சனி, 4 ஆகஸ்ட், 2018

இசைப்பிரியா பற்றி

aathi1956 aathi1956@gmail.com

மார். 30
பெறுநர்: எனக்கு
தமிழ் தேசிய தொலைக்காட்சி
தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் இசைப்பிரியாவின் பங்களிப்பும்
1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா ஊடகத் துறையான நிதர்சனப் பிரிவில் சேர்ந்தார். காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு நிகழ்ச்சியை இசைப்பிரியாவே அறிமுகம் செய்து வந்தார்.
அவர் ஓர் இளம் அறிவிப்பாளர். வீடியோ சித்திரங்கள், போர்க்களச் செய்திகள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் போன்றவை அவருக்கு அன்றைய காலத்து ஒளிவீச்சுகளாக அமைந்தன. இசைப்பிரியாவின் பணி அத்தோடு மட்டும் நின்று விடவில்லை. அவர் ஊர் ஊராகச் சென்றார். அந்த ஊர்களில் போடப்படும் தெருக் கூத்துகளிலும் மேடை நாடகங்களிலும் அவருடைய பதிவுகளைத் தடம் பதித்தார்.
விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்றது. பின்னர் அது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணமித்தது. அந்தக் கட்டத்தில் தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இசைப்பிரியா பணியாற்றினார். ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர், தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார். ஆனால், ஆயுதங்களை மட்டும் பிடிக்கவில்லை.
தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ஒளிபரப்பு, மாலை ஏழு முதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே நீடிக்கும். இதில் இசைப்பிரியா ஒவ்வொரு நாளும் செய்திகளை வாசித்தார். நல்ல கணீர் குரல். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு. தெளிவான வழங்குமுறை.
இசைப்பிரியா என்கிற ஓர் அழகான வீணை நொறுங்கி விட்டது. இனிமேல் உலகமே ஒன்று சேர்ந்தாலும், அதன் தாளச் சுருதித் தந்திகளை ஒட்டிப் பார்க்க முடியாது.
இசைப்பிரியாவின் இழப்பானது தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்க
ு மட்டுமல்ல அனைத்து தமிழ் மக்களுக்குமே ஏற்பட்ட பேரிழப்பு. இறுதி யுத்தத்தில் ஆயுதங்கள் மொளனிக்கப்பட்ட பின்னர் இசைப்பிரியா படுகொலையின் போது ஏதும் அற்ற ஏதிலிகலாய் நாம் இருந்தோம்.
உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்து 9ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கூட இதற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.
இசைப்பிரியாவின் நினைவுடன்
தமிழீழ தேசிய தொலைக்காட்சி
10 மணி நேரம் · பொது

புலிகள் ஊடகம் தொலைக்காட்சி பெண் பெண்ணுரிமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக