திங்கள், 11 மார்ச், 2019

ஸ்டெர்லைட் விரட்டியடித்த ரத்னகிரி மக்கள் போராட்டம் மகாராஷ்டிரா

aathi1956 aathi1956@gmail.com

வியா., 31 மே, 2018, முற்பகல் 9:32
பெறுநர்: நான்
ஸ்டெர்லைட் ஆலை மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது எப்படி?
முஸ்தாக் கான்
பிபிசி, ரத்னகிரி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது.
இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது எல்லாம் மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் நடந்து இருக்க வேண்டியவை.
ஆனால், இந்த ஆலைக்கான திட்டம் முன்மொழியப்பட்ட தொன்னூறுகளில், கொங்கனி மக்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். அதனால், அந்த நிறுவனத்தை ரத்னகிரியில் தொடங்க முடியவில்லை.
26 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்டெர்லைட் நிறுவனம் கொங்கன் பகுதிக்கு 26 ஆண்டுகளுக்கு முன் வந்தது. ஒரு லட்சம் பேருக்கு வேலை தருகிறோம், இந்த நகரத்தை செழுமை அடைய செய்கிறோம் என நிறைய வாக்குறுதிகளை கொடுத்தது.
ஸ்டெர்லைட்: தமிழகத்தில் வெற்றி பெற்ற 3 சூழலியல் போராட்டங்கள்
கேள்விக்குறியானது எங்கள் எதிர்காலம்: ஸ்டெர்லைட் ஊழியர்கள் கவலை
ஸ்டெர்லைட் நிறுவனம், 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ரத்னகிரி அருகே அந்த நிறுவனத்திற்கு, 20,80,600 சதுர மீட்டர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு தரப்பட்டது. தாமிர உருக்காலை அமைக்க வேண்டும் என்பதுதான் அந்த நிறுவனத்தின் நோக்கம்.
ஆனால், இந்த தாமிர உருக்காலையால் சூழலியல் கேடு ஏற்படும் என்று குற்றஞ்சாட்டி, ரத்னகிரி மக்கள், திட்டம் கைவிடப்படும் வரை போராட முடிவு செய்தனர். போராடவும் செய்தனர்.
"அல்போன்ஸா மாம்பழம் எங்களது பெருமை"
"இந்த திட்டத்தால் எங்கள் ரத்னகிரி நகரம் பாதிக்கப்படும் என்று அஞ்சினோம். அல்போன்ஸா, முந்திரி மற்றும் இங்குள்ள கடற்கரைகள் எல்லாம் எங்கள் பெருமைகள்.குறிப்பாக அல்போன்ஸா மாம்பழத்திற்கென்று உலகளவில் புகழ் இருக்கிறது. அது கெடும் என்று கவலை உற்றோம். எங்களில் ஐந்து பேர் முன் வந்து ஏதேனும் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டோம். எப்படியாவது இதனை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்." என்று தனது நினைவுகளை திரட்டி பிபிசி மராத்தியிடம் பேசுகிறார் சங்கர்ஷ் சமிதியின் செயலாளர் சுதாகர் சவந்த்.
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவானது நிலம், நீர், காற்று என அனைத்தையும் மாசாக்குகிறது. இந்த மாசானது மக்களின் உடல் நலத்தையும் பாதிக்கிறது. இதனால் பலர் இறந்திருக்கிறார்கள். அதனால்தான், இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்கிறோம் என்கிறார்கள் இந்த திட்டத்தை எதிர்க்கும் தூத்துக்குடி மக்கள்.
ஸ்டெர்லைட் நிறுவனமோ இந்த குற்றச்சாட்டெல்லாம், ஆதாரம் இல்லாத வீண்பழி என்கிறது. வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டெர்லைட், மக்கள் விரும்பினால் இந்த ஆலையை தொடர்ந்து இயக்க விரும்புவதாக டிவிட்டரில் கூறி உள்ளார் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்.
"சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சூழலியல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உள்ளது வேதாந்தா நிறுவனம். மத்திய அரசு மற்றும் மாநில அரசு விதித்துள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுகிறது. உச்ச நீதிமன்றமே ஸ்டெர்லைட் நிறுவனத்தால் நிலத்தடி நீர் மாசாகவில்லை என்று கூறி உள்ளது. நிறுவனத்தின் கழிவுகள் அதற்காக வடிவமைக்கப்பட்ட இடத்தில்தான் வெளியேற்றப்படுகிறது" என்கிறார் அனில் அகர்வால்.
மீண்டும் ரத்னகிரி போராட்ட களத்திற்கே செல்வோம். ரத்னகிரியில் இந்த திட்டம் செயல்பட இருக்கிறது என்று தெரிந்த உடனே, 1993 ஆம் ஆண்டு, ஏறத்தாழ 50,000 பேர் திரண்டு மாபெரும் பேரணியை நடத்தினார்கள். அவர்களது கோரிக்கை இந்த திட்டம் வேறு ஏதாவது ஒரு பகுதிக்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான். இந்தப் புள்ளியிலிருந்து போராட்டம் விரிவடைய தொடங்கியது.
சுதாகர், "நானும், கிரண் சல்வி, சந்தோஷ் சவந்த், அஷொல் லஞ்சேகர், தீபக் ராத் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்தை எப்படி எடுத்து செல்வது என்று விவாதித்தோம். அதன்பின் 'ரத்னகிரி பச்சோ ஸ்டெர்லைட் ஹத்ஹோ சங்கர்ஷ் சமிதி' போராட்டத்தின் தலைவராக கேதன் காக் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்." என்கிறார்.
நாங்கள் ஒரு பக்கம் தீவிரமாக போராடிக் கொண்டிருக்க, ஸ்டெர்லைட் தங்களது நிறுவனத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கியது. அதுமட்டுமல்லாமல், நிறுவனத்தை தொடங்குவதற்கு தேவையான பொருட்களையும் உள்ளே எடுத்து வர தொடங்கியது" என்கிறார் சங்கர்ஷ் சமிதி போராட்டக் குழுவை சேர்ந்த கிரண் சல்வி.
மேலும் அவர், "எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. இந்த நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட இயந்திரம் மற்றும் பிற பொருட்கள் எதுவும் தரமான பொருட்கள் அல்ல. 1957 - 1977 ஆம் ஆண்டு வரை சிலியில் இயங்கிய ஒரு தாமிர உருக்காலையின் இயந்திரங்களைதான் ஸ்டெர்லைட் வாங்கி இருக்கிறது என்பது தெரியவந்தது. எப்படியாவது ஸ்டெர்லைட் நிறுவனத்தை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்ற எங்கள் குறிகோளை இந்த தகவல்கள் வலுப்படுத்தின."
வெற்றியின் ரகசியம்
சங்கர்ஷ் சமிதியின் தலைவர் கேத்தனுக்கு இப்போது 83 வயதாகிறது. அவர்களின் போராட்டத்தின் வெற்றியை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"என்னை தலைவராக அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுத்தபோது, நான் ஒரே ஒரு நிபந்தனையை விதித்தேன். அதாவது நமது போராட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கு கொள்ள கூடாது. நாங்கள் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்திய போது, ரத்னகிரி பகுதியில் உள்ள அனைவரின் நம்பிக்கையையும் பெற்றோம்" என்கிறார்.
"சிலர் தங்கள் சுயநலத்திற்காக இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு போராட்டத்திலிருந்து விலக்கி வைத்தோம். இது ரத்னகிரி நகரத்தின் பிரச்சனை மட்டும் அல்ல, இந்த மாவட்டத்தின் பிரச்சனை என்று புரிய வைத்தோம். நாங்கள் மட்டும் அப்போது தீவிரமாக போராடி இருக்கவில்லை என்றால், இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது, இங்கு ரத்னகிரியில் நிகழ்ந்து இருக்கும்" என்கிறார் கேத்தன்
துணை நின்ற பத்திரிகை
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்வீட்டர் என எதுவும் இல்லாத அக்காலத்தில் ஒரு உள்ளூர் பத்திரிகை இந்த போராட்டத்திற்கு துணை நின்றிருக்கிறது.
"ரத்னகிரி வரலாற்றிலேயே ஒரு மாபெரும் பேரணியை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒருங்கிணைத்தோம். அந்த சமயத்தில் 'ரத்னகிரி டைம்ஸ்' என்ற உள்ளூர் பத்திரிகைதான் எங்கள் போராட்டத்திற்கு துணை நின்றது."
"'ரத்னகிரி டைம்ஸ்' பத்திரிகையின் உரிமையாளர் உல்ஹாஸ் கோசல்கர் போராட்டக்காரர்களின் கரங்களை வலுப்படுத்தியதாக கூறுகிறார் சல்வி.
"அரசியல் கட்சிகளை உள்ளே விடாதவரை, நம்மால் போராட முடியும். எங்களுக்கு சூழலியலாளர் ராஷ்மி மயூர் தொழிற்நுட்பம் சார்ந்து பல தகவல்களை அளித்தார். அவர் மட்டும் அந்த தகவல்களை அளிக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் சரியான திசையில் சென்று இருக்காது" என்கிறார் கேத்தன்.
சங்கர்ஷ் சமிதி போராட்ட குழுவை சேர்ந்தவர்களை சரத் பவார் சந்தித்து இந்த பிரச்சனை குறித்து விவாதித்தார்.
இந்த ஆலைக்கு எதிரான மக்களின் கோபத்தை கண்ட சரத் பவார், இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இந்த சமயத்தில்தான் மத்திய அரசிலிருந்து திரும்பி மாநில முதல்வராக பொறுப்பு ஏற்று இருந்தார் சரத் பவார்.
எங்கள் நிலை மோசமாகி இருக்கும்
மக்கள் போராட்டம் தீவிரமடைய, ஜூலை 15, 1993 ஆம் ஆண்டு அரசு இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இப்போது கூட அந்த ஆலையின் கட்டுமானங்களை இங்கு காணலாம்.
அதன் பின், 2010 ஆம் ஆண்டு, மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம், தாமிர உருக்காலைக்கு பதிலாக வேறு ஏதேனும் தொழிற்சாலையை தொடங்கி கொள்ளலாம் என்று கடிதம் அனுப்பியது. ஆனால், இன்றுவரை அந்த கடிதத்திற்கு ஸ்டெர்லைட் பதில் அளிக்கவில்லை.
மீண்டும் ஜுலை 9, 2013 ஆம் ஆண்டு இன்னொரு கடிதத்தை மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம், தொழில் தொடங்காவிட்டால் மீண்டும் நிலத்தை அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. ஆனல், அதற்கும் ஸ்டெர்லைட் பதில் அளிக்கவில்லை.
அதன் பின், ஜூலை 31, 2014 நிலம் தொடர்பாக இன்னொரு நோட்டீஸை ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மஹராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம் அனுப்ப, உடனே நீதிமன்றத்தை அணுகி அதற்கு இடைக்கால தடை வாங்கியது ஸ்டெர்லைட் நிறுவனம்.
இப்போது இந்த விஷயம் நீதிமன்றத்தில் உள்ளது. மஹராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழகம் அளித்த தகவலின்படி, ஸ்டெர்லைட் நிறுவனம் அந்த நிலத்திற்கான வரியை செலுத்தி வருகிறது.
"ரத்னகிரி பகுதியின் சாமானிய மக்கள் சரியான நேரத்தில் போராடி ஸ்டெர்லைட் திட்டத்தை முறியடித்து தங்கள் பகுதியிலிருந்து வெளியேற்றினர். அப்போது மட்டும் நாங்கள் போராடாமல், அரசியல்வாதிகளின் போலியான வாக்குறுதிகளில் வீழ்ந்து இருந்தால், எங்களது நிலை தூத்துக்குடி மக்களின் நிலையைவிட மோசமாக ஆகி இருக்கும்," என்று அன்றைய நிலையையும் இப்போது தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள நிலையையும் ஒப்பிட்டு விளக்குகிறார் கேத்தன்.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விளக்கத்தைப் பெற ஸ்டெர்லைட் அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். ஆனால், எங்கள் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தால், அதனை பிரசுரிக்க தயாராகவே இருக்கிறோம்.
அதே நேரம் ரத்னகிரியில் இயங்காத ஆலையின் கட்டடங்களை கவனித்துவரும் மிலிந்த் காந்தியை தொடர்பு கொண்டோம். ஆனால், தான் அந்த நிறுவனத்தின் ஊழியர் இல்லை என்றும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டவர் என்றும் கூறினார்.

