சனி, 5 டிசம்பர், 2020

காஷ்மீர் அடக்குமுறை க்கு அம்பேத்கர் ஆதரவு

 

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 6 ஆக., 2019, பிற்பகல் 4:31
பெறுநர்: எனக்கு
ஆரல்கதிர் மருகன்
பகுஜன் சமாஜ் கட்சி காசுமீர் சிறப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதை ஆதரித்துள்ளதாக நம்மவர்கள் சிலர் கோபப்படுகிறார்கள்.
நேரு தலைமையமைச்சராக இருந்தபோது சட்டப்பிரிவு 370 குறித்த உரையாடல் நிகழ்ந்த தருணத்தில் அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இது,
"இந்தியா உங்கள் எல்லைகளைப் பாதுகாக்கிறது. உங்களுக்கு உணவு தானியங்களைத் தருகிறது. உங்களுக்கு சாலை அமைத்துத் தருகிறது. ஆனால் காசுமீரில் இந்தியாவிற்கு உரிமை இருக்கக் கூடாது என்கிறீர்கள். சட்டப்பிரிவு 370 மூலமாக காசுமீருக்கு சிறப்புத் தகுதிகள் அளிப்பதை இந்தியா விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை. ஒரு சட்ட அமைச்சராக நான் இந்த சட்டப்பிரிவை கடுமையாக எதிர்க்கிறேன்"
சாதியால் ஒடுக்கப்பட்ட ஒருவனை பண்ணையடிமையாக வைத்திருக்கும் பண்ணையார்கள், "உங்களுக்கு நாங்கள் சோறு போடுகிறோம், வீடு தருகிறோம், இதையும் தாண்டி நீங்கள் எங்களுக்கு நிகராக வருவதற்கு இட ஒதுக்கீடு கேட்கிறீர்களே இது ஞாயமா?" என்று கேட்டால் அம்பேத்கர் ஏற்றுக் கொண்டிருப்பாரா?
ஆனால் அம்பேத்கரின் இந்த பேச்சும் அதை ஒத்ததுதானே? ஒரு பண்ணையார் மனநிலை என்று இதை சொல்லக் கூடாதா? சாதாரண பண்ணையார் மனநிலை அல்ல. பாரதமாதா பண்ணையார் மனநிலை.
ஐயா பெ.மணியரசன் ஒன்று சொல்வார் இந்திய தேசியத்துக்கு ஆதரவாகப் பேசும் இடங்களில் எல்லாம் அம்பேத்கர் ஒரு தீவிர இந்துத்துவவாதியைப் போல செயல்பட்டார் என்று.
உண்மைதான்.
அம்பேத்கரிசம் என்பதே அடிப்படையில் முற்போக்கு முலாம் பூசப்பட்ட இந்திய தேசியவாதம் தான்!
ஜெய்ஹிந்த் என்பதற்கும் ஜெய்பீம் என்பதற்கும் வேறுபாடு கிடையாது!
அம்பேத்கரை முன்னிறுத்தும் தலித்தியம் தேசிய இனங்களின் தன்னுரிமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகத்தான் இருக்கும்.

தலித்தியம் சட்டம் ஹிந்தியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக