஞ்சு வேதியியல் அறிவியலாளர் மருத்துவம் பாதரசம் புற்றுநோய்

பாரத் இரமேஷ்
இமயம் வரை படையெடுத்து வாதாபி கணபதிக்கு இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்த கடாரம் கொண்டானின் போர் படைத்தளபதி மருத்துவ குலம் .திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் ஒரு மருத்துவர்.

பாண்டிய ராசன் சட்டத்தரணி
ஆமாம்...இவரை அந்தனர். என்பார்கள்... அதாவது மருத்துவர்களுக்கும் அப்போது அந்தனர் பட்டம் இருந்திருக்க வேண்டும்... அல்லது அந்தனரின் இன்னொரு பிரிவாக மருத்துவர்கள் இருந்திருக்க வேண்டும்... அப்போது வர்ணாசிரம சாதிப் படிநிலை இல்லை என்பது நன்றாகத் தெரிகிறது

ஓம் நமசிவாய
பண்டாரத்தார் என்பவர்கள் யார் என பதிவிடவும் .
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · செவ்வாய் அன்று PM 10:58 மணிக்கு
பாரத் இரமேஷ்
பண்டாரம் என்பவர் கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திருமணத்திற்கு சமையல் செய்பவரைத்தான் குறிக்கும்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · செவ்வாய் அன்று PM 11:01 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பண்டாரத்தார்--உவச்சர்... தமிழ் நாடு பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் உள்ளது...பூசகர் சமுகம்...சோழர் கால பள்ளி ஆசிரியர்கள் இவர்களே...இரு நாட்களுக்கு முன்பு பதிவுகள் போட்டேனே!

பாரத் இரமேஷ்
2சோழிய நாவிதர் (கரூர் ,திண்டுக்கல் திருச்சி தேனி)

முரு. சீமான் இராசேசு
எங்கள் அப்பாவின் வழி அம்மாவும் இன்னமும் மருத்துவச்சி என்ற பெயருடன் தான் எங்கள் ஊரில் இருக்கிறார் நான் மருத்துவ குளத்தில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன் ஐம்,(மருத்துவர், நாவிதர், பண்டிதர், மங்களர்,) பட்டங்களை பெற்றதால் அம்பட்டன் என்று அழைக்கப்பட்டார் என்றும் எங்க தாத்தா கூறுவார் எனது தாத்தாவின் பெயர் மாணிக்கம் பண்டிதர் எனது தெருவின் பெயர் மாணிக்க பண்டிதர் திரு நான் வசிக்கும் நகரத்தின் பெயர் மருத்துவர் காலனி பெருமிதம்

பிராமணர் ஆமாத்தியர் ஆமாத்ய சதுர்வேதி மங்கலம் தமிழ்ச்சாதி தொடர்பு அறுவைசிகிச்சை நாவிதர்
 அம்பட்டர் 

நாவிதர் மருத்துவர் ஆமாத்தியர் கருணீகர் தொடர்பு ஆமாத்ய அமைச்சர்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 3:18
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் ஆமாத்திய குல அந்தணர் எனக் குறிப்பிடப்படுக
ிறார். இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.
‘வைத்தியர் ஆயுள்வேதியர் மருத்துவர்
ஆரியர் கடகர் ஆமாத்தியரே’
என்று வைத்தியரைக் குறிப்பிடும் சொற்களை வரிசைப் படுத்தும் அபிதான மணிமாலை என்ற நிகண்டு (செய்யுள் -235).
"ஆயவளம் பதியதனின் ஆமாத்தியரில் அருமறையின்
தூய சிவாகம நெறியின் துறை விளங்க…"
வந்தவர் மணிவாசகர் என்று கூறும் திருவிளையாடற் புராணம் (வாதவூரருக்கு உபதேசித்த படலம்-செய்யுள்4).
'‘மன்னுமிந் நகரிதன்னுள் மானமங்கலத்தார் ஆகுந்
தொன்னெறி முனிவராம் ஆமாத்தியர் தொழுகுலத்து
நன்னெறி விடையிற் போந்தார் நண்கணத் தலைவர் நாமம்
மின்னெறி வாதவூரர் என்றுவந் துதயஞ் செய்தார்’
என்று கூறும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (ஞானோபதேசம்-செ.6.)
இதே குலத்தைச் சேர்ந்தவரெனக் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற மற்றொருவர் பெரியபுராணம் சுட்டும் சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார். பல்லவப் பேரரசன் முதலாம் நரசிம்மவர்மனுக்காகப் படைநடத்தி வாதாபி வென்றவர். இவர் காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு. இவர் கொணர்ந்த வாதாபி கணபதி இவரது சொந்த ஊரான திருச்செங்காட்ட
ங்குடி (குடந்தை-நாகை மார்க்கத்தில் திருமருகல் அருகே) சிவன் கோயிலில் உள்ளது.
‘ஆயுர்வேதக் கலையும் அலகில் வடநூற் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயிற்று… ‘
விளங்கியவர் பரஞ்சோதியார் என்று கூறும் பெரிய புராணம் (சிறுத்தொண்டர்-செய்யுள்3).
"மாமாத்திரரே பிடகர் மருத்துவர் ஆயுள்வேதியர்க் கபிதானம்மே"
என்று ஆயுள்வேதியரை குறிப்படும் சொற்களைக் கூறும் பிங்கல நிகண்டு (செய்யுள் 784).
கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் காலத்தில் அமாத்தியராக (அமாத்தியர்-அமைச்சர்) இருந்தவர்" மாறன் காரி". மதுரகவியார் எனப்படுபவர் இவர். பராந்தகன் ஆணைக்கிணங்க வேள்விக்குடிச் செப்பேடுகளை வெட்டுவித்தவர் இவர் (வைத்ய சிகாமணி மாறன் காரி) என்று அச்செப்பேடும் கூறும் . ஆமாத்திய குல அந்தணரான இவர் மூவேந்த மங்கலப் பேரரையன் எனும் பட்டம் பெற்றவர். மதுரையை அடுத்த ஆனைமலைப் பெருமாள் கோவில் இவர் கட்டுவித்தது. அதில் நரசிங்கப் பெருமாள் திருமேனியை நிறுவியவரும் இவரே.
இதே பாண்டியன் காலத்துச் சீவரமங்கலம் செப்பேட்டில் ஆணத்தியாகக் (தலைமைச் செயலாளர்) குறிப்பிடப்படுபவன் வாத்ய கேய சங்கீதங்களால் மலிவெய்திய வைத்திய குலத்தவனான தீரதரன் மூர்த்தி எயினன் என்கிற வீர மங்கலப் பேரரையன் ஆவான். இவ்விருவரையன்றி சங்கரன் ஸ்ரீதரன், சாத்தன் கணபதி முதலான பலரும் இக்காலத்தில் மங்கலப் பேரரரையன் பட்டம் பெற்ற அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.
வாத்ய கேய சங்கீதமென்பது வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு இசை. மங்கலப் பேரரையன் என்பது அரசியல் தலைவர்களாக இருந்த ஆமாத்திய குல அந்தணர்களில் சிலருக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்டமாகும்.
‘சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் இவ்வூர்ச் சல்லியக் கிரியை’ என்று கி.பி.1016-ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவிசலூர்க் கல்வெட்டு (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 23 ஏ.ஆர்.350 ப.241) வைத்திய குலத்தாருக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுகிறது. பிரயோகத்தரையன் என்றால் அறுவைச் சிகிச்சை நிபுணன் என்று பொருள்.
இவற்றைக் காண, பல்லவர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் வரை ஆயுர்வேதக் கலையும், வடநூற் கலையும், இசைக் கலையும் கற்றுப் படைக்கலத் தொழிலும், அமைச்சர் பணியும் புரிந்த அந்தணர்களாக ஆமாத்ய குலத்தார் இருந்தது தெரிகிறது.
கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசுக்குப் பின் விஜயநகரப் பேரரசே தமிழகத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் நிலைபெற்றது என்பது கருதத்தக்கது. அதன் பின்னர் இச்சமூகம் குறித்து உயர்வான பதிவுகள் இல்லை. கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு சமூகம் அடுத்த ஆட்சிக்காலத்தே தாழ்ந்ததென வீழ்த்தப்பட்டது.
27 ஜூலை, PM 10:23 ·

Srishakthi Srishakthi
(‘சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக
்கும்) -- குறிப்பது அம்பட்டன் என்பது பூவும் நீறும் கொண்டு பூசனை செய்யும் பூசகர்கள் உள்ளிட்டவரை பட்டர்கள் ஏன்று குறிப்பிடுவது வழக்கம். இஃது இன்றுவரை வழக்கத்திலுள்ளது, வாழ்வியல் சடங்குகளை செய்து வைக்க ஐந்து வகை பட்டர்கள் இருந்தனர், ஆவ்வகையில் ஒவகை தொழில் செய்தவரை பட்டர் என்று முற்காலத்தில் அழைத்தனர், ஐந்து பட்டர் = ஐம்பட்டர் = அம்பட்டர்= அம்பட்டன் என்றானது, காலப்போக்கில் பிறர் நம்முடையதைக் கைப்பற்ற அம்பட்டர்கள் அம்மட்டர்களானார்கள்

Mani Pari
அந்தணர்கள் அம்பட்டர் எனப்படும் முடிவெட்டி தாடி மழிப்பவராகவும் பணியாற்றியவார்களா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 10:14 மணிக்கு

Srishakthi Srishakthi
அந்தணர்கள் அம்பட்டர் எனப்படும் முடிவெட்டி தாடி மழிப்பவராகவும் பணியாற்ற வைக்கப்பட்டவர்கள்
இன்றளவிலும் இறுதி சடங்கு மற்றும் சில சடங்குகள் அவர்களின் பங்களிப்புடன் நடைபெறுவது அனைவரும் அறிந்ததே

Logan K Nathan
நீங்கள் நாவிதரைக் குறித்து கேட்கிறீர்கள். அந்தணர்கள் மருத்துவர்களாக இருந்துள்ளனர். மருத்துவ தொழிலின் தன்மை காரணமாக தனித்து ஒதுக்கப்பட்ட இவர்கள் நாவிதர்களுடன் கலந்தனர்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 11:09 மணிக்கு

Mani Pari
நாவிதருடன் அந்தணர்கள் கலந்துவிட்டார்கள் என்பதற்கு சான்று?
நாவிதர் இறுதிச்சடங்கு செய்வது சூத்தீரர்களுக்கு மட்டுமே.
மருத்துவம்செய்பவர்கள் எல்லாம் ஒரே சாதியா? மருத்துவம் ஒரே சாதியினர்ன் செய்தார்கள் என்பதற்கு சான்று உண்டா?
அந்தணர் நாவிதரானர் என்பதற்கு உங்கள் கூற்றுக்கு சான்று?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 12:25 மணிக்கு

Narayanaswamy Raja
அம்- (அழகிய) பட்டர்கள் மருத்துவப்பணி, இசய், இழகுக்கலய், சடங்குகள் நடத்தல் போன்ற பணிகளய்ச் செய்ததுடன் படய்கள் நடத்தி வெற்றி கண்டனர் என்பது புதுச் செய்தி. எனினும் அம்பட்டர் பெற்றிருந்த சிறப்பெல்லாம் பட்டர்களுக்கு விட்டுக்கொடுத்துத் தாழ்வடயந்தது எவ்வாறு ?
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · ஜூலை 28 அன்று PM 5:32 மணிக்கு

Mani Pari
பட்டர் னா? என்ன பொருள்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 6:37 மணிக்கு

Logan K Nathan
பட்டர் என்றால் வடமொழியில் (பாடம்) படித்தவர் என்று பொருள்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 6:39 மணிக்கு

Mani Pari
அப்படியானால் கற்றோர் என்று பொருளா? கற்றோர் எல்லாம் பட்டரா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 6:56 மணிக்கு

Nakinam Sivam
பட்டர் என்பது சூத்திரம் அறிந்த சூத்திரர் அந்தணர் பட்டம் பெற்றவர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 7:30 மணிக்கு

Mani Pari
Nakiran Nakinam Sivam . சூத்திரம் என்று எதை சொல்கின்றீர்கள்?

Santhosh Kumar
அந்தணர்களாக ஆமாத்ய குலத்தார் ??? தற்போது யாரை குறிக்கின்றன?

Logan K Nathan
ஆமாத்ய குலத்தாரை பிராமணர்களாக தற்போது கருதுவதில்லை. இவர்கள் தற்போது காயஸ்தா எனப்படுகின்றனர்.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 1:32 மணிக்கு

Mani Pari
காயஸ்தர் என்பது கன்னடர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 11:54 மணிக்கு

Mani Pari
காயஸ்தர் தமிழகத்தில் இல்லை.கன்னடர் மட்டுமே.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று AM 11:56 மணிக்கு

Logan K Nathan
கருணீகர் காயஸ்தா குலத்தவர்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 12:46 மணிக்கு

SriGanesan Mayakrishnan
கருணீகர் என்றால் கணக்குப் பிள்ளைகளா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 1:16 மணிக்கு

Logan K Nathan
ஆம், ஆங்கிலேயர் காலத்தில் வெறும் அரசு கணக்குப் பிள்ளைகளாக எஞ்சி இருந்தவர்கள்.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:43 மணிக்கு

Mani Pari
கருணீகர் பற்றி இலக்கிம் கல்வெட்டுக்களில் உண்டா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:45 மணிக்கு

SriGanesan Mayakrishnan
கணக்குப் பிள்ளைகள் வேளாளர் பிரிவு என்று நினைத்திருந்துன்.
கணக்குத் தந்தைகள் என்று ஏதாவது பிரிவு உள்ளதா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:45 மணிக்கு

Mani Pari
கருணீகர்தான் கணக்குப்பிள்ளைகள் என்பதற்கு சான்று?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 28 அன்று PM 2:47 மணிக்கு

Logan K Nathan
பிள்ளை என்பது அரசு ஊழியர்களுக்கு இடைக்காலத்தில் ஏற்பட்ட பட்டம். இவர்களே தந்தை குலமாகவும் திகழ்கின்றனர். நீங்கள் கூறுவது போல் இவர்களிலிருந்தும் பல சாதிகள் தோன்றி பிரிந்துள்ளன.

Mani Pari
கருணீகர்+காயஸ்தர்+ஆமாத்தியர்+ந
ாவிதர்+கணக்குப்பிள்ளை+அந்தணர் இந்த சொற்களை சான்றுகள் கொண்டு தொடர்பு படுத்தி சொன்னால் சரி. வெறும் கருத்தாகச்சொன்னால் சரியல்ல.

அம்பட்டர் சாதி ஆமாத்ய பார்ப்பனர் பிராமணர் 

மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் நாயக்கர் கட்டியது அல்ல அரியநாத முதலியார்

aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 2:26
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# அரிய நாத முதலியார்..
# இவர் ஒரு தமிழர். மதுரையை ஆண்ட
# விசுவநாதநாயக்கரின் தளவாய் ஆவார்...( தளவாய் என்றால் படைத்தலைவன் மற்றும் அமைச்சர்).(கிருஷ்ண தேவராயரால் நியமிக்கப்பட்டவர்.மன்னருக்குச் சமமான உரிமை படைத்தவர்.
# மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உள்ளே அமைந்துள்ள # ஆயிரம் கால் மண்டபம் 1569 ஆம் ஆண்டில் அரியநாத முதலியாரால் கட்டப்பட்டதாகும். இன்றும் கூட குதிரையில் கம்பீரமாக அமர்ந்து காட்சியளிக்கும் இவரின் சிலையை இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் காணலாம்...
# இந்த ஆயிரம் கால் மண்டபத்தை
# நாயக்கர் கட்டியதாக பலரைப் போல் நானும் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்..
# திராவிடப் பொய்களை உடைப்போம்

மீனாட்சி அங்கயற்கண்ணி சிற்பம் கலை கோயில் திருப்பணி கட்டுமானம் 

அரசு ஆம்புலன்ஸ் 108 மூலம் தனியார் வசம் போனது பாமக விமர்சனம்


aathi1956 aathi1956@gmail.com

வியா., 2 ஆக., 2018, பிற்பகல் 2:13
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
1056 என்ற அரசு மருத்துவமனை ஆம்புலன்சு சேவையை, உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பெருமுதலாளிகளின் தனியார் ஆம்புலன்சு நிறுவனத்திடம் விற்றதே 108 ஆம்புலன்சு திட்டமாகும்.
வருடம் பல்லாயிரம் கோடிகள் மக்கள் வரிப்பணத்தை, 50 ஆயிரம் கோடி முதலாளியான ஜிவிகே ரெட்டியின் நிறுவனத்துக்கு அளிப்பதே 108 ஆம்புலன்சு திட்டம்.
அரசு மருத்துவர், அரசு மருத்துவமனை, ஆனால் ஆம்புலன்சு சேவை அரசு தரமுடியாது, தனியார் பெருமுதலாளி தருவார் என்றால், பன்னாட்டு பெருமுதலாளிகளின் கூட்டாளியான பார்ப்பன பனியாவும் அதன் தமிழ் கூட்டாளியான அன்புமணியும் யாருக்கானவர்கள்? பாட்டாளிகளுக்கா அல்லது பகாசுர பெருமுதலாளிகளுக்கா?
14 மணி நேரம் · பொது

கவி எழினி படையாச்சி
பாமக உறவுகளின் புரிதலுக்கு சில நல்லதுகளில் மிக பெரிய கார்ப்பரேட் லாபிருக்கு வோய்.....நீங்க இலவசம்னு நினைக்கிற அதையே அரசும் கொடுக்கலாம்..ஆனால் கொடுக்காது......108 வேலைசெய்பவரிடம் கேட்டுப்பாருங்க
...அப்பறம் கொசுறு....காலைஞர் காப்பீட்டு திட்டம்...இப்ப மோடி காப்பீட்டு திட்டம்...அதுல ஊழல் அதுல செலவழிக்கிற பணத்த அரசு மருத்துவ மனைகள தரம் உயர்த்தலாம்னு கூப்பாடு போடுற நாம மத்த விசயத்திலும் யோசிக்கனும் தவறு கார்ப்பரேட் லாபி யாரு பண்ணிணாலும் தவறு தவறுதான்

வீரமணி ஊமதுரை
108 அண்ணனா விட்டாரு.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று அன்று AM 12:34 மணிக்கு

கவி எழினி படையாச்சி
அது ஆந்திர ராஜசேகர ரெட்டிகாரூ கொண்டுவந்த திட்டம்....இந்திய முழுமைக்கும் கொண்டு வந்தது..அன்பு மணி...தட்ஸ் ஆல்


தெலுங்கர் ரெட்டி பா.ம.க அன்புமணி மருத்துவம் ஊழல் கார்ப்பரேட் 

தமிழக இனங்கள் மதங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சாதிகள் உள்ளன

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 31 ஜூலை, 2018, பிற்பகல் 2:09
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 209 ஜாதியினர் # தமிழ் பேசுபவர்கள்.

# தெலுகு மொழியை 70 ஜாதியினர் பேசுகின்றனர்.
 25 ஜாதியினர் # கன்னட மொழிக்காரர்கள்.

 # மலையாளம் பேசுவோர் 21 ஜாதியினர்.

 படக மொழிக்காரர்கள் 4 ஜாதியினர். 
மீதிப்பேர் கொங்கணி, துளு பேசும் ஜாதிக்காரர்கள். 

15 ஜாதிக்காரர்களின் மொழி உருது. 

5 ஜாதியினரின் மொழி குஜராத்தி. 

மராத்தி, மார்வாரி, பஞ்சாபி, சவுராட்டிரா போன்ற பல மொழிக்காரர்கள் 32 ஜாதிக்காரர்களாக உள்ளனர்.
 இப்படிப்
# பிறமொழிபேசும் 155 ஜாதிக்காரர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்!

தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 299 ஜாதிகள் இந்து மதத்தவர்.
 இந்திய நாட்டளவில் இந்துக்கள் 82.14 விழுக்காடு. தமிழ்நாட்டில் இந்துக்கள் 76.35விழுக்காடு. 

கிறித்துவர்கள் 65 ஜாதிகளாகப் பிரிந்திருக்கின்றனர். 

இந்திய அளவில் கிறித்துவர்கள் 7.31 விழுக்காடு.
 தமிழ்நாட்டில் 17.86 விழுக்காடு. 
அதேநேரத்தில் இசுலாமியர்கள் 6.32 விழுக்காடு தமிழ்நாட்டில்! இந்தியாவில் 12.60 விழுக்காடு. 

இந்து முன்னணியினர் கவனத்திற்காக! # முஸ்லிம்களில் 23 ஜாதிகள் உள்ளன.

ஜாதிகூட நேரத்திற்கு நேரம் மாறுகிறதாம்! 
அதிர்ச்சி அடைய வேண்டா! காலையிலும் மாலையிலும் ஒரு ஜாதியாக இருப்பவர்கள் நண்பகல் நேரத்தில் மட்டும் வேறு ஜாதியாக மாறிவிடும் கோலமும் உண்டு! இப்போக்கு பார்ப்பனர்களிடம் உண்டு. திருவாருரில் உள்ள பார்ப்பனர்களிடம் உண்டு... 
# திருவாரூர்ப் பார்ப்பனர்கள், நண்பகலில் ஒருமுறை குளித்துவிட்டுத்தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்கிறார் பேரா. தொ.பரமசிவன். (பண்பாட்டு அசைவுகள்)
#திருவாரூர்ப் பார்ப்பனர்கள்
# மத்தியானப்பறையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்….

census மக்கட்தொகை கண்ணக்கெடுப்பு கணக்கீடு மதம் வந்தேறி பட்டியல் வேற்றினத்தார் சாதிவாரி சதவீதம் 

குமாரகம்பணன் கன்னடர் பலிஜா வன்னியர் தோல்வி விஜயநகர அரசு பரவுதல்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 31 ஜூலை, 2018, பிற்பகல் 2:02
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி

# இராஜ நாராயணச் சம்புவராயன் (வன்னியர்)
# தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் (கி.பி.1339-1363) இராஜ நாராயணச் சம்புவராயன் என்பவர. தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கியது இவரது அரசு. இவர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில் ஒன்றுமான சிறுபாணாற்றுப்படை ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாச்சி எனப்படும் வன்னிய குல சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.

# குமார கம்பணன் (விஜயநகரப் பேரரசு)
குமார கம்பணனே தமிழகத்தைக் கைப்பற்றி விஜய நகரப் பேரரசிற்கு உட்படுத்தியவர். இவரது மனைவியான கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் (வீர கம்பராய சரித்திரம்) என்ற சமற்கிருதக் காப்பியம் குமார கம்பணனின் தமிழகப் படையெடுப்பை விளக்குகிறது. இவர கன்னட பலிஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்.
கி.பி.1362 நவம்பர் மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையை ஒய்சளர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.

# மகா மண்டலேசுவரரும் நாயக்கரும்
மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார். குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரி
த்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை. மகா மண்டலேசுவரர்கள் பேரரசரால் இடமாற்றம் செய்யப்படுவர்.
விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். (இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உற்வுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது.) விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இவ்விதம் பெற்றவர்களே அமர நாயக்கர்கள். அமர நாயக்கர் என்பதற்கு ஆயிரம் காலட்படைத் தலைவர் என்பது பொருள். இவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினை ஆண்டுதோறும் அரசருக்கு வழங்க வேண்டும் இதுவே திறை. மட்டுமின்றி போர்க்காலங்களில் நாயக்கர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள காலட்படை, குதிரைப்படை , யானைகள் முதலானவற்றை அரசருக்கு அளிக்கவேண்டும். நாயக்கர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை.
முற்றிலும் நிலமானிய முறையிலும் இராணுவ முறையிலும் அமைந்திருந்த இவ்வரசுமுறை கிராமக் குடியாட்சிக்கு எவ்வகையிலும் ஏற்றதல்ல. இவர்களது ஆட்சியிலிருந்தே தமிழர்களின் நிலங்கள் இவர்களால் பறிக்கப்பட்டது...
# திராவிடத்திடம் இழந்த தமிழகத்தை மீட்போம்...

போர் வடுகர் நாயக்கர் படையெடுப்பு