வேதாந்தா தூத்துக்குடி மராத்தியர் 

பெப்சி ஆலை இருமுறை மூடியபோது உதவிய திமுக கார்ப்பரேட் தாமிரபரணி

aathi1956 aathi1956@gmail.com

புத., 30 மே, 2018, பிற்பகல் 3:01
பெறுநர்: நான்
Jayakumar Inbaraj
1999ல் ஐயா சகாயம் பெப்ஸி ஆலைக்கு பூட்டு போட்டு தன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெப்ஸியை தடைசெய்தபோது, அதை மக்கள் போராட்டமாக மற்ற மாவட்டத்திற்குப் பரவாமல், அரசு தரப்பில் வெற்றுக்கு திமுக ஒரு வழக்கு போட்டு அதில் தோற்று மறுபடியும் பழையபடி காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பெப்சி ஆலையை திறக்கவிட்டு பெப்ஸியை விற்க மறைமுகமாக உதவியது. திமுக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஏதோ ஒரு வகையில் உதவும் என்று நம்பினீர்கள் என்றால், உங்களைப்போல ஒரு முட்டாள் யாரும் இல்லை!
2014ல் தஞ்சாவூரிலும் பெப்ஸிக்கு வருடத்திற்கு 15,00,000 லிட்டர் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியபோது மக்கள் போராட்டமாக வெடிக்க, அதை வலுக்கச் செய்யாமல் திமுக வழக்கு தொடர்ந்து அதை மட்டுப்படுத்தியது. நீதிமன்றம் என்றுமே இயற்கையின் பக்கமோ, பல்லுயிரினம் பக்கமோ நின்றதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை உணராக்கட்சி திமுக என்று நினைக்கிறீர்களா? திமுக என்பது துரோகங்கள் நிறைந்த கட்சி என்று உணராதவரை நமக்கு விடிவுகாலம் கிடையாது!
நேற்று, 01:33 PM

காமராசர் துப்பாக்கிச்சூடு வழக்கு அலைக்கழிப்பு தேவர் அரசியல்

aathi1956 aathi1956@gmail.com

புத., 30 மே, 2018, பிற்பகல் 2:55
பெறுநர்: நான்
இரா. பசும்பொன் ராஜா , மருதம் பெரியசாமி மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
1957 ல் முதுகுளத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றது பார்வர்டு பிளாக் வென்றது.தொகுதியின் ஒருபகுதியில் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தை வைத்து கீழத்தூவல் கிராமத்தில் கண்ணைக் கட்டி கையைக்கட்டி கண்மாய் கரையில் நிறுத்தி போலீஸ்நடத்திய கொலை விடுதலை இந்தியாவில் நடந்த முதல் என்கௌண்டர்.இதைத் தொடர்ந்து போலீஸ் பார்வர்டு பிளாக் மோதல் பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.வைக்கோல் படப்பில் தூக்கி எறிந்து கொல்லப்பட்டவர்கள் ஏராளம்.காமராஜ் போலீஸ் சொன்ன கணக்கு 17 .இதில் கிழவக்குடும்பன் என்ற பார்வர்டு பிளாக் பள்ளரும் ஒருவர். 836 வழக்குகளைப்பதிவுசெய்து 5000 பேர்களை சிறையில் அடைத்தனர். இராமநாதபுரம் மாவட்ட தலைநகராகவும் மதுரை யே இருந்தது. இந்த வழக்குகள் மதுரை யில் நடத்தப்பட்டிருக்க வேண்டும் .ஆனால் திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை யில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்கு விசாரணையை நடத்தச்செய்தார். இந்த கண்டுபிடிப்பாளர் கு.காமராஜ்நாடார் தான். சிறைக்குள் இருந்த 5000 பேர்களை ஜாமீனில் எடுக்க வந்து நின்றவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான். இந்த காமராஜின் ஆட்சியின் கொடுமைகளை அறியாதவர்கள் தான் காமராஜ் ஆட்சி பற்றி பெருமையாக பேசுகின்றனர். அது உண்மையல்ல என்பதை வரலாறு தெளிவுபடுத்தி வைத்துள்ளது.இன்றைய பல முறை கேடுகளுக்கு தொடக்கமே காமராஜ் ஆட்சி தான்.
- Boopathy Raja .

