சனி, 4 ஆகஸ்ட், 2018

பாலச்சந்திரன் மரணம் பாதிப்பு சென்னை கௌதமி தற்கொலை

aathi1956 aathi1956@gmail.com

மார். 31
பெறுநர்: எனக்கு
கண்ணதாசன் தவிப திருவண்ணாமலை
# சென்னை_கௌதமி :
2013 ம் ஆண்டு, மார்ச் மாதம் 23 ம் நாளில்,
சென்னை எத்திராசு கல்லூரியை சேர்ந்த கௌதமி என்ற மாணவி,
"ஈழக் கொடுரத்துக்கு நீதி கேட்டும்,
பாலச்சந்திரன் படுகொலையை கண்டித்தும்"
தனது உயிரை தூக்குக்கு இறையாக்கினார்.
அவர் வயிற்றுவலியால் இறந்ததாக காவல்துறை வழக்கு பதிந்தது.
ஆனால், கௌதமியின் தாய் சைலசாவோ,
கௌதமிக்கு வயிற்றுவலி வந்ததே இல்லையென ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
# மறத்_தமிழச்சி_கௌதமிக்கு ,
# வீரவணக்கம்...
55 நிமிடங்களுக்கு

2009 தமிழகம் ஈழம் ஒற்றுமை இனப்பற்று பங்கு 

சேரநாடு வடமேற்கு எல்லைகள் வானியாறு honavar வனவாசி banavaasi கீழ்ப்பூவானி kabini - 5

aathi1956 aathi1956@gmail.com

மார். 31
பெறுநர்: எனக்கு
பாலக்காடு கணவாய் வடக்கு வடமலை ஆறுகள் வானி என்று முடியும்
தெற்கு மலை பொருநை என்று முடியும்

தென் மற்றும் வட கன்னட மாவட்டங்களிடையே கிழக்கு மேற்காக எல்லையாக ஓடும் வானியாறு இன்று ஹோனவார் என்ற கடற்கரை பகுதி பெயர்
 ஆறு இன்று சாராவதி என்று ஆகிவிட்டது.

வடமலை தென்முனை தோன்றி பொன்வானி ஆறு இன்று பொன்னானி 

வடமலை தோன்றி மைசூர் க்கு அருகில் ஓடி காவிரி யுடன் கலக்கும் கபினி 50 ஆண்டு  முன்பு கெப்பனி என்றும் அழைக்கப்பட்டது.
 இதன் உண்மையான பெயர் கீழ்ப்பூவானி.

 தமிழகம் ஓடும் பவானி ஆறு முன்பு பூவானி ஆறு 

பனவாசி banavasi என்பது வானவாசி ஆகும்.
 இதை அசோகர் கல்வெட்டு குறித்துள்ளது (L.Rice Mysore Vol. 1 p. 191)

காவிரி நீர்வரத்து கடந்த பத்தாண்டு மிகமோசம் 5 கோடி மக்கள் குடிநீர்




aathi1956 <aathi1956@gmail.com>

மார். 31





பெறுநர்: எனக்கு




Posted Date : 14:11 (29/03/2018)
Last updated : 14:11 (29/03/2018)



தமிழக மக்களுக்கு! காவிரிக் கரையோரம் வசிப்பவனின் மனம் திறந்த மடல்...! #WeWantCMB

நமது நிருபர்




தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில், புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையை ஒட்டியிருக்கிறது எங்கள் ஊர். கல்லணையிலிருந்து கிளம்பும் பெருங்கால்வாய் கிளைபிரிந்து ஒரு சிற்றோடையாக எங்கள் கிராமத்தைக் கடந்து ஓடும். சிற்றோடையாக இருந்தாலும் அதில் நீர் வருங்காலம்தான் எங்களுக்கு வசந்தகாலம். நாவல்மரங்கள் சாலையெல்லாம் கனிகளைத் தூவிக்கொண்டிருக்கும். ஊரைச்சுற்றியிருக்கும் காஞ்சனாங்குண்டு, செங்குண்டு குளங்களுக்கெல்லாம் முறைவைத்து மடைதிறப்பார்கள். குளங்கள் சிறிது சிறிதாக நிறைந்து தளும்புவதே கண்கொள்ளாக்காட்சி. வயற்காடுகளில் உழவுப்பணி துரிதமாகும். ஊத்துப்பாலத்தில் சாக்குப்பைகளைக் கட்டி, துள்ளிவிழும் மீன்களைப் பிடிக்க ஒரு கூட்டம் அலையும். ஊரில், மனதுக்கு இதமான ஓர் ஈர வாசனை படர்ந்திருக்கும். குறிப்பாக, இரவுநேரத்தில் எல்லா வீடுகளிலும் அடுப்பெரியும்.



கடந்த 10 ஆண்டுகளில் அந்த ஈரவாசனை தொலைந்து போனது எங்கள் கிராமத்தில். ஆறு மணிக்கெல்லாம் ஊர் அடங்கி விடுகிறது. கொண்டாட, குதூகலிக்க, அரட்டையடிக்க, விவாதிக்க, ஆலோசிக்க டாஸ்மாக்கைத் தவிர வேறு ஏதுமில்லை.

