சனி, 5 டிசம்பர், 2020

அம்பேத்கர் மொழிவழி தேசியம் எதிர்ப்பு

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்வியா., 8 ஆக., 2019, பிற்பகல் 3:58
பெறுநர்: எனக்கு
ஆரல்கதிர் மருகன்
அம்பேத்கர் காசுமீர் பிரச்சினை குறித்து பேசியதாக நான் நேற்று பதிவொன்றை இட்டேன். நண்பர்கள் சிலர் அம்பேத்கர் குறித்த அந்த செய்தி உண்மையானதல்ல, சான்றுகளற்றது என்று கூறினார்கள். மேலும் அம்பேத்கர் தேசிய இனங்களின் உரிமைகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.
இந்திய அளவில் முகாமையான பல இதழ்களில் வெளிவந்த செய்திதான் அது. ஆனால் அதையெல்லாம் சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது. அம்பேத்கரே கைப்பட எழுதியிருக்க வேண்டும். அம்பேத்கர் பேசியதாக இருந்தால் உடனடியாக அச்சு ஆவணமாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அது உண்மை என்றும் வாதிடுகின்றனர்.
காசுமீர் சிக்கலில் அவருடைய கருத்து ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு அம்பேத்கரை நான் பகுப்பாயவில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அம்பேத்கரின் எழுத்துகளும் பேச்சுகளும் தொடர்ச்சியாக தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே மொழி ஒற்றை ஆதிக்கம் என்று இன்று மோடி அரசு பேசுவதைதான் அம்பேத்கரும் பேசினார்.
இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி தொடர்பான உரையாடல் எழுந்த போது, சமற்கிருதம் ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்கக் கூடாது? என அம்பேத்கர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்தியா முழுமைக்கும் ஒரே அலுவல் மொழி கொண்டு வருவதால் இந்திய மக்களை எளிதாக ஒன்றிணைக்க முடியும். பல்வேறு மொழிகளுக்கு இடையிலான பிரச்சினைகள் எழாமல் தடுக்க முடியும். அந்த தகுதி சமற்கிருதத்திற்
கு உண்டு என்று பேசியவர் அம்பேத்கர். செப்டம்பர் 11, 1949 அன்று வெளியான National Herald நாளிதழில் இடம்பெற்ற இச்செய்தியை படத்தில் காணலாம்.
அட்டவணை வகுப்பினருக்கான அகில இந்தியப் பேரவையின் (Executive committee of All India Scheduled Caste Federation) செயற்குழுவில் செப்டெம்பர் 10, 1949ல் தேசிய மொழியாக சமற்கிருதம் அறிவிக்கப் படவேண்டும் என்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்று அறிவித்தார்.
தேசிய மொழி குறித்து சர்ச்சை நிகழ்ந்து வந்த காலகட்டத்தில், சமற்கிருதம் தேசிய மொழியாக வேண்டும் என்று அவர் பண்டிட் லட்சுமிகாந்த மைத்ரி என்பாருடன் விவாதித்துள்ளார். அதுவும் அவர் மைத்ரியிடம் சமற்கிருதத்திலேயே இந்த விவாதத்தை நிகழ்த்தியதாக “ஆஜ்” என்கிற இந்தி நாளேட்டில் செப்டெம்பர் 15, 1949ல் செய்தி வெளியானது. இதே செய்தி அந்த பத்திரிகை மட்டும் அல்ல The Leader என்கிற ஆங்கில பத்திரிக்கையிலும் செப்டெம்பர் 13, 1949ல், “THEY CONFER IN SANSKRIT” என்று தலைப்பிட்டு செய்தி வெளி வந்தது.
2016ம் ஆண்டு அம்பேத்கரின் சமற்கிருத ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி பேசிய பாசக தலைவர் முரளிமனோகர் ஜோசி சமற்கிருதத்தின் பெருமையை அம்பேத்கர் உணர்ந்திருந்ததாக கூறி சமற்கிருதத்தை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்றார்.
தேசிய இனங்களின் அடிப்படையில் மொழிவழி மாநிலங்கள் பிரிவதை கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். இந்த கோரிக்கை எழுந்த போது மொழி வழி மாநிலங்கள் பிரிப்பதால் இந்தியாவின் ஒருமைப்பாடு சீர்குலையும் என்றார். அவ்வாறான பிரிவினை பல்வேறு மொழிச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இத்தகைய மொழிவழிப் பிரிவினையால் இனப்பெருமை, தத்தமது இலக்கியப் பெருமை பேசுவதும் அதிகரிக்கும். நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்குமான உறவும் பாதிக்கும்.
