சனி, 5 டிசம்பர், 2020

தேவர் தமிழ் எழுத்துரு பழமை பற்றி உரை

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 8 ஆக., 2019, பிற்பகல் 4:20
பெறுநர்: எனக்கு
தேவர் திருமகன் குரல்!
**************************
எழுத்துக்கள்..
உருவ எழுத்து, கோட்டெழுத்து,
கோல எழுத்து, சதுர எழுத்து என நான்கு வகைப்படும்.
உருவ எழுத்தாக தமிழ் இருந்த காலத்திலேயே சீனம் முதலிய பாஷைகள் பிரிந்தன.
கோட்டெழுத்தாக இருந்த காலத்திலே சமஸ்கிருதமும் மற்றுமுள்ள பாஷைகள் பிரிந்தன.
வட்ட எழுத்தாக இருந்த காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பாஷைகள் பிரிந்தன.
இன்றைய தமிழெழுத்து சதுர எழுத்தாயிருக்கிறது.
இந்த எல்லா வகையான மாறுதல்களையும் பெற்ற, ஆதி மொழி தமிழாகும்.
( மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் 13.2.1949ல் மதுரை செளராஷ்ட்ரா பெண் பாடசாலையில் நடத்திய திருக்குறள் அஷ்டாவதான வைபவத்திற்கு,
தலைமை தாங்கி தேவர் திருமகன் ஆற்றிய பேருரையிலிருந்து...)
- பாவல் சங்கர்
( 'தேவர் இதய நாதம்' புத்தகம் பக். 115 )
முத்துராமலிங்கத் 
மொழிப்பற்று தமிழ்ப்பற்று பேச்சு 

தேவர் பற்றி பாடல் எழுதிய நாடார் மரணம் இரங்கல் பாட்டு கவிதை

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 8 ஆக., 2019, பிற்பகல் 4:16
பெறுநர்: எனக்கு
இரா. பசும்பொன் ராஜா
முக்குலத்தோர் எழுச்சி கழகம் உடன்.
தேவரினத்தவர்களின் தேசியகீதம் எனச்சொல்லப்படும்
முக்குலத்து வீரசிங்கம் முத்துராம லிங்கத்தங்கம் என்ற பாடலை எழுதியது ஒரு நாடார் சமூகத்தவர்.
தகவல்
எழுத்தாளர் ஐயா ஜீவபாரதி பதிவிலிருந்து.
அவரின் பதிவு கீழ்.
**********
மூத்த பத்திரிகையாளர் ஷியாம் 'தமிழக அரசியல்' என்ற பத்திரிகையில் தேசியத் தலைவர் பசும்பொன் தேவரின் வாழ்க்கை
வரலாற்றுத் தொடரின் இறுதியில் என்னு டைய 'சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர்' என்ற நூலில் நான் பதிவு செய்தி ருந்த டி.வி.பச்சையப்ப
ன், பசும்பொன் தேவரைப் பற்றி எழுதிய பாடலின் ஒரு பகு தியைக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பாடலின் முழுமையும் தேவை என்று பலர் என்னிடம் கேட்டுக் கொண்ட தால் அந்தப் பாடல் முழுமையாக இங்கே:
தொகையறா
வையகம் புகழும்வேந்தே!
வண்டமிழர் குலவிளக்கே!
தென்னகத்து வீரசிங்கம்!
தென்பாண்டி வீரமுத்தே!
வையகம் காண்பதெப்போ?
வைரமுத்து ராமலிங்கம்!
சோகம் நிறைந்தகதை
சொன்னாலும் முடிவதில்லை!
பாடல்
தென்னாட்டு வீரசிங்கம்
தேவர்முத்து ராமலிங்கம்
மக்களைத் தவிக்கவிட்டு
மரணமான சேதிகேட்டு
மனங் கலங்கிட லானோம் - அந்த
மலர்ந்த முகத்தைக் காணோம்
மாநிலத்து மாவீரன்
நல்லமுத்து ராமலிங்கம்
நான்மாடக் கூடல்என்ற
நலமான மதுரையிலே
நம்மை விட்டுப் பிரிந்தார் - அய்யோ நலிந்து மக்கள் துடித்தார்.
வீரனுக்கு வீரனாவார்
வேந்தனுக்குத் தலைவனாவார்
அஞ்சாத வீரனாவார்
ஐம்பத்தாறு வயதுமாவார்
அவனி புகழ வாழ்ந்தார் - நல்ல
அமர வாழ்வு கொண்டார்
உலகத்தின் மூத்தகுடி
உத்தமர்கள் வாழ்ந்தகுடி
அறம்பொருள் இன்பம்பேசி
அவனியிலே வாழ்ந்தகுடி
அருமை யான நாடு - தமிழ்
அறிஞர் போற்றும் நாடு
தெய்வபக்தர் உக்கிரபாண்டித்
தேவர்பெற்ற வீரமகன்
காலமான சேதிகேட்டு
காண்பதெப்போ என்றுமக்கள்
இதயங் கலங்க லாச்சு - நம்ம
இன்ப வாழ்வு போச்சு
மங்காத வீரமகன்
மதுரைமகாலட்சுமி மில்லில்
பாட்டாளி துயரைக்கண்டு
பக்குவமாய் நீதிகேட்டு
வெற்றி வாகை பெற்றார் - நல்ல
வீர ராக வாழ்ந்தார்
வெள்ளையரின் ஆதிக்கத்தை விரட்டியடிக்க வேணுமுன்னு
வீறுகொண்ட தேவர்மகன்
ஆவேசமாய்க் குதித்தார்
ஆங்கி லேயரை எதிர்த்தார் - தேவர்
அறிஞ ராக வாழ்ந்தார்
மக்களின்றி மனைவியின்றி மனசுக்குள்ளே கபடமின்றி
மாசில்லாத சேவைசெய்து
மாண்டும் தெய்வமானார்
மனங் கலங்கிடும் துயரம் - மக்களே இருந்து கேளும் விவரம்
புதுக்கோட்டை நகரத்திலே
பொல்லாத சிறையினிலே
பொய்யாகக் கேசுபோட்டு
பூட்டினார்கள் உள்ளே
தங்கஉடம்பு கெட்டு போச்சு - பார்த்த மக்கள் தவிக்க லாச்சு
பொல்லாத நோயினிலே
பொன்னான மேனிகெட்டு
மாவீரன் இல்லத்திலே
மாறாத கவலைப்பட்டு
நாளுக்கு நாள் மெலிந்தார் - அறிந்து நாட்டு மக்கள் துடித்தார்
ஐந்துமாசம் மதுரையிலும்
அதன்பிறகு வேலூரிலும்
செய்துவந்த சிகிச்சையிலே
சிறிதளவு குணமடைந்தார்
தெம்பு பெற்று நடந்தார் - தேவர்
திருந கரிலே இருந்தார்.
மதுரை மாநகரத்திலே
மகிழ்ச்சியோடு இருக்கையிலே
மறுபடி உடல்நிலையும்
மோச மாகிப் போச்சு - அய்யோ
மாளும் நிலைமை யாச்சு - மதுரை
சோக நிலை யாச்சு
எல்லாம் ஒடுங்கிப் போச்சு
செவ்வாய்க் கிழமையாச்சு
தேதிஇருபத் தொன்பதாச்சு
விடியக்கால நேரமாச்சு
ஆவி பிரிய லாச்சு - இந்த
அகிலம் இருண்டு போச்சு
அறுபத்தி மூணாம்ஆண்டு
அக்டோபர் மாதம்தனில்
திக்கெட்டும் பரவலாச்சு
தேவர்மகன் இறந்தசேதி
கேட்டு மக்கள் துடித்தார் - அன்று
தேம்பி அழுது புரண்டார்
பசும்பொன்னில் அடக்கஞ்செய்யத்
தேவர்சொன்ன சொல்லாதலால் ஆம்புலன்ஸ் காரதனில்
அதிவிரைவில் கொண்டுசென்றார்
ஆறாய்க் கண்ணீர் பெருக - மக்கள்
அழுத கண்ணீர் வடிக்க
வீரன்மாண்ட சேதிகேட்டு
வேதனையால் மக்கள்வெள்ளம்
லாரி,பஸ், சைக்கிள்,பிளசர்
ரயில்களிலும் வந்திவிடவே
சாரை சாரையாக - மக்கள்
சாலை யிலும் நடந்தார்
தேவருக்கு ஆத்மத்தோழர்
மூக்கையாத் தேவரவர்
சீமைச்சாமி மலைச்சாமி
சின்னக் கருப்பத்தேவர்
சிந்தை நொந்து கூட - மக்கள்
திரண்டு நின்று அழுக
மதுரைமுத்து என்னெம்மார்
சுப்பு ராமன்
திரைநடிகர் எஸ்எஸ்ஸாரு
அன்பழகன் என்விநின்று
தேம்பித் தேம்பி அழுதார் - தேவருக்கு இறுதி அஞ்சலி செய்தார்
தென்னாட்டு காந்திஅண்ணா
புரட்சிநடிகர் எம்ஜிஆர்
காரைக்குடி கணேசன்
கண்ணகி சக்திமோகன்
கண்ணீரைத் தான் சிந்த - அனைத்துக் கட்சிக் கொடியும் இறங்க
மதுரைநகர்த் தலைவர்வந்தார்
மந்திரிராமையா கூடவந்தார்
தங்கமணி ராமமூர்த்தி
சந்தானமும் கூடவந்தார்
சமுத்திரம் போல் ஜனங்கள் - தேவர் திருமுகத் தினை வணங்க
சிவகங்கை ராமநாடு
மன்னர்களும் வந்திருந்தார்
கடல்கடந்த மக்களெல்லாம்
கதறித்தந்தி கொடுத்திடவே
காண எண்ணித் துடித்தார் - மக்கள்
கண் கலங்கி அழுதார்
பொழுது புலர்ந்ததப்பா
புதன்கிழமை யானதப்பா
அழுது புரண்டார்கள்
அய்யோஅய்யோ என்றுசொல்லி
சொர்க்க லோகத் தேரு - அங்கே
சொகுசா நிக்குது பாரு
போலீசுக் காவலாளி
பொழுதெல்லாம் வேலைசெய்து
போக்கு வரத்துக்களை
பொறுப்போடு செய்துவந்தார்
நடுப் பகலு மாச்சு - இரண்டு
மயில்கள் வரவு மாச்சு
பைந்தமிழர் கூடிவிட்டார்
பல்லக்கையும் தூக்கிவிட்டார்
நானிலத்து மாவீரன்
நல்லமுத்து ராமலிங்கம்
வான லோகம் செல்ல - மக்கள்
மலரைத் தூவி வணங்க
பசும்பொன்னில் அடக்கம்செய்து பக்குவமாய் மேடைசெய்தார்
நவம்பர் ஒன்னாந்தேதி
நாட்டிலுள்ள கடைஅடைத்தார்
தேவரு டைய மரணம் - இந்தத்
தேசத்துக் கொரு துயரம்
நல்லவராம் நம்மமுத்து
ராமலிங்கத் தேவருக்கு
பாவலராம் பச்சையப்பன்
பாடிவிட்டார் கவிதொடுத்து
பசும்பொன் தந்த ஜோதி - இனி
பார் முழுதும் கியாதி - அய்யா
பசும்பொன் தந்த ஜோதி - இனி
பார் முழுதும் கியாதி
(இந்தப் பாடலை எழுதிய கவிஞர் டி.வி. பச்சையப்பன் நாடார் சமூகத்தில் பிறந்த வர்)
- # தேவர்_மீடியா
20 நிமிடங்கள் · Facebook for Android ·

அம்பேத்கர் மொழிவழி தேசியம் எதிர்ப்பு

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்வியா., 8 ஆக., 2019, பிற்பகல் 3:58
பெறுநர்: எனக்கு
ஆரல்கதிர் மருகன்
அம்பேத்கர் காசுமீர் பிரச்சினை குறித்து பேசியதாக நான் நேற்று பதிவொன்றை இட்டேன். நண்பர்கள் சிலர் அம்பேத்கர் குறித்த அந்த செய்தி உண்மையானதல்ல, சான்றுகளற்றது என்று கூறினார்கள். மேலும் அம்பேத்கர் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.
இந்திய அளவில் முகாமையான பல இதழ்களில் வெளிவந்த செய்திதான் அது. ஆனால் அதையெல்லாம் சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. அம்பேத்கரே கைப்பட எழுதியிருக்க வேண்டும். அம்பேத்கர் பேசியதாக இருந்தால் உடனடியாக அச்சு ஆவணமாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது உண்மை என்றும் வாதிடுகின்றனர்.
காசுமீர் சிக்கலில் அவருடைய கருத்து ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு அம்பேத்கரை நான் பகுப்பாயவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அம்பேத்கரின் எழுத்துகளும் பேச்சுகளும் தொடர்ச்சியாக தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே மொழி ஒற்றை ஆதிக்கம் என்று இன்று மோடி அரசு பேசுவதைதான் அம்பேத்கரும் பேசினார்.
இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி தொடர்பான உரையாடல் எழுந்த போது, சமற்கிருதம் ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கக் கூடாது? என அம்பேத்கர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்தியா முழுமைக்கும் ஒரே அலுவல் மொழி கொண்டு வருவதால் இந்திய மக்களை எளிதாக ஒன்றிணைக்க முடியும். பல்வேறு மொழிகளுக்கு இடையிலான பிரச்சினைகள் எழாமல் தடுக்க முடியும். அந்த தகுதி சமற்கிருதத்திற்
கு உண்டு என்று பேசியவர் அம்பேத்கர். செப்டம்பர் 11, 1949 அன்று வெளியான National Herald நாளிதழில் இடம்பெற்ற இச்செய்தியை படத்தில் காணலாம்.
அட்டவணை வகுப்பினருக்கான அகில இந்தியப் பேரவையின் (Executive committee of All India Scheduled Caste Federation) செயற்குழுவில் செப்டெம்பர் 10, 1949ல் தேசிய மொழியாக சமற்கிருதம் அறிவிக்கப் படவேண்டும் என்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்று அறிவித்தார்.
தேசிய மொழி குறித்து சர்ச்சை நிகழ்ந்து வந்த காலகட்டத்தில், சமற்கிருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று அவர் பண்டிட் லட்சுமிகாந்த மைத்ரி என்பாருடன் விவாதித்துள்ளார். அதுவும் அவர் மைத்ரியிடம் சமற்கிருதத்திலேயே இந்த விவாதத்தை நிகழ்த்தியதாக “ஆஜ்” என்கிற இந்தி நாளேட்டில் செப்டெம்பர் 15, 1949ல் செய்தி வெளியானது. இதே செய்தி அந்த பத்திரிகை மட்டும் அல்ல The Leader என்கிற ஆங்கில பத்திரிக்கையிலும் செப்டெம்பர் 13, 1949ல், “THEY CONFER IN SANSKRIT” என்று தலைப்பிட்டு செய்தி வெளி வந்தது.
2016ம் ஆண்டு அம்பேத்கரின் சமற்கிருத ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி பேசிய பாசக தலைவர் முரளிமனோகர் ஜோசி சமற்கிருதத்தின் பெருமையை அம்பேத்கர் உணர்ந்திருந்ததாக கூறி சமற்கிருதத்தை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்றார்.
தேசிய இனங்களின் அடிப்படையில் மொழிவழி மாநிலங்கள் பிரிவதை கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். இந்த கோரிக்கை எழுந்த போது மொழி வழி மாநிலங்கள் பிரிப்பதால் இந்தியாவின் ஒருமைப்பாடு சீர்குலையும் என்றார். அவ்வாறான பிரிவினை பல்வேறு மொழிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இத்தகைய மொழிவழிப் பிரிவினையால் இனப்பெருமை, தத்தமது இலக்கியப் பெருமை பேசுவதும் அதிகரிக்கும். நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்குமான உறவும் பாதிக்கும்.
ஒவ்வொரு மாநிலமும் இந்திய தேசத்தோடு ஒன்றிணைந்தே இருக்க வேண்டும். மொழிவழிப் பிரிவினையால் அதில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் பேசினார்.
(Dr.B.R. Ambedkar's thoughts on linguistic states of India எனும் நூலின் 458 வது பக்கத்தை படத்தில் பார்க்க)
அதே அம்பேத்கர் வேறொரு இடத்தில் மொழிவழி மாநிலங்கள் அமைவதை தான் எதிர்க்கவில்லை என்றாலும் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியே அவர்களது அலுவல் மொழியாக இருப்பதை தான் கடுமையாக எதிர்ப்பதாக கூறுகிறார். மேலும் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியே அவர்களது அலுவல் மொழியாக ஒருபோதும் இருக்கக் கூடாது என்றும் இந்தியா முழுமைக்கும் ஒரே மொழிதான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் உறுதியாக கூறுகிறார்.
(Dr.B.R. Ambedkar's writings and speeches, volume 1 பக்கம் 104-105 படத்தில் உள்ளது)
இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க பரிந்துரைத்த அம்பேத்கர் பின்வருமாறு சொல்கிறார்.
"இந்தியைத் தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களுக்கும் மறுக்க முடியாத கடமையாகும்.மொழிவாரி மாநில அமைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதி யான இந்த யோசனையை ஏற்காத எந்த இந்தியனும் ஓர் இந்தியனாக இருக்க அருகதையற்றவன்"
எச்.இராசா பேசியதைப் போல் இருக்கிறதா? நம்புங்கள் இவை அம்பேத்கருடைய வார்த்தைகள்.
தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை குறித்த அம்பேத்கரின் பார்வை இவ்வாறிருக்க பாக்கித்தான் பிரிவினை குறித்து அம்பேத்கர் என்ன சொல்கிறார் பாருங்கள்,
"இந்தியாவும் பாக்கித்தானும் ஒரே நாடாக இருந்திருந்தால், இந்துக்கள் சுதந்திரமுடையவர்களாக இருந்தாலும் முசுலீம்களின் தயவைப் பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில்தான்
இருந்திருப்பார்கள். இந்து மகாசபை, ஜன சங்கம் போன்றவை இருந்தாலும் முஸ்லீம்கள் எத்தகைய தடங்கலும் இன்றி ஆளும் வர்க்கத்தினராக இருந்திருப்பார்கள்’’ எனவே, தான் இந்தியா பாக்கித்தான் பிரிவினையை ஆதரிப்பதாக கூறுகிறார்.
ஐயா பெ.மணியரசன் எழுதிய "சாதியும் தமிழ்த்தேசியமும்" நூலில் அம்பேத்கரின் இந்த கருத்தை திறனாய்வு செய்திருக்கிறார். (பக்கம் 23)
மெத்த படித்த அம்பேத்கருக்கு தெரியும் இந்தியாவை தேசம் என்று சொன்னால் உலகம் சிரிக்கும் என்று. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியாவை ஒன்றியம் என்றே குறிப்பிட்டார். ஆனால் தன்னுடைய பேச்சிலும் எழுத்திலும் இந்தியாவை தேசம் என்றே அழைத்தார்.
அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து கற்பி, ஒன்றுசேர், கலகம் செய் என்று சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் அவர் வார்த்தைகளின் உட்பொருள்,
"இந்தியில் கற்பி!
இந்தியனாக ஒன்றுசேர்!
இந்தியா வரையறுத்துள்ள எல்லைகளுக்குட்பட்டு கலகம் செய்!"
என்பதுதான்.
நமக்கு என்னவோ இக்கருத்துகள் வியப்பாக இருக்கலாம். ஆனால் வடநாட்டு தலித்தியவாதிகளோ அம்பேத்கர் இப்படி பேசியதையும் எழுதியதையும் பெருமையாக பார்ப்பர். அதுதான் வேறுபாடு. அதனால் தான் சொல்கிறோம் தலித்தியம் என்பது இந்திய தேசியவாதத்தின் மற்றொரு முகமே! அது ஒருபோதும் தேசிய இனங்களின் தன்னுரிமையை ஏற்காது!
22 மணி நேரம் · Facebook for Android ·

தலித் தலித்தியம் ஹிந்தியா







காஷ்மீர் அடக்குமுறை க்கு அம்பேத்கர் ஆதரவு

 

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 6 ஆக., 2019, பிற்பகல் 4:31
பெறுநர்: எனக்கு
ஆரல்கதிர் மருகன்
பகுஜன் சமாஜ் கட்சி காசுமீர் சிறப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதை ஆதரித்துள்ளதாக நம்மவர்கள் சிலர் கோபப்படுகிறார்கள்.
நேரு தலைமையமைச்சராக இருந்தபோது சட்டப்பிரிவு 370 குறித்த உரையாடல் நிகழ்ந்த தருணத்தில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இது,
"இந்தியா உங்கள் எல்லைகளைப் பாதுகாக்கிறது. உங்களுக்கு உணவு தானியங்களைத் தருகிறது. உங்களுக்கு சாலை அமைத்துத் தருகிறது. ஆனால் காசுமீரில் இந்தியாவிற்கு உரிமை இருக்கக் கூடாது என்கிறீர்கள். சட்டப்பிரிவு 370 மூலமாக காசுமீருக்கு சிறப்புத் தகுதிகள் அளிப்பதை இந்தியா விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை. ஒரு சட்ட அமைச்சராக நான் இந்த சட்டப்பிரிவை கடுமையாக எதிர்க்கிறேன்"
சாதியால் ஒடுக்கப்பட்ட ஒருவனை பண்ணையடிமையாக வைத்திருக்கும் பண்ணையார்கள், "உங்களுக்கு நாங்கள் சோறு போடுகிறோம், வீடு தருகிறோம், இதையும் தாண்டி நீங்கள் எங்களுக்கு நிகராக வருவதற்கு இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே இது ஞாயமா?" என்று கேட்டால் அம்பேத்கர் ஏற்றுக் கொண்டிருப்பாரா?
ஆனால் அம்பேத்கரின் இந்த பேச்சும் அதை ஒத்ததுதானே? ஒரு பண்ணையார் மனநிலை என்று இதை சொல்லக் கூடாதா? சாதாரண பண்ணையார் மனநிலை அல்ல. பாரதமாதா பண்ணையார் மனநிலை.
ஐயா பெ.மணியரசன் ஒன்று சொல்வார் இந்திய தேசியத்துக்கு ஆதரவாகப் பேசும் இடங்களில் எல்லாம் அம்பேத்கர் ஒரு தீவிர இந்துத்துவவாதியைப் போல செயல்பட்டார் என்று.
உண்மைதான்.
அம்பேத்கரிசம் என்பதே அடிப்படையில் முற்போக்கு முலாம் பூசப்பட்ட இந்திய தேசியவாதம் தான்!
ஜெய்ஹிந்த் என்பதற்கும் ஜெய்பீம் என்பதற்கும் வேறுபாடு கிடையாது!
அம்பேத்கரை முன்னிறுத்தும் தலித்தியம் தேசிய இனங்களின் தன்னுரிமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகத்தான் இருக்கும்.

தலித்தியம் சட்டம் ஹிந்தியா 

நீட் தற்கொலை பட்டியல் 7 மாணவிகள்

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 5 ஆக., 2019, பிற்பகல் 5:42
பெறுநர்: எனக்கு
அரியலூர் அனிதா, 
விழுப்புரம் மோனிஷா மற்றும் பிரதீபா, 
திருப்பூர் ரிதுஸ்ரீ், 
பட்டுக்கோட்டை வைஸ்யா,
பெரம்பலூர் தனலட்சுமி,  
நெல்லை கீர்த்தனா 

செய்தி பத்திரிகை பத்திரிக்கை கல்வி மருத்துவம் 

காஷ்மீர் பற்றி சுருக்கமாக

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 5 ஆக., 2019, பிற்பகல் 3:09
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம்,
ராசசேகரன் மன்னை மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
“காஷ்மீர் பிரச்சனை” என்றால் என்ன??
இந்தியா சுதந்திரம் பெற்ற போது,
இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன..
இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது
2. பாகிஸ்தானுடன் இணைவது
3. தற்சார்புடன் இருப்பது..
அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், ஹைதிராபாத் மன்னரும்,
ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். ஹைத்திராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன.
ஜம்மு -காஷ்மீர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (80 சதவிகிதம்) வசிக்கும் மாநிலமாகும் எனவே, காஷ்மீரின் மன்னர் ஹரிசிங் தற்சார்புடன் இருக்கவே முடிவு செய்தார்.
அவர் காஷ்மீரை ஆசியாவின் சுவிட்சர்லாந்தாக மாற்ற வேண்டும் என்கிற கனவுடன் இருந்தார். அவர், பாகிஸ்தான்-இந்தியா ஆகிய இரு தேசங்களையும் பொறுத்திருக்கும
்படி கேட்டுக்கொண்டார் (நடவடிக்கைகளை நிலுவையில் வைக்கும்படி). அதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட போதும், இந்தியா மறுத்தது.
காஷ்மீர் பிரச்சனை குறித்த
எந்தத் தீர்வையும் எட்டுவதற்கு முன்னரே, பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது.
பழங்குடியினரின் போர்வையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களில்,
தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா முக்கியப் பங்காற்றினார். காஷ்மீர் மன்னர்
தன் தூதுவர்கள் மூலம் ராணுவத்தை அனுப்பி, தன்னுடைய தேசத்தை மீட்டுத்தரும்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டார். இந்திய ராணுவம் வந்து தலையிடுவதை ஷேக் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
‘காஷ்மீருடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், அங்கு ராணுவத்தை அனுப்ப இயலாது' என நேரு அறிவித்தார். காஷ்மீருடன் எந்த சட்டத் தொடர்பும் அப்போது இந்தியாவுக்கு இல்லை.
அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சட்டப்பிரிவு 370 இன் கீழ் இணைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அந்த இணக்க ஒப்பந்தத்தின் படி, இரண்டு தலைவர்கள் -இரண்டு அரசியல் அமைப்புகள். அதன்படி காஷ்மீரின் ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, தொலைத்தொடர்பு, நாணயம் ஆகியவற்றை இந்தியா பார்த்துக் கொள்ளும். மாநில சட்டமன்றம் மற்ற பிரச்சனைகளைப் பார்த்துக் கொள்ளும்.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. ஏனெனில், காஷ்மீருக்கு சொந்தமான அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் இந்தியா ராணுவத்தை அனுப்பியது.
ஆனால் இந்த நேரத்தில், காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது.
பொதுமக்களுக்கு சங்கடங்கள்
உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த பிரச்சனை அய்க்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அய்.நா.வின் தீர்மானத்தின்படி,
இரு நாட்டு ராணுவங்களும் வெளியேற்றப்பட்டு, அதன் பிறகு அங்குள்ள பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்..என
ஆனால் கருத்துக்கணிப்ப
ை இன்றுவரை நடத்த முடியவில்லை.
பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ‘சுதந்திர காஷ்மீர்' என அறிவித்தது. அந்தப் பகுதிக்கு பிரதமரையும் அமைப்பு விதிகளையும் அறிவித்தது.
ஜன சங்கம் மற்றும் பல தேசிய சக்திகள் காஷ்மீரின் தனித்தன்மையை மட்டுப்படுத்தி, இந்தியாவுடன் இணைந்திடுமாறு இந்திய அரசை வற்புறுத்தின.
ஆனால், பிரதமர் ஷேக் அப்துல்லா இந்தியா கொடுத்த அழுத்தங்களுக்கு
ப் பணிய மறுத்தார். எனவே அரசெதிர்ப்பு செயல் -தேசத் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு, 17 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தக் காலத்தில்தான் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ‘காஷ்மீர் பிரதமர்' என்கிற பதவி ‘காஷ்மீர் முதல் அமைச்சர்' என்றும், ‘சர்தார் -இ -ரியாசத்' என்கிற பதவி ‘ஆளுநர்' பதவியாகவும் மாற்றம் பெற்றது. மெல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. காஷ்மீரின் விவகாரங்களை
மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியது. அங்கு இருந்த ஜனநாயகம் சார்ந்த நடவடிக்கைகள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கின.
இன்றுவரை மத்திய அரசு மற்றும் அங்குள்ள மாநில ஆட்சியாளர்கள் உள்ளூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இல்லை.
1984 இல் பரூக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1987 தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லை. இவை அனைத்தும் காஷ்மீர் வாழ் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மெல்ல வன்முறையின் பால் ஈர்க்கப்பட்டனர்.
இது, காஷ்மீர் மக்களைப் பெரிதும் அந்நியப்படுத்தியது..
ஜனநாயக நடைமுறைகள் செயலிழக்க,
ஜனநாயக நடைமுறைகளுக்குப் பல தடைகள் ஏற்பட்ட பின்னணியில்தான் அங்கு தீவிரவாதம் தலைதூக்கியது.
அங்கு நிலவிய அதிருப்தியான மனநிலை, தீவிரவாதத்திற்க
ு ஆதரவாக திசைமாறியது. பாகிஸ்தான் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் தனது தீவிரவாதப் படைகளை காஷ்மீருக்கு அனுப்பி நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியது.
மீண்டும் பரூக் அப்துல்லா
ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கூட, மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை இது தெளிவுபடுத்தியது.
இந்த நிலைக்கு மற்றொரு காரணம், காஷ்மீரில் அல் கொய்தாவின் நுழைவு. ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சிகள் செய்ய அமெரிக்கா அனுப்பிய அல்கொய்தா படைகளின் ஒரு பகுதி, அங்கு பணியை முடித்துவிட்டு காஷ்மீருக்குள் நுழைந்தது.
1980களில் இந்தியாவில் நிலவிய மதவாத சூழல், காஷ்மீரில் மேலும் வன்முறை வளர காரணமாக அமைந்தது.
காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் இடையே நிலவிய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அங்கும் மதவாத சக்திகள் தங்கள் பணியைத் தொடங்கின. இது, மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அமைந்தது. சில பயங்கரவாதிகள் இந்துக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களிடையே அச்சத்தை விதைத்தனர்.
காஷ்மீரின் ஆளுநர் ஜக்மோகன், ‘காஷ்மீரில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளே' என்கிற அடிப்படையில் செயல்பட்டார்.
பண்டிதர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினால்தான் தீவிரவாதிகளை ஒடுக்க இயலும் என அவர் கூறினார். அதன்படி பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற பல்வேறு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
முஸ்லிம்களும் தலைவர்களும்,
இதனை தடுத்திட முழுவதுமாக முயன்றனர். ஆனால் ஆளுநர் ஜக்மோகனின் தூண்டுதலால் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறி, அகதிகள் முகாம்களில் குடியமர்த்தப்பட
்டனர்.
அங்கு நிகழ்ந்த தீவிரவாத வன்முறையில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பல முஸ்லிம் குடும்பங்களும் காஷ்மீரை விட்டு வெளியேறினர்.
இரு நாடுகளிடையே நிலவிய பிரச்சனை தான் காஷ்மீர் நிலவரத்துக்கு மதவாத சாயத்தைப் பூசியது. காஷ்மீரின் தலைவர்களுக்கு பாகிஸ்தானுடன் இணைந்திடும் சூழல் ஏற்பட்ட பொழுதும் கூட, அவர்கள் அவ்வாறு முடிவெடுக்கவில்லை.
பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி, இன்றும் கூட காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை. இந்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளால் ஏற்படும் தொடர்ச்சியான அந்நியமாதல், இனக்குழுக்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுதல், தொடர்ந்து காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்ப்பு எனப் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற பிறகும்-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை.
இன்றும்
காஷ்மீர் மக்களின்
முக்கியக் கோரிக்கை :-
இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவது..
காஷ்மீரின் பூர்வ இன தன்மையைப் பாதுகாப்பது, வன்முறைகள் நிறுத்தப்பட்டு அமைதியுடன் கூடிய வாழ்வைப் பெறுவது. பாகிஸ்தான் அரசு தனது தலையீட்டை நிறுத்துவது மற்றும் இந்திய அரசு காஷ்மீரிகளை நம்புவது.
2000 இல் "அவுட் லுக்' நடத்திய கருத்துக்கணிப்பின் படி, 74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்பு வேண்டும் என்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர்..
39 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்பினர்.
1987இல் நடைபெற்ற முறைகேடான தேர்தலுக்குப் பிறகுதான் 1990இல் பயங்கரவாத நடவடிக்கைகள் நிலைப்படுத்தப்பட்டன. அங்கு நடைபெற்ற கலவரங்களில் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை நாம் பார்க்க வேண்டும்.
காஷ்மீர் பண்டிதர்கள்
காஷ்மீரிலிருந்து பண்டிதர்கள் மொத்தமாக வெளியேறியது, பள்ளத்தாக்கின் மரபுக்கு நேர்ந்த
பெரும் தலைக்குனிவு.
புள்ளிவிவரங்களின் படி, அங்கு நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதா
க கருதப்படும் கூற்றுகள் பொய்யாகின்றன.
1986இல் தான் பண்டிதர்கள் முதலில் வெளியேறத் தீர்மானித்தனர். ஆனால் நல்லிணக்கக் குழுவின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது. 1990களில் ராணுவம் காஷ்மீரில் குவிக்கப்பட்டது. ஆளுநராகப் பதவியேற்ற ஜக்மோகன் மெல்ல தனது செயல் திட்டத்தை தொடங்கினார். நல்லிணக்கக் குழுவை அவர் செயலிழக்கச் செய்துவிட்டு, அந்த குழுவிலிருந்து ஒருவரை ஜம்முவுக்கு குடிபெயரச் செய்தார் (பூரி, காஷ்மீர், ஓரியண்ட் லாங்மேன், 1974, பக்கம் 65).
பால்ராஜ் பூரி, 1990 மார்ச்சில் இவ்வாறு கூறுகிறார் : “காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் பண்டிதர்கள் இடையில் எந்தப் பகைமை உணர்வையும் நான் காணவில்லை. ஆனால், அங்குள்ள பாதுகாப்புப் படைகளின் மனித உரிமை மீறல்கள் தான் இன்று விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்'' (பூரி, பக்.66). “அந்த நேரத்தில் பண்டிதர்கள் இடையே வன்முறையையும் அச்ச உணர்வையும் இந்து மதவாத இயக்கங்கள் ஏற்படுத்தின. காஷ்மீரைப் பற்றி ஏராளமான தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான இந்து கோயில்கள் தகர்க்கப்படுவதாக தகவல்கள் மக்கள் மனங்களில் விதைக்கப்படுகின்றன. இதில் ஒரு பகுதி மட்டும் தான் உண்மை'' (‘பிரஸ் கவுன்சில்', 1991).
# ராம்_புனியானி
தமிழில்: அ.முத்துக்கிருஷ்ணன்
தலித் முரசு (செப்டம்பர் 2008)

மயிலாடுதுறை மேலபெரும்பள்ளம் பானையோடு தமிழி எழுத்துரு நம்மன்

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 5 ஆக., 2019, முற்பகல் 11:51
பெறுநர்: எனக்கு
Ingersol Selvaraj
மயிலாடுதுறை - பூம்புகாருக்கு அருகே மேலபெரும்பள்ளம் எனும் ஊரில் நிகழ்த்திய அகழாய்வின் போது கிட்டிய ஈமப் பானைகளின் மீது எழுதப்பட்ட சிந்து எழுத்தகள். வலப்புறம் கவிழ்க்கப்பட்டு உள்ள பானை. I - ந, < (மேல் நோக்கு முக்கோணம்) - ம், மீண்டும் முக்கோணம் > ம, I - ன்.
நம்மன் என்பது ஒரு பழந் தமிழ்ப் பெயர். மதுராந்தகம் அருகே அமைந்த சானூரிலும் இவ்வாறு முக்கோணங்களின் நடுவே கோடு வரையப்பட்ட பானை ஓடு கிட்டி உள்ளது. சிந்து முத்திரை ஒன்றில் கோட்டின் மேலே முக்கோணம்(V) இடப்பட்டு மீண்டும் அவ்வாறே கோட்டின் மேல் முக்கோணம்(V) இடப்பட்டு உள்ளது. இதே நம்மன் தான் அதுவும். இந்த நம்மன் உகர ஈறு பெற்று சுமேரிய நாகரிக மன்னன் ஒருவனுக்கு ஊர் - நம்மு என்று பெயராக உள்ளது.
சுமேரியா சிந்துசமவெளி தொடர்பு பிராமி பானை கீறல்