Advertisement




ஊரில் ஏதேனும் இறப்பு நடந்துவிட்டால், ஆண்கள் யாரும் சட்டை அணிய மாட்டார்கள். வேளாண் வேலைகள் எதுவும் நடக்காது. உறவைப் பறிகொடுத்தவர் சோகத்தோடு அமர்ந்திருக்க, யாராரோ பந்தல் போடுவார்கள். ஊர்த்தொழிலாளிகளுக்கு, கொட்டுக்காரர்களுக்கு ஆள்போகும். சுடுகாட்டில் தகனத்திற்கான ஏற்பாடுகள் தானாக நடக்கும்.

எவரேனும் ஒருவர் கம்பு வெட்டுவார். எவரோ ஒருவர் தேர் கட்டுவார். வண்ணக்காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் இறந்தவரின் உடல் கிடத்தப்படும். இறுதிச்சடங்கு செய்யும் உரிமைக்காரர் தீச்சட்டியோடு முன்நடக்க, வலுவான நான்கைந்து இளைஞர்கள் அத்தேரைத் தோளில் சுமந்து பின் நடப்பார்கள். குவிந்துகிடக்கும் மாலைகளை சிறுவர்கள் பிய்த்து சாலையில் எறிந்தபடி வருவார்கள் சிறுவர்கள். வேட்டு, கொட்டோடு அத்தனை ஆண்களும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று அப்பால் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்து திரும்புவார்கள். பெண்கள் எல்லாம் சோகத்தோடு தங்கள் வீடுகளில் நின்று அந்த இறுதி ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்பார்கள். இறந்த மனிதரின் அருமை பெருமைகளை அலசுவார்கள்.

அண்மையில் ஓர் உறவுக்காரரின் இறப்புக்குச் சென்றிருந்தேன். நைந்து பெயர்ந்த ஒரு ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது. அதற்குள், இறந்து போனவரின் உடல் ஒற்றை மாலையோடு கிடத்தப்படுகிறது. முன்னிருக்கையில் இறுதிச்சடங்கு செய்யவுள்ள உரிமைக்காரர் அமர, ஆம்புலன்ஸ் கிளம்புகிறது. பின்னால் நான்கைந்து பேர் பைக்கில் தொடர்கிறார்கள். பத்திருபது பேர் மயானத்தில் நின்று காரியத்தை முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். அறுபதாண்டு காலம் அந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் இறுதிச்சடங்கு, சிறு சத்தமில்லாமல், வெளியில் தெரியாமல் முடிந்துவிட்டது.

Advertisement






இறுதிச்சடங்கு தொடங்கி குதிரையெடுப்புத் திருவிழா வரை எல்லாமே களையிழந்து விட்டது. காரணம், கிராமத்தில் பிணம் சுமக்கும் திறனுள்ள இளைஞர்கள் இல்லை. பிழைப்பு நாடி சென்னைக்கும் திருப்பூருக்கும் ஈரோட்டுக்கும் போய்விட்டார்கள். ``இந்த நாசமத்த விவசாயம் நம்மோடு போகட்டும்" என்று சாபம்விட்டு, இருந்த நிலத்தை விற்று தங்கள் பிள்ளைகளைத் துபாய்க்கும் மஸ்கட்டுக்கும் அனுப்பிவிட்டார்கள் சிலர். யாருக்கெல்லாம் நகரத்துக் காற்று ஒவ்வாமையோ அவர்கள் மட்டும்தான் இன்னும் கிராமத்தில் ஜீவிக்கிறார்கள்.

திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதியையும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களையும் உள்ளடக்கிய காவிரி டெல்டாவில் 4 லட்சம் விவசாயிகள், 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். வேளாண்மையை விட்டால் வேறு தொழில் தெரியாது இவர்களுக்கு.

ஜூன் மத்தியில் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆகஸ்ட் மத்தியில் குறுவை அறுவடை முடியும். ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில், சம்பாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கும். பொங்கலுக்கு முன்பு அறுவடை தொடங்கிவிடும். இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் பேர் தாளடி பருவத்தில் மூன்றாம் போகம் பயிர் செய்வார்கள். இடையிடையே கிடைத்த இடைவெளியில் கோடைப்பயிர்களாக உளுந்து, கடலை போன்ற தானியங்கள் பயிரிடப்படும். ஆக, வேலைக்கோ, பணத்துக்கோ, உழைப்புக்கோ எக்காலமும் குறையிருக்காது. தீபாவளியையொட்டி குறுவை அறுவடை முடிவதால் பண்டிகை களைகட்டும். பொங்கலுக்குச் சம்பா அறுவடை கைக்கு வந்து விடும். அந்தக் கொண்டாட்டத்துக்கும் குறைவிருக்காது. கிராமங்கள் வண்ணமயமாக இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் குறுவையும் நிறைவாக நடக்கவில்லை. சம்பாவும் நடக்கவில்லை. காரணம், கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட மேட்டூர் அணை முறையான தேதிகளில் திறக்கப்படவில்லை. அதனால் கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் மக்களுக்குத் தீபாவளியும் இல்லை. பொங்கலும் இல்லை. இதைப்பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை.

காவிரிப் பிரச்னை என்பது, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பாசனப் பிரச்னை என்ற அளவில்தான் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் விஷயம் பதிந்துகிடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள்கிற ஆட்சியாளர்களும் அப்படித்தான் கருதியிருக்கிறார்கள். அதனால்தான், அப்பட்டமாக காவிரி விவகாரத்தில் துரோகம் இழைக்கப்படுகிறபோதெல்லாம் ஒட்டுமொத்தமாக தமிழகம் வீதிக்கு வரவில்லை.



காவிரி நீர் என்பது நமக்குக் கர்நாடகம் போடுகிற பிச்சை அல்ல. அது நமது உரிமை. ஒரு நதி உருவாகும் மாநிலத்துக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதைவிட அதிக உரிமை அதன் வடிகால் பகுதிக்கு இருக்கிறது. இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி. ஆனால், கர்நாடகாவும் டெல்லியும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 1974-ல் 378 டிஎம்சியாக இருந்த நம் காவிரி உரிமை, 205 டிஎம்சியாக மாறி, 192 டிஎம்சியாகக் குறைந்து, தற்போது 177.25 டிஎம்சியாக தணிந்துவிட்டது. ஆனால், அதையும் கூட தர மறுக்கிறது கர்நாடகம். காவிரி பங்கீட்டை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உருவாக்கச்சொன்ன காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க மறுக்கிறது மத்திய அரசு. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, பல்வேறு காரணங்களைச் சொல்லி நீதிமன்ற உத்தரவை துச்சமென தூக்கி எறிகிறது மத்திய அரசு. தங்கள் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக காவிரி உரிமையைக் காவுகொடுத்து தலைகவிழ்ந்து நிற்கிறது தமிழக அரசு.

அன்பர்களே... காவிரிப் பிரச்னை என்பது காவிப்படுகை மக்களின் பிரச்னை மட்டுமல்ல... காவிரியில் நமது உரிமை பறிபோனால் பாதிக்கப்படப்போவது தஞ்சையிலும் நாகையிலும் கடலூரிலும் திருவாரூரிலும் திருச்சியிலும் வாழும் வெறும் 2 கோடி வேளாண் மக்கள் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழகமும் தாகத்தில் தவித்துப்போகும். ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரை 5 கோடி பேருக்குக் குடிக்க தண்ணீர் கிடைக்காது. இன்று தமிழகத்தின் 80 சதவிகித மாவட்டங்களுக்குக் குடிநீர் தருவது காவிரிதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் தற்போது உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ள 177.25 டிஎம்சி நீரேனும் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலாண்மை வாரியம் அமையாவிட்டால், வெறும் வடிகால்வாயாக மட்டுமே தமிழகம் இருக்கும். கர்நாடகம் மூழ்கும் நிலை வந்தால் தானாக வழிந்து வரும் நீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைக்கும். சட்டபூர்வமாக நாம் கைவிடப்பட்டுவிடுவோம்.

உலகின் ஆகச்சிறந்த நதிநீர் படுகைகளில் காவிரிப்படுகை முதன்மையானது. மிக வளமான மண். முற்காலச் சோழன் முதல், பிற்கால சாளுக்கிய சோழர்கள் வரை ஒவ்வோர் ஆட்சியாளனும் பார்த்துப் பார்த்து வடித்தெடுத்த நிலப்பரப்பு அது. பத்தடி, இருபதடியில் எல்லாம் தண்ணீர் கொப்பளிக்கும். மாடுகளின் கால்களில் எப்போதும் மஞ்சள் பூத்திருக்கும். காரணம், தினமோர் உழவு. களையெடுக்க, கதிர் அறுக்க, நாற்றுப்பறிக்க என மக்களுக்கு எக்காலமும் வேலை இருக்கும்.

இப்போது, 100 அடி, 200 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கேன் வாட்டர் அதிகம் விற்பனையாகும் பகுதிகளில் காவிரிப்படுகையும் சேர்ந்திருக்கிறது. தமிழகத்திற்கே தண்ணீர் கொடுக்கும் காவிரிப்படுகை, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. மோட்டார் வைத்து விவசாயம் செய்தவர்கள் கூட இப்போது நிலத்தைக் கைவிட்டுவிடுவார்கள். விவசாயத்தை விட்டுத் தள்ளுங்கள்... குடிக்கத் தண்ணீர் வேண்டாமா? கடலோரத்தில் 20 கிலோ மீட்டருக்கு இந்தப் பக்கம் உள்ள நிலத்தடி நீரில் கடல் நீர் புகுந்து விட்டது. உப்பு... உப்பு...



ஊருக்கே சோறுபோட்ட வேளாண் குடிப் பெண்கள் கட்டுமான வேலைகளுக்குச் சித்தாள்களாக போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வாய் குடிநீரையும் குடிக்கும்போதும் ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டாமா? வேதனைப்பட வேண்டாமா? டெல்டாக்காரனை விடுங்கள்... நாளைக்கு வீராணம் வற்றிப்போனால் சென்னைக்குக் குடிநீர் கிடைக்குமா? ராமநாதபுரத்து மக்கள் கடல்நீரைக் குடிக்க முடியுமா? தர்மபுரி மக்களுக்குத் தாகமே எடுக்காதா?

எல்லாப் பூர்வகுடிகளுக்கும் நடப்பதுதான் நண்பர்களே காவிப்படுகையில் வாழும் வேளாண் குடிகளுக்கும் நிகழ்த்தப்படுகிறது. நிலத்துக்குக் கீழேயிருக்கிற எரிவாயுவையும், நிலக்கரியையும் எண்ணெயையும் குறிவைத்து விட்டார்கள். மக்களை அப்புறப்படுத்தினாலே ஒழிய அவற்றைச் சுரண்ட முடியாது. சட்டங்களைப் போட்டு எப்படிப் பழங்குடி மக்களை வனங்களை விட்டு விரட்டி கீழிறக்க முயற்சி செய்தார்களோ, அப்படித்தான் இப்போது காவிரிப்படுகை வாழ் மக்களை வேளாண்மையை விட்டு விரட்ட முயற்சி செய்கிறார்கள். அதற்கு சட்டமெல்லாம் தேவையில்லை. காவிரி போதும். அதுதான் வேளாண்மைக்கு ஜீவாதாரம். அதை மறித்து விட்டால் போதும். தானாகவே நிலம் வறண்டு போகும். மக்கள் தொழில் நாடி வேறு பகுதிகளுக்கு நகர்ந்து விடுவார்கள். அல்லது தற்கொலை செய்து செத்துப்போவார்கள். நிலத்தை அகழ்ந்து, அதன் தொப்புள்கொடி அறுத்து தேவையானதை உறிஞ்சிக்கொள்ளலாம்.

இப்போது 33 கிணறுகளில் 35 லட்சம் கனமீட்டர் எரிவாயுவை உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கிணறு தோண்டலாம். காவிரிப்படுகையில் ரத்தத்தை உறிஞ்சி அடுப்பெரிக்கலாம். தொழிற்சாலைகளில் இரும்பு தயாரிக்கலாம். நிலக்கரி எடுத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சாரம் வழங்கலாம்.

காவிரிப் பிரச்னையை கர்நாடகம் இனப்பிரச்னையாக, தங்கள் மாநிலத்தின் உரிமைப்பிரச்னையாக அணுகுகிறது. இப்போதும் அணுகிக்கொண்டிருக்கிறது. அதுதான் அவர்களது பலம். அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது. நீதிகளைப் பாதிக்கிறது. தமிழகம் அதை சிறு நிலப்பரப்பின் பாசனப்பிரச்னையாகவே அணுகியது. இப்போதும் அணுகுகிறது. காவிரிப் பிரச்னையின் அத்தனை செயல்பாடுகளும் ரகசியமாகவே வைத்திருந்தார்கள் நம் ஆட்சியாளர்கள். மக்கள் அதன் உண்மைத்தன்மையை, வீரியத்தை உணரவேயில்லை. ஒவ்வோர் ஆட்சி மாறும்போதும் தங்கள் விருப்பத்துக்கு வழக்கறிஞர்களை மாற்றினார்கள். தேசியக் கட்சிகளும் சரி, மாநிலக்கட்சிகளும் சரி, இதை ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னையாக அணுகாமல் வெறும் ஓட்டு லாப நட்டங்களை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டதால்தான் இப்போது கையறு நிலையில் நிற்கிறோம்.



காவிரிப்படுகையிலிருந்து சென்னை போன்ற பிற நகரங்களுக்கு வந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கூட தங்கள் பூர்வீக நிலப்பரப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கும் துயரம் புரியவில்லை என்பதுதான் சோகம். அது குறித்துக் கவலைப்படக்கூட நேரமில்லை. காவிரிப்படுகை சுரக்கும் குடிநீரை அருந்துகிற 5 கோடி மக்களுக்கும் இதன் வீரியம் புரியவில்லை. அப்பட்டமாக, மத்திய அரசும் கர்நாடக அரசும் காவிரி உரிமையைப் பறிக்கும்போதும், படிப்படியாக காவிரி மீதான நம் பிடிப்பு நழுவும்போதும், போனால் போகிறதென்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் கூட நிறைவேற்றாமல் புறக்கணிக்கும்போதும் நமக்கென்ன, அது டெல்டா மாவட்டங்களின் பிரச்னை என்று ஒதுங்கியிருப்போமானால்... நிச்சயம் தாகம் நம்மைத் தண்டிக்கும். இதேபோலத்தான், தேனி மாவட்டத்தின் நியூட்ரினோ... தூத்துக்குடியின் ஸ்டெர்லைட், கிழக்கு மாவட்டங்களின் மீத்தேன் அத்தனை பிரச்னைகளும். அவற்றையும் அந்தந்தப் பகுதிகளின் பிரச்னைகளே என நாம் ஒதுங்கி நின்றால்... ஒட்டுமொத்த தமிழகமும் ஒடுங்கிப்போகும் ஒரு நாளில். உடனடியாக களத்திற்கு வரவேண்டிய காலகட்டம் இது.

விவசாயச் சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் கோரிக்கை விடுத்திருப்பதைப் போல, ஏதேனும் ஒரு நாள் குறித்து, தமிழகத்தில் இருக்கிற 32 மாவட்ட மக்களும், தங்கள் கிராமத்தில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் மனிதச்சங்கிலி நடத்துங்கள். குமரி தொடங்கி, திருவள்ளூர் மாவட்டம் வரை, கட்சி மறந்து, சாதி மறந்து, மதம் மறந்து ஒட்டுமொத்தமாகத் தமிழகம் கைகோத்து நிற்கட்டும். அந்த ஒற்றுமையைக் கண்டு கர்நாடகமும் டெல்லியும் நடுங்கட்டும்.

ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நாம் காவிரிப்படுகை மக்களுக்குச் செய்யும் உதவியல்ல. நாம் குடிக்கிற குடிநீருக்காக தங்கள் வாழ்வாதாரத்தையும் விட்டுத்தந்துவிட்டு நிர்கதியாக நிற்கிற வேளாண் மக்களுக்குச் செய்கிற நன்றிக்கடன். அடுத்தவேளை தாகத்துக்குத் தண்ணீரை உறுதி செய்வதற்கான போராட்டம்.

உணர்வோமா... உணர்வோமா?




காவேரி காவிரி நதிநீர் கர்நாடகா கன்னடர் விகடன்

காவிரி இலக்கியம் காவேரி கடிதம்

aathi1956 aathi1956@gmail.com

மார். 31
பெறுநர்: எனக்கு

எப்படி மஞ்சள் நதியால் சீனாவின் ஜிங் வம்சம் அழிந்ததோ அதுபோல எங்கள்  காவிரியால் உங்கள் காவி அரசியலும் வீழும்

கரிகாலன் கவிதை
திறந்த மடல்!

🔥

பிரதமர் மோடி அவர்களே!

காவிரி குறித்து எங்கள் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பரணரும் இளங்கோவும் சீத்தலைச்சாத்தனாரும் பாடியபோது இந்தியா இல்லை, கர்நாடகா இல்லை, கன்னடம் இல்லை,குஜராத் இல்லை, புது டெல்லி இல்லை, காங்கிரஸ் பிஜேபி எந்த எழவுமில்லை. ஆனால் தமிழ் இருந்தது!

தமிழ்ப் பண்பாட்டை நனைத்து காவிரி ஓடியது.காவிரி மீது எங்கள் வீரத் தமிழ்ப் பிள்ளை கரிகாலன் கல்லணை கட்டினானே அது உங்கள் ராமர் பாலம் போல புராணப் புளுகு அல்ல. அப்போதெல்லாம் காவிரியை மேலாண்மை செய்தவன் தமிழன்!

மயிலுக்கு போர்வையைக் கொடுத்த தமிழ் மனமே குடகை இந்தியாவுக்குத் தந்தது. 'ஸ்கீம்' எனும் சொல்லுக்கே நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பவர் நீங்கள். காவிரி எங்கள் உடமை என்பதற்கு எம் சங்கக் கவிகள் எழுதிய உயில்கள்  இருப்பதை அறிவீரோ?

'வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி' தமிழ்ப்
பழங்கவி உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை வரிகள் ஈரத்தோடு தமிழ் இதயங்களை இன்னும் நனைத்தபடிதான் இருக்கிறது!

'கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுருள் போல
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
ஆகம் அடைதந்தோளே' என  தமிழ்க்
காதல் வளர்த்த காவிரி தீரத்துக் கதைகள் அகப்பாடலெங்கும் சாரலை அள்ளித்தெளிக்கிறதே, அறிவீர்களா
மிஸ்டர் மோடி!

'புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல்
மலி நீர் மன்பதை புரக்கும் நல்
நாட்டுப் பொருநன்'
அடடா..ஒரு நதியை தாயின் வற்றாத முலையூற்று என்ற கற்பனையை எந்த மொழியிலாவது  படித்ததுண்டா நீங்கள்?

'பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து
குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய்!
வாழி காவேரி' இந்த சிலப்பதிகார வரிகளுக்கு பொருள் விளக்க   திருச்சிக்கோ புகாருக்கோ அழைத்துச் சென்று வெறும் பாலையாய் கானல் புரளும் காவிரியைக் காட்டினால் எம்பிள்ளைகள் நம்புவார்களா?

'பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை' விண்ணில் கோள்கள் திரிந்தாலும் மண்ணில் நிலைமாறாதவள் எங்கள் குலக்கொடி காவிரி. அய்யோ.. எம் காவிரிக்கரை உழுகுடியின் கண்ணீரில் மணிமேகலை அழிந்தால் ஐம்பெருங்காப்பியம் கொண்ட வளமான தமிழ் என எங்களால் தலைநிமிர்ந்து எவ்வாறு முழங்க முடியும்!

'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என மேவிய ஆறு பல வோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு' பழங்கதையென எண்ணி மறப்போமென்றால் பாரதிவரை தொடர்ந்த உறவன்றோ காவிரி!

அய்யா மோடி அவர்களே!

காவிரியைப் போலவே சீனாவில் ஒரு நதி ஓடியது.சீன மொழியில் ஹெ  (河) என்று அழைக்கப்பட்ட மஞ்சள் ஆறு.
நாங்கள் காவிரியைப் புகழ்வது போலவே சீனர்கள்  சீன நாகரீகத்தின் தொட்டில் என மஞ்சள் நதியைக் கொண்டாடுவார்கள்.

சீனாவின் துயரம் என அழைக்கப்படும் இவ்வாற்றில் ஏற்பட்ட வெள்ளப்
பெருக்கால்  கிபி 11ம் நூற்றாண்டில் 
ஜிங் வம்சம் வீழ்ந்தது.

இன்று எங்கள் காவிரியில் கானல் பாய்கிறது.சோறுடைத்த சோழகுடிகளின் ஏர்முனை துருப்பிடித்துவிட்டது. அம்பானி அதானி நலம்விழையும் ஒரு கார்ப்ரேட் புரோக்கரால் உழுகுடிகளின் கண்ணீரையோ வேர்வையையோ அறியமுடியாதுதான்.

பிஜேபியின் அரசியல் சூதாட்டத்துக்கு காவிரியை அடகு வைக்கத் துணிந்தீர்கள்.
நீதி குறித்த எந்த அறவுணர்வும் உங்களுக்கோ அமித்ஷாவுக்கோ கிடையாது என்பதற்கு நிறைய முன்னுதாரணங்கள் இருப்பதை யாமறிவோம்.

நீங்கள், எடப்பாடியை, ஓபிஎஸ்ஸை,
பொன்னாரை, தமிழிசையை வைத்து தமிழரை எடைபோடுகிறீர்கள். தமிழ் மொழி காக்க, இனம் காக்க தீப்பற்றி வெடித்த எண்ணற்ற முத்துக்குமார்கள் செங்கொடிகள் வாழ்ந்த
வீரத் தமிழ்நிலமிது.

செங்குட்டுவன் கரிகாலன் நெடுஞ்செழியன் ஏந்திய வீரத்தில் தூசுபடிந்துவிடவில்லை.

எப்படி, மஞ்சள் நதியால் ஜிங் வம்சமழிந்ததோ, அப்படி எங்கள் காவிரியால் வீழும்
உங்கள் காவி அரசியல்!

நியூட்ரினோ எதிர்ப்பு நாடகம் காங்கிரஸ் வைகோ திமுக பாஜக கூட்டுக்களவாணி

aathi1956 aathi1956@gmail.com

மார். 31
பெறுநர்: எனக்கு
நியூட்ரினோ ஒரு ஹைகூ பார்வை
==============================
2012யில் நியூட்ரினோக்கு அனுமதிகொடுத்தது காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது திமுக.

2015யில் அனுமதி தந்தது பாஜக அரசு. அந்த பாஜகவோடு கடந்த தேர்தலில் கூட்டணி  போட்டிருந்தார் வைகோ 

 இன்று  வைகோ நியூட்ரினோ  கொடுத்த காங்கிரஸ் திமுகவோடு கூட சேர்ந்து இன்று எதிர்ப்பு நடைபயணம்.

இதெல்லாம் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

#நியூட்ரினோ #bjp #congres #வைைைகோக

மண்ணழிப்பு நாசகார திட்டம் மதிமுக 

இசைப்பிரியா பற்றி

aathi1956 aathi1956@gmail.com

மார். 30
பெறுநர்: எனக்கு
தமிழ் தேசிய தொலைக்காட்சி
தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் இசைப்பிரியாவின் பங்களிப்பும்
1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா ஊடகத் துறையான நிதர்சனப் பிரிவில் சேர்ந்தார். காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு நிகழ்ச்சியை இசைப்பிரியாவே அறிமுகம் செய்து வந்தார்.
அவர் ஓர் இளம் அறிவிப்பாளர். வீடியோ சித்திரங்கள், போர்க்களச் செய்திகள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் போன்றவை அவருக்கு அன்றைய காலத்து ஒளிவீச்சுகளாக அமைந்தன. இசைப்பிரியாவின் பணி அத்தோடு மட்டும் நின்று விடவில்லை. அவர் ஊர் ஊராகச் சென்றார். அந்த ஊர்களில் போடப்படும் தெருக் கூத்துகளிலும் மேடை நாடகங்களிலும் அவருடைய பதிவுகளைத் தடம் பதித்தார்.
விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்றது. பின்னர் அது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணமித்தது. அந்தக் கட்டத்தில் தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இசைப்பிரியா பணியாற்றினார். ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர், தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார். ஆனால், ஆயுதங்களை மட்டும் பிடிக்கவில்லை.
தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ஒளிபரப்பு, மாலை ஏழு முதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே நீடிக்கும். இதில் இசைப்பிரியா ஒவ்வொரு நாளும் செய்திகளை வாசித்தார். நல்ல கணீர் குரல். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு. தெளிவான வழங்குமுறை.
இசைப்பிரியா என்கிற ஓர் அழகான வீணை நொறுங்கி விட்டது. இனிமேல் உலகமே ஒன்று சேர்ந்தாலும், அதன் தாளச் சுருதித் தந்திகளை ஒட்டிப் பார்க்க முடியாது.
இசைப்பிரியாவின் இழப்பானது தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்க
ு மட்டுமல்ல அனைத்து தமிழ் மக்களுக்குமே ஏற்பட்ட பேரிழப்பு. இறுதி யுத்தத்தில் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்ட பின்னர் இசைப்பிரியா படுகொலையின் போது ஏதும் அற்ற ஏதிலிகலாய் நாம் இருந்தோம்.
உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்து 9ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கூட இதற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
இசைப்பிரியாவின் நினைவுடன்
தமிழீழ தேசிய தொலைக்காட்சி
10 மணி நேரம் · பொது

புலிகள் ஊடகம் தொலைக்காட்சி பெண் பெண்ணுரிமை 

தனிமம் பெயர் குறியீடு தமிழ்மொழி யில்

aathi1956 aathi1956@gmail.com

மார். 30
பெறுநர்: எனக்கு
Bala Gopal
தனிமங்களின் அட்டவணை
அணு எண்
தனிமம்
குறியீடு
அணுநிறை
1 நீர்வளி (Hydrogen) நீ (H) 1.00797
2 கதிர்வளி (Helium) க (He) 4.0026
3 கல்லம் (Lithium) கல் (Li) 6.94
4 குருகம் (Beryllium) கு (Be) 9.0122
5 பழுப்பம் (Boron) ப (B) 10.811
6 கரிமம் (Carbon) கரி (C) 12.011
7 வெடிவளி (Nitrogen) வெ (N) 14.0677
8 உயிர்வளி (Oxygen) உ (O) 15.994
9 பைம்மஞ்சள்வளி (Fluorine) பை (F) 18.9984
10 புத்தொளிரி (Neon) பு (Ne) 20.1797
11 வெடிமம் (Sodium) வெடி (Na) 22.9898
12 வெளிமம் (Magnesium) வெளி (Mg) 24.312
13 ஈயம் (Aluminium) ஈம் (Al) 26.98
14 கன்மம் (Silicon ) கன் (Si) 28.086
15 எரிமம் (Phosphorous) எ (P) 30.974
16 கந்தகம் (Sulfur) கக (S) 32.064
17 பாசிகம் (Chlorine) பா (Cl) 35.453
18 மடியன் (Argon ) மடி (Ar ) 39.9
19 சாம்பரம் (Potassium ) சா (K ) 40.1
20 சுதைமம் (Calcium) சு (Ca) 45.0
21 ‘காண்டிமம்’ (Scandium ) கா (Sc ) 44.956
22 கரும்பொன்மம் (Titanium ) கரு (Ti) 47.9
23 வெண்ணாகம் (Vanadium ) வெக(V ) 50.942
24 குருமம் (Chromium ) குரு (Cr ) 51.996
25 மங்கனம் (Manganese ) மங் (Mn ) 54.938
26 இரும்பு (iron) இரு (Fe ) 55.847
27 வண்ணிமம் (Cobalt) வண் ( Co) 58.933
28 வெள்ளையம் (Nickel ) வெய (Ni i ) 58.91
23 செம்பு (Copper ) செ (Cu ) 63.5
30 துத்தநாகம் (Zinc ) து (Z n) 65.4
31 நரைமம் (Gallium ) ந (Ga) 69.72
32 ‘செருமம்’ (Rubidium ) செரு (Rb) 72.59
33 சவ்வீரம் (Arsenic ) ச (As) 74.9
34 மதிமம் (Selenium) நி (Se) 78.96
35 செந்நீர்மம் (Bromine) செநீ (Br) 79.904
36 மறைவளி (Krypton) மறை (Kr) 83.80
37 செவ்வரிமம்(Rubidium) செம் (Rb) 85.47
38 வெண்ணிமம்(Stronium) வெணி(Sr) 87.62
39 கருநரைமம்(Yttrium) கந 88.905
40 வண்மம்(Zirconium) வம(Zr) 91.22
41 அருமிமம்(Niobium) அரு (Nb) 92.906
42 முறிவெள்ளி(Molybdenum) மு(Mo) 95.94
43 செயற்கைத்தனிமம்(Technetium) செய(Te) 97.9072
44 சீர்பொன்(Ruthenium) சீர்(Ru) 101.07
45 திண்ணிமம்(Rhodium) திண்(Rh) 102.90550
46 பொன்னிமம்(Palladium) பொம்(Pd) 106.42
47 வெள்ளி(Silver) வெள்(Ag) 107.8682
48 வெண்ணீலிமம்(Cadmium) வெநீ(Cd) 112.44
49 நீலவரிமம்(Indium) நீவ(In) 114.8182
50 வெள்ளீயம்(Tin) வெஈ(Sn) 118.710
51 நொய்ம்மிமம்(Antimony) நொ(Sb) 121.760
52 ஒளிர்மம்(Tellurium) ஒ(Te) 127.60
53 கருமயிலம்(Iodine) கம(I) 126.90447
54 அயலிமம்(Xenon) அய (Xe) 131.30
55 நீலநீறிமம்(Cesium) நீநீ(Cs) 132.90543
56 மங்கிமம்(Barium) ம(Ba) 137.327
57 ஊக்கிமம்(Lanthanum) ஊ(La) 138.9055
58 நெகிழிமம்(Cerium) நெ(Ce) 140.115
59 வெண்மஞ்சை(Praseodymium) வெம(Pr) 140.90765
60 புதுமஞ்சை(Neodymium) புமNd) 144.24
61 கதிர்மம்(Promethium) கம்(Pm) 144.9127
62 வெண்நரைமம்(Samarium) வெந(Sm) 150.35
63 ‘ஐரோப்பிமம்’ (Europium) ஐ(Eu) 151.965
64 காந்தனிமம்(Gadolinium) காம் (Gd) 157.25
65 விளர்மம்(Terbium) விள(Tb) 158.92534
66 உறிமம்(Dysprosium) உறி(Dy) 162.50
67 ‘ஓல்மிமம்’(Holmium) ஓ(Ho) 164.93032
68 ‘எர்பிமம்’ (Erbium) எர்(Er) 167.26
69 வடமம்(Thulium) வ(Tm 168.93421
70 ‘எட்டர்பிமம்’(Ytterbium) எம் (Yb) 173.04
71 மஞ்சிமம்(Lutetium) மம் (Lu) 174.967
72 ‘ஆஃப்னிமம்’(Hafnium) ஆஃப்(Hf) 178.49
73 வெம்மம்(Tantalum) வெம்(Ta) 180.9479
74 மின்னிழைமம்(Tungsten) மி(W) 183.84
75 அரிமம்(Rhenium) அரி(Re) 186.207
76 விஞ்சிமம்(Osmium) விம்(Os) 190.2
77 உறுதிமம்(Iridium) உறு(Ir) 192.217
78 வன்பொன்(Platinum) வ.பொ.(Pt) 195.08
79 தங்கம்(Gold) த(Au) 196.95654
80 இதள்(Mercury) இத(Hg) 200.59
81 சாம்பிமம்(Thallium) சாம்(Ti) 204.3833
82 காரீயம்(Lead) காரீ(Pb) 207.2
83 நிமிளை(Bismuth) நிமி(Bi) 208.98037
84 மஞ்சளம்(Polonium) மள்(Po) 208.9824
85 நொறுங்கிமம்(Astatine) நொறு(At) 209.9871
86 கதிரம்(Radon) கர(Rn) 222.0176
87 ‘விரெஞ்சிமம்’(Francium) விரெ(Fr) 223.0197
88 கதிரிமம்(Radium) கதி(Ra) 226.0254
89 கதிர்வினைமம்(Actinium) கவி(Ac) 227.0278
90 சுடரிமம்(Thorium) சுட(Th) 232.0381
91 புறக்கதிரம்(Protactinium) புற(Pa) 231.0388
92 விண்ணிமம்(Uranium) விண்(U) 238.0289
93 சேண்மிமம்(Neptunium) சேண்(Np) 237.0482
94 சேணாமம்(Plutonium) சேய்(Pu) 244.0642
95 ‘அமரிக்கம்’(Americium) அமெ(Am) 243.0614
96 ‘கியூரிமம்’(Curium) கியூ(Cm) 247.0703
97 ‘பெரிக்ளிமம்’(Berkelium) பெரி(Bk) 247.0703
98 ‘கலிபோரிமம்’(Californium) கலி(Cf) 251.0796
99 ‘ஐன்சுதீனம்’(Einsteinium) ஐன்(Es) 252.083
100 ‘வெரிமம்’(Fermium) வெர்(Fm) 257.0951
101 ‘மெந்தலீமம்’ (Mendelivium) மெம் (Md) 258.10
102 ‘நோபிளம்’(Nobelium) நோ(No) 259.1009
103 ‘இலாரன்சம்’(Lawrencium) இலா(Lr) 262.11
104 ‘உருத்தரம்’(Rutherfordium) உரு(Rf) 261
3 மணி நேரம் ·

கலைச்சொல் கலைச்சொற்கள் வேதியியல் ரசாயனம்