ஒவ்வொரு மாநிலமும் இந்திய தேசத்தோடு ஒன்றிணைந்தே இருக்க வேண்டும். மொழிவழிப் பிரிவினையால் அதில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் பேசினார்.
(Dr.B.R. Ambedkar's thoughts on linguistic states of India எனும் நூலின் 458 வது பக்கத்தை படத்தில் பார்க்க)
அதே அம்பேத்கர் வேறொரு இடத்தில் மொழிவழி மாநிலங்கள் அமைவதை தான் எதிர்க்கவில்லை என்றாலும் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியே அவர்களது அலுவல் மொழியாக இருப்பதை தான் கடுமையாக எதிர்ப்பதாக கூறுகிறார். மேலும் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியே அவர்களது அலுவல் மொழியாக ஒருபோதும் இருக்கக் கூடாது என்றும் இந்தியா முழுமைக்கும் ஒரே மொழிதான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்றும் உறுதியாக கூறுகிறார்.
(Dr.B.R. Ambedkar's writings and speeches, volume 1 பக்கம் 104-105 படத்தில் உள்ளது)
இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க பரிந்துரைத்த அம்பேத்கர் பின்வருமாறு சொல்கிறார்.
"இந்தியைத் தங்கள் மொழியாக ஏற்றுக் கொள்வது அனைத்து இந்தியர்களுக்கும் மறுக்க முடியாத கடமையாகும்.மொழிவாரி மாநில அமைப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதி யான இந்த யோசனையை ஏற்காத எந்த இந்தியனும் ஓர் இந்தியனாக இருக்க அருகதையற்றவன்"
எச்.இராசா பேசியதைப் போல் இருக்கிறதா? நம்புங்கள் இவை அம்பேத்கருடைய வார்த்தைகள்.
தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை குறித்த அம்பேத்கரின் பார்வை இவ்வாறிருக்க பாக்கித்தான் பிரிவினை குறித்து அம்பேத்கர் என்ன சொல்கிறார் பாருங்கள்,
"இந்தியாவும் பாக்கித்தானும் ஒரே நாடாக இருந்திருந்தால், இந்துக்கள் சுதந்திரமுடையவர்களாக இருந்தாலும் முசுலீம்களின் தயவைப் பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில்தான்
இருந்திருப்பார்கள். இந்து மகாசபை, ஜன சங்கம் போன்றவை இருந்தாலும் முஸ்லீம்கள் எத்தகைய தடங்கலும் இன்றி ஆளும் வர்க்கத்தினராக இருந்திருப்பார்கள்’’ எனவே, தான் இந்தியா பாக்கித்தான் பிரிவினையை ஆதரிப்பதாக கூறுகிறார்.
ஐயா பெ.மணியரசன் எழுதிய "சாதியும் தமிழ்த்தேசியமும்" நூலில் அம்பேத்கரின் இந்த கருத்தை திறனாய்வு செய்திருக்கிறார். (பக்கம் 23)
மெத்த படித்த அம்பேத்கருக்கு தெரியும் இந்தியாவை தேசம் என்று சொன்னால் உலகம் சிரிக்கும் என்று. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியாவை ஒன்றியம் என்றே குறிப்பிட்டார். ஆனால் தன்னுடைய பேச்சிலும் எழுத்திலும் இந்தியாவை தேசம் என்றே அழைத்தார்.
அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து கற்பி, ஒன்றுசேர், கலகம் செய் என்று சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் அவர் வார்த்தைகளின் உட்பொருள்,
"இந்தியில் கற்பி!
இந்தியனாக ஒன்றுசேர்!
இந்தியா வரையறுத்துள்ள எல்லைகளுக்குட்பட்டு கலகம் செய்!"
என்பதுதான்.
நமக்கு என்னவோ இக்கருத்துகள் வியப்பாக இருக்கலாம். ஆனால் வடநாட்டு தலித்தியவாதிகளோ அம்பேத்கர் இப்படி பேசியதையும் எழுதியதையும் பெருமையாக பார்ப்பர். அதுதான் வேறுபாடு. அதனால் தான் சொல்கிறோம் தலித்தியம் என்பது இந்திய தேசியவாதத்தின் மற்றொரு முகமே! அது ஒருபோதும் தேசிய இனங்களின் தன்னுரிமையை ஏற்காது!
22 மணி நேரம் · Facebook for Android ·

தலித் தலித்தியம் ஹிந்தியா







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக