திங்கள், 10 பிப்ரவரி, 2020

மதம் தாண்டிய தமிழர் பண்பாடு பின்பற்ற செய்யவேண்டியவை

aathi1956 aathi1956@gmail.com

திங்., 20 ஆக., 2018, முற்பகல் 11:30
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்,
தமிழ்ப்புகழ் குணசேகரன் களத்தமிழன் பாண்டியர் மற்றும் 35 பேருடன் இருக்கிறார்.
மரபுவழி தமிழ் தேசியரின் 10 கடமைகள்
=================================
கடமை_1: எச்சமயத்தவராயினும் குலதெய்வ வழிபாடு அவசியம். சிறுதெய்வம் என்று சிறுமைப்படுத்தும் வைதீகம், ஷிர்க் என்று ஒழிக்கும் இஸ்லாம், சாத்தான் என்று ஏசும் கிருத்தவம் ஆகியற்றில் இருப்போரும், சைவ, வைணவ, பௌத்த சமயங்களில் இருப்போர் குலதெய்வ வழிபாடு தமிழரின் ஆதி வழிபாடு என்பதனை உணர்ந்து குல தெய்வ வழிபாடு செய்வதுபோல், வைதீக, இஸ்லாமிய, கிருத்துவ சமயங்களில் இருக்கும் தமிழர்களும் ,தம் மக்களுக்கு குலதெய்வ கோவில்களில் முடியிறக்கி காது குத்த வேண்டும் !!!!

கடமை_2: எச்சமயத்தவராயினும் தம் இறையை தமிழ் மொழியிலேயே வழிபட வேண்டும். வைதீகம் ஆரியத்தையும், இசுலாம் அரேபியத்தையும், கிருத்துவம் இலத்தீனையும், பௌத்தம் பாலியையும் வழிப்பாட்டில் திணிக்கிறது. இன்று சைவ, வைணவ சமயத்தில் இருப்போர் பலர், தமிழ் மொழியின் ஆற்றலை உணர்ந்து, தமிழ் வழிப்பாட்டிற்கு மாறியுள்ளனர். திருமுறை, பாசுரங்களை பாடுகின்றனர். அதேப்போல் பிற சமயத்தவரும் தமிழிலேயே வழிபாடு செய்யவேண்டும்!!!

கடமை_3: தமிழர் தம் மக்களுக்கு செந்தமிழ் பெயர்களையே சூட்டல் வேண்டும். ஆண்கள் பெயர் 'அன்'/இகர விகுதியிலேயே முடிய வேண்டும். எ-கா) மாறன், நன்னன், எழிலன், செழியன், பெருவழுதி, இளஞ்செட்சென்னி.
பெண்கள் பெயர், இ/ஐ ஆகியவற்றிலேயே முடிய வேண்டும். எ-கா) கண்ணகி, மாதவி, கோதை, ஔவை.
தமிழ் பெயரியல் முறையிலேயே இருத்தல் வேண்டும்.
//ஊர்பெயர்// //தந்தை பெயர்// //சொந்தபெயர்// என்றிருத்தல் வேண்டும். எகா) மதுரை கணக்காயனார் மகன் நக்கீரன்.

கேரளா நிவாரணம் உதவிகள் பட்டியல் யார்யார்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 19 ஆக., 2018, முற்பகல் 11:33
பெறுநர்: எனக்கு
கேரளாவுக்கு கிடைத்துள்ள நிதியுதவிகள் எவ்வளவு?

லங்காசிறிக்கு செல்ல
மேலதிக செய்திகளுக்கு
முகப்புக்கு செல்ல
முக்கிய செ... பிரபலமானவ...
வீடியோ கட்டுரைகள்
இணையத்தி... நேற்று அதி...
இந்தவாரம் அ... 0
SHARES 0
SHARES
#Kerala Floods

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு, நாடு முழுவதிலுமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.
தனிநபர்கள், அமைப்புகளைத் தாண்டி, மாநில அரசுகளும் நிதி உதவி அறிவித்துவருகின்றன
கேரளாவை மீட்டெடுக்க அனைவரும் நிதியுதவி அளிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல் கட்ட ஆய்வின் படி மழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவில் 19,512 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை கேரளாவுக்கு கிடைத்துள்ள நிதியுதவிகள்
மத்திய அரசு - 600 கோடி
தெலங்கானா - ரூ. 25 கோடி
மஹாராஷ்ட்ரா - ரூ. 20 கோடி
தமிழ்நாடு - ரூ. 10 கோடி
பீகார் - ரூ.10 கோடி
ஆந்திரா - ரூ.10 கோடி
டெல்லி - ரூ.10 கோடி
பஞ்சாப் - ரூ. 10 கோடி
குஜராத் - ரூ. 10 கோடி
மத்திய பிரதேசம் - ரூ. 10 கோடி
கர்நாடகா - ரூ. 10 கோடி
இமாச்சலப் பிரதேசம் - ரூ. 5 கோடி
ஜார்கண்ட் - ரூ. 5 கோடி
ஒடிசா - ரூ. 5 கோடி
உத்தரகாண்ட் - ரூ. 5 கோடி
யூசிஃப் அலி (தொழிலதிபர்) - ரூ.5 கோடி
சத்தீஸ்கர் - ரூ. 3 கோடி
பாரத ஸ்டேட் வங்கி - ரூ. 2 கோடி
புதுச்சேரி - ரூ. 1 கோடி
திமுக - ரூ.1 கோடி
ஹூண்டாய் -ரூ. 1 கோடி
விஐடி பல்கலைகழகம் -ரூ. 1 கோடி
ராம்கோ சிமெண்ட்ஸ் -ரூ. 2 கோடி
விஜய் சேதுபதி - ரூ. 25 லட்சம்
நடிகர் சித்தார்த் - ரூ 10 லட்சம்
நடிகர் சூர்யா&கார்த்தி - 25 லட்சம்
கமல் - 25 லட்சம்
நடிகர் விஷால் - 10 லட்சம்
ஹனன் ( மாணவி) -ரூ.1.5 லட்சம்

மனிதநேயம் பேரிடர் நன்கொடை 

கேரளா காடு அழிப்புதான் வெள்ளம் வர காரணம்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 19 ஆக., 2018, முற்பகல் 11:15
பெறுநர்: எனக்கு
மனிதர்களின் பேராசையே கேரளாவின் அழிவு நிலைக்கு காரணம்?

லங்காசிறிக்கு செல்ல
மேலதிக செய்திகளுக்கு
முகப்புக்கு செல்ல
முக்கிய செ... பிரபலமானவ...
வீடியோ கட்டுரைகள்
இணையத்தி... நேற்று அதி...
இந்தவாரம் அ... 124
SHARES 124
SHARES
#Kerala Floods

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்ததற்கும், அந்த மழையால் கடுமையான சேதம் ஏற்பட்டதற்கும் சூழியல் மோசமடைந்ததும், சுற்றுச்சூழல் கொள்கைகளையும் முறையாகக் கையாளாமல் விட்டதுமே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியபகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் வருகிறது.
மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தமலைப்பகுதியில் மனிதர்களின் பேராசை, பணம் ஈட்டும் நோக்கம், வர்த்தக நோக்கத்தில் இயற்கையை சூறையாடியதன் விளைவுதான் இன்று கேரளாவில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்ற மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது.
கட்கில் குழு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைப் பாதுகாப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக சுற்றுச்சூழல் ஆர்வலரும், விஞ்ஞானியுமான மாதவ் கட்கில் தலைமையில் குழு அமைத்தது.
கட்கில் தலைமையிலான ஆணையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஆய்வு செய்து கடந்த 2011-ம்ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் மேற்குதொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளையும், கடைப்பிடிக்க வேண்டிய கடினமான விதிமுறைகளையும் வகுத்திருந்தது.
அந்த அறிக்கையில், 1.40 லட்சம் கி.மீ கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையை கட்கில் ஆணையம் 3 பிரிவுகளைப் பிரித்து ஒவ்வொரு பிரிவுகளையும் எப்படி பாதுகாக்க வேண்டும், எந்தெந்த இடம் எதற்குமுக்கியத்துவம் வாய்ந்தது, எந்தப் பணிகளைச் செய்யலாம், எந்த பகுதியில் மட்டும் மக்கள் வசிக்கலாம்என்பதைப் பட்டியலிட்டது.
குறிப்பாக வளங்களை அழித்து, சுரங்கம் தோண்டுவது, கல்குவாரிகளை அமைப்பது, மரங்களை அழித்துபெரிய கட்டிடங்களைக் கட்டுவது, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அமைப்பது போன்றவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏறக்குறைய 64 சதவீத பகுதிகளை மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அந்தஆணையம் அறிவித்தது
எதிர்ப்பு
ஆனால், இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த அப்போது கேரளாவில் ஆட்சியி்ல இருந்த காங்கிரஸ்அரசு கடுமையாக எதிர்த்தது. அதிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசித்து வந்த ஒரு குறிப்பிட்டமதத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையாக எதிர்த்தனர், தங்களின் வாழ்விடம் பாழாகிடும், விவசாயம் பாதிக்கும் என எதிர்ப்புத் தெரிவித்தனர். கேரளாவில் உள்ள வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களும்எதிர்த்தனர்.
மக்களின் நலனுக்கு விரோதமாகவும், களச்சூழலையும் புரிந்து கொள்ளாமல், முற்றிலும் இயற்கைக்குச் சார்பான முறையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று விமர்சிக்கப்பட்டது.
பொறுப்பற்றதனத்தோடு அனைத்துச் சுற்றுச்சூழல் கொள்கைகளையும் கையாண்டால் இப்படித்தான் நேரும். இந்த பாதிப்புகள் அனைத்தும் இயற்கையில் ஏற்பட்டவை அல்ல. மனிதத்தவறுகளே அனைத்துக்கும் காரணம்.
மனிதர்களின் பேராசை, வனங்களையும், இயற்கைகயையும் அழித்ததே காரணம். அதிலும் குறிப்பாகக் குவாரிகளை வனப்பகுதிகளில் செயல்படுத்தியதே நிலச்சரிவுக்கும், மலைப்பகுதியில் மண் சரிவுக்கும்காரணம் என கட்கில் ஆணையம் தெரிவித்துள்ளது.

இயற்கை பேராசை 

முல்லைப்பெரியாறு கேரளா பொய்ப்பிரச்சாரம் புதியதலைமுறை கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 19 ஆக., 2018, முற்பகல் 11:01
பெறுநர்: எனக்கு

ஆபத்தில் காக்கும் முல்லைப் பெரியாறு : ஏன் எதிர்க்கிறது கேரளா ?
நம்பிக்கை ராஜ்
 Published: 10 Aug, 2018 08:13 pm
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்யும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தொட்டது. தற்போதைய தொடர் மழையால் 142 அடியையும் அணை தொட்டுவிடும். அதற்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்க நமக்கு அனுமதி இல்லை. முல்லை பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீரை தேக்க முடியும். அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்த
கேரளா இன்று முல்லை பெரியாறிலிருந்து தண்ணீர் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என இயற்கையிடம் மன்றாடுகிறது.
காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?
முல்லை பெரியாறு அணைக்கு கீழே இருப்பது இடுக்கி அணை. இந்த இடுக்கி அணை ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam)இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இந்த அணை விவசாய தேவைக்கோ, குடிநீர் பயன்பாட்டிற்கோ கட்டப்பட்ட (1973) அணை அல்ல; 167.68 மீட்டர் உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவிற்கு பெரியது. ஏறக்குறைய நம் மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கை இந்த அணை கொண்டிருக்கிறது. 750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கட்டப்பட்ட இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அரபிக் கடலில் நேரடியாக கலந்துவிடும். இந்த அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை இரண்டுமுறை (1992, 2018) மட்டுமே அதன் முழுக் கொள்ளளவை அடைந்திருக்கிறது.
மற்ற காலங்களில் இந்த அணை நிரம்பாததற்கு காரணம் மேலேயிருக்கும் முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தமிழகத்தின் பக்கம் திருப்பிவிடப்படுவதால் இடுக்கி அணை நிரம்ப போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. முல்லை பெரியாறு அணை இல்லாவிட்டால் இடுக்கி அணை வருடம் முழுவதும் நிறைந்திருக்கும். அதற்கு தடையாக இருப்பது முல்லை பெரியாறு அணை. அதனால்தான் அந்த அணையை அகற்ற அணை பலவீனமாக இருக்கிறது, அணையில் ஓட்டை விழுந்துவிட்டது எனப் பல கதைகளை சொல்லி 155 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க செய்துவிட்டது கேரளா.
பிறகு தொடர்ச்சியான சட்ட போராட்டத்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார் ஜெயலலிதா. இடுக்கி அணையில் நீர் நிரம்ப வேண்டும் என்றால் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் முல்லை பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதற்காக முல்லை பெரியாறு அணை பற்றிய வதந்திகளை கேரள அரசும், கேரள ஊடகங்களும் தொடர்ச்சியாக செய்து வந்தன என்ற கருத்தும் உண்டு. 1973ல் கட்டப்பட்ட இடுக்கி அணை 6 ஆண்டுகளாகியும் நிரம்பாததால் 1979ல் பத்திரிகை ஒன்று மூலமாக ஒரு வதந்தியை மக்களிடையே பரப்பி பீதியாக்கியது. முல்லை பெரியாறு அணை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தால் ஒரு யானை நுழைந்துபோகும் அளவிற்கு அணையில் ஓட்டை விழுந்துவிட்டது. அதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த அணை உடையலாம். அணை உடைந்தால் முல்லை பெரியாறு ஆற்றை ஒட்டியிருக்கும் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு அரபிக் கடலில் பிணமாக மிதப்பார்கள் என்ற வதந்திதான் அது. மக்கள் பீதியடைந்து முல்லை பெரியாறு அணைக்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.
முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக சொல்லி 39 ஆண்டுகளாகிறது. தற்போதுவரை முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாக தமிழக, கேரள அரசின் சார்பில் நிபுணர்களை கொண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து மக்களிடையே பயத்தை கிளப்ப 'டேம் 999' என்ற படத்தை எடுத்து மக்களை அச்சுறுத்தினார்கள். ‘Dam999’என்ற தலைப்பே விஷமத்தனமானது. ‘Dam999’என்பது முல்லை பெரியாறு அணையின் ஆயுள். முல்லை பெரியாறு அணையை கட்டி அந்த இடத்தை பயன்படுத்திக்கொள்ள பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் 999 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தது. அதைதான் படத்திற்கு பெயராக வைத்தார்கள்.
விஷமத்தனமான கருத்துக்களோடு இருமாநில மக்களிடையே பகைமையை ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால் உண்மையில் அவர்கள் வதந்தி பரப்புவதுபோல முல்லை பெரியாறுஅணை உடைந்தாலும் கேரள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. காரணம் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவைவிட மிகப்பெரியது இடுக்கி அணை. முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர் தேக்குத்திறன் 15 டி.எம்.சி ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 72 டி.எம்.சி. முல்லை பெரியாறு போன்ற நான்கு அணைகளின் தண்ணீரை இடுக்கி அணை என்ற ஒரே அணையில் தேக்கிடமுடியும். மேலும் முல்லை பெரியாறு அணை அமைந்திருப்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் பகுதியில், இடுக்கி அணை இருப்பது அதன் அடிவாரத்தில்.
முல்லை பெரியாறு அணை உடைந்தாலும் வெள்ளம் பாய்ந்துவரும் வழியில் எந்த ஊர்களும் இல்லை. மலைக்கு நடுவிலும், காடுகளுக்கு இடையேயும் பாய்ந்து வந்து இடுக்கி அணையில் அந்தத் தண்ணீர் சேர்ந்துவிடும். இந்த உண்மை கேரள அரசிற்கும், மலையாள ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும் ஆனாலும் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக முல்லை பெரியாறு அணையை எரிச்சலோடு பார்க்கிறார்கள். தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை இரண்டாம் முறையாக முழுமையாக நிறைந்திருக்கிறது. இடுக்கி அணை நீரால் வெள்ளத்தில் மிதக்கிறது அலுவா நகரம். தற்போது அந்த மக்கள் முல்லை பெரியாரிலிருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் வந்துவிடக்கூடாது என பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஆனால் தமிழகம் உதவி செய்ய நினைத்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. 142 அடிவரை மட்டுமே முல்லை பெரியாறுஅணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் தண்ணீரைதேக்க வேண்டும் என்றால் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றால் மட்டும்தான் கர்னல் ஜான் பென்னி குயிக் கட்டிக்கொடுத்த 155 அடிவரையிலான அணையில் தண்ணீரை தேக்க முடியும்.

அணை நதிநீர் மலையாளி கேரளா 

இறந்தவர் உயிருடன் எழுப்பும் இந்தோனேசியா பழங்குடி ஈமச்சடங்கு

aathi1956 aathi1956@gmail.com

சனி, 18 ஆக., 2018, பிற்பகல் 2:45
பெறுநர்: எனக்கு
சபரி நாதன்
நம்பினால் நம்புங்கள்...
///////////////////////////////
/////////////////
இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்பட்டு நடக்கின்ற அதிசயம்!
இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகின்ற அதிசயத்தை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா...? ஆனால் இது முற்றிலும் உண்மை. நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்களை பொறுத்தது. இந்த நிகழ்வு இந்தோனேஷியாவில் நடக்கிறது.
இறந்தவருக்கான சடங்குகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதால் இதற்காகவே உயிருடன் எழுப்பப்படுகின்றார்.
உயிருடன் எழுப்பப்படுவரால் சுயமாக நடக்க முடியும் பிறந்த ஊருக்கு நடந்து செல்வார்.
ஆனால் இவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. சடங்கு முடிந்த பின்னர் மீண்டும் சடமாகி விடுவார். இறந்தவரை உயிருடன் எழுப்ப மந்திரம் பிரயோகிக்கப்பட்டு ஒரு விசித்திரமான சடங்கு நடத்தப்படுகிறது. இவற்றை மந்திர வைத்தியர் ஒருவர் செய்து வைப்பார்.
ரொரஜா என்கிற இந்த இன மக்கள் (மலைகளின் மனிதர்கள்) மத்தியில் இந் நடைமுறை இன்றும் நிலவி வருகின்றது. மரணம் நிரந்தரம் அல்ல,மரணம் ஒரு நாளைக்கு மாத்திரம் உரிய விஷயமும் அல்ல என்பதாலும் மரணம் நீண்ட கால படிமுறைகளை கொண்டது என்றும் இம்மக்கள் நம்புவதால் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவர்களது நம்பிக்கையின்பட
ி மரணத்தின் முதலாவது படிமுறை முடிந்ததும் அடுத்த படிமுறை ஆரம்பம் ஆகின்றது.
மரணம் என்கிற நீண்ட கால முன்னெடுப்பு முடிவடைய பல வருடங்கள்கூட ஆகலாம் என்கின்றனர் இறந்தவர் மரணத்தின் பின்னரான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதை பூஜா என்று சொல்கின்றனர்.
மரணத்துக்கு பின்னரான வாழ்க்கையை நல்லபடியாக அமையவே சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறந்தவர் மிகப் பழைமை வாய்ந்த சடங்கு முறை வழியில் உயிர் கொள்ளச் செய்யப்படுகின்றார் உடனே இறந்தவர் எழுந்து நடக்க தொடங்குவார்.
பிறந்த ஊருக்கு செல்லுவார். இறந்தவரை பிறந்த இடத்தில்தான் புதைக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. ஆயினும் இந்த நிகழ்ச்சியில் ஒரு மிக முக்கியமான விஷயம் கவனிக்கபடவேண்டியது என்னவென்றால் எவரேனும் இவருடன் (இறந்தவருடன்) உரையாட முயன்றால் அந்த இடத்திலேயே விழுந்து மீண்டும் சவமாகி விடுவார்.
எனவே இவருக்கு முன்பாக குடும்ப அங்கத்தினர் ஒருவர் நடந்து சென்று கொண்டே இறந்து உயிர் பெற்று இருப்பவருடன் உரையாட முயல வேண்டாம் என்று எச்சரித்துக்கொண
்டே செல்வார்..
நேற்று, PM 1:04 · Facebook for Android ·
பொது
சேமி
ஜாரா கடலூர் மற்றும் 18 பேர்
ரமணன் சோமசுந்தரம்
கருணாநிதியையும் ஜெயலலிதா எழப்பனூ எவ்வளவு பிரச்சனை தீரும்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 1:08 மணிக்கு
சபரி நாதன் பதிலளித்தார் · 1 பதில்
Venkateshwara Cr
அய்யா நானும் படித்து உள்ளேன். இதனால் ஓர் பயனும் இல்லை .
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 1:16 மணிக்கு
சபரி நாதன் பதிலளித்தார் · 1 பதில்
Saleem Poorvika
Anna ithu thavarana pathivu... inga namma Christian la kallarai thiruvilanu onnu nadakkum antha mari anga oru kurippitta naal la ellarum irantha udamba eduthu sutham panni marunthu uthi new dress pottu kondaduvanga apran atha pettikulla pottu pothachiruvanga varusa varusam ithu nadakkum
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 1:36 மணிக்கு
சபரி நாதன் பதிலளித்தார் · 6 பதில்கள்
Perumal Pandiyan
https://www.youtube.com/watch?v=8CKvGslu
K0E ]
The Walking Dead In Reality: The Rituals of Toraja

சமணர் கழுவேற்றம் பொய் அது நடந்து 350 ஆண்டுகள் வரை சான்று இல்லை

aathi1956 aathi1956@gmail.com

சனி, 18 ஆக., 2018, பிற்பகல் 1:52
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# சமணர் கழுவேற்றம் நடைபெறவே இல்லை....
# ஏனென்றால் .....
1. # நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தர
ுக்கு 350
ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள். கழுவேற்றப்பட்ட கதை இவர்களால்தான்
முதலில் சொல்லப்படுகிறது. எனவே கதையின் நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.
2. # சம்பந்தர், அப்பர் தேவாரங்களில் கழுவேற்றப்பட்டதற்கு அகச்சான்றுகள் இல்லை.
3. # பல்லவ , பாண்டிய சோழ கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து
எந்த ஆதாரமும் இல்லை.
4. # சமணர்கள் இலக்கியங்களிலேய
ோ கல்வெட்டுகளிலேயோ இந்தச் சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.
5. #சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில்
இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த
நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன. சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?
6. # கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்
கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர். இவர்களுள் ரொமிலா தபாரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும்
அடங்குவர்.
# இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் மறுக்கப்படவில்லை.... #சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று #தீக்கதிரில் கட்டுரை எழுதிய தெலுங்கரான கம்யூனிஸ்டு
# அருணன் கூட இதுவரை இதை மறுக்கவில்லை...
# நன்றி வேட்டொலி

அறிஞர்கள் கருத்து வரலாறு சைவம் சமணம் மதமோதல் மதம்

search சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு vaettoli

வாஜ்பாய் ஆங்கிலேயர் க்கு எழுதிக்கொடுத்த மன்னிப்பு கடிதம் வாக்குமூலம் 1942

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்வெள்., 17 ஆக., 2018, முற்பகல் 10:44
பெறுநர்: எனக்கு
மேகநாதன் முனுசாமி Athiyaman Thamuka உடன்.
*வாஜ்பாய் சுதந்திர போராட்ட தியாகியா?*
*************** ************†****************
ஆகஸ்ட் 27-ம் தேதி பத்தேஷ்வர் பஜாரில் நானும் என் சகோதரரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது மதியம் 2 மணி அளவில் காகுவா என்று அழைக்கப்படும் லீலாதர் என்பவரும் மகுன் என்பவரும் அந்த பஜாருக்கு வந்தனர்.
அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில், காந்திஜி அறிவித்துள்ள ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்கள். அந்த உரையைக் கேட்ட பொதுமக்களில் பலர், காகுவா மற்றும் மகுன் பின்னால் நூற்றுக்கணக்கில் திரண்டனர்.
அவர்களை அழைத்துக்கொண்டு மகுனும் காகுவாவும், பத்தேஷ்வர் வனத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது அதை வேடிக்கை பார்ப்பதற்காக நானும் என் சகோதரரும் அவர்களின் பின்னால் சென்றோம்.
வனத்துறை அலுவலகத்தை அடைந்ததும் கூட்டம் ஆவேசமாக கோஷமிட்டது. இதனால், நானும் என் சகோதரரும் அந்தக் கூட்டத்தில் இருந்து சற்று தள்ளி, ஒரு நூறு அடி தொலைவில் நின்றுகொண்டோம். வனத்துறை அலுவலகத்துக்குள் 10 முதல் 15 பேர் வரை இருந்திருக்கலாம்.
இதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அங்கு திரண்டிருந்த மக்கள், அந்த அலுவலகத்தைத் தாக்கினார்கள். எங்கள் கண் முன்னே அலுவலகத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அதன்பிறகு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருந்தவர்களில் காகுவா மற்றும் மகுனைத் தவிர மற்றவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. இதை நான் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் தெளிவான சிந்தனையுடனும் கூறுகிறேன்"
நாள்: செப்டம்பர் 1, 1942; பெயர் அடல் பிகாரி வாஜ்பாய்; தந்தை பெயர்: கௌரி சங்கர்; வயது 20; தொழில்: மாணவர், குவாலியர் கல்லூரி; முகவரி பத்தேஷ்வர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக பிரிட்டிஷ் நீதித்துறையிடம்
# வாஜ்பாய் அளித்துள்ள வாக்குமூலம்.

பா.ஜ.க பாஜக 

சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டாரா வாஜ்பாய்?
[wysija_form id=”1″]வி ருதுகள் என்றால் விமர்சனங்கள் இல்லாமலா? ‘பாரத ரத்னா’வின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய தேசத்துக்்கு தங்களின் பணிகள், செயல்பாடுகள் மூலம் பெருமை தேடித் தந்தவர்களுக்கே ‘பாரத ரத்னா’ விருதுக்கான அடிப்படை தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. எமர்ஜென்சியை அறிவித்த இந்திரா காந்திக்கும் போஃபர்ஸ் ஊழலில் சிக்கிய ராஜீவ் காந்திக்கும் அந்த விருது அறிவிக்கப்பட்டபோது கடும் விமர்சனங்கள், விருதைப் பெற்றவர்கள் மீதும், விருதின் மீதும் விழுந்தன. இந்தமுறை அப்படி விமர்சனத்துக்குள்ளாகி இருப்பவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.http://tamilagamtimes.com/?post_type=product
பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீச்சுவாலைகள் தேசமெங்கும் அனல் கக்கிக்கொண்டிருந்த நேரம்.  அப்போது, குவாலியர் நகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள பத்தேஷ்வர் என்ற கிராமத்திலும் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்துடன் ஒரு போராட்டம் தீரமாய் நடந்தது. அதில் வாஜ்பாய் கைது செய்யப்பட்டு, ஆக்ரா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹசன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். போராட்டக்களத்தில் நடந்தது என்ன என்பது பற்றி, நீதிபதி ஹசனிடம் வாஜ்பாய் அளித்துள்ள வாக்குமூலம் அதற்கு ஆதாரமாக உள்ளது.http://tamilagamtimes.com/?post_type=product
நாள்: செப்டம்பர் 1, 1942; பெயர்  அடல் பிகாரி வாஜ்பாய்; தந்தை பெயர்: கௌரி சங்கர்; வயது 20; தொழில்: மாணவர், குவாலியர் கல்லூரி; முகவரி பத்தேஷ்வர்.
”ஆகஸ்ட் 27-ம் தேதி பத்தேஷ்வர் பஜாரில் நானும் என் சகோதரரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது மதியம் 2 மணி அளவில் காகுவா என்று அழைக்கப்படும் லீலாதர் என்பவரும் மகுன் என்பவரும் அந்த பஜாருக்கு வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில், காந்திஜி அறிவித்துள்ள ‘வெள்ளையனே  வெளியேறு’ இயக்கம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்கள். அந்த உரையைக் கேட்ட பொதுமக்களில் பலர், காகுவா மற்றும் மகுன் பின்னால் நூற்றுக்கணக்கில் திரண்டனர். அவர்களை அழைத்துக்கொண்டு மகுனும் காகுவாவும், http://tamilagamtimes.com/?post_type=productபத்தேஷ்வர் வனத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது அதை வேடிக்கை பார்ப்பதற்காக நானும் என் சகோதரரும் அவர்களின் பின்னால் சென்றோம். வனத்துறை அலுவலகத்தை அடைந்ததும் கூட்டம் ஆவேசமாக கோஷமிட்டது. இதனால், நானும் என் சகோதரரும் அந்தக் கூட்டத்தில் இருந்து சற்று தள்ளி, ஒரு நூறு அடி தொலைவில் நின்றுகொண்டோம். வனத்துறை அலுவலகத்துக்்குள் 10 முதல் 15 பேர் வரை இருந்திருக்கலாம். இதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அங்கு திரண்டிருந்த மக்கள், அந்த அலுவலகத்தைத் தாக்கினார்கள். எங்கள் கண் முன்னே அலுவலகத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அதன்பிறகு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருந்தவர்களில் காகுவா மற்றும் மகுனைத் தவிர மற்றவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. இதை நான் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் தெளிவான சிந்தனையுடனும் கூறுகிறேன்’  என்று சொல்லி இப்படிக்கு, அடல் பிகாரி வாஜ்பாய் என்று கையெழுத்துப் போட்டுள்ளார். அதாவது நான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, தூரத்தில் நின்று வேடிக்கை மட்டும் பார்த்தேன் என்பது அவரே அளித்த வாக்குமூலமாகியிருக்கிறது.http:/tamilagamtimes.com/?post_type=product
உருதுவில் எழுதப்பட்டுள்ள இந்த வாக்குமூலத்துக்குக் கீழே, ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்த்து எழுதி, நீதிபதி ஹசன் கையெழுத்திட்டுள்ளார். அதற்குக் கீழே வாஜ்பாய் கையெழுத்திட்டுள்ளார். இந்த வாக்குமூலம்தான் அரை நூற்றாண்டு காலமாக வாஜ்பாயை, கேள்விகளாக துளைத்துக் கொண்டே வந்தது. இது சம்பந்தமாக ‘ஃபிரன்ட்லைன்’ பத்திரிகை 1998-ம் ஆண்டு ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டது. கட்டுரை வெளியானதும், ஃபிரன்ட்லைன் இதழுக்கு, வாஜ்பாயின் வழக்கறிஞர் கட்டாடே அனுப்பிய நோட்டீஸில், ”அந்த வாக்குமூலம் கொடுத்தவரின் தந்தை பெயர் கௌரி சங்கர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், http://tamilagamtimes.com/?post_type=productவாஜ்பாயின் தந்தை பெயர் கிருஷ்ணன் பிகாரி வாஜ்பாய். எனவே, வாக்குமூலம் கொடுத்தவரும் அடல் பிகாரி வாஜ்பாயும் ஒன்றல்ல’ என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இதுபற்றி, உடனடியாக பத்தேஷ்வரிலும், குவாலியரிலும் விசாரித்தபோது, அடல் பிகாரி வாஜ்பாயின் தந்தையின் பெயர் கௌரி சங்கர் என்ற கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் என்பது தெரிய வந்தது. மேலும், அந்தக் கிராமத்தில் கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் என்பதைவிட கௌரி சங்கர் என்பதுதான்  எல்லோராலும் அறியப்பட்டுள்ளது என்றும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது.http://tamilagamtimes.com/?post_type=product
1989-ம் ஆண்டு அனைத்திந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒருங்கிணைப்பின் தலைவர் டி.எஸ்.அடேல், வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில், சுதந்திரப் போராட்டத்தில் வாஜ்பாயின் பங்கு என்ன என்பதை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தார். 1989, ஜூலை 23-ம் தேதி, வாஜ்பாய், ” ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அதை பி.ஜே.பி கவனமாகப் பரிசீலித்துக்கொண்டிருந்தது” என்று நாடாளுமன்றத்தில் பேசியதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. மோகன் குமாரமங்கலம் உள்பட 52 எம்.பிக்கள், வாஜ்பாயின் இந்தப் பேச்சு, வரலாற்றைத் திரிக்கும் செயல் என்று கடிதம் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தனர். ஆகஸ்ட் 5, 1997-ல் மகாராஷ்டிரா சேவா தள் அமைப்பின் தலைவர் சந்திரகாந்த் தயாமகவி அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலுக்கு எழுதிய கடிதத்தில், ”வாஜ்பாயுடன் நீங்கள் ஒரே மேடையில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாதீர்கள். அவர்கள்தான், இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள்” என்று அதற்கான ஆதாரங்களாக ஆக்ரா நீதிமன்றத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குமூலத்தின் நகலையே கொடுத்தனர்.http://tamilagamtimes.com/?post_type=product
ஆனால், இப்படி ஆதாரத்துடன் வரலாறு தன்னை நிரூபிக்கப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், வாஜ்பாய் மற்றும் சங் பரிவாரங்களும் சளைக்காமல் அதை மறுப்பதும் அது அடிப்படையில்லாத குற்றச்சாட்டு என்று சொல்வதும் புதிய முறையில் வாஜ்பாயின் வாழ்க்கைக் குறிப்பைத் தயாரிக்கும் வேலையிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். குறிப்பாக 1997-க்குப் பிறகு, வாஜ்பாய் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்று அழுத்தமாகப் பதிய வைக்கும் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில், ஃபிரன்ட்லைன் பத்திரிகை, வாஜ்பாயின் வாக்குமூலத்தின் நகல் மற்றும் பத்தேஷ்வர் கிராமவாசிகளின் பேட்டி, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் வனத்துறை அலுவலகத்தை இடித்த வழக்கில் கைதான காகுவாவின் பேட்டி ஆகியவற்றை ஓர் ஆவணமாக தொகுத்து, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருடைய அலுவலகத்துக்கே அனுப்பி வைத்தது. அத்துடன் அதுபற்றி வாஜ்பாயின் கருத்தையும் கேட்டிருந்தது. சில நாள்கள் கழித்து, அந்தப் பத்திரிகையின் ஆசிரியருடன் தொடர்புகொண்டு பேசினார் வாஜ்பாய். அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டது. அதில் பேசிய வாஜ்பாய், ”ஆம் அந்த வாக்குமூலம் என்னுடையதுதான். அதில் இருக்கும் கையெழுத்தும் என்னுடையதுதான்’ என்று ஒப்புக்கொண்டார். அதை நீங்கள் ஏன்? இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்று எதிர்முனையில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் சொல்லும் வாஜ்பாய், ”அதை நான் அவ்வளவு சீரியஸான விவகாரமாக நினைக்கவில்லை” என்றார்.http://tamilagamtimes.com/?post_type=product
வென்றவர்களின் பார்வையில் எழுதப்படுவதுதானே வரலாறு!http://tamilagamtimes.com/?post_type=product

ஆதாரம் சான்று பாஜக தேசத்துரோகம் தேசத்துரோகி