திருப்பாசேத்தி கச்சநத்தம் சாதி மோதல் உண்மை என்ன திருடர் செய்த கொலை

aathi1956 aathi1956@gmail.com

புத., 30 மே, 2018, பிற்பகல் 12:41
பெறுநர்: நான்
இரகுநாதசோழன் மருதநில வேந்தன்
நிலவியல் அடிப்படையிலான
# தமிழர்களின் வாழ்வியலில் பெரிதாக எந்த உடைப்பையும் ஏற்படுத்தியிறாத, இனம் சார்ந்த குழு வாழ்க்கை என்கிற நிலையை கடந்திராத, கம்யூனிஸம் தவிர்த்த எந்த பெரிய அரசியல் கட்சிகளையும் அறிந்திராத, குலதெய்வம் தவிர்த்து எந்த கார்ப்பரேட் கடவுளையும் அறிந்திராத, வேளாண்மையையும் உடல் உழைப்பையுமே பிரதான வாழ்வாதாரமாக கொண்டு நேற்று இரவு 11.30 வரை இயல்பாக இயங்கி கொண்டிருந்த கிராமம் தான்
# கச்சநத்தம்...!
# பள்ளர்களை மட்டுமே பிரதானமாக (முப்பது வீடுகள்) கொண்ட அந்த ஊரில்
# முக்குலத்தோர் சமூகம் சார்ந்த ஒரு குடும்பமும் வசிக்க வரவே எவ்வித குடிவிலக்கமும் செய்யாது இயல்பாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள், பிரச்சினை என்னவெனில் அந்த ஒரு வீட்டு நபர், ஒரு வாரத்திற்கு முன்பு பக்கத்திலிருந்த வீட்டில்
# விதைநெல்லை திருடி கையும் களவுமாக மாட்டிக்கொள்ள ஏனைய வீட்டு பள்ளர்கள் கூடி தாக்கி விடுகிறார்கள், அது ஒரு திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறையில் இருக்கும் அவருடைய மகனின் காதுகளுக்கு எட்டவே சிறையில் ஆலோசனைக்கும் அடியாளுக்குமா பஞ்சம், சிறையிலிருந்து ஜாமினில் வெளிவருகிறார், வருகிற வழியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட செய்த சதி திட்டப்படி வருகிற வழியில் முக்குலத்தோர் செரிவாக வாழும் பக்கத்து கிராமமான # மாரநாட்டிற்கு சென்று தக்க சமயத்திற்காக காத்திருக்கிறார்.
மாரநாட்டில் நடக்கும் சதி ஏதுமரியாத கச்சநத்தம் மக்கள் வருடாந்திர
# குலதெய்வ_வழிபாட்டில் மும்முரமாக இருக்கிறார்கள், வழிபாடு முடிந்து இரவு அனைவரும் தூங்க செல்லவும் துப்பு கொடுக்கப்பட்டு மாரநத்தத்திருந்து சமயத்திற்காக காத்திருந்த வன்முறை குழு கிளம்பி வந்து # முப்பது வீடுகளே கொண்ட கச்சநத்தம் கிராமத்தை, தூங்கிக் கொண்டிருந்த நபர்களை தாக்கத் துவங்குகிறது. நடப்பது இன்னதென்று அறியுமுன்னே இழப்பு அதிகமாகிவிட, திருவிழா கொண்டாட்டத்தில் கூடுதலாக உள் இறங்கியிருந்த # டாஸ்மாக் மதுவும் அவர்களை செயலிழக்கச் செய்திருக்கிறது, இருந்தாலும் மக்கள் ஒன்றுகூடிவிடவே வன்முறை கும்பல் தப்பியோடி விட்டது. # இருவர் நிகழ்விடத்திலே உயிரிழக்க ஏழு பேர் அரிவால் வெட்டு காயத்துடன் மருத்துவ மணையில் அனுமதிக்க பட்டிருக்கிறார்கள், அனுமதிக்க பட்டவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வருகிறது...!
# களநிலவரம் இப்படியிருக்க அதிகாலையிலேயே அழுதுபுலம்ப துவங்கி விட்டிருக்கிறது இந்த
# தலீத்கும்பல், இஸ்டத்திற்கு எழுத துவங்கிவிட்டார்கள். ஏற்கெனவே தயாராக இருக்கும் பதிவுகளில் ஊரையும் நாளையும் திருத்தி பதிவிட துவங்கிவிட்டார்கள் போல...!
# கால்மீது_கால்போட்டு_அமர்ந்ததால் தலீத்துகள் ஆறு பேர் கொலை என்று கதறுகிறார் ஒருவர், மற்றொருவர் திருவிழாவில் # கருவரைக்குள் நுழைந்ததால் கொலை என்று டீப்பால்ட் தலீத் தனத்தை காட்டுகிறார். இதில் கொடுமை என்னவென்றால் பள்ளர்களின் # பட்டியல்_வெளியே
ற்றவாதத்தை தூக்கி வந்து அவர்கள் தீண்ட தகாதவர்கள் தானே என்று நிறுவ துடிக்கிறார் ஒரு
# கீழ்த்தரமான_தலீத் ...!
என்னடா திடிரென பள்ளர்கள் மீது பாசம் பொத்து வடியுதே என்னவென்று பார்த்தால், வன்முறை குழுவினர் செய்த கொலைவெறி தாக்குதலை யாரும் #கண்டித்ததாக தெரியவில்லை, மாறாக எப்படியாவது பள்ளர்களை
# பட்டியலில்_முடக்கிவிட வேண்டும் என்கிற உள்நோக்கம் மட்டுமே அவர்களின் சிறுபுத்தியில் வன்மமாக வளர்ந்திருந்ததை அவர்கள் முன்வைத்த அபத்தமான வாதங்களில் வெளிப்பட்டது என்று சொன்னால் அது குறைவுதான், அத்தனை
# தலீத்திய_வன்மம் அவர்களின் பதிவுகளில்...!
கச்சநத்தம் கோவில் கொடைவிழா நாளில் சம்பந்தப்பட்ட # வன்முறையாளர் வெளிவந்திருக்கிறார் என்பதும், இரவு மின் இணைப்பை துண்டித்து அவரோடு வந்த கும்பல் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கிறது என்பதும், சிறையின் உள்ளாகவே ஆள்சேர்க்கை வேளை நடந்திருக்கிறது என்பதும் அக்மார்க்
# கூலிப்படை தனம், மேலும் அவர்கள் வன்முறை நோக்கில் கையோடு கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் இன்று மதுரை சென்று சரணடைந்திருக்கும் முறை எல்லாம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வன்முறை என்பதை தெளிவாக காட்டுகிறது...?
இங்கே நீங்கள் சந்தேகிக்க வேண்டியது,
# உள்ளூர்_காவல்துறை இதன் பின்னணியில் இருக்கிறதா என்பதும் ஜாமினில் வெளிவந்த உடனேயே அவருக்கு # ஆள்_திரட்டி கொடுத்தது யார் என்பதுவும், பயங்கர ஆயுதங்களுடன் இருபது கிலோமீட்டர் பயணித்தும் #தமிழக_உளவுத்துற
ையால் கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது தெரிந்தே அனுமதித்தார்களா என்பதும் தான், சந்தேகம் தீர்க்கப்பட்டால் ஆளும் திராவிட அதிகார வர்க்கத்தின் தலையீடு இருக்கிறதா என தெரிய வரலாம்...!
13 பேரை தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டிற்கு பலியாக்கிவிட்டு இன்று # சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் ஆளும் வர்க்கம் இதுமாதிரியான செயல்களில் இறங்கும் என்று நமது கடந்தகால அனுபவம் நமக்கு எடுத்துச் சொன்னாலும் மேற்கண்ட சந்தேகங்கள் விடுபடும் போது அதற்கு பதில் கிடைக்கலாம்...!
மற்றபடி இந்த தீவிர தலீத்துகள் முன்வைக்கும், # ஆண்ட_பரம்பரையா ...?
# பட்டியல்_வெளியேற்றமா ...? # சலுகை,
# சட்டபாதுகாப்பு ...? # உதவிதொகை...? போன்ற வாதங்களுக்கெல்லாம் இங்கே தேவையே ஏற்படவில்லை என்பது தான் உண்மை, ஏனெனில் அதன் சுவடையோ சுவையையோ கூட அறிந்திறாத, அனுபவித்திராத மக்கள் தான் கச்சநத்தம் மக்கள்...!
இந்த நேரத்தில் ஏனைய தமிழ் சமூகங்களுக்கும் முக்குலத்தோர் சமூகத்திற்கும் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான், பள்ளர்கள் மீதான இந்த வன்முறை குழுவின் கொலைவெறி தாக்குதலை வன்மையாக கண்டிக்க முன்வாறுங்கள், இல்லையென்றால் தலீத்தியமும் திராவிடமும் போலி பொதுவடமை கும்பலும் உங்களை முந்திக்கொண்டு வந்து இனி எப்போதுமே தமிழரிடையே இணக்கமே ஏற்படாதவாறு புறச் சூழலை உருவாக்கும் வேலையை செய்து விடுவார்கள்....!
பள்ளர்கள் பலியாகும் போது மட்டும் கமுக்கமாக இருந்துவிட்டு பின்னாளில் வந்து தமிழர் இணக்கம் என்று பேசுவீர்கள் என்றால் அதைவிட போலித்தனம் எதுவும் இருக்கமுடியாது. ஏற்கெனவே பரமக்குடியிலும், தாமிரபரணியிலும் பள்ளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஏனைய தமிழ்ச் சமுகம் அமைதி காத்ததால் தான் இன்று தூத்துக்குடியில் மொத்த தமிழ்குடிகளும் துப்பாக்கி தோட்டாவை உடலில் தாங்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்பதை உணர்ந்து எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பு கொடுக்காமல் கண்டிக்க முன்வாருங்கள்.
இவண்,
தமிழர் நடுவம்.

திங்கள், 3 டிசம்பர், 2018

ஸ்டெர்லைட் ஏன் மூடப்பட வேண்டும் ஆர்சனிக் கழிவு புற்றுநோய் மண்ணழிப்பு

aathi1956 aathi1956@gmail.com

மே 30, புத., முற்பகல் 9:29
பெறுநர்: நான்
Technically explained about what’s happening inside the #Sterlite
நன்றி Mohamed Ashik

#ஸ்டெர்லைட் ஆலை எதனால் எதிர்க்கப்படுகிறது..?

நமக்கு வாய்த்த தகுதியற்ற அறிவுகெட்ட முட்டாள்கள் அல்லது எல்லாம் தெரிஞ்ச மக்கள் விரோத கொடூர கயவர்களான பணவெறி அரசியல்வாதிகள்... 'ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தந்தவன் நீதான்... அடிக்கல் நாட்டியவள் நீதான்... திறந்து வச்சவன் நீதான்... ' என்றெல்லாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்கின்றனர். இதனால் ஒரு பயனும் மக்களுக்கு இல்லை.

ஆகவே, பிரச்சனையின் ஆணிவேர் பற்றி பேசுவோம். ஸ்டெர்லைட்டில் இரண்டே இரண்டு விஷயங்கள் இல்லை என்றால் மகாராஷ்டிரா மக்கள் ஆதரவே அன்று ஸ்டெர்லைட்டுக்கு கிடைத்திருக்கும். ஆனால்... அந்த 2 விஷயத்தில்தான்... அனைவரையும் ஸ்டெர்லைட் ஏமாற்றியதால்... எதிர்ப்பு வலுவடைகிறது. அவை என்ன..?

அந்த 2 முக்கிய அம்சங்கள்:
1-சல்ஃபர்-டை-ஆக்ஸைடு (SO2)
2-அர்செனிக் (As)

SO2 ஓர் ஆபத்தான நச்சுவாயு. காற்றில் 10 லட்சத்தில் 5 பங்குக்கு மேலே என்ற அளவில் இவ்வாயு காற்றில் கலந்து இருந்தால் அக்காற்று மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்த அளவில் இவ்வாயு மூச்சுத்திணறல், நுரையீரல் நோய், குமட்டல், வாந்தி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் ஆகியனவும் அதிகளவில் எனில் இறப்புக்கும் வழிவகுக்கும்.

As அதிபயங்கரமான நச்சுத்தனிமம். நிலம் & நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு காரணம். 10 கோடியில் 1 பங்குக்கு மேலே என்ற அளவில் இத்தனிமம் நீரில் / நிலத்தில் கலந்து இருந்தால் அந்த நீரும் நிலமும் மாசுபாடு அடைந்து விட்டது என்று பொருள். இந்நிலையில் மாசுபட்ட நிலத்தடி நீரை உட்கொண்டால் சிறுநீரக மண்டலம் உட்பட பல இடங்களில் கேன்சர் வரும். அந்த நிலத்தில் வளரும் தாவங்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அந்த தாவரங்களை உட்கொள்ளும் போதும் செரிமான மண்டலத்தில் கேன்சர் வரும்.

ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை உற்பத்தி பொருள் காப்பர்(Cu). தாமிரம்.

காப்பர் உற்பத்தி செய்யும்போது, அதன் தாதுப்பொருளில் உள்ள கந்தகம் எரிந்து நிறைய  நிறையை SO2 கழிவாக வெளியாகிறது. இந்த நச்சுவாயுவை அப்படியே வானில் வெளியாக்கினால் மரணம் என்பதால், காப்பர் ஸ்மல்டர் ஆலைகளில் அவற்றுக்கு எவ்விதத்திலும் பயனற்ற சல்பியூரிக் ஆசிட் (கந்தக அமிலம்) உற்பத்தி பிளாண்ட் ஒன்றை ஓட்டியாக வேண்டும். இதில்... அந்த கந்தக ஆக்ஸைடை (SO2) கேட்டலிஸ்ட் மூலம் SO3 ஆக்கி, HSO3 ஆக்கி, H2SO4 என்ற கந்தக அமிலமாக மாற்றப்படுகிறது.

ஸ்டர்லைட்டில் ஒரு நாளைக்கு சுமார் 3300 டன் என்ற மிதமிஞ்சி உற்பத்தியாகும் இந்த அமிலத்தை அதே அளவுக்கு வாங்குவோர் இல்லாததால்... அதை ஸ்டோர் பண்ணி வைக்க டேங்கில் இடம் இயலாதபோது... அப்படியே வாய்க்காலில் எல்லாம் திறந்து விட முடியாதே. அமிலம் ஆயிற்றே. என்ன செய்யலாம்..?பக்கத்தில், உள்ள ஸ்பிக் கந்தகஅமில உற்பத்தியை நிறுத்த சொல்லிவிட்டு... இலவசமாகவே லாரி டேங்கர்கள் மூலம் கொண்டு போயி தரலாம். (நான் அங்கே பணியாற்றிய வருஷங்களில் அப்படித்தான் டேங்கர்களில் ஆசிட் கொண்டு வந்து தந்தார்கள். எங்கள் சல்பியுரிக் ஆசிட் பிலாண்டை ஷட் டவுன் பண்ணி நிறுத்திட்டு அவங்க ஆசிடை வாங்கி எங்களின்  டேங்குகளில் சேமித்துக்கொண்டோம்.)

சரி, ஸ்பிக்கிலும் இலவசமாக தந்து அவர்களின் டாங்கிகளும் நிரம்பி விட்டது. இனி என்ன செய்ய..?

ம்ம்ம்... இப்படி ஸ்டெர்லைட் கந்தக அமிலம் சேமிப்பு டாங்கிகள் நிரம்பி விட்டால் வேறு வழியின்றி காப்பர் உற்பத்தியை நிறுத்தவோ குறைக்கவோ வேண்டும். ஆனால், காப்பர் டிமான்ட் மார்க்கெட்டில் இருக்கே. செமை இலாபமாச்சே. காப்பர் உற்பத்தியை குறைக்கவே கூடாதே. வேறு என்ன செய்யலாம்..?

நைசா... ராவோடு ராவாய் தம் ஊழியர்களை மட்டும் பிரீதிங் அபாரடஸ் போட்டுக்கொள்ள சொல்லிட்டு, SO2வை வானில் திறந்துவிட்டு வென்ட் பண்ணிடலாம். சல்பியுரிக் அமிலமாக மாற்ற தேவை இல்லை. அப்படியெனில்... மக்கள் சாவார்களே..? லண்டனில் இருக்கும் ஓனருக்கு தூத்துக்குடி மக்கள் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன..?

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், SO2 எமிஷனுக்கு நிர்ணயித்து இருக்கும் அளவு... 'பெர்மனன்ட் எக்ஸ்பொஷர் லிமிட்'(PEL) நிரந்தர தாக்குப்பிடிப்பு அளவு:5ppm. (காற்றில் 10 லட்சத்தில் 5 பங்கு)

இதுவே, ஸ்டெர்லைட் வென்ட் பண்ணினால், 75ppm அளவுக்கு இந்த நச்சுவாயு அடர்த்தி எனில், அங்கே, 1 மணி நேரம் மட்டுமே மக்கள் தாக்குப்பிடித்து இருக்கலாம் என்பதுதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் PEL.

ஆனால்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் SO2 நச்சுவாயு வெளியாகும் அளவுபற்றி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அரசுத்துறை அறிக்கை யாதெனில்...
1000ppmக்கும் மேலே..! 😢

//
The readings of the sulphur di-oxide analyser linked to the PCB’s Care Air Centre at Guindy here suggested that the emission was in the range of 504.5 to 1123.6 ppm (parts per million) during those occasions as against 477.53 ppm prescribed by the Union ministry of environment and forests.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Sulphur-dioxide-emission-from-Sterlite-high-says-government/articleshow/19470029.cms
//

அப்படி எனில்... ஒரு நிமிஷம் கூட மக்கள் வாழத்தகுதியற்ற ஊர்... தூத்துக்குடி..!

ஆகவே, இந்த ரிப்போர்ட் வந்த 2013ம் ஆண்டே... அந்த ஸ்டெர்லைட்டின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு, ஆலையை நிறுத்தி ஊழியர்களை வெளியேற்றி கேட்டைபூட்டி சீலிட்டு... உரிமையாளரை கோர்ட்டுக்கு இழுத்து பல்லாயிரம் கோடி நஷ்ட ஈடு வாங்கி...உயிர் விட்ட,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தந்திருக்க வேண்டாமா அரசு..?!

சரி, இப்போது ஆர்செனிக் பற்றி பார்ப்போம். அது இதைவிட மாபெரும் கொடுமை..!

SO2 பிரிந்த பிறகு... மீதமுள்ள காப்பர் தாதுவில் ஆர்செனிக் கலந்து இருக்கும். காப்பரை அதிலிருந்து பிரித்து தனியே எடுத்த பின்னர், ஆர்செனிக் என்ற திண்மப்பொருள் சகதி போல (ஸ்லட்ஜ்) ஆக பிரிந்து தனித்துவிடுகிறது. இதை என்ன செய்வது..? நீரிலும் விட முடியாது. நிலத்திலும் விட முடியாது. திண்மம் என்பதால்... சல்பர் டை ஆக்சைடை காற்றில் திறந்து விட்டது போல...  திறந்து விடவும் வாய்ப்பில்லை.

இதை ஸ்டெர்லைட் என்ன செய்ய வேண்டும் எனில்... அதன் ஆலை வளாகத்தின் உள்ளேயே... சூரிய ஒளி, மழை நீர், காற்று ஏதும் படாதவாறு சீலிடப்பட்ட  மிகப்பிரம்மாண்ட  மெடல் டாங்கிகளில்  எவ்வித லீக் ஆவதுக்கும்  வாய்ப்பே இன்றி, நிலமட்டத்தில் இருந்து சற்று உயர்த்தி வைத்து அடிக்கடி யாதொரு கசிவும் இருக்கிறாதா என்று பரிசோதித்து பாதுகாத்து பரிசோதித்து பாதுகாத்து  பரிசோதித்து பாதுகாத்துவைத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆனால்... ஸ்டெர்லைட் என்ன பண்ணுகிறது... தெப்பக்குளம் போல கட்டி தேக்கி வைக்கிறது. அதற்கு... 'Cake Pond' என்று பெயரும் இட்டு..!

அடப்பாவிகளா..!

இங்கே மழை பெய்தால் அந்த தெப்பம் நிறைந்து ஆர்செனிக் வழிந்து ஓடுமாம்... எங்கே...? நிலத்தில்தான்..! இப்படித்தான் தூத்துக்குடி நிலத்தடி நீரில் ஆர்செனிக் கலந்துள்ளது.

மழை விட்டபின்னர்... நீர் பூமியில் உறிஞ்சிய பின்னர்... நிலத்தின் மீது எஞ்சி இருக்கும் அந்த ஆர்செனிக் சகதியை எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி எதோ வயல் சகதியை மம்பட்டியால் வெட்டி எடுத்து போடுவது போல ட்ரக்கில் போட்டு தெப்பத்தில் கொண்டு போய் கொட்டுவார்களாம். அந்த ட்ரக் டயரில் ஒட்டிய ஆர்செனிக் கழிவு, ட்ரக் வேலை முடிந்து ஆலையை விட்டு வெளியே போனவுடன்... சக்தி காய்ந்து... தூத்துக்குடி ஊரெங்கும் தூவிச்செல்லும்தானே..? இப்படித்தான் ஆர்செனிக் ஊர் முழுக்க பரவுகிறது. அப்புறம் அதில் வேலை செய்தவர்களின் உடலில் உடையில் செருப்பில் ஒட்டி இருக்கும் ஆர்செனிக் அவர்களின் வீடுகளுக்கும் செல்லும். வீட்டில் உள்ள குழந்தை கையை கீழே வைத்து வாயில் வைத்தால்... முடிந்தது... குழந்தைக்கும் கேன்சர்..!

(மேற்படி தகவல், ஸ்டெர்லைட்டில் வேலை பார்த்துவிட்டு பின்னர் என்னோடு எனது நிறுவனத்தில் பணியாற்ற வந்த தோழர் சொன்னவை)

இதெல்லாம் விட... படத்தில் உள்ள அந்த 30 வருஷ கால பழைய ஆர்செனிக் குளத்தின் அடியில் போடப்பட்ட தளத்தில் இத்தனை வருஷத்தில் எத்தனை எத்தனையோ விரிசல்கள் விட்டு பூமிக்குள்ளும் ஆர்செனிக் சென்று கொண்டு நிலத்தடி நீரில் கலந்து கொண்டே இருக்குமே..!

நிலத்தடி நீரில் இந்த ஆர்சனிக் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா..? 10 கோடியில் ஒரு பங்குக்கு கீழே இருக்க வேண்டும்.(10ppb)
ஆனால்...
நீரி (NEERI-National Environmental Engineering Research Institute) என்ற  நீர்/நிலம் தொடர்பான 
அரசு நிறுவனம், ஸ்டெர்லைட் அமைந்துள்ள தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் எடுத்த பல்வேறு சேம்பிள்
மாதிரிகளில்  ஆர்செனிக் கலப்பு பற்றி அளித்த ஆய்வுச்சோதனை முடிவுகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.
ஆம்... பத்து லட்சத்தில் 100... 200....300 பங்குகள் என்ற அளவில் ஆர்செனிக் உள்ளன..! 

ஆனால்... இந்திய சட்டம் என்ன சொல்கிறது..?

50 க்கும் மேற்பட்ட மில்லிகிராம் / கிலோகிராம் ஆர்செனிக்  கொண்ட மண் வகைகளை இந்திய அபாயகரமான கழிவு விதிகள், 2008 இன் கீழ் அபாயகரமான கழிவுகளாக கருதப்பட வேண்டும் என்கிறது. எனில், அம்மண்ணில் மக்கள் வாழவே கூடாது... அந்த அபாயகரமான கழிவை மிதிக்கவே கூடாது, எனில் அப்புறம் எப்படி அதில் வீடுகட்டி வாழ்வது..!

//
https://www.thenewsminute.com/article/sterlite-here-s-proof-data-how-smelter-likely-cause-water-pollution-79055
//

மேற்படி... சுட்டியில் நீங்கள் நீரி ரிப்போர்ட்டை காணலாம். இந்த நீரி ரிப்போர்ட் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்தவை. அது வழக்காகி இறுதியில் உச்ச நீதி மன்றம் போயி... ஜஸ்ட் லைக் தட் 100 கோடி அபராதம் கட்ட சொல்லிட்டு பிலாண்டை ஓட்டிக்க சொல்லிருச்சு உச்ச நீதி மன்றம்..!

ஆக... அது முடிந்து... 13 வருஷம் ஓடியாச்சு. ஏகப்பட்ட மழை பெய்து ஏகப்பட்ட முறை கேக் பான்ட் நிரம்பி ஓடி... ஆர்செனிக் சகதி ஒட்டிய ட்ரக் ஊரு முழுக்க பலமுறை ஓடி... இப்போதெல்லாம்... ஆர்செனிக் அளவை சோதனை போட்டால்... ஆய்வாளருக்கே கேன்சர் வந்துவிடும்..!

இதன்பிறகும்... அரசியல்வாதிகள் அந்த தனியார் கம்பெனியை இயங்க அனுமதித்தால்... அவனுங்கலாம் மனிதகுலவிரோதிகள்..! இந்நாட்டில் வாழவே யோக்யதை இல்லாதவர்கள்... நம்மை ஆளுகிறார்கள்...! ச்சே... நம்மை விட உலகில் இழிந்தநிலையில் வாழும் மக்கள் வேறு யார் இருக்க முடியும்..?!

மாசு கார்ப்பரேட் தூத்துக்குடி 

ஸ்டெர்லைட் பலமுறை தடை உடைத்து திறந்த வரலாறு

aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., பிற்பகல் 1:07
பெறுநர்: நான்
Last updated : 18:54 (28/05/2018)
இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது? எப்படி மீண்டும் திறக்கப்பட்டது? #Recap
மொ த்தம் 13 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டபோதே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து மக்களும் போராட்டத்தில் இறங்கினர். சில கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக 2 வருடங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், மரம் நடுதல் என ஸ்டெர்லைட் மக்களைக் கவரத் தொடங்கியது. மேலும், அப்போது நிகழ்ந்த சாதிச் சண்டை எனப் பல காரணங்களால் போராட்டம் நீர்த்துப் போனது.

1996-ம் ஆண்டு மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டு இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகின. இதனால் அருகில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. வழக்கம் போல மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருபடி மேலே போய் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

1998 அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நாக்பூரைச் சேர்ந்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்ற `நீரி' ( National Environmental Engineering Research Institute ) அமைப்பு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ``ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. சுற்றுப்புறக் கிராமங்களில் நிலத்தடி நீரில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் உடலுக்குப் பெரிய ஆபத்து இருக்கிறது" எனத் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், அந்த அறிக்கையில் உள்ள பிழைகளைத் திருத்திவிட்டோம் என்று சொல்லி உயர் தீமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது, ஸ்டெர்லைட் நிர்வாகம். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ``ஆலை இரண்டு மாதங்கள் இயங்கட்டும். அதன் பின்னர் `நீரி' அமைப்பு ஸ்டெர்லைட்டில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தீர்ப்பளிக்க, மீண்டும் திறக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை.

முதல் அறிக்கையில் காட்டமாகப் பதிவு செய்திருந்த நீரி அமைப்பு, இரண்டாவது ஆய்வின் அறிக்கையில் நீர்த்துப்போன தகவல்களைத் தந்தது. மாறிப்போய் இருந்தது. இதனால் தொடர்ந்து இயங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது வேதாந்தா நிறுவனத்துக்கு உற்சாகத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேதனையையும் கொடுத்தது. இங்குதான் தனது முதல் தடையை உடைத்து மீண்டும் இயங்கியது ஆலை.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 அதில் 2010 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்றதும் ஆலை நிர்வாகம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் `உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கும்படியாக இல்லை. நூறுகோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து மீண்டும் ஆலையை இயக்கலாம்" எனத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி வைகோ சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், 2013 ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். 2012 செப்டம்பர் 28-ல் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில் 2013-ம் ஆண்டு நடந்த பெரும் விபத்து காரணமாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலையைத் திறக்க முடியவில்லை. அதற்காகத் தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் சார்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டாலும், அவ்வழக்கை டெல்லி பசுமைத் தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றியது தென்னிந்திய தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். வழக்கம்போல, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையைத் திறக்க டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

 2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

20 ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது, ஸ்டெர்லைட் நிர்வாகம். 

இதை எதிர்க்கும் வகையில் 22.05.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கி, ஸ்டெர்லைட்டை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

 இந்நிலையில் சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் `ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்குத் தடை' விதித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர், அனில் அகர்வால் `ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்போம்' என்று சொல்லியிருக்கிறார். 

இவ்வளவு நடந்த பின்னர், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விடமாட்டோம் என உறுதி காட்டுகிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர். ஆனால், இப்போது தமிழக அரசு அரசாணை மூலமாகச் சொல்லியிருக்கும் ஸ்டெர்லைட் மூடலை நிச்சயமாக அந்நிறுவனம் உடைக்க முயலும்; வரலாறும் அதைத்தான் சொல்கிறது.

வழக்கு சட்டம் நீதிமன்றம் தீர்ப்பு கார்ப்பரேட் வேதாந்தா 

காவல்துறை துப்பாக்கிச்சூடு உத்தரவு எப்படி வரும் சட்டம் நடைமுறை


aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., பிற்பகல் 12:20
பெறுநர்: நான்
தினேஷ்குமார் அசோகன்
காவல்துறையிலிருக்கிற 16 பிரிவுகளில் "செயல்பாடு மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை" (operations & tamilnadu commando force).... "தமிழ்நாடு சிறப்புப்படை" (tamilnadu special police force) இரண்டும் ஒவ்வொரு காவல் மாவட்டத்துலயும் குறைவான ஆட்கள் தான் நியமிக்கப்பட்டிருப்பாங்க...
"பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்தல்.... பொதுச்சொத்துக
்கு சேதம் விளைவித்தல்...க
ட்டுப்பாடற்ற முறையில் கூடுதல்"...
இதுபோன்ற சட்டம் & ஒழுங்கு சிக்கல்களுக்கு எல்லாம் இவங்க உள்ளயே வரமாட்டாங்க...
இதெல்லாம் அத்துமீறி நிலைமை கட்டுக்குள்ள இல்லை என்கிற நிலைமையில தான் அந்த வட்டார எஸ்.பி நிலைமையை விளக்கி மேலதிக உதவி தேவைனு டிஎஸ்பி க்கு முறையிடுவாரு...
அதே நேரத்துல அந்த குறிப்பிட்ட பகுதி "பதற்றமான பகுதி"யா அறிவிக்கப்படணும்...
டிஎஸ்பி மூலமா மாநில தலைமைச்செயலாளர்க்கு தகவல் போயி முதல்வரோட ஆலோசிச்சு அதுக்கப்புறம் தான் கலெக்டர்கிட்ட சுடுவதற்கான ஆணை வரும்...!!
கலெக்டர் தான் சுடுவதற்கான ஆணையை செயல்படுத்த கடைசிகட்ட அதிகாரம் உள்ளவர்...அவரும் ஆணை வழங்கிட்டார்னா அதுக்குப்பிறகு தான் காவல்துறை களமிறங்கணும்...!
முதலில் நிலைமையை மக்களிடம் விளக்கிச்சொல்லி இது "சட்டவிரோதமான கூட்டம்"ங்கிறத வட்டாட்சியர் தௌிவுபடுத்தணும்...
அப்பவும் கலையலன்னா லேசான தடியடி....அதுக்கும் கலையலன்னா கண்ணீர் புகை குண்டு...!!
அதுக்கும் கலையாம காவல்துறைக்கு சேதம் விளைவிச்சா மட்டுமே தான் கமாண்டோ படைக்கும் , சிறப்புக்காவல் படைக்கும் சுடுவதற்கான அதிகாரம் செல்லுபடியாகும்....
"போல்ட் ஆக்சன் ரைபிள்"களையோ "போர் பம்ப் ஆக்சன் துப்பாக்கிகளையே
ா" பயன்படுத்தலாம்....எஸ்எல்ஆர் இன்சாஸ் வகை ஆயுதங்களை பயன்படுத்த தனி அறிவிப்பாணை டிஎஸ்பி ஆல் வழங்கப்படணும்...
இதுதான் இந்தியாவில் காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்த பொதுவான நடைமுறை...!!
தமிழ்நாட்டுல மட்டும்தான் துணை வட்டாட்சியரே சுட்டுத்தள்ளிட முடியும்...!!
2 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், இராமநாதன் இராமநாதன் மற்றும் 17 பேர் வேள் நாகன்
இந்திய அரசியலமைப்பின் 13(1) சரத்தானது ஏலவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் அவை அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு முரனாக இருப்பின்கூட அத்தகைய சட்டத்திலுள்ள அம்சங்கள் செல்லுபடி அற்றதாகும் என.தெளிவாக விதந்துரைக்கின்றது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
வேள் நாகன்
அதாவது அடிப்படை உரிமைகள் தொடர்பாக சட்டவிதிகளில் இல்லாத உரிமைகளையும் உரிமயாக ஏற்றுக்கொள்கிறது ஒரு சனநாயக வழியில் போராாடுவதற்கான சகல வழிமுறைகளயும் அது ஏற்றுக்கொள்கிறது
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும் விரும்பு 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை